ஆபிரகாம் பண்டிதர் தமிழ் வளர்ச்சி குழு

  • Home
  • India
  • Tenkasi
  • ஆபிரகாம் பண்டிதர் தமிழ் வளர்ச்சி குழு

ஆபிரகாம் பண்டிதர் தமிழ் வளர்ச்சி குழு தமிழர் பண்பாடு

📜 “ஆபிரகாம் பண்டிதர்” தமிழ் வளர்ச்சிக் குழு &முதலூர் தூய மிகாவேல் YPA, நடத்தும் 🎓 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) இலவச ...
09/09/2025

📜 “ஆபிரகாம் பண்டிதர்” தமிழ் வளர்ச்சிக் குழு &
முதலூர் தூய மிகாவேல் YPA, நடத்தும்

🎓 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) இலவச பயிற்சி வகுப்புகள் 🎓

________________________________________
📅 அறிமுக வகுப்பு:
🗓️ நாள்: 14.09.2025
⏰ நேரம்: மாலை 3.00 மணி
📍 இடம்: ASAR குளோரி ரத்தினசாமி வளாகம்,
கிறிஸ்தவ வரலாற்று நூலகம், சுரண்டை
________________________________________
✨ இது முதலாவது முயற்சியாக, TET தேர்வை குறிக்கோளாகக் கொண்ட இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
👉 இவ்வருடம் புதியதாகச் சேரும் மாணவர்கள்/ஆசிரியர் தேர்வர்கள் தெளிவான வழிகாட்டலுடன் பயிற்சி பெறுவர்.
👉 ONLINE + நேரடி (Offline) வகுப்புகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
👉 ONLINE வகுப்புக்கான குறியீட்டு விபரங்கள் அறிமுக நாளில் அறிவிக்கப்படும்.
________________________________________
🟣 சிறப்பு குறிப்புகள் (Highlights)
1. ✅ TET Paper–1 & Paper–2 தேர்வுக்கான தனிப்பட்ட பயிற்சி
2. ✅ நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதல்
3. ✅ மாதிரி தேர்வுகள் (Mock Tests) & கேள்வி–பதில் விவாதங்கள்
4. ✅ ONLINE + Offline வகுப்புகள் வசதி
5. ✅ சிறப்பு குறிப்புகள் & Study Materials வழங்கப்படும்
6. ✅ ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தொடர்ச்சி வகுப்புகள்
7. ✅ TET தேர்வில் வெற்றி பெறும் நோக்கத்துடன் சிறப்பு திட்டமிடப்பட்ட பயிற்சி
8. ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் அனைத்து தேர்வுகளுக்கும் சேர்த்து (வினாத்தாள் வகைக்கு)ரூ.500 மட்டும் கட்ட வேண்டும்.
________________________________________
📢 இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களின் கனவு – ஆசிரியர் தகுதி தேர்வை வெற்றிகரமாக எட்டுங்கள்!
________________________________________
📞 மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள:
👉 https://chat.whatsapp.com/IggUx8C2VZR1F8v2LmfN6u?mode=ems_copy_c

சங்கீதத்தில் சுவிசேஷத்தின் சுவை: ஆபிரகாம் பண்டிதர் பெயரில் சங்கீத வகுப்புகள் துவக்கம்சுரண்டை, ஆகஸ்ட் 2: பாரம்பரிய தமிழ் ...
02/08/2025

சங்கீதத்தில் சுவிசேஷத்தின் சுவை: ஆபிரகாம் பண்டிதர் பெயரில் சங்கீத வகுப்புகள் துவக்கம்

