WCCI Women and Child Care International

WCCI Women and Child Care International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WCCI Women and Child Care International, Nonprofit Organization, 4, Post Office Street, Theni.

25/05/2025

வரலாற்றில் இன்று மே 25

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.

ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலி ருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது.

ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.தில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.
காரணம் என்ன?

குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணம் குறித்து குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர்கள் “குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளது. தற்போது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர்.எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098.காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்”

சுரேசுகுமார் தமிழ்ப் பட்டதாரியாசிரியர் பதிவிலிருந்து

18/11/2022

ஆர்டிமிஸ் பெண்கள்
================

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை கொண்டு செல்லும் நாஸாவின் முயற்சியான ஆர்டிமிஸ் விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது . இதற்கு முன்னான இரண்டு முயற்சிகளிலும் தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக இந்த ஏவுதல் (launch ) தள்ளிவைக்கப்பட்டது . இது குறித்து இரண்டு மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன்.

ஆர்டிமிஸின் முதல் கட்ட முயற்சியில் மனிதர்கள் யாரும் பயணிக்க மாட்டார்கள் . ஆனால் இதன் இரண்டாம் கட்ட ஏவுதலில் (2024ல் ) மனிதர்கள் நிலவை வலம் வருவார்கள் .மூன்றாம் கட்ட ஏவுதலில் (2025ல் ) அவர்கள் நிலவில் இறங்கி கால் பதிக்கவிருக்கிறார்கள் .

இது ஒரு புறம் இருந்தாலும் இந்த முதல் கட்ட ஏவுதலில் ஒட்டு மொத்த பொறியாளர்கள் குழுவை தலைமை தாங்கி ஆர்டிமிஸ் ஏவுதலை த இயக்கி இருப்பவர் ஒரு பெண் என்பதும் முக்கியமானது. சார்லி பிளாக்வெல்-தாம்ஸன் ராக்கெட் ஏவுதலை தலைமைதாங்கி நடத்தும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார். இது மிக ஆழந்த நிபுணத்துவமும் அனுபவமும் முதிர்ச்சியும் கோரும் பணி .

ஒரு ராக்கெட் ஏவுதலில் உள்ளடங்கிய அத்தனை நுட்பங்கள் குறித்தும் அவருக்கு புரிதல் இருக்க வேண்டும் . எது சரி எது சரி இல்லை என்று ரிஸ்க குறித்த அனுபவப்பூர்வ புரிதல் வேண்டும் . உயர் அழுத்த சூழலிலும் பதற்றம் கொள்ளாமல் கூர்மையாக கவனம் கொள்ள வேண்டும் .குறுகிய காலத்தில் மிகச்சிக்கலான முடிவுகளை எடுக்கும் திறன் வேண்டும்

ஆர்டிமிஸ் -I ஐ விண்ணில் செலுத்த பத்திரமாக திரும்ப கொண்டு வரும் திட்டத்துக்கு மொத்தம் 20,000 கோடிக்கு மேல் செலவு பிடிக்கும் . எல்லா சோதனைகளும் முடிந்து இறுதியாக இவர் ஓகே சொன்னால் தான் அந்த ராக்கெட் ஏவப்படும் .

போனமுறை அப்பல்லோ ராக்கெட் நிலவுக்கு சென்ற போது . அதை ஏவுவதில் பணிபுரிந்த பொறியாளர் அணியில் இருந்த 450 பேரில் ஒருவர் மட்டுமே பெண் ஆனால் இன்று ஆர்டிமிஸ் பொறியாளர் அணியில் பணிபுரிவோரில் 30 சதவிகிதம் பேர் பெண்கள்.பெண்களுக்கு கணக்கு வராது , சயன்ஸ் வராது என்பதான எண்ணம் மெல்ல மாறத்தவங்கி உள்ளது .

அதே போல இந்த முறை நிலவுக்கு முதன் முறையாக ஒரு பெண் சென்று இறங்கவிருக்கிறார். நிலவில் சென்று இறங்கப்போகும் முதல் அணி பயிற்சி முடித்து ஏற்கனவே தயாராக உள்ளது. பதிமூன்று பேர் கொண்ட இந்த அணியில் ஆறு பேர் பெண்கள் . ஆர்டிமிஸ் விண்கலத்தின் பெயரே ஒரு கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர் தான் .

பொழுதுபோக்கு துறையிலும் , ஊடகம் கலை இலக்கிய துறைகளிலும் பெண்கள் பரவலாக அடையாளம் காணப்படுவது போல தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் கோரும் துறைகளில் பெண்கள் வெற்றி பெறுவதை பரவலாக அடையாளப்படுத்த வேண்டும் .அழகான பெண்கள் கொண்டாடப்படுவது போல திறமையான பெண்கள் கொண்டாடப்படுவதில்லை.

ஸ்கூட்டி ஓட்டிப்போய் அப்பாவி ஆண்கள் மேல் மோதிவிடும் பெண்களை பேசும் கேப்பில் இதையும் பேசலாம் .

-கார்த்திக் வேலு

Address

4, Post Office Street
Theni

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

9514686870

Website

Alerts

Be the first to know and let us send you an email when WCCI Women and Child Care International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share