PSR Trust

PSR Trust Connect today
Transform tomorrow
It's not just our mission
It's our dream create a happy environment PSR Trust was initiated by NSS students of K.A.P. Mr. Mrs.

Viswanathan Higher Secondary School, Trichy in 2012 and was registered in 2015. The trust is solely manned and run by Youngsters. Our trust is mainly started to provide educational support as well as nutritional support to the children who are in need..

“Connect Today
Transform tomorrow
It’s not just our mission
It’s our dream to create a happy environment”

BOARD OF TRUSTEES
1. Sheik Abd

ullah. M - Managing Trustee
2. Dr. Gunaseelan. D - Financial Trustee
3. Gayathri. P - Secretary Trustee

AREAS COVERED BY OUR PROJECTS
● We mainly involve in and around Tiruchirappalli,Perambalur and Pudukkottai

TARGET POPULATION
● Women, children, youth. MAJOR ACTIVITIES
● KODUTHU UNN - Providing nutritional support to the children.
● KARKA THOL KODU - Assisting childrens with their educational necessities.
● PAATHIRAM - Providing food to the people who are living in road side.
● KALVI KAADU - Organizing volunteers to tutor children.
● E THANDINA - Organizing volunteers for blood donation on demand.
● Sol Maname - Counselling Center

தவமாய் தவமிருந்து படத்துல ஒரு காட்சி வரும், தீபாவளிக்கு எப்படியும் நம்ம அப்பா நமக்காக புது துணியும் , வெடியும் வாங்கி வந...
08/11/2023

தவமாய் தவமிருந்து படத்துல ஒரு காட்சி வரும், தீபாவளிக்கு எப்படியும் நம்ம அப்பா நமக்காக புது துணியும் , வெடியும் வாங்கி வந்துருவாருனு தெருவுல தீபாவளி கொண்டாடுற மத்த பிள்ளைங்கள எல்லாம் சோர்ந்த முகத்தோட பாத்துட்டு இருப்பாங்க அந்த பசங்க.

தன் குடும்பத்தோட சேர்ந்து தீபாவளியை எல்லார போல நாமளும் கொண்டாடிரனும், அந்த பசங்க முகத்துல உருவாகுற ஒரு ஏக்கம்

இங்க நிஜ வாழ்க்கையில, பல ஆயிரம் குழந்தைகள் அனுபவிக்குற ஒன்னு.

தீபாவளி திருநாள் ஏதோ ஒரு மதம் அது சொல்லும் அசுர வதம் போன்ற கதைகள் சார்ந்து உருவாகி இருந்தாலும்.

இந்த விழா இன்று மத சார்பற்ற எல்லோரும் கொண்டாடும் ஓர் மகிழ்வின் கொண்டாட்டமாகவே மறு உருவெடுத்துள்ளது, குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்வின் நாள் அவ்ளோதான்.

இந்த ஒரு நாளின் கொண்டாட்டம் வாய்ஸ் இல்லம் ரேவதிக்கும் சரி , Bells Ground வின்சிகும் சரி, நகம்மையார் இல்லம் குழந்தை பானுவுக்கும் கிடைக்கனும்ன்றதுதான் நம்ம PSR தொடர்ச்சியா முன்னெடுத்து வர "சிறார் தீபாவளியின்" முக்கிய நோக்கம்.

10 , 15 குழந்தைகள்ள ஆரம்பிச்ச இந்த மகிழ்வின் ஒளியின் பயணம், தன்னுடைய 12 வது ஆண்டு கிட்டதட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள ஒரே இடத்தில் ஒன்று கூட வைச்சு மகிழ்விச்சுருக்குனு நினைக்குறப்ப மனசு மத்தாப்ப மிளிருது.

இந்த மகிழ்வின் விழா ஒரு திருவிழாவ இன்னைக்கு மாற காரணம், ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பாவா , அம்மாவா , அண்ணனா, அக்காவா நாங்க இருக்கோம்னு பொருப்பெடுத்து பங்களித்த மக்களாகிய நீங்க தான்.

ஆமாங்க,

இது சாத்தியமானது உங்களால் மட்டுமே.

