Jerem Foundation

Jerem Foundation poor people healthcare

உங்கள் குப்பைகளை பணமாக மாற்ற வேண்டுமா? பெரம்பலூர் நகர பகுதி மட்டும்.உங்கள் வீட்டில் உள்ள  பிளாஸ்டிக் குப்பைகளை   பணமாக ம...
18/08/2023

உங்கள் குப்பைகளை பணமாக மாற்ற வேண்டுமா?
பெரம்பலூர் நகர பகுதி மட்டும்.

உங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பணமாக மாற்ற
எளிய வழிமுறைகளை
நடைமுறைப்படுத்தி
உங்கள் வீடுகளுக்கு துப்புரவு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக பெற்றிடுங்கள்.
எந்தவிதமான வியாபார நோக்கம் இன்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது

17/08/2023
ஒருவருடைய கொலஸ்ட்ரால் அளவை நன்மையாக்குவதும் , தீமையாக்குவதும் அவரவர் உணவு முறையே தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒருவர் தன...
22/03/2023

ஒருவருடைய கொலஸ்ட்ரால் அளவை நன்மையாக்குவதும் , தீமையாக்குவதும் அவரவர் உணவு முறையே தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரித்தால் இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயகரமான நோய்களை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது வேக்ஸ் மூலக்கூறு ஆகும். இது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (low-density lipoprotein (LDL)) மற்றும் உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (high-density lipoprotein (HDL)) என்ற இரண்டு லிப்போ புரோட்டீன் சுழற்சிகளின் கலவையாக உள்ளது.

குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் எனப்படும் LDL கொழுப்பானது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது கெட்ட கொழுப்பை இரத்த நாளங்களில் படிய வைக்கிறது. அவ்வாறு படியும் கொழுப்பு சீரான இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதன் விளைவாகவே மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட காரணமாக அமைகிறது. நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் HDL கொலஸ்ட்ரால் கல்லீரல் மூலமாக வெளியேற்றப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை சீராக மேம்படுத்தினால் இதய நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

தலசீமியாமொழிDownload PDFகவனிதொகுதலசீமியா அல்லது தலசேமியா (Thalassemia) என்பது குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாட...
25/02/2023

தலசீமியா
மொழி
Download PDF
கவனி
தொகு
தலசீமியா அல்லது தலசேமியா (Thalassemia) என்பது குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படும் மரபணு சார்ந்த குருதி நோய் ஆகும். குருதிவளிக்காவி அல்லது ஹீமோகுளோபின் ஹீம், குளோபின் போன்றனவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளோபின் ஒரு புரத மூலக்கூறு ஆகும். குளோபின் மூலக்கூற்றுச் சங்கிலியின் வகைகள் ஒழுங்கற்று சேர்க்கப்படுவதால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகின்றன. இதன் விளைவாக பிறழ்ந்த குளோபின் வீழ்படிவு செங்குருதி அணுக்களின் மெனசவ்வை அழிக்கிறது. இந்த குருதிச் சிவப்பணுச் சிதைவு காரணமாக குருதிச்சோகை ஏற்படுகின்றது.

தலசீமியா
Delta Beta Thalassemia.jpg
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு
hematology
ஐ.சி.டி.-10
D56.
ஐ.சி.டி.-9
282.4
MedlinePlus
000587
ஈமெடிசின்
ped/2229 radio/686
Patient UK
தலசீமியா
MeSH
D013789
[edit on Wikidata]
தலசீமியா ஒரு நபருக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் மரபணு நோய் ஆகும். இதில் ஆல்பா தலசீமியா, பீட்டா தலசீமியா என இரு முக்கிய வகைகள் உள்ளன. இத்தாலிய, கிரேக்க, துருக்கிய, மத்திய கிழக்கு, தெற்காசிய, ஆப்பிரிக்க வம்சாவளி மக்களிடையே இது மிகவும் பொதுவாக ஏற்படுகின்றது.[1]

குருதிவளிக்காவி கட்டமைப்பு
நோய்க்காரணம்
தொகு
தலசீமியா நோயாளிகளில் α அல்லது β குளோபின்கள் குறைவாக அல்லது முற்றிலும் இல்லாத நிலை ஏற்படுகின்றது. ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் பிறழ்வுகளால் பாதிக்கப்படக்கூடிய அல்பா மற்றும் பீட்டா சங்கிலிகளால் ஆனது. தலசீமியாவில், அல்பா அல்லது பீட்டா சங்கிலிகளின் உற்பத்தி குறைகிறது, இது செங்குருதி அணுக்கள் உருவாக்கத்தைப் பாதிக்கின்றது. செங்குருதி அணுக்கள் சிதைந்து அல்பா-தலசீமியா அல்லது பீட்டா-தலசீமியா ஏற்படுகிறது. பாதிக்கபட்ட குளோபினின் வீழ்படிவுகள் செங்குருதி அணுக்களின் மெனசவ்வை அழிக்கிறது. இந்த குருதிச் சிவப்பணுச் சிதைவு காரணமாக குருதிச்சோகை ஏற்படுகின்றது.