சுரண்டை, ஆகஸ்ட் 2: பாரம்பரிய தமிழ் கிறித்தவ இசைக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்குடன், "ஆபிரகாம் பண்டிதர் தமிழ் கிறித்தவ கர்நாடக சங்கீத வகுப்புகள்" இன்று கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. தமிழிசைக்கு பெரும் பங்காற்றிய ஆபிரகாம் பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த இசைப் பயணத்தின் தொடக்க விழா, கனம் பேரன்புரூக் மன்றம், ASAR குளோரி ரத்தினசாமி (வரலாற்றுச் சங்க நூலக) வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் திரு. A.S.A.R பாலசந்தர் தலைமை தாங்க, சாம்பவர்வடகரை சேகர தலைவர் அருள்திரு. A. ஜெபரத்தினம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. மாசிலாமணி ஜெபத்துடன் நிகழ்வைத் துவக்கி வைத்தார். வரலாற்றுச் சங்க பொறுப்பாளர் திரு. மன்னா செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, திரு. ராஜகுமார் வேதபாடம் வாசிக்க, திரு. சுஜித் அவர்கள் "தமிழிசையின் முழுமதி, சகலகலா வித்துவான் ஆபிரகாம் பண்டிதர்" எனும் தலைப்பில் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, இரண்டாண்டு கால இசைப் படிப்பிற்கான "பண்டிதர் இசை நூல் பால பாடம்" தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. சங்கத் தலைவர் திரு. ASAR பாலசந்தர் நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு. மாசிலாமணி பெற்றுக்கொண்டார். திரு. தர்மம் மற்றும் திரு. மனோகர் ஆகியோர் அடுத்தடுத்த பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இசை வகுப்புகள் குறித்து, வாய்ப்பாட்டு விரிவுரையாளரும், இசைகலைமாமணியுமான திருமதி. ஜோஸ்லின் B.A., மற்றும் கலைமாமணி திரு. ஸ்டீபன் ஆகியோர் விரிவான அறிமுக உரையாற்றினர். வயலின் விரிவுரையாளரான கலைமாமணி திரு. சிவராமகிருஷ்ணன், மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வரலாற்றுச் சங்க உறுப்பினர்கள் TTV சந்திரசேகரன் மற்றும் நெல்லை யோவான் கல்லூரிப் பேராசிரியர் திரு. எட்வர்ட் கிறிஸ்டோபர் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வகுப்புகள் விபரம்:

• படிப்புகள்: கர்நாடக பாடல் (வாய்ப்பாட்டு), கர்நாடக வயலின்.
• கால அளவு: 2 ஆண்டுகள் (ஆண்டுதோறும் தனிப்பட்ட பாடத்திட்டம்).
• வகுப்பு நாட்கள்: ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறும்.
• ஆசிரியர்கள்: கலைமாமணி திரு. சிவராமகிருஷ்ணன் (வயலின் விரிவுரையாளர்), இசைகலைமாமணி திருமதி. ஜோஸ்லின் B.A. (வாய்ப்பாட்டு விரிவுரையாளர்).

நிறைவாக, நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு. மன்னா செல்வகுமார் நன்றி தெரிவிக்க, சாம்பவர்வடகரை சேகர தலைவர் அருள்திரு. ஆ. ஜெபரத்தினம் அவர்களின் இறுதி ஜெபத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

02/08/2025
சகலகலா வித்துவான் ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் 166வது பிறந்தநாள் இன்று (௦2.08.2025) ஆசிரியராக, சித்த மருத்துவராக, கவிஞராக...
02/08/2025

சகலகலா வித்துவான் ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் 166வது பிறந்தநாள் இன்று (௦2.08.2025)

ஆசிரியராக, சித்த மருத்துவராக, கவிஞராக, தமிழிசை ஆய்வாளராக தொண்டாற்றிய ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை உலகின் நீண்ட இருளைக் கிழித்து வெளிவந்த முழுமதி ஆபிரகாம் பண்டிதர் அவர்கள். இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு உரிய சிறப்பினை செய்யாது சிறுமைப்படுத்தி விடுகின்றனர் என்று சாமர்செட் பிளைன் என்பவர் தனது Southern India: It is history of People, Commerce and Industrial resources என்ற புத்தகத்தில் ஆபிரகாம் பண்டிதர் குறித்து எழுதுகிற பொழுது குறிப்பிடுகிற அளவுக்கு சிறப்பு வாய்ந்தவராக வாழ்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் முத்துசாமி நாடார் மற்றும் அன்னம்மாள் தம்பதிக்கு 1859-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ம் நாள் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் எனும் கிராமத்தில் படித்தார். 1874-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள திண்டுக்கல் சென்றது அவரது வாழ்வில் முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்தது.

