Akilathirattu India Mission

Akilathirattu India Mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akilathirattu India Mission, Charitable organisation, Murugandiyur, Anaintha Perumal Nadaroor, Tenkasi.

Objectives of the Trust are to establish and maintain Education Institutions, Hospitals, Vinjay schools, Meditation Halls and homes for the Aged and Physically & Mentally challenged.
தாழக்கிடப்பாரைத்
தற்காப்பதே தர்மம்

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9...
20/12/2025

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88?fbclid=IwRlRTSAOzktVleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEe9KsFvr-Mu33qdNpcthWk9LY_QS0-Frx66K6O7KtyPpYFqoNsfV_NgpcKhHQ_aem_Y8jdTy6pXevBpOcSUTL2bg

அகிலத்திரட்டு அம்மானை akilathirattu ammanai ஆதியில் அண்டபிண்டங்கள் தோன்றியபின் ஈஸ்வரன் தாண்டவமாடி அறிவித்த பிரபஞ்ச ஜாதகம.....

https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95
11/06/2025

https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்ப...

https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE...
12/03/2025

https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88?oldformat=true

அகிலத்திரட்டு அம்மானை akilathirattu ammanai ஆதியில் அண்டபிண்டங்கள் தோன்றியபின் ஈஸ்வரன் தாண்டவமாடி அறிவித்த பிரபஞ்ச ஜாதகம.....

   # அகிலத்திரட்டு  #ஏடுவாசிப்பு  #தாங்கல்  #திருவிழா  ாடாரூர்  #நாள்-3விடைவேண்டித்தேவர் மேதினியில் தாம்போகபடைவீரரான பச்...
24/12/2023

# அகிலத்திரட்டு #ஏடுவாசிப்பு #தாங்கல் #திருவிழா ாடாரூர்
#நாள்-3
விடைவேண்டித்தேவர் மேதினியில் தாம்போக
படைவீரரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவாரம்மானை
வாணநரபாலனென்ற மாபாவிக் கம்சனால்
நாணமது கெட்டோமென நாடிமிகத்தேவரெல்லாம்
பூமாதேவிமுதல் பொறுக்கமிகக்கூடாமல்
ஆமா அரியே ஆதிமுறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தாரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக்கேதுரைப்பார்
இதுநானுங்கேட்டு இருக்குதுகாணிம்முறையம்
ஆனதால் கம்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தாரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமாலோடுரைக்க
ஆருமிகவொவ்வாத அச்சுதருமேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபாரதமுதலாய்ப் பாரதப்போர் வரையும்
நாராயணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்து
சத்தபலமுள்ள சராசந்தன் முதல்
மற்றவனோராறு வலியபலக்காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப்பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாராயணர் நமக்கு
மகவாயுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி
தவமாயிருந்து தவிக்கிறாள் தேவகியும்

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப்போகாமல்
தன்னை மதலையெனஎடுக்கத் தவமாயிருந்த தெய்வகிக்கு
சொன்ன மொழியுந்தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவாதிருக்கும் பெம்மானே

இப்படியேயுள்ள தேவ எழுத்தின் படியாலே
அப்படியே யென்னை அனுப்புமென்றாரம்மானை
முன்னேவியாசர் மொழிந்தமொழிமாறாமல்
என்னையந்தப்பூமியிலே இப்போபிறவிசெய்யும்
செந்தமிழ்சேர்மாயன் சிவனாரையும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிரமடவை
கன்னியராயென்றனக்கு கவரியிடநீர்படையும்
பன்னீர்க்குணம்போல் பைம்பொன்னிறத்தவராய்
முன்னுகத்திலெனையணைய உகந்திருந்தபேரை
இன்னுகத்திலெனக்கு இயல்பாய் படையுமென்றார்
மேருதனிலிருந்து மேகவண்ணர்செயலெனவே
தாருகாவனத்தில் தவசிருந்தரிஷியையெல்லாம்
ஆயர்குலத்தில் அநேகமடவாராய்
பாயமுறவாடிருக்கப் படைப்பீர் காணீசுரரே
ருக்மணியாய் இலட்சுமியை உலகிற்பிறவிசெய்யும்
கரும்பினியதெய்வக் கயிலாசமாமணியே
சத்தபெலமுள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையுமிப்பிறவி இதிலே வதைத்திடவே
அல்லோரையும் பிறவி ஆக்கிவையுமென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்றகிளைபோலே
விந்துவழிக்குலம்போல் மிகுவாய்ப்படையுமென்றார்
இப்படியேமாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியேபிறவி அமைக்கத் துணிந்தனராம்
தெய்வகியாள் வயிற்றில் திருமால்பிறந்திடவே
ஐவர்க்குறுதியிட அச்சுதருந்தோன்றுவாராம்
கவிழ்ந்திருந்தமாதுவுட மலக்கமதுதீர
புவியளந்தமாய மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க்குபகாரம் அன்பாகச்செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிகளீவதற்கும்
கம்சனுடவலுமை கட்டழித்துக்கொல்வதற்கும்
விஞ்ச வரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்தபெலமுள்ள தத்துவங்களுள்ளோரை
தத்தியுள்ள வீமனையும் தன்னாளாய்க் கூடவிட்டு
கொல்வதற்கும் தேவருட கூர்முறையம் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்தமுறைப்படியே
தன்னிகரில்லாத தையல்தெய்வகி வயிற்றில்
பிறக்கிறாரென்று பெரியோர்கள்கொண்டாட
இறக்கிறார்பொல்லாதார் என்றுலகம் கொண்டாட
முன்பெற்றபிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்றமாது மங்கையந்தத்தெய்வகியும்
மெத்தமயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்று அந்தக்கன்னி இருபேருந்தான்புலம்பி
விண்டுசொல்லாத விதனமிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லாதாயன் பாவை வயிற்றிலுற்றார்
பகவதியுமங்கே பாவையசோதை வயிற்றில்
சுகபதியுமங்கே தோன்றினள்காணம்மானை
மாயனந்தத்தெய்வகியாள் வயிற்றிலுற்றதவ்வளவில்
தேயமெல்லாம்நன்றாய்ச் செழித்ததுகாணம்மானை
கெற்பமுற்றதெய்வகியாள் கெஞ்சுகவாயஞ்சுகமும்
நற்பதமாய்த்தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந்திகைந்து பாலன்பிறந்திடவே
சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று
விசுவாசமாதருட விலங்கது தானுமற்று
தாள்திறந்துநேரம் தான்விடியுமுன்னாக
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
கொண்டாடித்தானெடுத்துக் கூறுவாள் தன்னாலே
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தேவேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோ முன்பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோ இம்மதலைக்கு ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்றமதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினாளயோதையிடம்
கொண்டு வசுதேவன் அயோதைக்குடிலேகி
கண்டுஅயோதை கன்னியங்கேபெற்றிருந்த
பெண்மதலைதன்னை பூராயமாயெடுத்து
ஆண்மதலைதன்னை அயோதையிடமிருத்தி
வந்துவசுதேவன் மங்கை கையில்கொடுத்து
புந்திமிகநொந்து போயிருந்தானம்மானை
அந்தயிரா விடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்தமனசுள்ள கம்சனவன் தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றாளுன்தங்கை பிள்ளையென வுரைத்தான்
கேட்டானே கம்சன் கெருவிதமாய்த்தானெழுந்து
பூட்டானநெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்து
தூக்கி நிலத்தில் துண்ணெனவேதானடிக்க
ஆக்கிரமத்தாலே அவன் தூக்க ஏலாமல்
சோர்வுற்று கம்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியுமேதுசொல்வாள்
என்னையெடுத்து ஈடுசெய்யாதே கெடுவாய்
உன்னைவதைக்க உற்றயெங்களச்சுதரும்
ஆயர்பாடி தன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பாரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கம்சன் கிலேசமிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றானம்மானை
அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளைவுண்டானால்
பங்கம்வருமென்றனக்குப் பதறுதடாஎன்னுடம்பு
என்றுமனங்கருகி இயலழிந்த கம்சனுந்தான்
அன்று ஒருதூதனையும் அனுப்பினன் காணம்மானை

அய்யோ முனிவனன்று சபித்தபடி ஆயர்பாடிபோகறியேன்
மெய்யோ தளருதுடல் மெலியுதே மெல்லிமொழிந்த விசளமதால்
கையோசலித்துக் காலயர்ந்து காலவிதியாற் கருத்தயர்ந்து
பையோராளைத் தானழைத்து பார்க்க விடுத்தான் கம்சனுமே

வாராய் நீ தூதா மற்றோரறியாமல்
பாராய் நீதூதா அயோதைப் பதியேகி
என்று அந்தத் தூதனையும் ஏகவிட்டான் கம்சனுமே
நன்று நன்றுஎன்று நடந்தானே தூதனுந்தான்
தூதன் மிகநடந்து தோகைஅயோதைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலிலே கிடக்க
கண்டு அந்தத்தூதன் கம்சனுக்கு நஞ்செனவே
விண்டுபறையாமல் விரைவாகப்போயினனே
போயந்தத் தூதன் பொறையுள்ள கம்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத்திறவானோ நாராயணன்தானோ
சோமத்திருவுளமோ தெய்வேந்திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோஎனக்கு அளவிடவுங்கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை
தெய்வகியாள்தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிபனான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன்சொல்லிடவே
அன்றவன்கேட்டு அயர்ந்திருந்தானம்மானை
என்செய்வோமென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும்பூத மூரிதனையேவியவன்
கொல்லவென்றுவிட்டான் குழந்தைதனை யம்மானை
வல்லபெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரையேவி
கொன்றுவா என்றான் குழந்தைதனையம்மானை
கொல்ல வந்தபேரையெலாம் கொன்றது காணக்குழந்தை
வெல்ல விட்டப்பேரிழந்து மெலிந்திருந்தான் கம்சனுமே
ஆயர்குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங்கூடி
வென்றுபால்வெண்ணெய் மிகப்பொசித்துக்காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்து
கம்சனுட ஏவலினால் காட்டில் வந்தசூரரையும்
துஞ்சிவிடக்கொன்று தொலைத்தனர் காணம்மானை
ஆயருக்குவந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார்
மதுரைதனில் வாழும் மாபாவிக் கம்சனுக்கு
இறுதி வரும்போது ஏதுசெய்தான் கம்சனுமே
நந்திடையன் பாலன் நல்ல ஸ்ரீகிட்டிணனை
இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான்ஓராளை
கம்சனுட ஆளும் கண்ணர் ஸ்ரீகிட்டிணரை
அஞ்சலென்றுகண்டு அழைத்தாருமை கம்சனென்றான்
அந்தவிசளமறிந்து அரியோனகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென்றெம்பெருமாள்
கூடச்சிலபேரைக் குக்குளிக்கத்தான்கூட்டி
ஈடவியென்ற எக்காளசத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத்தொனியுடனே
கம்சனரசாளும் கனமதுரைசென்றனரே
நாட்டமுடன் அயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்டவிசளம் கெட்டியெனக் கம்சனுந்தான்
இங்கே நான்சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக்கோடி தத்திப்படையுடனே
கொல்ல விட்டக் கம்சன் குதிரைத்தளம் படையும்
எல்லாந் திருமால் இறக்க வைத்தாரம்மானை
கம்சன்படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனுடனெதிர்த்தான்
மாயனுடபோரும் வஞ்சகக் கம்சன்போரும்
தேசமெல்லாமதிரச் சென்றெதிர்த்தாரம்மானை
மாயனுக்குக் கம்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கம்சன் மார்பிலே தானிருந்து
கம்சன் குடலைக் கண்ணியறத்தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கம்சனையுங்கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமுமாற்றி
மாதாபிதாவுடைய வன்சிறையுந்தான் மாற்றி
சீதானஉக்கிர சேனனையுமாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்திசொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்றுசொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன் சராசந்தனவன்
எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடியுத்தமிட
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போதிவனை ஈடுசெய்யக்கூடாது
சத்தபெலமல்லோ சராசந்தவேந்தனுக்கு
கொற்றவ வீமனல்லோ கொல்லவகையுண்டுமென்று
இதுவேளைதப்பவென்று எம்பெருமாள்தானடந்து
செதுவோடுகூடிச் செகலதுக்குள்ளேகினரே
கடலதுக்குள்வந்து கனத்தமதிலிட்டவரும்
திடமுடனேமாயன் துவாரகைபதியிருந்தார்

பூதனைச்சகடனோடுபின்னுள்ள அரக்கர் தம்மை
சூதனையெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரைபுக்கி
நீதமேயில்லாக் கம்சன் நெஞ்சையும் பிளந்துகொன்று
மாதவன் துவாரகையில் குணமுடனிருந்தாரன்றே

கம்சனையுமற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமாயுள்ள வாணநரபாலனையும்
இம்முதலாயுள்ள ஏற்றஅரக்கரையும்
அம்முதலாயுள்ளவரை அரியோனறுத்தனராம்
சத்தபெலமுள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார்கொல்ல மேல்நினைத்தாரம்மானை
கம்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்சலருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்
வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தாரம்மானை
மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல ருக்மணியை
விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்கு
திருமாங்கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோனடிபணிந்து
இப்போதுவுன்றனக்கு இசைந்த ருக்மணியை
பாணிக்கிரணம் பண்ணப்பறையடித்தார்
நானிதையுங்கேட்டு நாடியுரைத்தேனென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிந்து போக இசைந்தார் காணம்மானை
மோகத்திருமாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தாலுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுட
கழுத்திலேயிட்டுக் காமக்கண்ணீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயமெங்கும் மோகம் சென்றது காணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந்தானறுத்து
ருக்மணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமானமதிலேறி
மனோன்மணியையுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகரமால்தானும் விரைவாய் நடைநடந்து
வடவெல்லாந்தீர்த்து வைகுண்டப்பெம்மானும்
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தாரம்மானை
ருக்மணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச்செகலதுக்குள் வீற்றிருந்தார்

ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய்
அருந்தி முறைமாதரையணைந்து
தீயன் கொடிய கம்சனையும்
திருக்கியறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கி
ருக்மணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத்
துவரயம் பதியிலிருந்தனரே.

