CITU Puducherry

CITU Puducherry Official Page CITU புதுச்சேரி Center of Trade Union (Puducherry State Committee)

*தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!**தேசிய கோரிக்கை தினம் – 2026 மே 12**அன்புத் தொழிலாள தோழர்களே, ...
10/05/2026

*தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!*

*தேசிய கோரிக்கை தினம் – 2026 மே 12*

*அன்புத் தொழிலாள தோழர்களே, பொதுமக்களே!*

*மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை அறைகூவலுக்கிணங்க, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*

*1.*
*தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், விதிகளையும் உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.*

*2.*
*விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ,26,000வழங்கிட வேண்டும்.*

*3.*
*வட இந்தியாவில் நியாயமான ஊதிய உயர்வு கோரிப் போராடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.*

*4.*
*நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த முறையை ஒழித்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.*

*5.*
*சட்டப்படியான 8 மணி நேர வேலை மற்றும் கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.*

*6.*
*சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்க வேண்டும்.*

*நாள்: 12-05-2026 (செவ்வாய்க்கிழமை)*
*நேரம்:காலை 10 மணி*
*இடம்:: சுதேசி மில் அருகில் , புதுச்சேரி.*

*உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க அணிதிரண்டு வாரீர்!*

*இப்படிக்கு,*
*AITUC, CITU, LLF, AICCTU, NDLF, MLF, அனைத்து தொழிற்சங்கம்*
*புதுச்சேரி.*

*இந்திய தொழிற்சங்க மையம் (CITU)* ​ *புதுச்சேரி மாநிலக் குழு* ​ *அவசரப் போராட்ட அறிவிப்பு!* ​​தோழர்களே, ​புதுச்சேரி முத்த...
24/04/2026

*இந்திய தொழிற்சங்க மையம் (CITU)*

​ *புதுச்சேரி மாநிலக் குழு*

​ *அவசரப் போராட்ட அறிவிப்பு!*


​தோழர்களே,

​புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள செண்பகா ஹோட்டல் நிர்வாகத்தின் கடும் அலட்சியத்தால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தோழர். தேவநாதன் (51) அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அகால மரணமடைந்து இன்றுடன் இரண்டு நாட்களாகிறது.

​ஆனால்,
ஒரு ஏழைத் தொழிலாளியின் உயிர் பிரிந்தும் கூட, அந்தத் தொழிலாளிக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி, இ.எஸ்.ஐ (ESI), பி.எஃப் (PF) போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பு உரிமைகளையும் வழங்காமல் அந்த நிர்வாகம் ஏமாற்றியுள்ளது.
விபத்து நடந்து இரண்டு நாட்களாகியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ ஹோட்டல் நிர்வாகம் முன்வரவில்லை.
​அரசு நிர்வாகமும், தொழிலாளர் துறையும் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது.

நீதி கிடைக்கும் வரை தோழர் தேவநாதன் அவர்களின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற உறுதியோடு குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
​இந்த அநீதியைத் தட்டிக்கேட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதியைப் பெற்றுத்தரவும்!

​பலியான தொழிலாளி குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!

​தொழிலாளர் சட்டங்களை மீறிய செண்பகா ஹோட்டல் உரிமையாளர் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

​அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு (ESI/PF) மற்றும் குறைந்தபட்ச கூலியை உறுதி செய்ய வேண்டும்!

​ அஜந்தா சிக்னல் அருகில், செண்பகா ஹோட்டல் முன்பாக.
​ இன்று 24-04-2026 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி. *கண்டித்து போராட்டம்* நடைபெற உள்ளது,

*​"உழைப்பவர் உயிர் மலிவானதா?*
*நிர்வாகத்தின் திமிர் அடங்குமா?"*
​இந்தப் போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள், இணைக்கப்பட்ட சங்கங்களின் தொழிலாளர் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்திற்கு நீதி கிடைத்திட ஆதரவு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

​இவண்,

சிஐடியு புதுச்சேரி மாநில குழு
#உழைக்கும்வர்க்கம் #தொழிலாளர்கள்

21/4/2026 இன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கார...
21/04/2026

21/4/2026 இன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
கார்
வேன்
டாடா ஏசி
ஓட்டக்கூடிய தொழிலாளர் கொண்ட புதிய சங்கம் திறக்கப்பட்டது

காரைக்காலில் சி.ஐ.டி.யு (CITU) புதிய ஓட்டுநர்கள் சங்கம் தொடக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்திருநள்ளாறு: காரைக்கால்...
21/04/2026

காரைக்காலில் சி.ஐ.டி.யு (CITU) புதிய ஓட்டுநர்கள் சங்கம் தொடக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

திருநள்ளாறு: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் கார், வேன் மற்றும் டாடா ஏசி ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து புதிய தொழிற்சங்கம் தொடக்க விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நிர்வாகிகள் தேர்வு மற்றும் பெயர் பலகை திறப்பு

இந்த நிகழ்விற்குத் தோழர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் புதிய பெயர் பலகையினை கௌரவத் தலைவர் ரவிச்சந்திரன் திறந்து வைத்துச் சிறப்பித்தார். சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமைகள் குறித்துத் துணைத்தலைவர் மணிபாலன் விரிவாக உரையாற்றினார்.

