31/10/2025
திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி விளாம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் மனைவிக்கு அவசர சிகிச்சைக்காக 29-10-2025 அன்று B+ இரத்தம் தேவை என்று நம்மை தொடர்பு கொண்டனர். உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனையின் இரத்த வங்கியில் நமது அறக்கட்டளையின் சார்பாக இராஜபாளையம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சேர்ந்த அன்பு சகோதரர் திரு.T.மாரிமுத்து அவர்கள் நமது அறக்கட்டளையின் ு அவசரகால இரத்ததானம் செய்து உதவினார். அதற்கு அடுத்தநாளும் ( 30-10-2025 ) மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மீண்டும் இரண்டு யூனிட் B+ இரத்தம் தேவை என்று நம்மைத் தொடர்பு கொண்டார்கள். உடனே நமது அறக்கட்டளையின் சார்பாக சேத்தூரைச் சேர்ந்த அன்பு சகோதரர் திரு.M.கவியரசன் மற்றும் இராஜபாளையத்தைச் சேர்ந்த அன்பு சகோதரர் திரு.S.D.தினேஷ்குமார் ( புகைப்படம் எடுக்கவில்லை ) இருவரும் உடனடியாக நமது அறக்கட்டளையின் ு அவசரகால இரத்ததானம் செய்து உதவினர். மூன்று சகோதரர்களுக்கும் நமது துரோணா பவுண்டேசன் அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ❤❤🙏🙏🩸🩸💐💐🤝🤝
அவசர காலத்தில் மட்டுமே இரத்ததானம் செய்வோம் அவசியமாக.... 🩸🙏❤🤝