25/07/2025
அனைவருக்கும் வணக்கம்..!
நமது நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இருக்கை மற்றும் மேசை (Bench and Desk) வேண்டி Qualitest India Pvt Ltd., என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன்.
அந்த கோரிக்கையின்படி அளித்த, ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு, மிகவும் தரமான முறையில் Stainless Steel-ல் செய்யப்பட்ட இருக்கை மற்றும் மேசைகள் Qualitest India Pvt Ltd., நிறுவன அன்பர்களால் முழுவதுமாக இன்று வழங்கப்பட்டது (Total – 40 sets).
மேலும் இந்நிகழ்வில், நமது கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் படித்த திரு துரைராசு அவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்காக கௌரவிக்கப்பட்டார். (592/600 - அரசு பள்ளியில் மாநிலத்தில் முதலிடம்)
நிதி உதவி அளித்த QUALITEST நிறுவனத்திற்கும், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்..,
அன்புடன்,
இரா சிவசங்கர்