18/05/2026
*நல்லொழுக்கப் பயிற்சி முகாமின் பல்சுவை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி!*
ிவகாசி_மாநகரக்கிளை
பள்ளிக் கல்வி நிலையங்களின் கோடை விடுமுறை காலங்களை மார்க்க அடிப்படையில் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வருடந்தோறும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நமது மக்கள் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நமது சிவகாசி மாநகரத்திலுள்ள மஸ்ஜித் தவ்ஹீதில் நடைப்பெற்று வருகிறது.
இதில், கடந்த 04.05.2026 முதல் 17.05.2026 வரை நடைப்பெற்று வந்த வகுப்புகளில் பயின்று வந்த மாணவ, மாணவிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் கற்றுத் தரப்பட்டது.
80 மாணவ, மாணவிகள் வரை கலந்து கொண்ட இப்பயிற்சி முகாமின் பல்சுவை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (17.05.2026) நடைப்பெற்றது.
வழமையாக நாம் கருதும் வகையிலான திருமறையின் சூராக்களை ஒப்புவிப்பது, இஸ்லாம் கூறும் நபிவழி நடைமுறைகளை எடுத்துரைப்பது, நெகிழ்ச்சியூட்டும் தலைப்புகளில் உரை நிகழ்த்துவது போன்ற அனைத்து அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் அதிகமாகவே மிகைத்திருந்தது!
பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பெற்றோர்களும் பிள்ளைச் செல்வங்களின் உறுப்பினர்களும் மகிழ்ச்சி கொள்ளும் இவ்வேளையில் அனைவரும் ஒன்றை நிச்சயமாக நினைவு கூர்ந்து இருப்பார்கள்!
இந்த மாணவச் செல்வங்களின் வயதில் இதுபோன்ற மார்க்க ஞானத்துடன் நாம் இருந்திருக்கவில்லையே என்பது தான் அந்த எண்ணமாக நம் அனைத்து பெரியவர்களின் உள்ளத்தை தீண்டியிருக்கும்.
எனக்கு பின்னால் யாரை வணங்குவீர்கள் என்று நபிமார்கள் தங்களுடைய சந்ததியினரிடம் உத்திரவாதமாக கேட்டார்களோ அந்த நடைமுறையை இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெற்றோரும் நம் சந்ததிகளை உருவாக்கி உள்ளோம் என்று நெகிழ்ந்திருப்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
அரசியல் நாகரீகத்தில் முற்றிலும் வேறுபட்ட சிந்தனையை உருவாக்கி ஆச்சரியம் கலந்த வெற்றிகளை தேடி தரும் இன்றைய ஜென்ஸி கிட்ஸ் என்று சொல்லப்படும் சமூக இளைஞர்களின் பாதையை குறித்த
இலக்கை மறாவதீர் என்ற விழிப்புணர்வு நாடகம் சீர்திருத்த சிந்தனைக்கு வித்திட்ட வைத்திருந்தது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
மேலும், மார்க்க கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சகோ.ஸாலிஹ் misc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதி நிகழ்வாக வகுப்புகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கிளை நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மாலை 7 மணி முதல் இரவு 09:50 வரை நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்!
______________
இறை நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 66:6)