23/07/2026
ஸ்ரீபெரும்பூதூர் மாரத்தான் - 2026 வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து FASS தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
62 தன்னார்வலர்களும் அதிகாலை முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரை ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, சோர்வின்றி, பணிபுரிந்தது மட்டுமன்றி பங்களிப்பாளர்களை வழிநடத்துதல், பாதுகாப்பை உறுதி செய்தல், குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை ஒருங்கிணைத்தல் போன்ற ஒவ்வொரு பணியையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்தார்கள்.
FASS அமைப்பின் கோரிக்கையை ஏற்று தங்கள் கல்லூரியின் மாணவர்கள் 30 பேரை தன்னார்வலர்களாக பங்கேற்கச் செய்த வேலு மயிலு சித்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு.முத்து பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.