வட தமிழக அகமுடையார் பேரினம்

  • Home
  • India
  • Ranipet
  • வட தமிழக அகமுடையார் பேரினம்

வட தமிழக அகமுடையார் பேரினம் அகமுடையார் - துளுவ வேளாளர் பிரிவினர்

வரலாற்று பெட்டகம் அண்ணன் பாலமுருகன் அகமுடையார் பதிவிலிருந்து... குடும்ப சொத்து பத்திரங்களில் சாதியும், பட்டப்பெயரும்,அகம...
11/06/2026

வரலாற்று பெட்டகம் அண்ணன் பாலமுருகன் அகமுடையார் பதிவிலிருந்து...

குடும்ப சொத்து பத்திரங்களில் சாதியும், பட்டப்பெயரும்,

அகமுடையார் பேரினத்தவர்கள் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் பரவி வாழ்கின்றனர். தங்கள் வாழும் மாவட்டத்திற்கு ஏற்ப சேர்வை, தேவர், பிள்ளை, முதலியார், உடையார், நாயக்கர், மணியகாரர், பல்லவராயர், அதிகாரி, கவுண்டர் உள்ளிட்ட இன்னும் சில பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்கின்றனர்.

1933 ஆம் ஆண்டின் எனது குடும்ப சொத்துப் பத்திரத்தில்,
"அகம்படியர்" சாதி பெயரையும், "மணியக்காரர்" பட்டப்பெயரையும் மிகத்தெளிவாக பதிவு செய்துள்ளனர் எனது முன்னோர்கள்.

மணியகாரர் பட்டப்பெயருடன் அகம்படியர் சாதி குறிப்பிடப்பட்ட சொத்துப் பத்திரத்தின் நகலில் உள்ள வரிகளை கீழே பார்ப்போம்.

பத்திர எண் : 2988,
நாள் : 2-12-1933,

பழனி தாலூகா, ஆயக்குடி கிராமம் கஸ்பா, புது ஆயக்குடியிலிருக்கும்,
லேட் புண்ணிய சானகி ராம குமார மணியகாரர் - அபிமான ஸதிரீயின் புத்திரன் - அகம்படியர் சாதி - மைனர் - சுமார் - 9 வயது சங்கரலிங்க மணியகாரனுக்கு,

௸படியூர் - ௸ - புண்ணிய சானகி மணியகாரர் சொந்த மனைவியின் குமாரனும் - ௸ மைனர் - சங்கரலிங்க மணியகாரனுக்கு - கார்டியனும் - தமயனுமான - ௸ - வியாபாரம் - மாரிமுத்து மணியகாரன் - தனது மகனும் - தன் - மனைவியின் மகன் - மைனர் - சுமார் - 6 வயது மதன குருசாமி 1 - ௸ தம்பி மைனர் - 4 வயது - ராமசாமி 2 - ௸......

இந்த பத்திரத்தில் குறிப்பிடப்படும் புண்ணிய சானகி ராமகுமார மணியகாரர் அவர்கள், எனது கொள்ளு தாத்தா ஆவார். இவரது மகன் மாரிமுத்து மணியகாரர் எனது தந்தையின் தந்தையாவார். மதன குருசாமி, ராமசாமி எனது பெரியப்பா ஆவார்கள்.

இந்த சொத்து பத்திரங்களைப் போல், எனது தந்தையின் தாயார் வழி குடும்ப சொத்துப் பத்திரங்களில் "தேவர்" பட்டப்பெயரும், அகம்படியர் சாதி பெயர் பதிந்த சொத்து பத்திரங்களையும்,

எனது தாயார் வழி குடும்ப சொத்து பத்திரங்களில் சேர்வை, பிள்ளை பட்டப்பெயருடன், அகம்படியர் சாதி பெயர் பதிந்த சொத்து பத்திரங்களையும் அடுத்தடுத்து பதிவுகளில் பதிவிடுகிறேன்.

பட்டப்பெயர்களை கடந்து
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்!
-------------------------------------------------------
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
94429 38890.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

11/06/2026

அகமுடையார் பேரினம் 💛💚

பட்டங்களை கடந்து அகமுடையார் என்ற ஒரு குடையின் கீழ் அணி திரள்வோம் உறவுகளே.

