TNTJ சிந்தாமணி கிளை

TNTJ சிந்தாமணி கிளை "எவர் ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்." ( நூல் : புகாரி -71)

தமிழகத்தில் தவெக ஆட்சி –  தவ்ஹீத் ஜமாஅத் TNTJ பார்வைதமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திரு...
05/05/2026

தமிழகத்தில் தவெக ஆட்சி – தவ்ஹீத் ஜமாஅத் TNTJ பார்வை

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது அறிமுகத் தேர்தலிலேயே அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழக மக்கள் திமுக – அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்ற மாற்றத்தை விரும்பியதை இது தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளது. அரசியல் அனுபவம், கட்சிப் பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குள்ளி விஜய் மீதான ஈர்ப்பே இந்த வெற்றிக்கு அடித்தளமாகும். மக்கள் விரும்பிய மாற்றம் நடைபெறுமா என்பதை தவெகவின் வருங்கால ஆட்சியில் தான் கண்டுணர முடியும்.

எனினும் இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமான விஷயங்களை தெளிவாக உணர்த்துகின்றன.

அவற்றில் மிக முக்கியமான அம்சம், பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பதுதான். பாஜக 27 இடங்களில் போட்டியிட்டு, தாமரை சின்னம் 33 இடங்களில் களம் கண்டும், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது அக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியல் அனுபவம் இல்லாதவர்களிடம் கூட ஆட்சியை ஒப்படைப்போம், ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணியிடம் தமிழகத்தை ஒப்படைக்க மாட்டோம் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருந்துள்ளனர். பாஜக எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் இது.

திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அதிமுக-வின் முக்கிய ஜாம்பவான்கள் பலரும் தவெகவின் வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவியுள்ளார்கள். இது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தவெக பெற்ற வெற்றியை வெறும் திரைக்கவர்ச்சி என்று சுருக்கி தங்களது குறைகளை ஆண்ட கட்சிகள் மறைத்து கொள்ளக் கூடாது. மாறாக தங்கள் கட்சியை முழுமையான சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் புதிய வாக்காளர்களையும் இளம்தலைமுறையையும் கவர்வதில் எங்கே தோற்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

தமிழக ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளது. மக்கள் செல்லும் திசையை எந்த ஊடகத்தாலும் கண்டுணர முடியவில்லை. அவரவர் முன்முடிவுடன் கூடிய கட்சி சார்பு அல்லது எதிர்ப்பு நிலையின் படி தான் கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள். இனியாவது விருப்பு வெறுப்பின்றி ஊடகங்கள் செயல்பட முன்வர வேண்டும்.

அமையவிருக்கும் சட்டமன்றத்தில் 9 முஸ்லிம் உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக அடியெடுத்து வைக்கின்றனர். மஜக அன்சாரி, மமக ஜவாஹிருல்லாஹ், மற்றும் திமுக வஹ்ஹாப் ஆகியோரை தவிர, முஸ்லீம் லீக், காங்கிரஸ், தவெக சார்பில் தேர்வாகியுள்ள ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் எனப் பெரும்பாலானோர் புதியவர்களாக உள்ளனர்.

அனைவரும் தங்கள் கட்சித் தலைவர்களைப் புகழ்வதிலோ அல்லது தங்கள் கட்சி எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளை நியாயப்படுத்துவதிலோ நேரத்தைச் செலவிடக் கூடாது.
மாறாக, சட்டமன்றத்தில் சமுதாயக் கோரிக்கைகளைத் துணிச்சலுடன் முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக அவர்கள் எழுப்பும் குரலே இளம் தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து பெற வழிவகுக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதிலேயே உறுதியாக இருந்தது; அந்த வகையில் பாஜக ஒரு இடத்தில் சுருண்டிருப்பது உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சியே. மேலும் தமிழக மக்களுக்கு நன்மையே.

எனினும் இந்த சூழலை அப்படியே கடந்து போக முடியாது.

