17/05/2026
உ
ஓம் குருப்யோ நம:
குரு வாழ்க! குருவே துணை!!
அன்பே சிவம்! அருளே ஆனந்தம்! ஒளியே ஜோதி!!
அன்புடையீர்! வணக்கம்,
“சற்குரு மகான் ஸ்ரீ கணபதி சுவாமிகளின் 25-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழாவானது, வருகின்ற 23.05.2026 சனிக்கிழமை அன்று நடக்கவிருக்கிறது. அதுசமயம் 22.05.2026 வெள்ளிக்கிழமை மாலை 07:30 மணிக்கு அருட்குரு அச்சுதானந்த சுவாமிகள் அருளிய “அத்வைத கீர்த்தனானந்த லஹரி” எனும் மெய்ஞ்ஞானக் கீர்த்தனைகளை “அருட்குரு அச்சுததாசர் இசை மற்றும் கல்வி அறக்கட்டளை” மாணவர்கள் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சியாக வழங்க உள்ளனர். இதை முன்னிட்டு 19.05.2026 முதல் 21.05.2026 வரை “அத்வைத கீர்த்தனைகள் பாடுவதற்கான சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளது (வகுப்பு நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை). ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சி பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: பங்குபெறும் மாணவர்களுக்கு மதிய உணவு அறக்கட்டளையில் வழங்கப்படும்.
நன்றி!
இவண்
"கலைமாமணி"
முனைவர் இரா. சிவராமன்,
நிறுவனர் & தலைவர்,
அருட்குரு அச்சுததாசர் இசை மற்றும் கல்வி அறக்கட்டளை,
புதுச்சேரி.