சித்த மருத்துவத்தில் ஈடுபாடு

சடையாண்டி பண்டிதரிடம் பிடில் வாசிக்க கற்றுக் கொண்டவர், பழனிக்கு செல்லும் சாதுக்கள், முனிவர்கள், பரதேசிகளிடம் உரையாடுவதன் வழியாக சித்த மருத்துவக் குறிப்புகளை அறியத் துவங்கினார். மருத்துவத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக ஆனைமலைப்பட்டியில் இருந்த பொன்னப்ப நாடாரை சந்தித்து மேலும் வைத்தியம் படிக்கத் துவங்கினார். பொன்னப்ப நாடார் இவரை சுருளி மலைக்கு அழைத்துச் சென்று கருணானந்த முனிவரை சந்திக்கச் செய்தார். கருணானந்த முனிவர் இவருக்கு மருந்துகள் தயாரிப்பதையும், இசை இலக்கணங்களையும் கற்றுக் கொடுத்தார்.

பண்டிதர் தான் தயாரிக்கும் மருந்துகளுக்கு ‘கருணானந்த சஞ்சீவி மருந்துகள்’ என்று பெயரிட்டு நன்றிக்கடன் செலுத்தினார். 1882-ம் ஆண்டு பொன்னம்மாள் எனும் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார். 1890-க்குப் பின் மனைவியும் இவரும் ஆசிரியர் வேலையை துறந்துவிட்டு முழுநேரமாக மருந்து தயாரித்து விற்கத் துவங்கினர்.

புதிய தாவரங்களையும், மூலிகைகளையும் வளர்க்க தனி தோட்டத்தை உருவாக்கினர். 1899-ம் ஆண்டு இந்தியாவின் பல இடங்களிலும் குறிப்பாக கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் தொற்று நோய் பரவியபோது பண்டிதரின் மருந்துகள்தான் நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டன. இதனால் அவருடைய புகழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவியது. சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு பயன்படும் சஞ்சீவி செந்தூரம் போன்ற மருந்துகள் அவருடைய பெருமையை காட்டும் கண்டுபிடிப்புகள் ஆகும்.

இந்திய மருத்துவத்துறை கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த டாக்டர் தியாகராஜன், "தற்காலத்தில் இருப்பது போன்ற சிறந்த மருத்துவமனைகள் இல்லாத அக்காலத்திலேயே பண்டிதர் அவர்கள் பெருமளவில் மருந்துகளை தயாரித்து தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்து தமிழர்கள் வாழுகின்ற இலங்கை முதலான பல அயல்நாடுகளில் தமிழ் மருந்துகளை வழங்கி வந்தார்" என்று குறிப்பிட்டிருப்பார்.

தமிழிசை ஆய்வுகள்

தமிழ் அறிஞரான ஆபிரகாம் பண்டிதர் சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் இல்லாதது குறித்து கவலையுற்றார். பாடல்கள் எளிதில் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதுமட்டுமின்றி கலை என்பது மனமகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்தார். தெரியாத மொழியில் பாடல்கள் பாடுவதால் முழு பயனும் இல்லாமல் போய் விடுகிறது என்பதை உணர்ந்து, பாடும் போது பொருள் உணர்ந்து அர்த்த பாவத்துடன் பாட வேண்டும் என்று நினைத்து தமிழ் மொழியில் எளிய இனிய நடையில் எழுத ஆரம்பித்தார். அத்தோடு நிற்காமல் இசை ஆய்விலும் ஈடுபட்டார்.

ஒரு ஸ்தாயில் 22 சுருதிகள் என்று வட மொழி வல்லுநர்களின் கருத்தையே பிற்காலத்தில் திராவிட அறிஞர்களும் கூறிவந்தனர். ஆனால் ஆதித் தமிழ் மக்கள் 24 சுருதிகளை அறிந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார் ஆபிரகாம் பண்டிதர். இது தமிழ் மொழிக்கும், தமிழர் வரலாற்றுக்கும் பண்டிதர் செய்த மாபெரும் பணியாகும்.

