05/06/2026
மிக முக்கியமான நாள் இன்று.... எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் முகநூலில் மேய்ந்து கொண்டு இருக்கும் பொழுது உலக சுற்றுச் சூழல் தினம் இன்று என்ற விகடனில் வரையாடுகள் பற்றி வந்த செய்தியை படித்து கொண்டு இருக்கும் போது வால்பாறை வனத்தில் வரையாட்டு குட்டி பிளாஸ்டிக் சாப்பிட்டு வந்தது நினைவிற்கு வந்தது....
நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் முழுவதும் இயலாவிட்டாலும் அந்த வரையாடுகள் இருக்கும் இடத்திலாவது சுத்தம் செய்திட வேண்டும் என யோசித்து அடுத்த கணம் ஒரு பதிவை முகநூலில் இட்டு விட்டு கல்லூரிக்கு சென்று விட்டேன். எனது வழக்கமான அலுவல்களை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது மதியம் தோழர் பாரதி யிடம் இருந்து அழைப்பு வருகிறது பாலா நீங்க போட்ட பதிவு உண்மையிலே சிறப்பாக இருக்கிறது நாம் போன பயணத்தில் கண்டது இதற்கு நாம் எதாவது செய்வோம் என சொன்னார் சிறுது நேரத்தில் தோழர் சசி உடன் இணைந்தார்... பின்னர் சகி அதன் பின்னர் சுரேஷ் இப்படி தோழர்கள் உடனுக்குடன் என்னுடன் இணைந்தார்கள்....
பின்னர் சகி மூலமாக சதாம், சுரேஷ் மூலம் சிவா மூலமாக திவான், ரவி என முதல் வாரத்திலேயே பத்து நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்தார்கள் இன்றோ அது இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து இருக்கிறார்கள்..... அரசாங்கத்திடம் பதிவும் செய்து விட்டோம்...
முகநூலில் சும்மா மேய்ந்து கொண்டு என்ன சாதிக்க போற என்ன கேட்பவர்களுக்கு இது ஒன்று தான் வெறும் பொழுது போக்க மட்டும் இல்லை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்தி காட்ட கூட முகநூல் உதவும் என்பதற்கு எங்களின் பயணமே அதற்கு உதாரணம்.... எங்களது மட்டும் அல்ல பலரின் பயணத்திற்கும் முகநூல் தான் உதவுகிறது....
நல்லது நினைத்து செய்ய வேண்டும் என இறங்கினாலே போதும் ஆயிரம் கரங்கள் உன்னோடு இணையும் ன்னு சொல்லுவாங்க இல்லை அதை நான் முழுவதுமாக உணர்ந்த நாள் இன்று.... இன்றோடு ஏழு வருடங்கள் தொடர்ந்து நாங்கள் அங்கு களப்பணியில் ஈடுபட்டு அதிக அளவில் பிளாஸ்டிக், வாட்டர், மது பாட்டில்களை அகற்றி இருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன்...
காட்டின் பாதுகாவலனாக இருக்கும் யானைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் உடைந்த கண்ணாடி பாட்டில்களை அதன் வழிதடத்தில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தி விட்டோம்.... அதை ஒவ்வொரு வாரமும் உறுதிபடுத்தி கொண்டே இருப்போம்.....
டார்கெட் ஜீரோ விற்கு விதை போட்ட நாள் இன்று.... விதை இன்று முளைத்து செடியாக வளர்ந்து இருக்கிறது... விரைவில் வளர்ந்து மரமாகும் என்ற நம்பிக்கையில் தான் தொடர்ந்து இயங்குகிறோம்....