22/07/2026
⭕ நாய்களுக்கான கருத்தடை பணி என்ற பெயரில் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருராட்சியில் நடைபெற்ற விலங்கு வதையும், விதிமீறலும் ⭕
➡️ கடந்த 05.07.2026 அன்று வேளாங்கண்ணி பேருராட்சியில் கருத்தடை பணிக்காக சமூக நாய்களை குறுகிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தும், கழுத்தில் டோக்கன் இல்லாததும், அறுவை சிகிச்சை டேபில்கள் ஈக்களால் மொய்க்கப்பட்ட காணொளி காட்சிகளும் வெளியாகின.
➡️ அதனை தொடர்ந்து 06.07.2026 அன்று வேளாங்கண்ணி பீச் ரோட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு நாய்களை குப்பையில் வீசிச் சென்ற புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த ஒரு நாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த அடையாளங்கள் இருந்தன.
➡️ இந்நிலையில் விலங்கு நல அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 06.07.2026 அன்று நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் (ம) மாவட்ட விலங்கு நல அலுவலர் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
➡️ விலங்கு நல அலுவலர் தனது அறிக்கையில், இந்த கருத்தடை பணியானது Pet Care Foundation என்ற நிறுவனம் மூலம் முன்னனுமதி பெறாமல் நடைபெற்றுள்ளது எனவும், ஆய்வின்போது இரண்டு காப்பகங்களில் இருந்த 23 நாய்களை கவனித்தப்போது, அவற்றிற்கு போடப்பட்ட தையல் முழுமையாக/சரியாக இல்லாததையும், அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு முறையாக செய்யப்பட்டவில்லை எனவும் குறிப்பிட்டு உரிய நடவடிக்கைக்காக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் முதன்மை செயல் அலுவலருக்கு (CEO) அறிக்கை அனுப்பியுள்ளார்.
➡️ மேலும், நாய்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து, காவல் துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யக்கோரி, நாம் வலியுறுத்தியதின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர், வேளாங்கண்ணி பேரூராட்சியின் செயல் அலுவலரை கேட்டுக் கொண்டுள்ளார்.
➡️ Pet Care Foundation நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிக்கும் போதிலும், தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் அமைப்புகளை கண்டறிந்து, அவற்றை கறுப்பு பட்டியலில் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதும், இதுபோன்ற அமைப்புகளுக்கு ஒப்பந்தங்களை வழங்கக்கூடாது என உள்ளாட்சி அமைப்புகளை சுற்றிக்கை மூலம் தொடர்ந்து அறிவுறுத்துவதும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தற்போது செய்யவேண்டிய அவசர மற்றும் அவசியப் பணியாகும்.
- யுனைடெட் ஃபார் அனிமல் எதிக்ஸ்