தன் ஆய்வுகளை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் முன்வைத்து, தனது மகள்களான மரகதவல்லி, கனகவல்லி ஆகியோரை 24 சுருதிகளையும் பாடிக்காட்ட செய்ததுடன், வீணையில் வாசித்துக் காட்டவும் செய்தார்.

பண்டிதர் நடத்திய இசை மாநாடுகள்

மருத்துவத் துறையில் தான் சேர்த்த பெரும் செல்வத்தை தமிழிசைப் பணிக்கு செலவு செய்தார். ஏழு இசை மாநாடுகளை சிறப்பாக நடத்தினார்.

முதல் இசை மாநாடு 27.5.1912
2வது இசை மாநாடு 21.8.1912
3வது இசை மாநாடு 19.4.1913
4வது இசை மாநாடு 9.8.1913
5வது இசை மாநாடு 18.4.1914
6வது இசை மாநாடு 24.10.1914
7வது இசை மாநாடு 19.08.1916

தஞ்சையில் நடைபெற்ற முதல் இசை மாநாடு

இசை மாநாடுகளிலும் இசை ஆய்வுகளில் சுருதி பற்றியே பெரும்பான்மையாக ஆய்வு செய்ய வைத்தார். தனது 15 ஆண்டுகால ஆய்வுகளைத் தொகுத்து 1365 பக்கம் கொண்ட ‘கருணாமிர்த சாகரம்’ எனும் புத்தகமாக கொண்டுவந்தார்.

நாகசுரக்காரர்கள் பற்றிய ஆய்வு

நாகசுரம் என்ற தமிழகத்தின் இசைக் கருவியை நாதஸ்வரம் என்று இன்று பலர் அழைக்கின்றனர். இது நாதஸ்வரம் அல்ல நாகசுரமே. நாக வடிவில் இருப்பதாலும், ஏழு நாகங்களின் ஒலியமைப்பின்படி அமைந்த கருவியென்றும், பழங்காலத்தில் இசைவாணர்களை நாகரி என்றும் அழைப்பதாலும் பண்டிதர் ’நாகசுரக்காரர்’ என்றே அழைக்கிறார்.

நாகசுரக் கலையால் தமிழருடைய பண்பாடு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல என்று சொன்ன பண்டிதர், "நாகசுரக்காரர்கள் சிறந்த இசைவாணர்களாக திகழ்ந்தனர், இக்கலையை பலருக்கு கற்றுக்கொடுத்தனர். கலையைக் கற்றவர்கள் தாம் அறிந்தவற்றை நூல்கள் வாயிலாக எழுதி வைக்கவில்லை. எழுதி வைத்திருந்தார்கள் என்றால், மிக அரிய கலைச் செல்வங்களை தமிழ் உலகம் நன்கு அறிந்திருக்கும்" என்றும் எழுதியிருக்கிறார்.

தென்னிந்தியாவின் சங்கீத பரம்பரையினர் இசைத்தமிழில் சில நுட்பமான அம்சங்களைக் கொண்ட நூல்களின் கருத்தை அறிந்து கொள்ள இயலாமல் போனவர்களாக இருந்தாலும், ஆதி பண்கள் பலவும் அவர்களாலேயே பேணப்பட்டு வருகிறது என்றும் கூறுகிறார். வீணை வாசிப்பதிலும், வாய் பாட்டிலும் தேர்ந்த வித்வான்களுக்குக் கூட சொல்லிக் கொடுக்கக் கூடியவர்களாக நாகசுரக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

தென்னிந்தியாவில் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான்களின் பெயர்களும், அவர்களைப் பற்றிய முக்கியக் குறிப்புகளும் என்ற தலைப்பில் இசைவாணர்கள் பலரைப் பற்றி ’கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தின் முதல் பாகத்தில் குறிப்பிடுகிறார் அதில் பல நாகசுரக்காரர்கள் பற்றிய குறிப்பையும் எழுதியிருக்கிறார்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களும் தமிழிசையும்