கம்சனிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்ய பார்த்தனர் காணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுகழைபேரும் தேசமதிலே வாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவருமெய்க்க இவர் வளர்ந்தாரம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும் வேளையானதிலே
இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித் துரியோதனனும்
முடிய வினைசூடி உலகாண்டானம்மானை
பாவியிருந்து பாராண்டச்சீமையிலே
கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது
தன்மரவ்வீமன் சகாதேவன் விசயன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநாடெனவே கூறுவாரந்நகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக்கேளம்மானை
துரியாதனாதி செலுத்துமஸ்தினாபுரத்தில்
பரியொட்டகமும் பலமிருகமானதுவும்
பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித் தகையாறிவரும்
அத்தினாபுரத்தில் அரதேசியாவரெல்லாம்
பத்தியாயுள்ள பஞ்சவர்களாண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாங்கொண்டிருந்தனராம்
திருநாட்டுக்கொவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடுமந்தக் குருநாட்டுக்கொவ்வாது
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு
தேவரும் வானவரும் தெய்வத்திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ்சிப்புள்ளும்
வேளிசமாயுள்ள வெகுவைந்தலையரவும்
வெள்ளானை வெள்ளை மிகுசாரையானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு
அந்நாடு நாடு அரன்நாட்டுக்கீடாகும்
பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு
அரனருளைப்பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு
தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில்
மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப்பேர்பாதியாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காக
தாண்டவராயர் தண்மையாலம்மானை
இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன் துரியோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தானம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்தான்
நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்றுமில்லாமல்
இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும்
தனியே வனத்தில் தானனுப்பி இராச்சியத்தை
அடக்கியரசாள அவன்நினைத்து மாபாவி
உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும்
பாவி துரியோதனனும் பஞ்சவரைத்தான்விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியரசாண்டிருந்தான்
வனவாசந்தன்னில் வந்திருந்தைபேரும்
இனமானதுபோல் இருந்தார் குகையதிலே
அப்போது வேத வியாசரவரறிந்து
செப்போடு வொத்தத்திருமாலருகேகி
மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரியோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுதுசூதாடிவென்று
வஞ்சகமாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான்
ஐபேரும் பத்தினியும் அந்தவனந்தனிலே
பசுப்போல் அலறி பசித்திருந்து வாடுகிறார்
அன்றுமகா மேருவில் அடியேனுரைத்தபடி
இன்றுபாரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐவரிடம்தான்நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன் சென்றனர் காணம்மானை
நாராயணர் வரவே நல்ல தர்மாதிகளும்
பாரானதையளந்தோன் பதம் பூண்டாரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போடுறவணைத்து
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோமென்றுரைத்தார்
அப்போது தர்மரும் அச்சுதரையும் போற்றி
இப்போது எங்களுக்கு ஏற்ற பசிதீர
சூரிய பாண்டம் தனை அழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்னமருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும்
ஐயாயிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும்
என்பேரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பேரரியை எடுத்ததிலிட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரேயன்பருக்கு
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தாரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயினபின்
தூயவியாகரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமாலின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தாரம்மானை
பாவிதுரியோதனனும் பஞ்சவரைக்கொல்லவென்று
ஆவியவன்செய்த அநியாயமத்தனையும்
ஒக்கவொருமிக்க உரைக்கக்கேளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவியிட்டனனே
நஞ்சைக்கலந்து நல்ல தயிரென்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தாரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீமனையோட்டிட
நீதாளமான நெடியோனது காத்தார்
கன்னிதனிற்பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிடவைத்ததை குன்றெடுத்தார் காத்தனரே
அரவதையும் விட்டு அருள்வீமனை வதைத்தான்
விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழுமளந்த மாயனது காத்தார்
பூதத்தையேவிப் பில்லி செய்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தியாண்டனரே
இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாமலைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தாரம்மானை
பின்னுமந்தப்பஞ்சவர்க்கு பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண்டாண்டு பரிவாய்க்கழிந்தபின்பு
தாள்போல் புத்தி தானுரைத்துப்பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
மாயன் தூதனானார் வஞ்சமில்லாப்பஞ்சவர்க்கு
தீயதுரியோதனனும் திருமாலைப் பாராமல்
மாயனையும் பாவி வாபோவெனப்பேசி
ஈயேனெனச் சொன்ன இயல்பு கேட்டெம்பெருமாள்
கன்னன் பலமும் கடிய விதுரன் பலமும்
மன்னன் ஸ்ரீபீஷ்மர் வாழுந் துரோணர் பலமும்
தென்னன் துரியோதனன் பலமுந்தானழித்து
வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டாயுதங்கொடுத்து
தாமன் சகாதேவனுக்குச் சத்தி சூலமுங்கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்து
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக்கனல் கொடுத்து
செங்கையிலே பாரதத்தைச்சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிடவொன்று ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடியோன் படையும்
கைப்போர் விற்போரும் கணைப்போர்வாள்போரும்
அம்புப்போருங்கரியின் அச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்த வலுச்சல்லியனும்
மன்னன் ஸ்ரீபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந்தன்வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டான்அம்மானை
இத்தனைபேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனைபேரையும் அறுத்தானருச்சுனனும்
துரியோதனன்படைகள் சேர மடிந்தபின்பு
விரிமாறு தூவி வெளியில் வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர் முதல்
வம்பிலிறந்தாச்சே வாழ்வதேனென்றுசொல்லி
எல்லாரிறந்திடிலும் எண்ணமில்லையென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே
விருப்பமுள்ள கர்ணனை வெற்றிகொண்ட அர்ச்சுனனை
இன்றுகொல்லவென்று எழுந்தான் படைக்கெனவே
அன்றுமால் தானறிந்து வாள்வீமனையழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்தலின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா
என்றந்த வீமனுக்கு இசைந்த போர்க்கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டதுக்கு விசைமால்விசைகொடுத்து
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச்சகாதேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லுமென்று
வீமனையுங்கூட்டி வெளியிலரி வந்திடவே
காமக்கனல்மீறிக் கரியோனெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்காமுடியோனும்
சந்தானமான தமிழ்வீமன் தான்மாறி
எதிர்த்தாரிருவர் எனக்கெனக்கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகேளம்மானை
மண்விண்ணதிரும் வானமது தானதிரும்
திண்திண்ணெனப்பூமி தொந்தொமெனக்குலுங்கும்
மலைகளசைந்து மடமடென ஓசையிடும்
கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங்கோடிடவே
இலைகளுதிர்ந்து இடிந்துவிழுமாமரங்கள்
தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாமலே மறைக்கும்
வேழ்எழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நிட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து
திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்தமோதும் நன்மறையோர் தாம்பதற
துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும்
எரியோடெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்குவொண்ணு ஒல்கிப்புறஞ்சாயாமல்
மண்ணும்விண்ணுமதிர மண்டியுத்தமிட்டார்
துரியோதனனடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறியவனடிக்க
அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டு
சாயாவிதத்தைத் தானறிந்திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாளனான துரியோதனனுரைப்பான்
இத்தனை நேரம் இருபேருஞ்சண்டையிட்டு
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே
உன்பெலமுன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால்
என்பெலமுன்னோடே இயம்புகிறேனென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைகளத்தனையும்
தப்பாமல் தானுரைத்தான் சகலோரறிந்திடவே
கேட்டுத்துரியோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறேனென்னிடது செய்யபுஜமென்றுரைத்தான்
கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தானென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடத்த முடனே சென்றவ்வீமன்பேரில்
மாறியவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தைதனில்நினைக்க
திலர்தமுள்ள மாயன் செயவீமனைநோக்கி
வலது தொடைதனிலே மாயன் கண்காட்டினரே
அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து
மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
அப்போது மாயன் அரவக்கொடியோனிடத்தில்
தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப்போயினரே
முன்னே பிறப்பில் ஸ்ரீலங்கையாண்டிருந்தாய்
தென்னனிராவணனாய்ச் சிரசுபத்தோடிருந்தாய்
அப்போது நீதான் அநியாயஞ்செய்ததினால்
செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி
பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
உற்று வொருவசனம் உரைத்தேனானுன்னிடத்தில்
தம்பியாலென்னை சரமறுத்தாயல்லாது
எம்பிராணனை வதைக்க ஏலாது என்றனையே
தம்பியொரு நூறோடே தான்படைத்துன்னையுந்தான்
கொம்பிலொருஆளைவிட்டு கொன்றேனே உனையென்றார்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவானப்போது
தண்டுகொண்டேயடித்த தமிழ் வீமனல்லாது
இன்றுமுன்னாலேலாது இடையாபோவென்றனனே
அப்போது மாலும் அதிகக்கோபம்கொண்டு
துப்புரைகள் கெட்ட தீயனுக்கங்கேதுரைப்பார்
உன்னை இன்னமிந்த யுகத்தில் பிறவி செய்து
பெண்ணாலே மாளவைத்து இன்று பேசினதும் கேட்பேன்
பிடித்து மார்பு பிளந்து பேறான திரௌபதியும்
வடிந்த உதிரம் தேய்த்து வாய்த்த கூத்தல் முடித்தாள்
அன்றவனைக்கொன்று ஐவரையுந்தான்வருத்தி
அண்ணன் துரியனுடன் கர்ணன் கூடி மாண்டதினால்
கர்மச்சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்திலுள்ளமுறை
எல்லாச்சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாசமுள்ள தர்மர் ஒக்கமுறை செய்தனராம்
முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங்கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தாரவனருகே
அப்போது வேத வியாசரவரங்கு வந்து
செப்போடுவொத்த திருமாலோடே கேட்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பாரெம்பெருமாள்
நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
தொண்டுபண்ணி நின்ற துய்யவானரங்களிலே
வல்லபெலமுள்ள வாலியிவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டிலிருக்கையிலே
இராவணனோடேகூடி இராமசரத்தாலிறந்தான்
சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
வந்து பணிந்தானே வாலியவனென்காலில்
நன்றியுள்ள மாலே நானுமுன்னேவலனாய்
முன்னேநீரமிழ்தம் உவரிதனிற்கடைய
என்னையொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனை
கொத்திச்சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்றந்த வாலி இறைஞ்சிநின்றானென்னை
அன்றுவாலிதனக்கு அருளினது நீர்கேளும்
எனக்கேவலாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப்பாவிதனைச் சங்காத்தங்கொண்டதினால்
இனிமேலவனோடிருந்து என்சொல்கேட்கவைத்து
கனியான மோட்ஷக் கயிலாசமேதருவேன்
என்றவனையழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை
அரவக்கொடியோன் இடத்திலனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தியுள்ளிருத்தி
அன்னை குந்திசொல் அசராமல் ஐபேர்க்கு
ஒன்னேவொருகணைமேல் விடேனென்ற உத்தமன்
ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு
மானமாய் மோக்ஷம் வகுத்தேனிவனுக்கென்றார்
நல்லதுதானென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான்
எல்லைவைத்த பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத்தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
மெய்போகமான வியாசரையுங்குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனாருண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
கயிலைக்கு ஏகியே கண்ணனார் சிவனிடத்தில்
அகில முறையுரைத்து அரவக்கொடியோனை
தக்சனாக படையுமென்று தாமோதரனாருரைத்தார்
பக்குவமாய் தக்சனாய் பரமசிவனார் படைத்தார்
என்ன வரம் வேணுமென்று ஈசுரரும் கேட்டிடவே
முன்பகையையெண்ணி மூர்க்கனந்த தக்சனுமே
ஆணாலும் பெண்ணாலும் அழியாவரம் தாருமென்றான்
நானாக ஆளுதற்கு தேவர்களின் ஊழியமும்
தங்கமுடி இரட்டைச்சங்கும் தாரும் என் கையில் என்றான்
மங்காத ஈசுரரும் மகிழ்ந்து வரம் கொடுத்தாரே
வாங்கியே தக்சன் வாரிக்குள் கோட்டை கட்டி
தாங்கா மணிதூக்கி தரணியை ஆண்டிருந்தான்.
வைகுண்டமேக மனதிலுற்று எம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப்பொருப்பேறி
ஆங்கார மோகத்து அம்புக்கணுவாலே
ஓங்கார மாமுனிவன்விடையேற்றுத்தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப்பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு
மேல்நடப்புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல்நடந்து வாருமென்று மோக்ஷத்திறவோனும்
சீரங்கமாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மைகேளம்மானை