தொடர்ந்து, உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மதிவாணன் வழங்கினார். விழாவில் தொழிற்சங்க மூத்த தலைவர் ராமர், மற்றும் நிர்வாகிகள் பிரேம்குமார், தமீம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதிய சங்க நிர்வாகிகள் பட்டியல்:

கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்:

தலைவர்: சுந்தரபாண்டியன்

செயலாளர்: செல்வகுமார்

பொருளாளர்: குமார்

துணைத் தலைவர்: செல்லத்துரை

துணைச் செயலாளர்: அருமை தாஸ்

50 பேர் சங்கத்தில் இணைவு

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்களை சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களைப் பெற்றிடவும் இந்தச் சங்கம் தொடர்ந்து பாடுபடும் என நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

#உழைக்கும்வர்க்கம் #தொழிலாளர்கள்

வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான தீர்ப்பு              #உழைக்கும்வர்க்கம்  #தொழிலாளர்கள்
16/04/2026

வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான தீர்ப்பு

#உழைக்கும்வர்க்கம் #தொழிலாளர்கள்

புதுச்சேரி உழைக்கும் வர்க்கமே நமக்காக எப்போதும் களத்தில் செயல்பட்டு வரும் தோழர்களை உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற ச...
07/04/2026

புதுச்சேரி உழைக்கும் வர்க்கமே நமக்காக எப்போதும் களத்தில் செயல்பட்டு வரும் தோழர்களை உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#உழைக்கும்வர்க்கம் #தொழிலாளர்கள்

26/02/2026
*செவ்வணக்கம்* ​ உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் தோழர் *ஆர். நல்லகண்ணு* அவர்களுக்கு செவ்வணக்கம்!வாழும் வரலாறாக, தூய்மையான...
25/02/2026

*செவ்வணக்கம்*

உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் தோழர் *ஆர். நல்லகண்ணு* அவர்களுக்கு செவ்வணக்கம்!

வாழும் வரலாறாக, தூய்மையான பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாபெரும் மக்கள் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு இந்திய தொழிற்சங்க மையம் (CITU) புதுச்சேரி மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,

எண்பதாண்டு கால பொதுவாழ்வில் ஒரு கறை கூட படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்.
ஆடம்பரமற்ற வாழ்வு,
சமரசமற்ற கொள்கை உறுதி என அவர் வாழ்ந்த வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாடப்புத்தகம்.
​விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும்: நிலச்சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர்.
அவரது போராட்டங்கள் வெறும் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, மனித மாண்பை மீட்டெடுப்பதற்கே அமைந்திருந்தன.

தமிழகத்தின் இயற்கை வளங்களை காப்பதில் அவர் காட்டிய அக்கறை, ஒரு கம்யூனிஸ்ட் தலைவன் எப்படி இயற்கையோடு இணைந்த சமூகத்தை நேசிக்க வேண்டும் என்பதற்குச் சான்று.

தோழர் நல்லகண்ணு அவர்கள் சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக நின்றவர்.

அவர் விட்டுச் சென்ற எளிமை, உறுதி மற்றும் சமத்துவக் கனவை நனவாக்கப் பாடுபடுவதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். சாதி, மத பேதமற்ற, சுரண்டலற்ற ஒரு சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் என புதுச்சேரி மாநில சிஐடியு சார்பில் உறுதி ஏற்போம்.

மறைந்த மாபெரும் தலைவருக்கு புதுச்சேரி மாநில சிஐடியு சார்பில் செவ்வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​வீரவணக்கம்! வீரவணக்கம்!

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்!

✊ தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் வெற்றி!சாம்சங் சிஐடியு (CITU) தோழர்களின் உரிமைப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!...
20/02/2026

✊ தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் வெற்றி!

சாம்சங் சிஐடியு (CITU) தோழர்களின் உரிமைப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

அன்பார்ந்த உழைக்கும் தோழர்களே,
கார்ப்பரேட் நிர்வாகங்களின் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல், தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் கிடைத்துள்ள தீர்ப்பு ஒரு மாபெரும் நம்பிக்கையாகும்!
நமது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (CITU) 19 நிர்வாகிகளை, "பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களாக" (Protected Workmen) தொழிலாளர் துறை துணை ஆணையர் (03-02-2026 அன்று) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
* 🛡️ பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி: சங்கம் அமைத்ததற்காகவோ, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகவோ நிர்வாகம் இனி தன்னிச்சையாக இந்த நிர்வாகிகளை வேலையை விட்டு நீக்கவோ, இடைநீக்கம் (Suspension) செய்யவோ முடியாது.

* ⚖️ சட்டத்தின் முழுப் பாதுகாப்பு: இவர்களைப் பழிவாங்க நினைத்தால், தொழிலாளர் நீதிமன்றத்தின் முன் அனுமதியை எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும். எந்த நிர்வாகத்தாலும் அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தில் பொய்யான காரணங்களைக் காட்டி அனுமதி பெற முடியாது.
* ✊ அச்சமின்றிப் போராடலாம்: நிர்வாகம் நம்மை வேலைநீக்கம் செய்துவிடுமோ என்ற அச்சம் இனி வேண்டாம். சட்டமும், தொழிலாளர் ஒற்றுமையும் நமக்கு அரணாக நிற்கும் என்பதை இந்த உத்தரவு ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
சக தொழிலாளர்களுக்கு நாம் விடுக்கும் செய்தி:
நமது ஒற்றுமையே நமது பலம்! நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் பயந்து நாம் பின்வாங்கப் போவதில்லை. சட்டரீதியாகவும், களத்திலும் நாம் ஒன்றிணைந்து நின்றால் எந்த ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையும் பணிய வைக்க முடியும் என்பதற்கு சாம்சங் சிஐடியு (CITU) தோழர்களின் இந்த வெற்றி ஒரு வரலாற்றுச் சான்று.
அச்சம் தவிர்! அணி திரள்! உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர் வெல்லட்டும்!
இன்குலாப் ஜிந்தாபாத்! 🚩

#உழைக்கும்வர்க்கம் #தொழிலாளர்கள்

புதுவையில் புதிய சரித்திரம்! 🚩🛺 பெண்கள் கரங்களில் சுழலும் ஆட்டோ சக்கரம்!சிஐடியு (CITU) சார்பில் முதல் பெண்கள் ஆட்டோ ஸ்டா...
16/02/2026

புதுவையில் புதிய சரித்திரம்! 🚩🛺 பெண்கள் கரங்களில் சுழலும் ஆட்டோ சக்கரம்!
சிஐடியு (CITU) சார்பில் முதல் பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை திறப்பு! 🔥

புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் (சிஐடியு) வரலாற்றில் இன்று (16.02.2026) ஒரு பொன்னான நாள்!

புதுச்சேரியில் முதன்முறையாக ‘புதுவை பெண்கள் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை’ வைசியால் வீதி - ஆம்பூர் சாலை சந்திப்பில் இன்று மிகச் சிறப்பாகத் திறக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பதைப் போல, பொதுப்போக்குவரத்துத் துறையிலும், சங்கப் பணிகளிலும் வீறுநடை போடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி! 💪🏽👩🏽‍✈️

நிகழ்வுத் துளிகள்:
📍 இடம்: வைசியால் வீதி - ஆம்பூர் சாலை சந்திப்பு.
🗓 நாள்: 16-02-2026.
நிர்வாகிகள் விபரம்:
இந்நிகழ்விற்குப் புதிய கிளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்று வழிநடத்தினர்:
🔸 தலைமை: தோழர் V.சண்முகப்பிரியா (கிளைத் தலைவர்)
🔸 முன்னிலை: தோழர் P.பரமேஸ்வரி (செயலாளர்)
🔸 வரவேற்புரை: தோழர் S.குணாவதி (பொருளாளர்)
சிறப்பு விருந்தினர்கள் & வாழ்த்துரை:
எமது சிஐடியு மற்றும் ஆட்டோ சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:
🚩 G.சீனுவாசன் (சிஐடியு மாநிலச் செயலாளர்)
🚩 S.விஜயகுமார் (ஆட்டோ சங்க மாநிலச் செயலாளர்)
🚩 K.மணவாளன் (ஆட்டோ சங்கத் தலைவர்)
🚩 S.மது (துணைத் தலைவர்)
🚩 S.துளசிங்கம் (பொருளாளர்)
மேலும், மாநில நிர்வாகிகள் M.P.மதிவாணன், A.செந்தில்குமார், A.நூர்முகமது, A.பழனிபாலன், E.கோபி, P.மனோகர், K.ராமு, M.சக்திவேல், S.பாண்டியன், P.ஷங்கர், K.ஆனந்த், M.பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
புதிய கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள்:
துணைத் தலைவர் M.வேல்விழி, துணைச் செயலாளர் V.சத்யா மற்றும் உறுப்பினர்கள் தோழர் J.தேவி, M.ராணி, M.பிரபாவதி, J.ஜெயந்தி, K.கார்த்திகா, R.மாலா, S.பிரியா ஆகியோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
உழைக்கும் பெண்கள் கரங்களை உயர்த்துவோம்! சங்கத்தை வலுப்படுத்துவோம்! ✊🏽🚩

#சிஐடியு #புதுச்சேரி #பெண்கள்முன்னேற்றம்

Address

No. 42, கடலுர் சாலை பாரதி மில் திட்டு முதலியோர்பேட்டை
Pondicherry
605004

Alerts

Be the first to know and let us send you an email when CITU Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CITU Puducherry:

Share

Category