நம் பிளவுபடுத்தி அதன்மூலம் ஆதாயம் பெற சில ஓநாய்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது.பறையர் சாதிக்கு பிறகு தமிழகத்தின் அதிக மாவட்டங்களில் பரந்து வாழும் ஒரே சமூகம் - நமது அகமுடையார் பேரினம்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

10/06/2026

வாணதிராயர்களின் மரபினர் - அகம்படி முதலி பிரிவினர் 💛💚

இராமநாதபுரம்,மதுரை உள்ளிட்ட பாண்டிய நாட்டின் பெரும் பகுதிகளில் அகமுடையார் பேரினத்தின் வாணதிராயர்கள் வாழ்த்துள்ளனர்.

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

தவெக மூன்றாம் இடம் பெற்ற தொகுதிகள்!!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரியே இல்லை எனும் வகையில் தவெகவினரின் மனநி...
09/06/2026

தவெக மூன்றாம் இடம் பெற்ற தொகுதிகள்!!!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரியே இல்லை எனும் வகையில் தவெகவினரின் மனநிலை உள்ளது.ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறு.தவெக கட்சியினரின் நலனுக்காக இந்த ஆய்வு கட்டுரை.

காலத்திற்கும் எங்கள் கட்சியின் ஆட்சி தான் என்று எதேச்சாதிகார போக்கில் இருந்த காங்கிரஸ் பேரியக்கம் 1967ல் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்டது.அதுமுதல் இன்று வரை தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட வென்றதில்லை,இதுதான் வரலாறு.

இந்த பதிவில் தவெக தனது முதல் தேர்தலில் சந்தித்த தோல்விகளை பற்றி விரிவாக விவரிக்கிறது...

தனித்து களம் கண்ட தவெக 108 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.திராவிடமும்,தமிழ் தேசியமும் ஒன்று என்ற விநோதமான அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தி எந்தவொரு பிரதான கட்சிகளையும் இணைத்து கொள்ளாமல் தனித்து களம் கண்டது.தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக,அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள்,சிறு சிறு அமைப்பு தலைவர்கள் என்று ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தது தமிழக வெற்றிக் கழகம்.

எம்ஜிஆருக்கு பிறகு திரையுலகை சேர்ந்த ஒருவர் முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது விஜய் அவர்கள் தான் என்பதில் மாற்றமில்லை.ஆனால் எம்ஜிஆருக்கும்,விஜய் அவர்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது.எம்ஜிஆர் 30 சதவீத வாக்குகளை பெற்ற போதிலும் 130 என்ற பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட 12 தொகுதிகள் கூடுதலாக வெற்றி பெற்றார்,விஜய் அவர்கள் 35 சதவீத வாக்குகள் பெற்ற நிலையிலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை விட பத்து தொகுதிகள் குறைவாக பெற்றார்.

51 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றாம் இடம்,

எட்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,

ஒன்பது மாவட்டங்களில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி,

12 மாவட்டங்களில் திமுக,அதிமுக கட்சிகளுக்கு அடுத்த நிலையில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது,

தவெக மூன்றாம் இடம் பெற்ற 51 தொகுதிகளில் திமுக,அதிமுக தலா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.பாமக,விசிக தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,இந்திய கம்யூனிஸ்ட்,காங்கிரஸ்,அமமுக கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளது.

அதிகபட்சமாக கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில்,தவெக 18 தொகுதிகளில் தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதற்கடுத்து டெல்டா மண்டலத்தில் மொத்தமுள்ள 46 தொகுதிகளில் 16 தொகுதிகளில் தவெக மூன்றாம் இடம் பெற்றுள்ளது.69 தொகுதிகளைக் கொண்ட வட தமிழகத்தில் 09 தொகுதிகளிலும்,51 தொகுதிகளை கொண்ட தென் தமிழகத்தில் 08 தொகுதிகளிலும் தவெக மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் தவெக மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தவெக மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

5 தொகுதிகளை கொண்ட தென்காசி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.

ஒன்பது மாவட்டங்கள் உள்ள டெல்டாவில் நான்கு மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,

தென் தமிழ்நாட்டில் இரண்டு,வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தில் தலா ஒரு மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,

தவெக மூன்றாம் இடத்திற்கு செல்ல காரணமாக இருந்த சமூக அமைப்புகள்!!!

தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற போதிலும்,சாதிய அணி திரட்டல் காரணமாக சில தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தள்ளப்பட்டது பற்றிய பதிவு.

திராவிட கட்சிகள் களம் இறங்கிய தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம்,சமூக அமைப்புகள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது பற்றி விவரிக்கிறது இந்த பதிவு. சந்தித்துள்ளது பற்றி விவரிக்கிறது இந்த பதிவு.

திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது,விசிக வென்ற அந்த இரண்டு தொகுதிகளில் தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது,

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது,அவற்றில் மூன்று தொகுதிகளில் தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது,ஒரு தொகுதியில் இரண்டாம் இடம் பெற்றது,

அதிமுக கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக,ஒரு தொகுதியில் வென்றது,அந்த தொகுதியில் தவெக மூன்றாம் இடம் பெற்றது.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் தேசம் கட்சி இரண்டாம் இடம் பெற்ற நிலையில்,தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது,

பொள்ளாச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி பெற்ற நிலையில் தவெக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

விசிக களம் கண்ட எட்டு தொகுதிகளில் தவெக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,பாமக களம் கண்ட 18 தொகுதிகளில் தவெக 09 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பத்தாயிரம் உறவுகளை கடந்து 💛💚நம் முகநூல் பக்கம் பத்தாயிரம் என்ற உயரத்தை எட்ட காரணமாக இருந்த அனைத்து அகமுடையார் இரத்த சொந்...
09/06/2026

பத்தாயிரம் உறவுகளை கடந்து 💛💚

நம் முகநூல் பக்கம் பத்தாயிரம் என்ற உயரத்தை எட்ட காரணமாக இருந்த அனைத்து அகமுடையார் இரத்த சொந்தங்களுக்கும்,சக தமிழ் குடி நண்பர்களுக்கும் இந்த தருணத்தை நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர்ந்து ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்களுக்காக நம் முகநூல் பக்கம் தனது பயணத்தை தொடரும்.

வாழ்க தமிழகம்!
வாழ்க பாரதம்!!
ஒங்குக மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழ்!!!

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

நடுநாட்டு அகமுடையார் பேரினத்தின் பாதுகாவலருக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐முதலாம் இராஜராஜ சோழனின் தாயான வானமாதேவ...
09/06/2026

நடுநாட்டு அகமுடையார் பேரினத்தின் பாதுகாவலருக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐

முதலாம் இராஜராஜ சோழனின் தாயான வானமாதேவி என்பவர் திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் வம்சாவளியினர் என்பது கூடுதல் சிறப்பு.அத்தகைய வரலாற்று தொன்மை வாய்ந்த திருக்கோவில் மண்ணில் அகமுடையார் பேரின உறவுகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குபவர் நமது அண்ணன் முரளி உடையார்.

அனைத்து அகமுடையார் பேரின முன்னோர்களின் ஆசியுடன் பல்லாண்டு நலமுடன் வாழ ஒட்டுமொத்த அகமுடையார் பேரின உறவுகளின் சார்பில் மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள் அண்ணா 💛💚

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

09/06/2026

பரங்கியரை பதம் பார்த்த மாமன்னர் மருது பாண்டியர்கள் 💪⚔️🔥

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

தவெக நண்பர்களுக்கு!!! கங்கை முதல் கடாரம் வரை உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட சோழர்களின் வம்சாவளியினர் இன்று எங்கு இருக்கி...
07/06/2026

தவெக நண்பர்களுக்கு!!!

கங்கை முதல் கடாரம் வரை உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட சோழர்களின் வம்சாவளியினர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை,

முகலாய பேரரசு,சுல்தான் அரசர்களின் வழித்தோன்றல்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்,

எங்கள் ஆட்சியில் சூரியனே மறையாது என்று சொல்லிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் இன்றைய நிலை என்ன❓

பாரத துணை கண்டம் முழுவதும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே மாநில முதல்வர்களை கொண்டுள்ளது,

உலகின் பல மூத்த மன்னர்களின் பெயர் கூட மக்கள் நினைவில் இல்லை...

ஆனால் சில தவெக கட்சியினரின் செயல்பாடுகள் மிகவும் தவறாக உள்ளது.விமர்சனத்தை முன்வைக்க எவருக்கும் உரிமை உண்டு,ஆனால் அடுத்தவர் மீது வன்மம் பொழிவது போன்று பேசுவது அல்லது சித்தரிப்பது மிகவும் தவறானது.

1989ல் 169 இடங்களை பெற்ற திமுக,அடுத்த தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே வென்றது,

1991ல் 164 இடங்களில் வென்ற அதிமுக,அடுத்த நடைபெற்ற 1996 தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மக்கள் நினைத்தால் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்,அதே மக்கள் முடிவெடுத்து விட்டால் காலில் போட்டும் மிதிப்பார்கள் என்பதை தயவு கூர்ந்து தவெக நண்பர்கள் நினைவில் கொள்ளவும்.