தவெக தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில் பாஜகவின் நரித்தந்திரத்திற்கு தமிழகம் பலியாகி விடக்கூடாது. மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் செய்தது போல குதிரை பேரம் பேசி பாஜக உள்ளே நுழைய முயற்சிக்கும். ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருப்பதுடன் அதிமுக பாஜக பக்கம் தவெக சாய்வதை தடுக்கும் வகையில் பிற ஜனநாயக கட்சிகள் செயல்பட வேண்டும். அதுவே தமிழகத்தின் நலன்களுக்கு நல்லது. கொள்ளைப்புற வழியாக பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது.

இறுதியாக தவெக தனித்த பெரும் கட்சியாக உருவாகி விட்டது. தற்போதைய நிலையில் திமுக அதிமுகவை மிஞ்சி முதல் இடம் வகிக்கின்றது.

பிஜேபியுடன் கைகோர்த்ததால் அதிமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.

அதே நேரம் திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். திமுகவின் முக்கிய புள்ளிகள் தோற்றாலும் எதிர்க்கட்சி தகுதியை திமுகவிற்கே மக்கள் வழங்கி உள்ளார்கள் என்பது அக்கட்சிக்கு ஆறுதலான விஷயமே!

எனவே தட்டிக் கொடுக்கும் விஷயத்தில் தட்டிக் கொடுத்தும் எதிர்த்து குரல் எழுப்பும் விஷயத்தில் எதிர்க்குரல் எழுப்பியும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கி சிறந்த எதிர்க்கட்சியாக திகழ வேண்டும்.
இழந்த இளம்தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் செயல்படும் திறன் திமுகவிற்கு உண்டு.

த.வெ.க வின் இத்தகைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் விஜய்யை நம்பி வாக்களித்துள்ளனர் என்பதால் தான். ஆகவே தான் ஒன்றரை கோடி வாக்குகள் சாத்தியமாகி உள்ளது. எனவே, தவெக தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளின் படி, எவ்வித சாதி, மத பாகுபாடுகளுமின்றி சமத்துவமான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழங்க உறுதிபூண வேண்டும்.

புதிய கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமரும்போது, நிர்வாகச் சிக்கல்களைக் கையாளவும் சரியான திசையில் பயணிக்கவும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களையும், பொதுவாழ்வில் நற்பெயர் பெற்ற நல்லோர்களையும் உடன் வைத்துக்கொள்வது விஜய்யிற்குப் பெரும் பலமாக அமையும். அதே வேளையில், எந்தவொரு சூழ்நிலையிலும் விஜய் அவர்கள் மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து போகும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாக மாறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, பாஜக-வை கொள்கை எதிரி என்று கூறியதில் உறுதியாக இருந்து, தனது ஆட்சியில் அந்த சாயல் கொஞ்சமும் வெளிப்படாத வகையில் பாஜகவின் நிழல் கூட தன்னை அண்டாத வகையில் விலகி இருக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

தோழர் உமர் காலித்திற்கு ஆதரவாக ஐநாவில் தீர்மானம்.உமர் காலித்தை விடுதலை செய்!
31/03/2026

தோழர் உமர் காலித்திற்கு ஆதரவாக ஐநாவில் தீர்மானம்.

உமர் காலித்தை விடுதலை செய்!

16/02/2026
வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடப்பது என்ன ?A.K.அப்துர் ரஹீம் (மாநில துணைப்பொதுச்செயலாளர்,TNTJ)https://youtu.be/KB...
01/01/2026

வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடப்பது என்ன ?

A.K.அப்துர் ரஹீம்
(மாநில துணைப்பொதுச்செயலாளர்,TNTJ)

https://youtu.be/KBh2huWzLv8

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCtB2uxmG_7V5-H6tGaEF2AQ?view_as=subscriber

வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடப்பது என்ன ?A.K.அப்துர் ரஹீம் (மாநில துணைப்பொதுச்செயலாளர்,TNTJ)செய்தியும் சிந....

பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீ...
16/12/2025

பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்

ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீகார் முதல்வர் நிதீஸின் அநாகரீகச் செயல் கண்டிக்கத்தக்கது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு இச்செயல் உதாரணமாகியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதீஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

 #தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?கடைகளில் பண்டிகை  #ஆஃபர் போடலாமா?கடைவீதிகளில் சிறப்புக்  #கடைகள் போடலாமா?வ...
14/10/2025

#தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?

கடைகளில் பண்டிகை #ஆஃபர் போடலாமா?

