03/05/2026
வாழ்ந்த நாட்கள் குறைவுதான் என்பதை புரிந்து கொண்டது உலகம்...
வடித்த கண்ணீரும் குறைவு தான்
என்று புரிந்து கொள்ளவைத்தது அந்த நதியின் வெள்ளம்!
உயிர் போகிறது...
உயர போகிறது...
கடைசி நொடியிலும் கூட,
தாயை தவிர வேறு யாரையும் நம்பவில்லையே
அந்த தளிரின்
பிஞ்சு கரங்கள்!