சான்றோர் பிறப்பு
அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங்கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோபனமரமும்
ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந்தனமரமும்
மாவு பலாமரமும் வாய்த்த பலாமரமும்
தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது
சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவையின்பெருமை
தூல மின்னதென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித்திருப்பதுபோல்
தேர்பதியும் மேடைகளும் சிங்காசனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலையீதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்பது அவ்வனத்தில்
வைகுண்டங்காண வந்த தர்மியெல்லோரும்
மெய்குண்டங் கண்டோமென இருப்பாரவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பாயிருப்பதுதான்
புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காக
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம்
அவ்வனத்திலுள்ள அமிர்தகங்கையானதிலே
குளித்து விளையாடிக் கூபந்தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
மரகத வல்லி வள்ளி சலிகையெனும்
சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
ஏழு மடவும் எண்ணெண்ணுமிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
பலநாளு மீசுரர்க்கு பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீரனுஷ்டானம்
இனியெனக்கு நீங்கள் எல்லோருமிக்கவந்து
கனிநீரெந்தலையில் கவிழுமென்றாரெம்பெருமாள்
அப்போது கன்னி எல்லோருமேதுரைப்பார்
எப்போதுந்தானாய் இருப்பவர்க்கேயல்லாது
மாயவர்க்கும் மற்றுமுள்ள மயேசுரர்தன்றனக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர்க்கும் இல்லை
எருதேறி நித்தம் இறவாதிருக்குகின்ற
ஒருவனுக்கேயல்லால் ஊழியங்கள் வேறில்லையென்றார்
கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோடேதுரைப்பார்
ஒட்டிலிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கேயல்லாது அரவணையிலே துயிலும்
காண்டீபனுக்கேவல் கருதோமெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினி சுருட்டுவதைப்பார்ப்போம்
ஆகட்டுமென்று அச்சுதருங்கோபமுற்று
மேலோகமாயிருக்கும் வேதயேழுவுகத்தில்
சாலோகமான சத்திபரலோகமதில்
ஆருரூபமில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீருரூபமான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மியானதிலே
தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவயிருஷியொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்

 #அகிலத்திரட்டு  #ஆகமப்பலன்கள்  #தர்மயுகம்
23/12/2023

#அகிலத்திரட்டு #ஆகமப்பலன்கள் #தர்மயுகம்

   # அகிலத்திரட்டு  #ஏடுவாசிப்பு  #தாங்கல்  #திருவிழா  #நாள்2/17அப்போது சிவனும் ஆதிநாராயணரும்இப்போது மாண்ட இச்சூரன் தனக்...
23/12/2023