அல்பா(α) தலசீமியா
தொகு
Alpha thalassemia chromosomes - Tamil.svg
அல்பா தலசீமியா பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, சீனா, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களிடம் காணப்படுகின்றன. [3] ஒவ்வொரு நிறப்புரி 16 இலும் இரண்டு தனித்தனி அல்பா குளோபின் மரபணு இடங்கள் உள்ளன எனவே ஒவ்வொருவரும் நான்கு அல்பா மரபணு மாற்றுருக்களைக் கொண்டுள்ளனர். அல்பா தலசீமியா நோயின் தீவிரம் இந்த நான்கு மரபணுக்களும் அழிவதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.

ஒரு மரபணு மட்டுமே அழிக்கப்பட்டால் நோய் வெளிக்காட்டப்படமாட்டாது. இவர்கள் காவிகளாக இருப்பர்.
இரண்டு மரபணுக்கள் அழிக்கப்பட்டால், குறைவான குருதிச்சோகை
மூன்று மரபணுக்கள் அழிக்கப்பட்டால், மிகையான குருதிச்சோகை உண்டாகும். இந்த அல்பா தலசீமியா ஈமோகுளோபின் எச் (H) நோய் என அழைக்கப்படுகின்றது.
அனைத்து நான்கு மரபணுக்களும் அழிக்கப்பட்டால் குழந்தை கருப்பையிலேயே இறந்து விடும் அல்லது பிறக்கும் போது இறந்துவிடும்.
பீட்டா(β) தலசீமியா
தொகு
தன்மூர்த்த பின்னடைவு மரபணுப் பிறழ்ச்சி வகையைச் சார்ந்தது. பதினொராவது நிறமூர்த்தத்தில் உள்ள ஈமோகுளோபின் பீட்டா (HBB) என்ற மரபணுவில் ஏற்படும் மாறுதலால் தலசீமியா உருவாகுகின்றது. [4] நோயின் தீவிரம் மரபணுப் பிறழ்வின் தன்மையிலும் எத்தனை மாற்றுருக்களில் பிறழ்வு ஏற்பட்டு உள்ளது என்பதிலும் தங்கியுள்ளது. பகுதியான செயல்பாடு பாதிக்கபட்ட பிறழ்வு ஏற்பட்ட மாற்றுரு β+ எனக் குறிக்கப்படுகின்றது, முழுவதுமான செயல்பாடு பாதிக்கபட்ட பிறழ்வு ஏற்பட்ட மாற்றுரு βo எனக் குறிக்கப்படுகின்றது.

இத்தகைய மாற்றுருக்களின் நிலைமையைப் பொறுத்து தலசீமியா வகைப்படுத்தப்படுகின்றது:

பெரும் தலசீமியா (தலசீமியா மேஜர்): இது மிகக் கடுமையான தலசீமியா ஆகும். மாற்றுருக்கள் இரண்டிலுமே பிறழ்வு ஏற்படுகின்றது (மரபணுவமைப்பு βo / βo). செயல்படும் β சங்கிலிகள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை, இதனால் ஹீமோகுளோபின் A ஐ உருவாக்கமுடியாது.
இடைத் தலசீமியா (தலசீமியா இன்டர்மீடியா): இதில் மரபணுவமைப்பு β+ / βo அல்லது β+ / β+ எனக்காணப்படும். ஹீமோகுளோபின் A சிறிதளவில் உற்பத்தியாகின்றது.
சிறு தலசீமியா (தலசீமியா மைனர்): மரபணுவமைப்பு β / βo அல்லது β / β+. இதில் ஒரேயொரு மாற்றுரு மட்டுமே பிறழ்வால் பாதிக்கப்படுவதால் இவர்களில் நோய் பெரும்பாலும் வெளிக்காட்டப்படுவதில்லை. ஆனால் குருதிச்சோகை ஏற்படலாம்.
டெல்டா(δ) தலசீமியா
தொகு
ஹீமோகுளோபினில் உள்ள அல்பா மற்றும் பீட்டா சங்கிலிகள் போல், அல்பா மற்றும் டெல்டா சங்கிலிகளும் 3% அளவில் ஹீமோகுளோபினில் காணப்படும். பீட்டா தலசீமியாவைப் போலவே, பிறழ்வுகள் உண்டாகலாம்.

