Pollachian-பொள்ளாச்சி காரங்க

Pollachian-பொள்ளாச்சி காரங்க Pollachi is a taluk in Coimbatore Rural district of the Tamil Nadu state of India.

It lies in the southern part of the Coimbatore city around 40 kilometres from Downtown Coimbatore. பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்த சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண

்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்த சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.

தென்னை மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு பெயர் பெற்று காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

Fwded     please share this post as much you can ..let's save anamalai pollachi Road trees
17/04/2024

Fwded please share this post as much you can ..let's save anamalai pollachi Road trees

12/04/2024

Namma ooru eppome special than ngo Thanks Kajal Aggarwal Page kaj

ஏன்ங் சரி தான்ங்கோ 🤪🤪🤣😂
09/04/2023

ஏன்ங் சரி தான்ங்கோ 🤪🤪🤣😂

05/04/2023

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முதல் நாள் வெள்ளித் தேர் இரவு 7 மணிக்கு தொடங்கி , வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது 😍😍😍

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது.
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. பின்னர் பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. மேலும் கோவில் கொட்டு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆயக்கால் போடுதல், இன்று செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மேல் மகுடம் வைத்தல் ஆகியவை நடக்கிறது. நாளை (புதன்கி ழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், அதை தொடர்ந்து 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று முதல் நாள் வெள்ளித் தேர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு வெங்கட்ரமணன் வீதியில் இருந்து 2-ம் நாள் தேர் புறப்பட்டு, சத்திரம் வீதியில் கொண்டு நிறுத்தப்படுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து 3-ம் நாள் தேர் புறப்பட்டு, தேர் நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

8-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

22/02/2023

Short view of Namma pollachi credits :- people msd _****

Good initiative Shree Devi Textile from   makkal 🥰👌👌👌
12/02/2023

Good initiative Shree Devi Textile from makkal 🥰👌👌👌

23/01/2023

20/10/2022

Pollachi and Coimbatore people are blessed and all ages people enjoy the moments .. nanga ippadi thanga enjoy pannuvoam 🤪😂

Namma ooru makkal eppome happy than



Credits : bbc Tamil

சற்று முன் பொள்ளாச்சி அருகே அய்யம்பாளைத்தில் பயங்கர விபத்து. Any one known person travelled in the bus route no 5 .. ( p...
28/09/2022

சற்று முன் பொள்ளாச்சி அருகே அய்யம்பாளைத்தில் பயங்கர விபத்து. Any one known person travelled in the bus route no 5 .. ( pollachi - palaghat road ) please share and inform .

09/03/2022

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
மேலும் 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நாட்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாள் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதி, இமான்கான் வீதி சந்திப்பை அடைகிறது.

2-ம் நாள் தேரோட்டம் 9-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. 10-ந் தேதி இரவு 7 மணிக்கு 3-ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.

12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. #பொள்ளாச்சிகாரங்க #பொள்ளாச்சி

21/01/2022

மதுரை To மேட்டுப்பாளையம் - (வழி: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்பத்தூர்) மார்க்கமாக புதிய எக்ஸ்பிரஸ் டிரெய்ன் வருகின்ற 23-02-2022 முதல் இயக்கப்பட உள்ளது .

தினம்தோறும் மதுரையிலிந்து காலை 07:40 மணிக்கு கிளம்பி மதியம் 12:55 மணிக்கு மேட்டுப் பாளையத்தை சென்றடையும்;
மீண்டும் மேட்டுப் பாளையத்திலிருந்து மாலை 05:05 மணிக்கு கிளம்பி மதுரைக்கு இரவு 10:25 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் முற்றிலும் *"முன்பதிவு"* செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம் மகிழ்ச்சியான செய்தியை அதிகம் நபர்களுக்கு பகிர்வது மட்டுமல்லாது, இப்பயண வசதியை அதிக அதிகம் பேர் பயன்படுத்தினால் மட்டுமே, நாம் இந்த ரயில் போக்குவரத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள இயலும். தங்களின் வசதிக்காக நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
*- Adv NK, MDU*

18/11/2021

உடுமலையிலிருந்துபொள்ளாச்சி பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை மடக்கிப் பிடித்த போலீசார்.பொள்ளாச்சி-நவ-17 உடுமலை தளி பகுதியில் மாமரத்து பட்டிதென் குமாரபாளைத்தை சேர்ந்த தங்கராஜ் இவரிடம் நேற்று சென்ற வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த நான்கு சக்கர வாகனம் மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டுசென்றுள்ளனர்,இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில்புகார் அளித்ததன் பேரில் போலீசார் கண்ட்ரோல் ரூமுக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர்,கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படிஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்,பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது,போலீசார் சினிமா பாணியில் மாருதி காரை பின்தொடர்ந்துசின்ன பாளையம் பகுதியில்காரை மடக்கி பிடித்தனர்,போலீசார் விசாரணையில் தங்கராஜ் இடம் கார் மற்றும் 3 பவுன் பறித்த ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என விசாரணையில் தெரியவந்தது,கார் மற்றும் நகை பறிமுதல் செய்த போலீசார் தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் 4 பேரை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,பொள்ளாச்சி பகுதியில் போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

Address

Pollachi
642001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pollachian-பொள்ளாச்சி காரங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share