ஆயிரம் குழந்தைகளுக்கு பொருப்பெடுத்து ஒரு குழந்தைக்கு 1300 ரூபா செலவு பன்ன போறோம்னு ஆரம்பத்துல யோசிக்குறப்ப , மலைப்பா தெருஞ்ச விசயம்

ஆயிரம் தானே விடு அதுல 10 என்ட கொடு , 20 என்ட கொடுனு ஆளாளுக்கு தங்களோட பங்களிப்ப தந்து அவங்க அவங்க குடும்ப விழாவ நினைச்சதோட விளைவு

மலைப்பா தெரிஞ்ச விசயத்த , மொத்த மலைகோட்டை மாநகருக்கே தெரியும் படி ஒரு மாபெரும் திருவிழாவா மாற்றி அமைச்சுருக்கு.

We personally invite you through this for the great grand event for your support as our beloved volunteer, a respectful ...
04/11/2023

We personally invite you through this for the great grand event for your support as our beloved volunteer, a respectful contributor, lovable welwisher, supportive public:

PSR TRUST's Siraar Deepavali 2K23

Crackers of smiles starts at 03.00 PM
Sweets of Happiness held on : November 05, 2023
Hearts of people meets at: Kalaiarangam near CBS Trichy.

Burst the smiles around kalaiyarangam/Trichy!Bring the memories over the years!Let us be a part of this wonderful event ...
03/11/2023

Burst the smiles around kalaiyarangam/Trichy!
Bring the memories over the years!
Let us be a part of this wonderful event together!
We heartfully welcome you all to this grand event!!

PSR Sirar Deepavali 2K23

ஓராயிரம் நட்சத்திரங்கள் ஒன்று கூடி மகிழ  போகும் நமது PSR குடும்பத்தின் திருவிழாவினை , பெரு விழாவாக மாற்ற வருகை தரும் ஓர்...
31/10/2023

ஓராயிரம் நட்சத்திரங்கள் ஒன்று கூடி மகிழ  போகும் நமது PSR குடும்பத்தின் திருவிழாவினை , பெரு விழாவாக மாற்ற வருகை தரும் ஓர் திரை நட்சத்திரம் திரு . ஹரிஸ் கல்யாண் அவர்களை வரவேற்பதில் PSR பெரும் மகிழ்வுருகிறது.

பொதுவா இந்த மாறி ஒரு நிகழ்வுக்கு ஒரு திரை பின்னணி கொண்டவங்க வராங்கனு சொன்னா, நிறைய செலவு செஞ்சு கூட்டிட்டு வரோமோனு எல்லாருக்குள்ளும் தோனுறது இயல்பான ஒன்று.

ஆனா நிஜம் என்னன்னா???

இந்த விழாவுல கலந்துக்க திரு . ஹரிஸ் கல்யாண் PSR ன் குடும்ப நண்பரா வராருன்றதுதான் ❤️

ஆமாங்க!!! 1000 குழந்தைங்கள மகிழ்விக்க போற ஒரு விழா, அதுல ஆயிரத்துல ஒருத்தரா நானும் உங்களுக்கு தோள் கொடுக்குறேனு சொல்லி, தன்னால முடிஞ்ச பங்களிப்பையும் அந்த நட்சத்திர சிரிப்புகளுக்காக அகமகிழ்வோடு  தந்துருக்காரு நமது விழாவோட  நட்சத்திர அழைப்பாளர்.

தீபாவளி டைம் நிறைய நிகழ்வுகள் இருக்கும், படபிடிப்பு இருக்கும் இதுக்கு மத்தியில நம்ம PSR குடும்பம் சார்பா சகோதரர் ஜீவா  கொடுத்த எளிய அழைப்புக்கு, பெரிய மனசோட சிறப்பு விருந்தினரா, இல்ல இல்ல PSR நிகழ்வின் பங்கேற்பாளானாக வரேனு சொன்ன அந்த மத்தாப்பூ சிரிப்பழகனை.

ஆயிரம் சிரிப்புகள் ஒன்று கூடும் சிறார் தீபாவளி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக்கி  மகிழ்வதில் பேரானந்த கொண்டாட்டமடைகிறது PSR குழு.