ஏனைய ஈமோகுளோபின் நோய்களுடன் இணைதல்
தொகு
தலசீமியாக்கள் மற்ற ஈமோகுளோபின் நோய்களுடன் இணைந்திருக்கிறது. அதில் பொதுவாக உள்ளவை:

ஹீமோகுளோபின் E/தலசீமியா: பொதுவாகத் தென்படும் இடங்கள் கம்போடியா,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகள். மருத்துவ வெளிப்பாடு β தலசீமியா அல்லது தலசீமியா இண்டர்மீடியாவைப் போன்றது.
ஹீமோகுளோபின் S/தலசீமியா: ஆப்பிரிக்க, மத்திய தரைக்கடல் மக்களிடையே பொதுவானது, இது அரிவாளுரு குருதிச்சோகை போன்றது.
ஹீமோகுளோபின் C/தலசீமியா: ஆப்பிரிக்க, மத்திய தரைக்கடல் மக்களிடையே பொதுவானது. சிவப்பணுச் சிதைவு குருதிச்சோகை, மண்ணீரல் வீக்கம் என்பன இதில் ஏற்படுகின்றது.
ஹீமோகுளோபின் D/தலசீமியா: இந்தியா, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் பொதுவானது (பஞ்சாப் பகுதி).[5]
நோய் அறிகுறிகள்
தொகு

தலசீமியா நோயாளியில் மண்ணீரல் வீக்கம்.
பொதுவான குருதிச்சோகை அறிகுறிகள்: சோர்வு, பலவீனம், வெளிர் அல்லது மஞ்சள் தோல்
பின்தங்கிய வளர்ச்சி விகிதம்: குருதிச்சோகை குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பருவமடைவதும் தாமதமாகலாம்.
மண்ணீரல் வீக்கம்: மண்ணீரல் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடவும் பழைய அல்லது சேதமடைந்த குருதி அணுக்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றவும் உதவுகிறது. அடிக்கடி குருதிச் சிவப்பணுக்களின் அழிவு தலசீமியாவில் ஏற்படுவதால் இவற்றை அகற்றும் பணியைச் செய்யும் மண்ணீரல் பெரிதாக்குகிறது. மண்ணீரல் வீக்கம் குருதிச்சோகையை மேலும் மோசமாக்கலாம், அத்துடன் இரத்தமாற்றம் செய்யப்பட்ட சிவப்பணுக்களின் ஆயுளைக் குறைக்கலாம். மண்ணீரலின் கடுமையான வீக்கம் அதை அகற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தலாம்.
மரபியல் அமைப்புகள்
தொகு

தலசீமியா தன்மூர்த்த பின்னடையும் தன்மையுள்ள மரபணுவை கொண்டது.
α மற்றும் β தலசீமியாக்கள் பொதுவாக தன்மூர்த்த பின்னடைவு மரபுரிமையால் கடத்தப்படுகின்றன. தலசீமியா மாற்றுருக்கள் R, r எனக்கொண்டால், rr உடையோரில் நோய் வெளிக்காட்டப்படும். Rr கொண்டுள்ளோர் பாதிப்பு ஏற்படாத காவிகளாக இருப்பர். இதன்படி தாயும் தந்தையும் Rr ஆக இருக்கும் பட்சத்தில் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் நோயற்றவராகவும் நான்கில் இருவர் நோயைக் கடத்தும் ஆனால் பாதிப்பற்றவர் ஆகவும் நான்கில் ஒருவர் (rr) நோயுடையவராகவும் இருப்பார்கள்.