# அகிலத்திரட்டு #ஏடுவாசிப்பு #தாங்கல் #திருவிழா
#நாள்2/17
அப்போது சிவனும் ஆதிநாராயணரும்
இப்போது மாண்ட இச்சூரன் தனக்கு
கிரேதா யுகத்துக்கு கீர்த்தியிருக்குதென்று
சூரனை இரணியனாய் படைத்தார் அயன்சிவனும்
பிறந்த இரணியனும் பரமசிவனாரிடத்தில்
வரம் கேட்டவிதத்தை வகையாக கேட்டிருநீ
இலகு மன்னராலும் இந்திரனார் தன்னாலும்
உலகமதிற் பண்ணிவைத்த உற்ற ஆயுதத்தாலும்
இதற்க்கு முன்பிறந்த யாராராலும் மாளாவரம்
மருக்கணியும் ஈசுரரே எந்தனுக்குதாரும் என்றான்
கேட்டவரம் முழுதும்கெட்டியாய் உந்தனுக்கு
தாட்டிமையாய் தந்தேன் என உரைத்தார் ஈசர்
வரம் வேண்டி இரணியனும் வையகத்தில் இருந்து
வருத்தி தேவரையும் தனக்கு ஏவல்செய்யவைத்தான்
கன்னியரை தானழைத்து கவரியது வீசவைத்தான்
தன் பேரைநன்றாக தரணியில் சாற்றவைத்தான்
சீதையிடமிருந்த சீரான பெண்ணதையும்
பேதமின்றிமேடை பெருக்கவைத்தான் மாபாவி
தேவர் முதலாய் தெய்வேந்திரன் வரையும்
மூவரையும் தேடி முறையமிட்டார் அச்சுதர்க்கு
மாயவனும் ஈசுரரும் மறைநூல்தனை ஆராய்ந்து
ஞாயமுள்ள அரிபத்தனை பிரகாலதானென
பிள்ளையாய்அசுரனுக்கு பிறவிசெய்திடவே
பள்ளிக்கு போகவைத்தான் படிப்பித்த வாத்தியாரும்
இரணியாய நமோவென எழுத்தோதி கொடுத்திட
அறநெறியாய் பாலன் அரிஓம்நமோ என்றனனே
பிரியாமல் பிள்ளையெல்லாம் பின்தொடர்ந்து சொல்ல
அறியாமற் பின்னும் ஆசானும் தான்பிடித்து
இரணியனிடம் சென்று இடறுசொன்னதை உரைத்தார்
மறவரை அழைத்திவனை மலைஉருட்டிகொல் என்றான்
அப்படியே கொண்டுபோய் அருமலையில் உருட்டினரே
செப்பொத்த மாலவரும் ஏந்திக்கொண்டார் பாலகனை
இப்படியே பலவிதமாய் இளம்பாலகனை கொல்லவிட்டான்
அப்படியே வந்து அரியோனும் காத்து நின்றார்
பாலன்தனை பிடித்து பாராளும் இரணியனிடம்
கொலைகாரர் விட்டாருன் குழந்தை சாகவில்லையென
பிரகலாதனே எந்தன் பிள்ளாய் கண்மணியே
இறவாதமகனே என்று அவன் கையைத்தான்பிடித்து
அப்பன் இரணியனும் அரிபாலனை பார்த்து
எப்போதும் நீசொல்லும் அந்த அரிஎங்கே என்றான்
அப்போது அரிபாலன் சொன்னதைகேள் நன்மாதே
செப்பரியஎன்னரிதான் ஏகமெங்கும் இருக்கிறார்
என்னுளம் உன்னுளமும் ஏகமும் நிறைந்திருக்கார்
என்றுரைக்க கேட்டு இரணியனும் கோபமுற்று
இந்தா நிற்கும் தூணில் இருப்பானோ உன்னரிதான்
என்று கேட்க சிரித்து ஏதுசொல்வான் அரிபாலன்
தூணதிலும் இருப்பார் துரும்பதிலுமே இருப்பார்
வீணரை வதைக்க வேளைதனில் வந்திடுவார்
என்று சொல்லக்கேட்டு இராசனும் கோபமுற்று
அன்று வாளால் தூணை இரணியன் வெட்டினனே
வெட்டின வேகமதால் வீரநாராயணரும்
குட்டிசிங்கமாய் குதித்தவனைத்தான் பிடித்து
வாசல்நடையில் வைத்து மாபாவி இரணியனை
நேசமில்லாதிறுக்கி நெறிக்கின்ற வேளையிலே
காலொடுகால் தென்னி கையை பிடித்தானே
மாலோன் அதிக மான கோபத்துடனே
சித்தா நீ வாஎனவே சிவனை மிகநினைத்தார்
பத்தன் அரிசிங்கன் கையில் பாரநகமாய் முளைத்தார்
நெஞ்சை அவர்நகத்தால் நேரே பிளந்து வதைத்து
வஞ்சகனோடு மாயன் வார்த்தை ஓன்று கேட்கலுற்றார்
சூரபற்பனாகத் தோன்றினாயந்நாளில்
ஊரிரப்பனாக உருவாக நான்தோன்றி
கொன்னேனானென்று கூறினேனப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்றதென்றாய்
வேலாயுதத்தாலே வென்றாய் நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்களம்பு அஸ்திரம் வாளில்லாமல்
வாயிதமாயென்னகத்தால் வகிர்ந்தேனுன் வயிற்றை
என்று மாயனுரைக்க ஏதுரைப்பான் சூரன்
உந்தன் கை காலதையும் உடன்பிடித்திறுக்கையிலே
பித்தனுடபேரில் பிராணபயம் போட்டாய் நீ
பத்துமலையும் பார நகம் தானாக
சீற்றமுடன் வந்து சீறிமுளைத்ததினால்
கீற்றாய் என்னைகீறி கீழேவிடாதே தடுத்தாய்
உதிரங்கீழே விழுந்தால் ஓன்றுபத்தாய் ஆகுமென
அதிர நகமுருவி அப்போ உதிரங்குடித்தாய்
பத்து மலையைப் பாரநகமாய்ப் பதித்து
இத்தலத்திலென்னை இறக்கவைத்தாயல்லாது
ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலான வேதன் மனதுகோபம் வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னாலே விடுவேன் கிரேதாயுகம் வயது
திகைந்தல்லோ போச்சு திரேதாயுகம் பிறந்தால்
பகையுந்தானப்போ பார்மீதிலுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை சங்காரமிட்டாரம்மானை
அன்று இரணியன் மேடை அழகாய் பெருக்கி வந்த
மேதையும் ஓர் நினைவு மெல்லி நினைத்தது கேள்
சீதை புருஷன் ஸ்ரீ ராமனாயிருக்க
நானும் அவரோடு நாடி மிகச்சேர்ந்து
ஆண் பிள்ளை பெற்று அரசாள வேணுமென்று
எண்ணி மனதில் எம்பெருமாளை நோக்கி
உன்னி கயிலை பக்கம் உடன் போய் தவசிருந்தாள்
கந்தத்திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப்பதியில் சேர்ந்திருந்தாரம்மானை