ஆயிரம் நட்சத்திரங்களுக்கு  மத்தியில் முதன்மை  நட்சத்திரமாய் ஜொலிக்க

திரு. அவர்களை வரவேற்கிறோம்💕

A Smile can do wonders😃Volunteering gave me smile 😍and teached me who am I 👑Do things which you love,🦋It will make your ...
24/10/2023

A Smile can do wonders😃

Volunteering gave me smile 😍
and teached me who am I 👑

Do things which you love,🦋
It will make your soul happy and bring Positivity to your life

Try to bring smile in others face and get their happy vibes 🫂

காலைல 8 மணிக்கு உள்ள போனோம்.Evening 5.30 க்கு தான் முடுஞ்சுது. கிட்டத்தட்ட 600 குழந்தைகளுக்கு Dress Purchase முடுச்சுருக...
19/10/2023

காலைல 8 மணிக்கு உள்ள போனோம்.
Evening 5.30 க்கு தான் முடுஞ்சுது. கிட்டத்தட்ட 600 குழந்தைகளுக்கு Dress Purchase முடுச்சுருக்கோம்.

ஓனர் Sir என்ன நெனச்சாருனு தெரியல நீங்க குடவுன் போயிருங்கனு சாவி கைல கொடுத்து அனுப்பி விட்டாரு.

உமர், ரோஹித் ரெண்டு பேரும் முழு பொறுப்பை எடுத்துகிட்டானுங்க. Age Wise பிருச்சு list இருந்ததால நிறுத்தி நிதானமா எடுக்க முடுஞ்சுது. இன்னைக்கு எடுத்த எல்லாமே பெண் குழந்தைகளுக்கான Dress. ஒவ்வொன்னும் தங்கம் தங்கமா வந்துருக்கு.

Dress Pack பண்றப்போ ஒவ்வொரு துணியையும் தனி தனியா போட்டோ போடுறேன் ☺️

இப்போவரை 629 குழந்தைகளுக்கு தேவையான உதவி கெடச்சுருக்கு. மீதமுள்ள குழந்தைகளுக்கு வரக்கூடிய நாட்களில் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் அவங்களுக்கும் dress எடுத்துடலாம்.

இப்போ எடுத்த Dress எல்லாத்தையும் வர சனிக்கிழமை Pack பண்ணிடலாம்னு திட்டமிட்டுருக்கோம்

வாய்ப்பு கிடைக்கிறவங்க வாங்க 🦋

PSR Trust

Dear Beautiful you - 25 Days to go 💛
11/10/2023

Dear Beautiful you - 25 Days to go 💛

Hey amazing you,Do you believe in miracles?Here, with PSR Trust, we believe that miracles can always happen when there i...
08/10/2023

Hey amazing you,

Do you believe in miracles?

Here, with PSR Trust, we believe that miracles can always happen when there is hope.That's what has helped us bring smiles in the faces of for . Come join us and be the miracle giver of those fabulous smiles from those wonderful kids.

Let's give them a grand day of celebration with food and gifts along with a joyous day with various events to make them happy.

400 Smiles Gifted - 🥳🥳🥳
600 Smiles more to go 💛💚

சிறுக சிறுக சேர்ந்து ஒரு பெரிய ஆத்த உருவாகிட்டோம்... 💚பெருசா ஒரு பெரு வெடிப்பு நடந்து மழை கொட்டி தீர்த்துடுச்சுனா அடுத்த...
07/10/2023

சிறுக சிறுக சேர்ந்து ஒரு பெரிய ஆத்த உருவாகிட்டோம்... 💚

பெருசா ஒரு பெரு வெடிப்பு நடந்து மழை கொட்டி தீர்த்துடுச்சுனா அடுத்து நேரா கடல் தான்..

359 வந்துட்டோம்...
இன்னும் 641 தான்..
வர வாரம் 1st Set Purchase
பண்ணிடலாம் னு பிளான்

கொஞ்சம் பார்த்து பண்ணிவிடுங்க...