பண்டைய தமிழ் இலக்கியங்களே தமிழிசையின் முதல் ஆதாரங்கள் என்று விரிவாக நிரூபித்தவர் பண்டிதர். நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு. நான்கிற்கும் கருப்பொருள், உரிப்பொருள் வகுத்தது. இது நமது கலை, இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும். நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன. நான்கு பெரும் பண்களும், நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும்போது அதற்கும் பெரும் பண்கள் மற்றும் சிறு பண்கள் வகுக்கப்பட்டுள்ளது. பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்றும் கூறலாம். நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலை என்கிறோம். நமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை என்பது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரம் கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்துக் கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன
செம்பாலை
அரும்பாலை
கோடிப்பாலை
மேற்செம்பாலை
படுமலைப்பாலை
செவ்வழிப்பாலை
விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே. வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனை என்று தமிழிசை அறிஞர் ந.மம்முது ஒரு நேர்காணலில் கூறினார்.

இசைக் கருவூலமாய் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தை அதன் உரையாசிரியர்களான அரும்பதனார், அடியார்க்கு நல்லார் ஆகியோர் உரை வழியாகக் கற்று, உலகம் முழுவதற்கும் சிலப்பதிகாரம் காட்டும் செந்தமிழ் இலக்கணம் முழுமையானதும் முதன்மையானதுமாக மாறுகிறது என்பதை பண்டிதர் விளக்கினார். மேலும் கால அளவில் சிலப்பதிகாரத்திற்கு பின்வந்த ’சங்கீத ரத்னாகரம்’ போன்ற நூல்கள் விளக்காதவற்றை எல்லாம் சிலப்பதிகாரம் விளக்கியுள்ளது என்பதை நிறுவினார். தொன்மையான இசை மரபுகளை அருளிய இசைக் கருவூலம் சிலப்பதிகாரம் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

ஆசிரியராக, சித்த மருத்துவராக, கவிஞராக, தமிழிசை ஆய்வாளராக தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை உலகின் நீண்ட இருளைக் கிழித்து வெளிவந்த முழுமதி ஆபிரகாம் பண்டிதர். தமிழ் இலக்கியத்திற்கும் சிறந்த படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை தமிழ்நாடு அரசு பெருமைப்படுத்தி வருகின்றது. மறைந்த தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதையை கொடுத்து வருகின்றது. ஏராளமான தமிழ் வளச்சிக்கான திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகின்றது. அசுர வேகத்தில் செயல்படுத்தியும் வருகிறார் தமிழ்நாடு முதல்வர்.

ஆபிரகாம் பண்டிதர் அவர்களை பெருமை படுத்துவதினால் எதிர்கால தமிழ் சமுதாயமும், இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளவும், மாணவ மாணவிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த தமிழ் பணியின் மூலம் தமிழ் பெருமையும், பிறந்த மண்ணின் பெருமையும், தென்காசி மாவட்ட நிர்வாகமும் பெருமையடைகின்றது தமிழ்நாடு அரசும் பெருமைப்படுகின்றது.

மன்னா செல்வகுமார்

🎶 *சங்கீதத்தில் சுவிசேஷத்தின் சுவை!* 🎶  *‘ஆபிரகாம் பண்டிதர்'* தமிழ் கிறித்தவ கர்நாடக சங்கீத வகுப்புகள்பாரம்பரிய இசைக் கல...
20/07/2025

🎶 *சங்கீதத்தில் சுவிசேஷத்தின் சுவை!* 🎶
*‘ஆபிரகாம் பண்டிதர்'* தமிழ் கிறித்தவ கர்நாடக சங்கீத வகுப்புகள்

பாரம்பரிய இசைக் கலையை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பயணம்,
*ஆபிரகாம் பண்டிதர்* பிறந்த நாளான *ஆகஸ்ட் 2-ஆம் தேதி* முதல் தொடங்குகிறது!