சிகிச்சைமுறைகள்
தொகு
தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது.[6] ஆனால் தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் குருதி ஏற்றுதல் தேவையானதாக இருக்கின்றது. பலமுறை குருதிமாற்றம் செய்வதால் இரும்பின் அளவு மிகைப்படலாம்.இது டிஃபெராக்சமைன், டிஃபெரிப்ரோன் அல்லது டிஃபெராசிராக்ஸ் போன்ற இரும்பை அகற்றும் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகின்றது.[7] இந்த சிகிச்சைகள் தலசீமியா மேஜர் உள்ளவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் தருகிறது.[7] மரபணுக் கோளாறுகள் உள்ளோர் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

நோயைத் தடுக்கும் வழிகள்
தொகு
1970 ஆம் ஆண்டு சைப்பிரசு நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வித திரையிடல் கொள்கையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புறவின் மூலம் 158 பேருக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையைவிடக் குறைந்துள்ளது.[8].
ஈரான் நாட்டில் கல்யாணத்திற்கு முன்பு சோதனையில், ஆணின் சிகப்பு உயிரணுக்கள் முதலில் சோதிக்கப்படுகிறது. ஆண்களில் மைக்ரோசைடோசிஸ் (சராசரி உயிரணு ஹீமோகுளோபின் < 27pg அல்லது சராசரி சிகப்பு உயிரணுக் கனவளவு < 80 fl) என்ற சிகப்பு உயிரணுக்கள் பருமன் குறைந்து இருந்தால், பெண்களையும் சோதித்து பார்க்கப்படுகிறது. ஒரு வேளை, இரண்டு பேருக்கும் சிகப்பு உயிரணுக்கள் பருமன் குறைந்து இருந்தால், ஹீமோகுளோபின் A2 அளந்து பார்க்கப் படுகிறது. இரண்டு பேருக்கும் 3.5% விழுக்காட்டைவிட அதிகளவில் (தலசீமியா) காணப்பட்டால், அருகில் உள்ள மருத்துவமணைக்கு சென்று மரபியல் கலந்தாய்வு செய்ய ஆலோசனை கூறப்படும்.[9].
தொற்றுநோயியல்
தொகு
தலசீமியாவின் பீட்டா வடிவம் மத்திய தரைக்கடல் மக்களிடையே பரவலாக உள்ளது. தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிலிருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.

கூடுதல் உண்மைகள்
தொகு
சமீபகாலமாக, அதிகரிக்கும் அறிக்கைகளில், பீட்டா தலசீமியா கொண்ட நோயாளிகளில் 5% அளவில் பீடல் ஹீமோகுளோபின்கள் (HbF) உருவாகும். மற்றும் ஹைட்ரோக்சியுரியாவின் உபயோகத்தினால் HbF அதிகளவில் உற்பத்தி ஆகிறது.இது பற்றி இன்னும் அறிக்கைகள் வரவில்லை.

குறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்
தொகு
தலசீமியா குர்லியில்
Last edited 5 months ago by Drsrisenthil

*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*.. அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..காப்பீடு திட்ட கார்டு...
02/02/2023

*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..

அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...

(குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..

அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்...
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...

இந்த பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் ( மாநில அரசு1 லட்சம் , மத்தியரசு 4லட்சம் )வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரிஸ் ,
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..

எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து
இப்பவே அலைந்து
காப்பீடு அட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

07/01/2023
ஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு சரிவிகிதமாக தேவைப்படுகிறது. செடிகளுக்குத் த...
07/01/2023

ஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு சரிவிகிதமாக தேவைப்படுகிறது. செடிகளுக்குத் தேவையான தண்ணீர் சூரிய வெளிச்சம் தேவைப்படுவது போல் மனிதர்களுக்கும் தங்கள் உடலுக்கு நல்ல ஊட்டத்திற்கும். வளர்ச்சிக்கும் பலவகைப்பட்ட உணவுப் பொருட்கள் தேவை.

நாம் உண்ணும் உணவு, ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும். சக்திக்கும். உடல் நலத்திற்கும் என உடலில் பயன்படுத்தப்படும் எல்லா உணவு வழிகளையும் உள்ளடக்கியது.