Sirar Deepavali is not just a celebration. it's an emotion. if u wish to be a part in the happiness of 1000 kids. Let's ...
05/10/2023

Sirar Deepavali is not just a celebration. it's an emotion. if u wish to be a part in the happiness of 1000 kids. Let's join together to bring smile in the face of God's own children 🦋

சசி அண்ணா ரெண்டாவது பையன் தருண் தன்னோட பிறந்தநாளை இன்னைக்கு கொண்டாடக்கூடிய தருணத்தில். தன்னுடைய உண்டியல் Saving ல ஒரு பக...
04/10/2023

சசி அண்ணா ரெண்டாவது பையன் தருண் தன்னோட பிறந்தநாளை இன்னைக்கு கொண்டாடக்கூடிய தருணத்தில். தன்னுடைய உண்டியல் Saving ல ஒரு பகுதியை நம்ம சிறார் தீபாவளி நிகழ்ச்சிக்காக கொடுத்துருக்காங்க.

வருடத்துல 2 3 தடவ ஓபன் ஆகக்கூடிய உண்டியல் பணத்தின் மூலம் பக்கத்துல இருக்குற சில உதவி தேவைப்படக்கூடிய இடங்களுக்கு ஒரு தொகையும், நம்ம சிறார் தீபாவளிக்கு ஒரு தொகையும் ஒதுக்க சொல்லி சொல்லிடுவாறு போல. 

RBI சமீபத்துல ஒரு அறிக்கை கொடுத்துச்சு. கடந்தாண்டை விட இந்த ஆண்டு இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் கம்மியாகிருக்குனு.

தருண் மாதிரி சின்ன வயசுல இருந்து Money Save பண்ற நல்ல பழக்கத்தை நம்ம வீட்டு பசங்களுக்கும் சொல்லி கொடுக்கனும். அது வளர வளர Mutual fund, Share market, Gold Savings னு ரொம்ப பெருசா வளர்ந்து நிக்கும்.

அதுளையும் குறிப்பா Saving s ல ஒரு பகுதியை Social cause காக கொடுக்கக்கூடிய பழக்கத்தையும் சேர்த்து சொல்லி கொடுக்கனும்.

இவளோ தான், அளவோ தான்னு தொகை முக்கியமே இல்ல. 6 மாசமா தருண் மனசுக்குள்ள சிறார் தீபாவளி சிறார் தீபாவளினு இருந்துட்டே இருந்துருக்கும்ல அந்த எண்ணம் தான் ரொம்ப முக்கியம்.

அதுதான் 15 குழந்தைகள் to 1000 குழந்தைகள்னு நம்மள கூட்டிட்டு வந்துருக்கு. யாருக்கு தெரியும் அடுத்த வருடம் 2,000 குழந்தைகளுக்கு கூட சிறார் தீபாவளி நிகழ்வை முன்னெடுக்கலாம் 😁
எல்லாமே மனசு தானே 😍

அதுனால கொஞ்சம் மனசு வைங்க இன்னும் 674 குழந்தைகளுக்கு மட்டும் தான் முடுச்சுடலாம் 🦋

அப்புடி இப்புடி னு 300 வரை வந்துட்டோம்..இன்னும் சரியா event க்கு 25 நாள் இருக்கு முன்னையே சொன்ன மாதிரி வர வாரங்களில் Pur...
03/10/2023

அப்புடி இப்புடி னு 300 வரை வந்துட்டோம்..
இன்னும் சரியா event க்கு 25 நாள் இருக்கு முன்னையே சொன்ன மாதிரி
வர வாரங்களில் Purchase Start பண்ணிடலாம் ஒரேடியா Purchase பண்ணா நல்ல Discount கிடைக்க வாய்ப்பு அதிகம்..

இன்னும் 700 குழந்தைகளுக்கு மட்டும் தான்.. ஆளுக்கு ஒன்னுனாலும் டக்குனு முடுஞ்சுரும்.

கொஞ்சம் பார்த்து பண்ணிகொடுங்க 🫂

Address

27/54 Moolai Kollai Street, Thennur
Tiruchirappalli
620017

Alerts

Be the first to know and let us send you an email when PSR Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PSR Trust:

Share