கடைவீதிகளில் சிறப்புக் #கடைகள் போடலாமா?

விளக்கம்:பொதுவாக எந்தவித பண்டிகைகள் வந்தாலும் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பெருநாளாக இருந்தால் மட்டும் அந்த *பண்டிகையை முன்னிட்டு* நாம் சலுகை அறிவிக்கலாம் .
அந்தப்பெயரை குறிப்பிடலாம் அப்படி இல்லாத பட்சத்தில் தீபாவளியை முன்னிட்டு பொங்கலை முன்னிட்டு ஆயுதபூஜை முன்னிட்டு கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு என்கின்ற பெயரிட்டு ஆஃபர் அறிவிக்க கூடாது.

இந்த மாதிரி நேரங்களில் ஆஃபர் அறிவிக்கணும்னா அக்டோபர் மாத இறுதி பத்தில் ஆஃபர் என்றோ குறிப்பிட்ட தேதிகளில் ஆஃபர் என்றோ போடலாம்.

இதன் நோக்கம் அந்தப் பண்டிகை அல்ல.மாறாக அந்த நாட்களில் மக்கள் பெருமளவில் பஜார்களில் குழுமுவார்கள் அந்த சந்தர்ப்பங்களில் நமது கடையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தலாம் என்பதாகும்.

இது போன்று நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் சிலை வழிபாடுகள் பரவலாக நடக்கும் காலங்களில் மக்கள் வியாபாரத்திற்காக கூடும் உக்காழ் , மஜன்நா போன்ற இடங்களில் பெரிய அளவில் மக்கள் கூடும் என்பதால் அந்த சந்தைகளில் வியாபாரம் செய்துள்ளார்கள்.

எனவே பண்டிகை பெயரின்றி ஆஃபர் சொல்லலாம்.கடை வீதிகளில் பிரத்யேக கடைகள் போடலாம்.

ஆனால் பண்டிகைகளின் பெயரைக் குறிப்பிட்டு ஆஃபர் போடுவது, வாழ்த்து தெரிவிப்பது போன்ற காரியங்களை செய்வது தீமைக்கும் துணை போவதாகும்.

*பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.*

அல்குர் ஆன்5:2

இறைவனின் திருப்பெயரால்..வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்.. உச்சநீதிமன்றம் உரிய நீதி வழ...
17/09/2025

இறைவனின் திருப்பெயரால்..

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்..

உச்சநீதிமன்றம் உரிய நீதி வழங்க வலியுறுத்தியும்....

திருச்சியில் ..

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இன்ஷா அல்லாஹ்!

நாள்: 22/09/25 திங்கள்

நேரம்: மாலை 4 மணி அளவில்,

இடம்: பாலக்கரை ரவுண்டானா அருகில், திருச்சி.

கண்டன உரை:
சகோ.கே.தாவூத் கைஸர்
(TNTJ மாநிலத் துணைத் தலைவர்)

உண்மையை உரைத்திட..
உரிமையை மீட்டிட..

அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருச்சி மாவட்டம்.

96988 02525,
96290 38684,
85085 06015

15/09/2025

தேதி: 15.09.2025

இறைவனின் திருப்பெயரால்...

வக்ஃப் சொத்தில் வரம்பு மீறும் ஒன்றிய அரசு,
வருடிக் கொடுக்கும் நீதிமன்றம்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கிறது என்று நாடெங்கிலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வந்தது.

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் விருப்பமும் வழக்கு தொடுத்தவர்களின் நோக்கமும் ஒன்றே ஒன்று தான். முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தை சூறையாடும் நோக்கத்தில் கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.

விசாரணையின் துவக்கத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பிய பல கிடுக்குப்பிடி கேள்விகளும் அத்தகைய நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தது.

வக்ஃப் வாரியத்தில் ஏன் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள்? இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பி நம்பிக்கையூட்டியது.

வக்ப் பை யூசர் (Waqf by user) என்ற சட்டத்திருத்தத்தை விமர்சிக்கும் வகையில் 13 முதல் 15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவைகளுக்கு இப்போது ஆவணங்களைத் தருவது சாத்தியமில்லாதது என்று கூறி புதிய சட்டத்தின் ஓட்டைகளை அம்பலப்படுத்தியது.