*பயிற்சி விவரங்கள்:*
- வகுப்புகள்: ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மாலை நேரம்
- பயிற்சி காலம்: 2 ஆண்டுகள் (ஆண்டு தோறும் தனிப்பட்ட பாடத்திட்டம்)
- பாடப்பிரிவுகள்: கர்நாடக பாடல், கர்நாடக வயலின்
- நோட்டு புத்தகக் கட்டணம்: *₹300* (முதல் ஆண்டுக்கு மட்டும்)
- பயிற்சி கட்டணம்: *மாதத்திற்கு ₹1,200*
- இசைக்கருவிகள் வாங்கும் விவரம் பெற்றோர்கள் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்ய)

📍 இடம்: கனம் பேரன்புரூக் மன்றம், ASAR குளோரி ரத்தினசாமி நூலக வளாகம், சுரண்டை
👥 வயது வரம்பு: 11 முதல் 23 வரை

*முதல் வகுப்பு நடைபெறும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி. நாளை 4 மணிக்கு* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரவும்.


*ஆசிரியர்கள்:*
- கலைமாமணி சிவராமகிருஷ்ணன்
- திருமதி ஜோஸ்லின்

இசையின் மீது ஆர்வமுள்ள சுரண்டை வட்டார நண்பர்கள், பெரியவர்கள், ஊர் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

மேலும் விபரங்களுக்கு: 091767 80001

இந்த தகவலை உங்கள் திருச்சபையிலும், நண்பர்களிடமும் பகிருங்கள்!

29/05/2025

ஐரோப்பிய காலனியக் கால மக்கள், அரசியல், வணிக நிலை பற்றிய ஆய்வாளர் திரு. ஜெயசீல ஸ்டீபன் எழுதிய அருமையான் 32 தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள்.

இப்புத்தகங்களை வாங்க: 097860 68908 or Visit: Heritager.in

1. வீரமாமுனிவரின் திருக்குறள் இலத்தீன் மொழியாக்கம், 1730, 1731, 1732, 1733 (ஓர் ஆய்வு)
2. மெல்லத் திறந்த தமிழ் உரைநடை இலக்கியத்தின் கதவு: வாழ்க்கை - வரலாறு, தன் - வரலாறு, சிறுகதை, கதை, புதினம் மற்றும் தருக்க நூல்கள் எழுதுதல் 1586-1899
3. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை / FRENCHIYAR AATCHIYIL PUDUCHERRY MAKKALIN SAMOOGA VAZHKAI /
4. நோயாளிகளும் மருத்துவர்களும்:தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துகொண்டதும் (1550 - 1873)
5. நெசவாளர்களும் துணிவணிகர்களும்
6. தூத்துக்குடித் துறைமுகத்தின் ஆசிய ஆப்பிரிக்க அய்ரோப்பியக் கடல்சார் வணிகம் / Tuttukkutit turaimukattin aciya appirikka ayroppiyak kaṭalcar vaṇikam
7. தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட போர்ச்சுக்கீசு - தமிழ் அகராதி, 1731
8. தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் (கி.பி.1514-1845)
9. தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ண ஓவியங்களும் அய்ரோப்பியர்களும் உள்ளூர்க் கலைஞர்களும்
10. தமிழ் வளர்ச்சி தரங்கம்பாடியில் மொழிபெயர்ப்பு, உரைநடை மற்றும் நூல்கள் அச்சிடுதல் வாயிலாக, 1712-1799
11. தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813
12. தமிழ் நிலப்பரப்பில் நிகழ்ந்த தட்பவெப்ப நிலை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் மக்கள் பட்ட இன்னல்கள் (கி.பி.800-1900) / Thamizh Nilapparappil Nigazhntha Thatpaveppa Nilai Maatrangal Iyarkkai Peridargal, Makkal Patta Inn
13. தமிழ் இலக்கியப் பயணம் 1543-1887
14. தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், 1736-1874
15. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும் சாதியும்
16. தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு
17. தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்: அமைப்புமுறை நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு
18. தமிழகத்தில் இசைக்கலைஞர்கள் நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்:நிகழ்த்துக்கலை வரலாறும் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்
19. தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்: தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை,மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப் பரிமாணங்கள், (1567-1887)
20. தமிழகக் கடல்சார் பொருளாதாரரும் போர்ச்சுக்கீசிய காலனியமயமாக்கமும் / Thamizhaga Kadalsaar Porulaathaaramum Porchukeecia Coloniyamayamakkamum
21. தமிழக அடிமைகள் கூலியாட்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இவாழ்வியல் சூழல்/ Thamizhaga Adimaigal, Kooliaatkal, Oppantha Thozhilaalargalin Vaazhviyal Soozhal
22. தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள்
23. சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்
24. சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனியமயமாக்கமும் அதன் சமூகத் தாக்கமும் / Cippaykalum porkaiyum: Tamilakattil kalanimayakkamum atan camukat takkamum
25. காலனியத் தொடக்க காலம் / Coloniya Thodakka Kaalam
26. காலனிய வளர்ச்சிக் காலம் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை / Coloniya Valarchi Kaalam Pulam peyarndhavargal Vazhkkai
27. அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கி.பி. 1547-1792)
28. WORK AND LIFE OF THE PEOPLE IN THE BLACK TOWN AND IN THE SUBURBS OF COLONIAL MADRAS, 1641-1880
29. The Urban And Colonial Cosmography of Madras and the british, 1640-1894
30. THE BRITISH COLONIAL GAME PLAYED AND DISPLAYED IN MADRAS THROUGH INSTITUTIONS AND THE LONG TERM IMPACT, 1642-1898
31. TECHNOLOGY TRANSFER AND BUILDING THE BRITISH EMPIRE IN ,MADRAS: COMMUNICAION AND SPEECH 1732-1898
32. Soldiering in Madras and the British Colonial Conquest through Military 1642-1857

