Dyfi Theni

Directions

Dyfi Theni DYFI THENI DISTRICT COMMITTEE

06/10/2026
03/10/2026

தேனி மாவட்டத்தில்
73 தோழர்கள் மீது
காவல்துறையால் புனையப்பட்ட 7 வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவு!!!

ரத்து செய்யப்பட்ட போராட்ட வழக்குகளின் விபரங்கள்….

1.
மல்யுத்த வீராங்கனை BJP MPயால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக தேனி இடாமல் தெருவில் இருந்து இந்தியன் வங்கி வரை ஊரவலமாக சென்று முற்றுகை போராட்டம் நடத்திய நம் DYFI , AIDWA, SFI தோழர்கள் முனீஸ்வரன், வெண்மணி, நாகராஜ், சித்ரா, அம்சமணி, வேல்பிரகாஷ் உள்ளிட்ட 19 தோழர்கள் மீது
தேனி காவல் நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 24.08.2026 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டதுள்ளது.

2.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தேனி பங்களாமேடு வேன் ஸ்டாண்ட் அருகே போராடிய நம் மாதர் சங்க தோழர் வெண்மணி உள்ளிட்ட 3 பெண் தோழர்கள் மீது
தேனி காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 17.09.2026ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

3.
JACTO-GEO போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேனி நேரு சிலை அருகே போராட்டம் நடத்திய நம் DYFI , SFI தோழர்கள் லெனின், முனீஸ்வரன், நாகராஜ், உள்ளிட்ட 22 தோழர்கள் மீது AIADMK கட்சிக்காரர் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அளித்து புகாரின் பேரில்
தேனி காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடுமையான மற்றும் பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நம் தோழர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பிணையில் விடுதலையாகி
தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 29.09.2026 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

4.
தேனியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நம் தோழர்கள் தர்மர், லெனின், சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர்கள் மீதும்
தேனி காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 5ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 30.09.2026 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் கூடுதல் தகவல் என்னவென்றால் நாம் Quash பெட்டிஷன் தாக்கல் செய்தது நமது தோழர் 3 பேருக்கு தான், ஆனால் மாண்பமை உயர்நீதிமன்றம் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

5.
தேர்தல் விதிமுறையை மீறி அரண்மனைப் புதூர் அம்பேத்கர் சிலை அருகே நமது கட்சி கொடியை கட்டி பறக்க விட்டதாக தோழர் தர்மர் மீது
பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் கொடி கட்டியதற்கு எதிரான வழக்கை கடந்த 30.09.2026ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

6.
தேனி VVG store அருகே JACTO-GEO அமைப்பின் சார்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் செல்வம், பெரியசாமி,
அரசு ஊழியர் ரங்கராஜன் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்ட தோழர்கள் மீது AIADMK கட்சிகாரரால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அளிக்கப்பட்ட புகாரின் பேரில்
தேனி காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடுமையான மற்றும் பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நம் தோழர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையாகி
தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, இந்த காலத்தில் நமது தோழர். ரங்கராஜன் அவர்கள் காலமானார்.
தற்போது நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 01.10.2026 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

7.
மத்திய-மாநில அரசுகளின் GST வரி உயர்வு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு நமது கட்சியின் நாடுதழுவிய போரட்டத்தின் ஒரு பகுதியாக கோம்பை பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற நம் கட்சி தோழர்கள் மோகன், முகமது இப்ராஹிம், சுருளிவேல், சித்ரா உள்ளிட்ட 18 தோழர்கள் மீது
கோம்பை காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கடுமையான மற்றும் பொய்யான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு போடிநாயக்கனூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து, சமீபத்தில் நம் தோழர்கள் மீது Warrant ஆகி இருந்து வந்தது, இந்நிலையில் நாம் தாக்கல் செய்த Quash மனுவை ஏற்றுக் கொண்ட மாண்பமை உயர்நீதிமன்றம் போராட்ட வழக்கை கடந்த 01.10.2026 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த 7 வழக்கிற்கான தீர்ப்பு நகல்கள் கிடைத்தவுடன் தீர்ப்பு தொடர்பான விவரங்களுடன் கூடுதலாக தெரிவிக்கின்றேன் தோழர்.

இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்
L.ஷாஜி செல்லன், வழக்கறிஞர்கள் R.கார்த்திகேயன் மற்றும் G.ராஜேஸ் ஆகியோர் பணிகள் அனைத்தும் முன்னெடுத்து ஆஜராகி வாதடினோம் தோழர்.

குறிப்பு:
நாம் தாக்கல் செய்த Quash மனுவில் வழக்கிற்காக ஒரு இடத்திலும் நாம் போராடவில்லை என்று சொல்லாமல்,
போராடுவது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை எனவும், போரட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது பொய்யான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவிலும், வழக்கு விசாரணையிலும் முன் வைத்து வாதாடினோம் தோழர்.

தோழமையுடன்….
வழக்கறிஞர்
G.ராஜேஸ்

31/08/2026

Address

Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dyfi Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share