இதன் அடிப்படையில் முஸ்லிம்களின் மத சுதந்திரத்தையும் தங்கள் சொத்தை தாங்களே நிர்வகிக்கும் உரிமையையும் ஒருசேர பறிக்கும் இந்த வக்ஃப் கொள்ளைச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடும் என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் வக்ஃப் சட்டம் தொடர்பான விசாரணை இன்று (15.09.25) வந்தது. அதில் வக்ஃப் சட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வக்ஃப் சட்டத்தில் உள்ள ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம் 5 ஆண்டுகளுக்கு பிறகே வக்ஃப் செய்ய முடியும் என்ற திருத்தம் மற்றும் வக்ஃப் சொத்தில் அரசு உரிமை கோரினால் அதில் கலெக்டருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் புதிய திருத்தம் ஆகியவற்றை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இது கூட இடைக்கால நிறுத்திவைப்புதான்.

மேலும் மாநிலத்தின் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பு 3 ஐ தாண்டக்கூடாது என்று கருத்துக்கூறி முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

மாநில வக்ஃப் வாரியத்தில் சி.இ.ஓ வாக ஒரு முஸ்லிம் அல்லாதவர் நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் குறித்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் இக்கருத்துகள் மத்திய அரசை வருடிக் கொடுப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

விசாரணையின் முந்தைய அமர்வுகளில் இந்து அறக்கட்டளையிலும் திருப்பதி தேவஸ்தானம் போர்டிலும் இஸ்லாமியர்களை உறுப்பினர்களாக அங்கீகரிப்பீர்களா ? என்று உச்சநீதிமன்றம் தானே எழுப்பிய கேள்விக்கு முரணாக இப்போது கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது.

இதை எப்படி புரிந்து கொள்வது என்பதை உச்சநீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தானம் செய்ய தடை என்ற புதிய சட்டத்தை உச்சநீதி மன்றம் மவ்னமாக கடந்து செல்கிறது.

இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ள திருத்தங்களை தவிர ஏனைய சட்டப்பிரிவுகளிலேயே வக்பை நாசமாக்கும் பல பாதகமான அம்சங்கள் உள்ளன. அவற்றுக்கு உரிய தீர்வை நீதிமன்றம் ஏற்படுத்திதரவில்லை.

வக்ஃப் பை யூசர் (Waqf by user) செல்லாது என்று சொல்லும் புதிய சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளையே மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஆவணங்கள் தர சாத்தியமில்லாத காலத்தில் வாய்மொழியாக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு என்ன?

வக்ஃப் செய்வதற்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற புதிய சட்டவிதியை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நபர்தானா? என்பதற்கான விதிகளையும் வழிகாட்டல்களையும் மாநில அரசுகள் வகுக்கும் வரை இவ்விதி நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஒருவர் தனது மதத்தை சொல்வதன் மூலம் அவர் முஸ்லிமா? இல்லையா? என்பது தெரிந்து விடும். அதை தவிர இஸ்லாத்தை பின்பற்றும் நபர் என்பதற்கான விதிகளை மாநில அரசுகள் எப்படி வகுக்க முடியும்?

அப்படி வகுக்கும் என்றால் இது முஸ்லிமுக்கு மட்டுமா ? பிற மதங்களை சார்ந்தவர்களுக்கும் அப்படியான விதிகள் வகுக்கப்பட உள்ளதா என பல குளறுபடிகளை கொண்ட கருத்தாகவே இது உள்ளது.

பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தனது சாட்டையை சுழற்றியது போல வக்ஃப் சட்டத்தில் செய்யவில்லை.
வக்ஃப் விவகாரத்தில் மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உச்சநீதிமன்றம் வருடிக் கொடுக்கும் நிலை தான் உள்ளது.

வக்ஃப் சொத்தை சூறையாடும் மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றால் மக்களின் எழுச்சி மிக்க ஜனநாயக போராட்டங்கள் தான் தீர்வாக அமையும்.

இப்படிக்கு,
அ.முஜீபுர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Address

Tiruchirappalli
620002

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ சிந்தாமணி கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ சிந்தாமணி கிளை:

Share