22/05/2026
ஸ்டெர்லைட்- தமிழக அரசு தற்போது
செய்ய வேண்டியது என்ன?
===================
1. சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்களின் 2018- மே-20, மே-21, மே-22, என மூன்று நாட்களின் முழுமையான பதிவுகளை அரசாங்கம் உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
இதுவே வெளிப்படையான நிர்வாகமாக இருக்கும்
2. குறைந்தபட்சம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 11.57.34 விநாடி வரையிலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3,4 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 12.09.43 வரையிலும் ஆன பதிவுகளை உடனே வெளியிட வேண்டும். அப்போதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் உலகம் நாங்கள் சொல்வது போல் நடந்துள்ளதை அறிய முடியும்.
3. மே-22, 2018 அன்று காவல்துறையினர் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும், காவல்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
4. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், தீ வைப்பு சம்பவத்தையும் உடன் இருந்து பார்த்து காட்சிப்படுத்தியுள்ள ஊடகவியளாலர்கள், குறிப்பாக சன் டிவி நிருபர் அறிவரசு மற்றும் கேமிராமேன், நியூஸ் 7 டிவி நிருபர் ஆகியோர் 11.50 நிமிடம் முதல் 12.10 வரை, அங்கு நடந்துள்ள உண்மைகளை உலகின் முன் தெரிவிக்க வேண்டும்.
5. தமிழக அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம், நாட்டிற்க்கு உண்மையை உணர்த்த, உடனடியாக கடந்த 3 ஆண்டுகளாக ( 36 மாதமாக) இதுவரை விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் 14-05-2021 அன்று கொடுத்ததை, அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
6. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். அரசே சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்.
7. திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் 22-05-2018 அன்று பகல் 12.06.08 மணிக்கு கிழக்கிருந்து காவல்துறை அரண் பகுதிக்குள் வந்து விட்டார். அதன் பின் அனில் அகர்வால் (ஸ்டெர்லைட்) அவர்களின் அடியாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் சாவகாசமாக வந்து வாகனங்களைத் தீ வைத்து எரித்தும், சிசி டிவி 3, 4 கண்காணிப்பு கேமிராவை உடைத்து முடித்தும், பின்பு அவர்கள் எஸ்.பி இருந்த காவல்துறை அரண் பகுதிக்குள் வந்த போதும் அவர் எதுவும் செய்யாமல் ஏன் இருந்தார்? என்பதற்கு திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
8. துணை வட்டாச்சியர் சேகர் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் மீது தெரிவித்துள்ள புகாருக்கு பதில் அளிக்க வேண்டும்.
தீ வைப்பு பற்றி தனக்கு 11.48 க்கு தகவல் வந்தது என தெரிவித்து 11.50 க்கு அனைத்துவிட்டதாக ஆவணமாக்கியுள்ள தீயணைப்பு துறை அதிகாரி சண்முகம், 11.48 மணிக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது என பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீ வைப்பு நடந்துள்ளது என புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, பலரும் கைதாகி சிறை செல்ல காரணமான துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோரை மக்கள் பணியில் தொடர அருகதை அற்றவர்கள் என உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
9. திட்டமிட்டு துப்பாக்கி சூட்டை, தீ வைப்பு சம்பவங்களை சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கர், இவர்களை பின்னிருந்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுசூழல் இயக்கங்கள், காட்சி/செய்தி ஊடகங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த உண்மைகளை ஓங்கி உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் அறமான, நியாமான போராட்டத்திற்கு உரிய நீதி கி டைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம