26/08/2025
#கண்ணீர்_அஞ்சலி !!
எனது ஆருயிர் நண்பரும் நெலநெல்லை மாநகராட்சி முன்னாள் துப்புரவு ஆய்வாளரும்
நெல்லை மாநகர கிளைச்சங்க கௌரவ ஆலோசகரும் மாநிலச்சங்க செயற்குழு
செயற்குழு உறுப்பினருமான
மரியாதைக்குரிய திரு.T.M.மகாலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமுற்ற செய்தியைக்
கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன்.அவர் பணியாற்றியபோது துப்புரவு ஆய்வாளர்கள்
சங்கத்திற்கும், பணிநிறைவிற்குப்பின் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். நண்பர்கள் அனைவருக்கும் முகம் சுளிக்காமல் சிரித்தமுகத்துடன்
உதவி செய்யும் நல்லெண்ணம்
கொண்ட சிறந்த பண்பாளர். அன்னாரது இழப்பு மாநகர கிளைச்சங்கத்திற்கும்,மாநில
சங்கத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரது
பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலையும்
அனுதாபத்தையும் மாநிலச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடிநிழலில் இளப்பாற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
இரா. பாஸ்கரன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி
ஓய்வூதியர்கள் சங்கம்