28/10/2025
ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்கலர் (Rotary Club of Sivakasi Sparkler) சார்பில், கடந்த அக்டோபர் 27, 2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற ஓகேசனல் அவார்டு மீட்டிங் (Vocational Award Meeting) பற்றிய மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, Yami Herbals-ன் நிறுவனர் (Founder) திருமதி. P. ஷைலஜா MBA அவர்கள் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டார்.
அவர் தனது உரையில், இன்றைய டிஜிட்டல் உலகில் அத்தியாவசியமான அங்கமாக விளங்கும் சமூக ஊடக சந்தைப்படுத்துதல் (Social Media Marketing) குறித்து விரிவான முறையில் எடுத்துரைத்து, எங்களுடைய உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தினார்.
திருமதி. P. ஷைலஜா MBA அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆலோசனைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது!
#சிறப்புவிருந்தினர்