திரேதா யுகம்
ஆதி கயிலை அரனாரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவாரம்மானை
சூரபற்பனென்ற சூரக்குலங்களைத் துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇராச்சதனைக்
கொன்னு கிரேதா குவலயமும் தானழித்து
முன்னு கரந்திருந்த ஆறுமுகவேசம்
செந்தூருவாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங்காணய்யா மலர்ப்பாதந்தெண்டனிட
என்றேதானாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதானீசர் அருளுவாராயருக்கு
முன்னே குறோணி முடிந்த துண்டு ஆறதிலே
இன்னும் மூன்று துண்டு இருக்குது இங்கேதான்
என்னவிதமாய் படைக்க இசையும் எனஉரைத்தார்
மண்ணுக்கு அதிகாரி மாறி உரைத்ததுகேளு
வசைசொன்னான் இரணியன் வதைபடும் வேளையிலே
அசையாத மாயவரே அவ்வசையை சொல்லும் என்றார்
பத்துமலைதனையும் பாரநகம் தானாக்கி
இத்தலத்தில் என்னை இறுக்கி கொன்றாய் என்றானே
பத்துமலை என்று பகர்ந்த மொழியாலே
பத்துமலைதனையும் பாரத்தலையாய்ப் படையும்
என்றுமாயன் உரைக்க இருவரும் நல்லதென்று
அன்று படைத்தார் அரக்கன் ராவணனை
பத்து தலையும் பத்துரண்டு கண்காதும்
தத்துவத்தோடு தான்படைத்தார் பாதிதுண்டம்
கூடியுள்ள பாதியையும் கும்பகர்ணனாய்ப் படைத்தார்
நாடறிய ராவணனுக்கு நல்ல படைதானாக
கூடப்பிறக்கக் குண்டிலிட்டரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப்பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷணனென்று மெய்யுருவம் தானாக்கி
கவுசலமாயரக்கன் தம்பியெனக் கருத்தாய்
கூடியிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கையாக வீற்றிரென்றுரைத்தார்
அப்போது கும்பகர்ணன் அன்று வரம்வாங்கவென்று
செப்போடுவொத்த சிவனை மிகநினைத்து
நித்தமும் சாகாமல் நீணிலத்தை ஆளவென்று
தத்துவத்தோடு வரம் தாரும் என்று நின்றானே
கும்பகர்ணன் நின்ற கொடுந்தவம் பார்த்து மாயன்
அன்பான நாரதரை அழைத்தேது சொல்லிவிட்டார்
சரஸ்வதி இடத்தில் சட்டெனவே ஏகி நீயும்
வீரமுள்ள கும்பகர்ணன் வெகுநேரம் தவசிருக்கான்
அவன் தவத்தைபார்த்தால் அழியாவரம் கேட்பான்
சிவனும் கொடுத்தால் சிரமமாகும் எந்தனுக்கு
நித்தியதத்துவம் வாங்க நினைத்து நிற்கின்றான்
நித்திய தத்துவத்தை நித்திரை தத்துவம் எனவே
மாற்றி உரைக்கணும் என்று சொல்லிவாரும் என்றார்
நாற்றிசையும் புகழும் நாரதர் நடந்தேறி
சொன்னார் சரஸ்வதிக்கு சுவாமி அருளாலே
நன்றென்று சொல்லி நாடி சரஸ்வதியும்
கும்பகர்ணன் நாவில் குணமாய் இருக்கையிலே
வம்பன் கும்பகர்ணன் வாய்திறந்து ஈசனிடம்
நித்தியதத்துவம்என நினைவில் உருவேற்றி
நித்திரை தத்துவம் என்றே கேட்டான் ஈசரிடம்
சிவனார் அதுகேட்டு சீரான கும்பனுக்கு
அவன்கேட்டதுபோல அளித்தார் வரங்களும்
ஆறுமாதம் தூக்கம் ஆறுமாதம்உணவு
வீறாகவே வரவே வேண்டி நீஇருப்பாய்
என்று வரம் கொடுத்தார் ஈசுரரும் அந்நாளில்
எண்டிசையும்தானறிய இந்தவரம்கொண்டனனே
பத்துதலைகொண்ட பாவிஅரக்கனவன்
மற்றும் நிகரொவ்வா வாய்த்தபடையோடு
வீற்றிருக்கும் நாளையிலே வீணனந்த ராவணன்
மாற்றி தவமிருந்து வரம்வேண்ட வேணுமென்று
கயிலைக்குஏகிக் கரம் கொண்டு தட்டினனே
அகிலம் அசையுது என்று ஆதிசிவன் தானும்
கால்கொண்டு தட்டிவே கருநீச ராவணனும்
பொல்லாதார் போகும் புழுக்குழியில் போய் விழுந்தான்
அங்கே இருந்து அரக்கனந்த ராவணனும்
செங்கண் சிவனை சேவிக்க வேண்டும் என்று
பத்து தலையில் ஒன்றை பண்பாகதான் எடுத்து
சித்தருடபேழைஎன்று திடமாக வைத்துக் கொண்டு
இருபது கையில் இரண்டுகையை தான்உருவி
குருநரம்பு எடுத்து கோர்த்து வீணையாக்கி
இராமுழுதுமே இழுத்து ஈசனை அழைத்தான்
ராவணாநீயும் என்னை அழைத்ததேது என்றார்
அனைத்துயிரும் படைத்த ஆதியே உம்மிடத்தில்
வணங்கிப் பணிந்து வரம்வேண்ட வந்தேனான்
கயிலையில் வந்து கதவுதட்டும் வேளையிலே
அகிலம் அசையுதென்று ஆதியுமே கோபமுற்று
நரகலோகமதில் நம்மையும் தள்ளிவிட்டீர்
அரகராவென்று ஐயா அழைத்தேன் என்றான்
அப்போது ஈசர் அரக்கனை பார்த்து
இப்போது வாஎனவே ஈசர் அழைத்தாரே
நரகத்தை விட்டு நற்கையிலை வரும்வழியில்
கரம்குவித்து மேதை கண்ணரை நினைத்திருக்க
இச்சித்து ராவணனும் இவளைத் தொடர்கையில்
அச்சமில்லா மேதை அரக்கனுக்கு சாபமிட்டாள்
என்தவசை அழித்து எனைத்தொடர்ந்த ஏதுவினால்
உன்னால் வதைபடவே என்னை எடுத்து போவாய்
என்று சபித்து எரிஅதிலேதான் விழுந்தாள்
அன்று அந்தஅக்கினியும் அவள்தவசைபார்த்து
அக்கினிதேவி அவளை வளர்த்து வந்தாள்
அக்கினிக்குள் மேதை அருந்தவசு பண்ணலுற்றாள்
அப்போதுராவணனும் ஆதிசிவன் இடத்தில்வந்து
இப்போது எந்தனுக்கு ஏற்றவரம் தாரும் என்றான்
தவத்தைகண்டு தலைபத்து அரக்கனுக்கு
சிவத்தலைவரானோர் என்னவரம் வேண்டும்என்றார்
அப்போது ஈசனிடம் அரக்கன்வரம் கேட்கலுற்றான்
இப்போது ஈஸ்வரரே என்தலை இரண்டுகையும்
முளைக்கவே வேணும் முதலே முதற்பொருளே
அழைத்து நான்கேட்டவரம் ஆதிசிவனே நீரும்
தருவேன் நான்என்று தந்திமுகனவன் பெயரில்
உறுதியாகவே எனக்கு உண்மைசொல்லும் என்றான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுதான்கொடுக்க
அப்போது நல்லதென்று அரக்கன்வரம் கேட்டதுகேள்
மூன்று லோகத்திலுள்ள முனிவர் தேவாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதவிதமாயம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றி
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
சிவனாரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மாவொருகோடி
உமையாளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவரமத்தனையும்
துடுக்கமுடன் கேட்ட சுத்தவரம் அத்தனையும்
கொடுக்கும் போது குன்றெடுத்தோன் தன்தேவி
அலங்காரமாகி அன்றைய பொழுதினிலே
கலங்காதான் தேவி கயிலைஉமையாளருகில்
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கும் வேளையிலே
கெணியாது அரக்கன் கெடுவதறியாமல்
அம்மைதனை கண்டு அயர்ந்து முகம் வாடினனே
செம்மையாக சினம் கொண்டு திருமகளும்
மோதி அவன் பேரில் மொழிந்தாள் ஒரு சாபம்
சீறியே அரக்கா நீ சினம் கொண்டு பார்த்ததினால்
பாரில் எனை நினைந்து ஒருபெண்ணை கொண்டேகி
ஸ்ரீ ராமர் பாணமதால் சிரமறுந்தே சாவாய் என்றாள்
இப்படியே சாபமிட்டு இயலான லட்சுமியும்
அப்படியே கயிலை அறைக்குள் சென்றிருந்தாள்
கர்ம விதியால் கைமறந்து அரக்கனவன்
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்டமுடன்சீதை நகையாலழிவையென்று
இரக்கமில்லான்கேட்ட ஏற்றவரங்களெல்லாம்
அரக்கனவன்றனக்கு ஆதிமிகக்கொடுத்தார்
வரம்வேண்டிஅரக்கன் வாழ்இலங்கை ஏகுகையில்
குரந்த தவசி இருந்த குறுமுனிவன் தனையும்
ஒற்றினான் காலால் உடன்சாபமிட்டானே
கர்த்தரை நாடி கனநாள் தவமிருந்தேன்
ஒற்றினாய் உன்காலால் உன்னால் தவம்கலைந்தேன்
சித்தன் அருள்கண்டு சிவன் பாதம்சேர்வதற்கு
அரக்கா உன்தலையறுக்கப் பிறப்பேன் ராமபாணமாய்
அறச்சாபம்கூறிமுனி அலைக்குள்ளே வீற்றிருந்தான்
ஆதிகொடுத்த அவ்வரங்களத்தனையும்
நீதியில்லான்வேண்டி நெடியோன் தனைவணங்கி
கொண்டுபோகும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட்டே மாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயமதாய்
சரக்கோடி மூணும் தான் தோற்றுப் போயினனே

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கிடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணுலோகம் முழுதுமே யடக்கியாண்டான்

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
தேவரையும் மூவரையும் தேவேந்திரன் வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை
வாசுவும் அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருணனவன் மேடை வந்து தொளியாதிருந்தால்
மரணம் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப்போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப்பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்து முன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில்பொட்டிடுவேன் நிச்சயமென்பானரக்கன்
வானவர்களெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்து நில்லாதேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பிலிட்டவரை
வேகும் படிக்கு வேள்வியதிலிட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணாலெரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் எமனையுங்காலனையும்
துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுகத்திலுள்ள இராசாதி ராசரெல்லாம்
முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால்
நெருப்பெடுத்திட்டிடுவேன் நேரேகொண்டுவராட்டால்
எரிப்பேனொருஅம்பால் இராசாதிராசரையும்
இப்படியே பாவி இந்திரலோகம்வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியரசாண்டிருந்தான்
அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கமதால் பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத்தார்களெல்லாம்
தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்கு அபயம் முறையமென்றார்
அபயமிடு மொலியை அச்சுதருந்தானமர்த்தி
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியைமிகப்போற்றி
சோதித் திருமால் சொல்லுவாரம்மானை
பத்துத் தலையுடைய பாவியரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்திரன் வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளியுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பாராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ்சொரூபமது
தன்னிகரில்லாதவனே சாற்றுவீரென்றனராம்
மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவாரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநாமீந்தவரம்
தாவிப்பறிக்கத் தானாகாதென்னாலே
என்றரனார் சொல்ல எம்பெருமாளச்சுதரும்
அன்றெம்பெருமாள் ஆலோசனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகிலவரிருக்க
அன்னுகத்திலுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நிஷ்ட்டையாயரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப்பார்த்துத் தானனுப்புமீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப்பார்த்து
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்க
தானவரேயிப்போ தான்படைக்கவேணுமென்றார்
ஏவலாயென்றனுக்கு இப்பிறப்பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்கு
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புராசன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்குமாசனமும்
இம்மூணு பேரும் என்னோடுடன்பிறக்க
சம்மூலப்பொருளே தான்படையுமென்றுரைத்தார்
மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
தூயவருமந்தப் படியே தெளிந்திருக்க
படைக்கும் பொழுதில் பரதேவரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத்தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவாரம்மானை
மண்டலமெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போபடைப்பீரால்
மங்களமாயுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந்தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத்தசரதரும் வந்து தினகரரும்
மகவாசையுற்று மகாபரனைத்தானோக்கி
அகப்பாசமற்று அதிகத் தவமிருந்து
நாதனறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாதகனரக்கன் பத்துச்சிரத்தானை
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவருடன்கூடி உலகமதிலே பிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதாலட்சுமியை
இரக்கம்போலுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய்
இப்படியே வேதத்து எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்ற திருமாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமராய் அய்யா திருமாலை
இப்போது படைக்க ஈசுரனார் சம்மதிக்க
படைக்கும் பொழுது பரமசிவனாரை
நடக்குந் திருமால் நாதனைப் பார்த்துரைப்பார்
அவ்வுலகிலென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்கு என்னைப்பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையாயீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னையனுப்புமென்றார்
மாயனிது கேட்க மறையோனக மகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறாரம்மானை
பரலோகமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோகந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாசமாயிருந்து விசாரமதிட்டனராம்
வாரும் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து
நானுமொரு பெண்மதலை நல்ல மகவாக
தானுமோராண்மதலை தலைவன் தனைவாங்கி
சம்மந்தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேருமிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றிவேள்வி ஓமமதுவளர்க்க
இந்தப்படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்
அல்லாமற்பின்னும் அரக்கன்ராவணன்தனக்கு
கொல்லாமற்கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு
அரக்கன் வரம்வேண்டி அவன்போகுமவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத்தரக்கனுந்தான்
பவிசு மதமாய்ப் படுவதறியாமல்
முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி
அநியாயப்பாவி அரக்கனவன்றனக்கு
கூறினான் மாமுனியும் கொள்ளை கொண்டச்சாபமது
தூறின சாபத்துல்லியத்தை நீர்கேளும்
மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே
காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன்றனக்கு
இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து
உந்தன் தனையறுக்க ஒரு ராமபாணமது
வந்து பிறந்திடவும் மாயனதைத்தானெடுத்து
உந்தனுட மார்பில் ஊடுருவவிடவும்
துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில்
பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல
மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும்
ஓமுனிக்கு லட்சமியும் வில்லோடுதித்திடவும்
இராமபாணத்தோடே இராமர் தசரதற்கு
முராகமத்தின் படியே உலகிலுதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணங்கெட்டு அரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து
சேனைத்தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து
உன்சடலமெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்து
தன்சடலம் விட்டுச் சண்டாளா நீ மடிவாய்
வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி
ஆண்டுபன்னிரண்டாய் அவன்றவசு நின்றனனே
நின்ற தவத்தின் நிலைமையறிந்துமையாள்
அன்றைக்கு வரமது அருளினாளாயிழையும்
உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்கு
துரைத்தனமாயிதனைச் சொல்லி விடைகொடுத்தேன்
இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள்
அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல
மாமுனியும் நம்மை வருந்தி நிஷ்டை செய்யுகிறார்
ஓமுனிக்கு நல்ல ஒழுங்கு செய்யவேணுமல்லோ
அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது
எல்லாமிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார்
நல்லதுகாணென்று நல்லதிருலட்சுமியை
வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார் காணீசுரரும்
இராமபாணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய
சீராமஸ்ரீயம்பகனும் சிவனும் அகமகிழ்ந்து
என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று
பொன்னம்பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார்
ஈசுரருமப்போ இரத்தின கிரிதனிலே
வீசு பரனும் வேள்வியதுவளர்க்க
வேள்வி வளர்த்து விமலனுருவேற்ற
தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந்தானாகி
திருக்கணைக்காலில் செய்ய நரம்புருவி
கருக்கணமாய் ராம பாணக்கணையெனவே
உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தாரம்மானை
பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில்
தூண்டு விரலில் துய்ய நரம்புருவி
வேண்டும் பெரிய வீரவில்லீதெனவே
வேராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல்
ஸ்ரீராமரேற்ற சிந்தித்தாளம்மானை
உடனேயது வில்லாய் ஓமமதில் பிறக்க
திடமாக ராமர் திருக்கணைக்கால் நரம்பு
பாணமதாய் வேள்விதனில் பரிவாய்ப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண
எல்லோருங்கண்டு இதுகண் மாயமெனவே
வல்லோர்களான வாய்த்த தேவாதியெல்லாம்
சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட
அங்கணங்களான அலகைமிகக் கூத்தாட
இராமபாணத்தாலே இராவண சூரனையும்
ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர் குலமறுப்பார் அச்சுதனாரென்று சொல்லி
இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக்கொண்டாட
வில்லோடுடன் பிறந்த வீரலட்சுமியெனவே
வல்லோர்களாராலும் வந்திந்த வில்லதையும்
வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்டலாமெனவே
தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியை
தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சுமியை
மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்டகத்தோடே
வில்லோடே பிறக்க விமலனருளினராம்
நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்றவைத்து தேசாதி ராசனுக்கு
விசமாலை ராமருமாய் வீரக்கணையோடே
கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும்
நீட அரவணையை நீதலட்சுமணராக்கித்
தலையணை மெத்தையையும் சத்துருகன் பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்ய
தேவரையும் வானரமாய் சிவனார் பிறவிசெய்ய
மூவரையும்பிறவி உள்ளதெல்லாஞ்செய்திடவே
கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப்பாவிகளை
முடியடிவேரில்லாமல் முழுதுமறுப்பதற்கு
வேண்டும் பிறவியெல்லாம் விமலனருளிமிக
தாண்டவ சங்காரம் தானிதென்றாரம்மானை
ஸ்ரீராமரும் இராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராமபாணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்க
பொன்னரிய வில்லோடு உடன்பிறந்தாள் பொன்மாது
தேவரெலாம் வானரமாய் தென்னிலங்கைசுட்டழிக்க
பூவர் சுகுமுனிவர் போர்விசுவகன்மனெனும்
வானரத்துக் கேற்ற மதிமந்திரி தானாகி
தானவரையுமனுப்பித் தரணிதனிலெம்பெருமாள்
லட்சுமணரெனவே ஏற்ற சத்துருகன் பரதன்
கட்சியுடன் மாயன் கணையோடுடன் பிறந்தார்