இப்புத்தகங்களை வாங்க: 097860 68908 or Visit: Heritager.in

Buy:

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

https://youtu.be/xy0HKa1kPQM?si=AhpeQk_1-gMa9tFw
11/05/2025

https://youtu.be/xy0HKa1kPQM?si=AhpeQk_1-gMa9tFw

இயல் இசை நாடக மன்றம் கடந்த 24.04.2025 தேதி ஓம்ஸ் அறவாரியத் தலைவர், அறப்பணி வேந்தர், ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் அவரத.....

மிஷனெரி பேரன்புரூக் அவர்களின் 167 வது நினைவு நாள் அழகிய மனிதர் அழகு சுரண்டைபோற்றலே! உன் பெயர் தான் பேரன்புரூக்பங்களாசுரண...
29/03/2025

மிஷனெரி பேரன்புரூக் அவர்களின் 167 வது நினைவு நாள்

அழகிய மனிதர் அழகு சுரண்டை
போற்றலே! உன் பெயர் தான் பேரன்புரூக்
பங்களாசுரண்டையின் மங்காத பேரன்புரூகே
சுரண்டையை மாற்றிய சுந்தர பேரன்புரூக்
சுரண்டையின் அறிவு பசி போக்கிய அண்ணல் பேரன்புரூக்
கல்வியில் பெருந்தொன்றாற்றியும் பேசப்படாத பேரன்புரூக்
பேரன்புரூக் மண்ணை மாற்றி விண்ணைத் தொட்டவர்
அறிவொளி வீசிய அன்பர் பேரன்புரூக்
'இருண்ட சுரண்டையில் பேரோளி வீசிய பேரன்புரூக்'
குன்றா புகழ் பெற்ற பேரன்புரூக்
அழகிய சுரண்டை அழகு மனிதர்
தென்னிந்தியாவில் உதித்த ஜரோப்பிய சிங்கம்
பிரகாசமான பேரன் புருக்! ஒளி வீசும் சுரண்டை!!
சுரண்டையின் சீர்திருத்த செம்மலே
சுரண்டையில் வாழ்ந்த சீர்திருத்த செம்மல் மகா கனம் பேரன்புரூக் அவர்கள்"
எழும்பி பிரகாசித்து பேரொளி வீசி பெருஞ்செல்வம் அருளிய பேரன்புரூக்"

Address

Sambavarvadakarai
Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when ஆபிரகாம் பண்டிதர் தமிழ் வளர்ச்சி குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share