23/02/2016
கால்பதிக்க,
பத்து மாதங்கள் அனைவரும் காத்திருந்தனர் கால் ஊன்றி நடக்க, பத்து வயதுவரை நடப்பதை, ஓடுவதை, விளையாடுவதை பார்த்து ரசித்தனர்.
மெல்ல மெல்ல நடை தளர்ந்தது , மருத்துவத்துறையும் கைவிட்டது, உறுப்புகள் ஒவ்வொன்றாய் செயல் இழந்தன, ஊட்டச்சத்து இல்லையென ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள் உடல் பருமனானது, பள்ளிக்கு தூக்கி செல்லவும் வழி இல்லை பாதியில் நின்றது படிப்பு, எதிர்கால கனவுகள் கேள்விக்குறியாகியது.
எங்கு தவறு நடந்தது ? எதற்காக பிறந்தோம் ? கனவு காண உரிமை இல்லையா ? அடுக்கடுக்காய் கேள்விகள்.
நமது பேராசை தலைமுறைகளை அழித்துக் கொண்டிருக்கிறது.
பசிக்கான உணவு போய் ருசிக்கான உணவு என மாற்றி வெறும் சக்கைகளையும், விஷத்தையுமே உண்டு கொண்டிருக்கிறோம்.
உரமும் , பூச்சி கொல்லி விஷமும் உணவாகிப்போனதே மரபணுவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து தீரா நோய்களும், நிரந்தர ஊனமும் கொண்ட தலைமுறை உருவாகக் காரணம்.
உறவில் திருமணம் செய்வதால்தான் இவ்வாறான உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதாக மருத்துவத்துறை கூறுகிறது. இதை உறுதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலக அளவில் நோய்க்கான எந்தவித காரணமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, தீர்வும் இல்லை.
நேர்மறையான எண்ணங்களுடனும், பெருமுயற்சியுடனும் ஒரு அழகிய உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியான செயல்பாட்டின் விளைவாக உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும், நல் உதவிகளாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் இப்பொழுது சாத்தியமாகி உள்ளது.
இங்கு தங்கும் இடம் , மருத்துவம் , கல்வி , தொழிற்பயிற்சி , ஆரோக்கியமான உணவு என சிறந்த திட்டங்களை முன்னெடுக்கிறோம்.
இணைந்து கொள்ளுங்கள்...
சேர்ந்து பயணிப்போம்.
கரம்கொடுங்கள்...
நோய்மைக்கு மருந்திடுவோம் , நோய்மையை தடுக்க ஒன்றிணைவோம்.
வாருங்கள்...
மானுடத்தின் எல்லா இசங்களையும் கடந்த அன்போடு அழைக்கிறோம். :)