இராவணன் தன்னைக்கொல்ல இராமபாணங்களோடே
ஸ்ரீராமராய் மாயன் தானும் தசரதன் தனக்குத்தோன்ற
விராகன மாது சீதை வில்லுடனுதிக்கத்தேவர்
மராமரக்குலங்களாகி வந்தனர் புவியின் மீதே

இப்படியே ராவணற்கு எல்லோரும் பகையாய்
முப்படியே உள்ள முறைநூற்படியாலே
மாபலியை வதைத்து மண்ணுக்குள் சிறைவைக்க
வாமனராய் முன்னாள் அவதரித்து மாயவரும்
முன்னூராயிரரூபமாய் உலகளந்த வேசமதில்
எண்ணாயிரத்தில் எடுத்தார் ஸ்ரீராமர் உரு
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தாரம்மானை
சீதை வளர திருவில்லுந்தான்வளர
கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர
சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே
இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர
அரக்கன் கொடுமை அண்டமளவே வளர
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்று
தன்புருசனோடே தையல்நின்றேது சொல்வாள்
அம்பும்வில்லும்வளர ஆயிழையுந்தான்வளர்ந்து
பக்குவங்களாச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவ தென்ன உரைப்பீரென்னுத்தமரே
என்று மடமாது ஏற்ற தினகரரை
நின்று வணங்கி நேரிழையுஞ்சொல்கையிலே
வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி
இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
பூராசமான புவியைம்பத்தாறிலுள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து
வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ்சூட்டுமென்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியை
கண்டு மாமுனியும் கண்ணனார்க்கேதுரைப்பான்
பண்டு உனக்குப் பரம சிவனாரும்
வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்கு
செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு
இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால்
பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ
என்று கலைக்கோட்டு மாமுனியுந்தானேகி
சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே
அன்றைம் பத்தாறு அரசருக்குமாளனுப்பி
தேசாதி தேசர் திசைவென்றமன்னரெல்லாம்
மேசாதியானோரும்மேவுந்தெய்வேந்திரனும்
இராவண சூரன் இராமர்முதலானவரும்
இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல்
முல்லை மன்னரெல்லாம் முகம்வாடிப்போயிருந்தார்
இராமரெடுத்து இராமசரமேற்றி
ராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்துவானோர் மங்கள கீதத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றார் அயோத்தியிலே
அயோத்தியாபுரியில் ஆனதம்பிமாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்
வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை
தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான்
கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்ல வனவாசமதில்
வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே
லட்சுமணருமங்கே ஏற்றகனி தான்பறிக்க
கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போக
சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க
ஆர்ப்பரவாயீசர் ஆகாசத்தேவழியே
வாளை அயச்சார் வாய்த்த பரமேசுரரும்
தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர்
கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்து
துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண்
பட்டந்த ஆலும் படபடெனச்சாய்ந்திடவே
வெட்டுண்டு வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து
இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமணரைத்தேடி
தேடி ஸ்ரீராமர் சீர்பாதங்கண்டணுகி
நாடியெனைத்தாவுமென்று நாணமில்லாதுரைத்தாள்
என்பாரியிங்கே இருக்கவே வேறொருவர்
தன்பாரி தன்னைத் விரும்பேன்நீ போடியென்றார்
போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி
தேடியே லட்சுமணரைச் சேரவுறவாடிநின்றாள்
உறவாடி நின்ற ஒயிலையவரறிந்து
பறபோடியென்று பம்பத்தன மூக்கரிந்தார்
மூக்கும் செவியும் முகமும் வடிவிழந்து
நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி
தன்னுடனே கூடித் தமயனெனப்பிறந்த
மன்னன் ராவணன் தமக்கு வகையாயுரைக்கலுற்றாள்
காட்டிலொருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டிலொவ்வாக்கன்னி நான்கண்டதில்லையண்ணே
உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன்
என்றனுட மூக்கரிந்தோர் இருவருண்டல்லாது
மற்றொருவரங்கே வாழ்ந்திருக்கக்கண்டதில்லை
கற்றொருவர் காணாது கையிலம்பு காணாது
மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே
ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம்
என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க
அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறி
பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே
அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய்
மானின் பிறகே மனம் வைத்து நின்றிடவே
லட்சுமி இடத்தில் நாடியே பிச்சை என்றான்
அச்சமயம் லட்சுமியும் ஆதி முறைப்படியே
முன்னுருவாயிருந்த மேதை என்ற ஆச்சியையும்
என்னுருவாக நீயும் இருந்து பிச்சை ஈ என்றாள்
அந்நேரம் ராவணனும் அங்கு வந்து பிச்சைகேட்டு
உன்னை எடுத்து தேர் மேல் ஊக்கமுடன் வைத்து
சிறையிலே வைப்பான் சீர்வனத்தில் இராவணன்
மறைவிலே வைத்து வாய்த்த காவல் செய்திடுவான்
என்தலைவனான ஏற்ற ஸ்ரீ ராமர் வந்து
உன்னை எடுத்து போகும் இராவணன் குலமறுத்து
அயோத்தி ஏகும் வழியில் அக்கினியில் நீயும் போது
கையேற்க வருவேனென கருத்தாய் வரம் கொடுத்து
மிக்கான சீதை என மேதையை ஆக்கிவைத்து
அக்கினி தேவன் இடத்தில் அருந்தவசு செய்தனளே
அன்று வரம் வேண்டி ஆதி மேதை யானவளும்
நின்று அரக்கனுக்கு நேராக பிச்சை இட்டாள்
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
நாராயணர்தேவி நல்லதிருலெட்சுமி என
ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன்
தேரிலே அம்மையென திருடிக்கொண்டேகினனே
பாரிலே வுள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறிமிக அழவே
அண்டர் முனிதேவர் எல்லோருந்தாமழவே
மான்வேட்டையாடி மாரீசனை யறுத்து
தான்வேட்டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார் காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல்
கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே லட்சுமணர் மண்ணிற்புரண்டழுதார்
என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே
பொன்னேயமுதே பெற்றவளே யென்றழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி
ஸ்ரீராமர்கலங்கி சினேகமுடனழுதார்
மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால்
தனுவானதையடக்கித் தானே புலம்பலுற்றார்
அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார்
வன்னமுள்ள யானை வாய்த்த சிங்கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார்
இப்படியே ராமர் இளையபெருமாளும்
அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடி
சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவரும் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனையாள்பெற்ற அனுமனதில் வந்தடைய
சஞ்சலமேதென்று சாரதியுங்தெண்டனிட
மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கி
கவசகுண்டலமணிந்த கார்குத்தா யாரெனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்பதேதெனவே
கேட்க அனுமன் கிருபைகூர்ந்தெம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்

நல்லது அடியேன் கேட்டேன் நானினிவுரைக்கும் வாறு
சொல்லவுங் கேட்பீரெந்தன் திருவடையாளஞ்சொன்னீர்
வல்லவர் தகப்பனானீர் வரந்தரவேணு மிப்போ
புல்லர்வாழிலங்கை சுட்டு அம்மையைக்கூட்டி வாறேன்

என்தாய் மொழிந்த இயலடையாளத்தாலே
முன்தானே பெற்ற முதல்வர்தானென்றனக்கு
அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார்
பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே
இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர

Address

Murugandiyur, Anaintha Perumal Nadaroor
Tenkasi
627423

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+917200031169

Alerts

Be the first to know and let us send you an email when Akilathirattu India Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akilathirattu India Mission:

Share