கடந்த காலங்களில் எந்த காரணத்தினால் திமுக,அதிமுக தோற்றது என்பதை வரலாற்றின் உதவியுடன் அறிந்துணர்ந்து செயல்படுங்கள்.

வாழ்த்துக்கள் 💐💐💐

மாவட்ட வாரியாக நாம் தமிழர் பெற்ற வாக்குகள் :மதுரை - 1,03,704திருவள்ளூர் - 96,843சிவகங்கை - 84,781விருதுநகர் - 81,054செங்...
06/06/2026

மாவட்ட வாரியாக நாம் தமிழர் பெற்ற வாக்குகள் :

மதுரை - 1,03,704
திருவள்ளூர் - 96,843
சிவகங்கை - 84,781
விருதுநகர் - 81,054
செங்கல்பட்டு - 79,062
கோயம்புத்தூர் - 78,555
சேலம் - 77,747
தென்காசி - 76,362
தஞ்சாவூர் - 76,143
திருச்சி - 75,741
தூத்துக்குடி - 75,677
திருநெல்வேலி - 73,467
சென்னை - 69,819
திருப்பூர் - 67,332
கன்னியாகுமரி - 64,971
புதுக்கோட்டை - 61,058
இராமநாதபுரம் - 54,630
திண்டுக்கல் - 54,386
ஈரோடு - 51,753
கடலூர் - 49,800
திருவண்ணாமலை - 49,693
தேனி - 41,010
நாமக்கல் - 38,654
விழுப்புரம் - 37,249
திருவாரூர் - 36,893
காஞ்சிபுரம் - 36,288
கிருஷ்ணகிரி - 33,363
தர்மபுரி - 31,559
கள்ளக்குறிச்சி - 26,833
கரூர் - 24,699
இராணிப்பேட்டை - 24,413
வேலூர் - 24,149
நாகப்பட்டினம் - 23,813
மயிலாடுதுறை - 20,636
திருப்பத்தூர் - 20,490
அரியலூர் - 16,009
பெரம்பலூர் - 15,666
நீலகிரி - 15,535

16 தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டத்தில் பெற்ற வாக்குகளை விட 4 தொகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது,

நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்ற முதல் பத்து மாவட்டங்களில் தென் தமிழகத்தில் அதிகப்பட்சமாக நான்கு மாவட்டங்களும்,கொங்கு,டெல்டா மற்றும் வட தமிழகத்தில் தலா இரண்டு மாவட்டங்களும் உள்ளன,

நாம் தமிழர் கட்சி குறைவாக வாக்குகள் பெற்ற கடைசி பத்து மாவட்டங்களில் கொங்கு மண்டலத்தில் இரண்டு மாவட்டங்களும்,வடக்கு மற்றும் டெல்டா மண்டலங்களில் தலா நான்கு மாவட்டங்களும் உள்ளன,

ஆலங்குளம் என்ற ஒரு தொகுதியில் பெற்ற வாக்குகளை விட நான்கு தொகுதிகள் கொண்ட திருப்பத்தூர் மாவட்டம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

சோழிங்கநல்லூர் என்ற ஒரு தொகுதியில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட மூன்று தொகுதிகளை கொண்ட மயிலாடுதுறை மாவட்டம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது,

காரைக்குடி தொகுயில் மட்டும் நாம் தமிழர் பெற்ற வாக்குகள்,ஐந்து தொகுதிகளைக் கொண்ட வேலூர் மாவட்டத்தை காட்டிலும் அதிகம்,
11 தொகுதிகளைக் கொண்ட சேலம் மாவட்டத்தை விட பத்து தொகுதிகளைக் கொண்ட மதுரை,திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி,

சுருங்கச் சொல்வதென்றால் வட தமிழகத்தை விட தென் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பலமாக உள்ளது.கொங்கு மண்டலத்தை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி வலிமையாக உள்ளது.

மாமன்னர் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் 💛💚முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்களின் திரு...
06/06/2026

மாமன்னர் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் 💛💚

முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்களின் திருப்பெயரால் இயங்கிய போக்குவரத்து கழகத்தின் புகைப்படம் 🙏🙏🙏

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மானாங்காத்தமருதுபாண்டியர்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

Address

Ranipet

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when வட தமிழக அகமுடையார் பேரினம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share