ஊட்டச்சத்துக்களும் நமது உடல் நலமும்

சரியான உணவுகளை உண்ணாத அல்லது போதிய அளவு உண்ணாத ஒருவர் போதாத ஊட்டமுடையவராவர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்துக்குறைவு மிகச் சாதாரணமாக உள்ளது. இந்த நிலையைப் பெரும்பாலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில், போதா ஊட்டம் உடைய ஒரு குழந்தை நன்றாக இருப்பது போலவே தான் தோன்றும். ஆனால், அதே வயதுடைய நலமார்ந்த குழந்தை ஒன்றின் (healthy child) பக்கத்தில் நிற்க வைத்துப் பார்த்தால், அவன் மிகவும் சிறியவனாகத் தெரிவான். அவன் குறை எடை உள்ளவனாக இருப்பான். ஏனெனில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வகையான உணவு போதிய அளவு கிடைக்காததே அதற்கு காரணம். இந்தியாவின் பல பகுதிகளில் 40 சதவிகித குழந்தைகள் அவர்களது வயதுக்குக் குறைந்த எடை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். குறை எடை உள்ள ஒரு குழந்தைக்குத் தட்டம்மை அல்லது பேதி (Diarrhoea) அல்லது வேறு தொற்று வருமானால், போதா ஊட்டம் அதை விரைவில் மோசமான நிலைக்கு உள்ளாக்கி குழந்தைகள் இறக்க நேரலாம். நல்ல உணவூட்டம் உள்ள ஒரு குழந்தை தொற்றுகளால். நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு குறைவு. மற்றும் அவன் நோய் வாய்ப்பட்டாலும். விரைவில் மீண்டும் நலமடைவது வழக்கம்.

போதா ஊட்டம் குழந்தையின் அறிவுக் கூர்மையையே பாதிக்கும். குழந்தை பிறப்புக்கு முன்பே இந்தக் கெடுதல் தொடங்கிவிடும். அதாவது. கருவுற்ற தாய் சரியான உணவு உட்கொள்ளவில்லை என்றால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.

போதாஊட்டம் உள்ள குழந்தை செயலிலும் கற்று கொள்வதிலும் பின்தங்கியிருப்பார்கள். பெரியவர்கள் போதாஊட்டம் உடையவர்களாக இருந்தால் கடினமாக உழைக்க அவர்களால் முடியாது. போதாஊட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தியும் வளர்ச்சியும் மந்தமான நிலையை அடைகின்றன.

நாடு முன்னேறவும் விரைவில் வளர்ச்சியும் பெற வேண்டுமானால், சரியான வகை உணவுகள். போதிய அளவு ஒவ்வொருவருக்கும் தேவை. நல்ல உணவூட்டமும், போதாஊட்டமும் மனிதர்களில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய ஒப்பீடு பின்வருமாறு.

நல்ல உணவூட்டம்

போதா ஊட்டம்

உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்ற சரியான எடை

எடை மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக இருத்தல்

வலுவான தசைகள்

வலுவற்ற தசைகள்

கை, கால் எலும்புகள் நேரானவை

வளைந்த கால்கள் அல்லது முட்டிகள்

மென்மையான தெளிவான தோல் மற்றும் சளிச்சவ்வுகள் நல்ல நிறத்துடன் இருத்தல் ஆரோக்கியமான, ஒளி மிகுந்த கண்கள், தெளிவான பார்வை

உலர்ந்த சொரசொரப்பான தோல்

சளிச்சவ்வுகள் நிறம் வெளுத்து இருத்தல்

ஒளி மங்கிய கண்கள், மாலைக் கண், பார்வை குறைபாடு

காது கேட்டல் நன்றாக இருக்கும்

காது கேட்டலில் குறைபாடு

இடையின்றி மூச்சு விடுதல்

வாயால் மூச்சு விடுதல், தொண்டை சதை வீங்கியிருத்தல்

பற்கள் நன்கு அமைந்திருத்தல்,

பற்கள் குழியின்றி இருத்தல்

சீரற்ற பற்கள்

பற்கள் குழி விழுந்து இருத்தல் ஆரோக்கியமற்ற ஈறுகள் இருத்தல்.

தொண்டை சதை தொற்றின்றி இருத்தல்

தொண்டை சதை வீங்கியும், தொற்றினால் புண்ணாகியும் இருத்தல்

உட்கார்ந்து இருக்கும் போதும் நடக்கும் போதும் நிற்கும் போதும் நேராக இருத்தல்

வளைந்த தோற்றம் கூன் விழுந்த முதுகு வயிறு வீக்கமாக இருத்தல்

உறுதியான நரம்புகள், அமைதியான உற்சாகமுள்ள தோற்றம், கற்றுக் கொள்ளுவதில் விரைவு தன்மை

நடுக்கம் உள்ளவர்களாகவும் கவலை நிறைந்த, எளிதில் சினம் கொள்ளுகிற தன்மை, கற்பதில் மந்தம்

சக்தி நிறைந்தவர்களாகவும் இருத்தல்

களைப்பான மற்றும் மந்தமான தன்மை இருத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி உடையவராய் இருத்தல்

தொற்றுநோய் எதிர்ப்பாற்றல் குறைவு

உணவுகளும் மற்றும் உணவுச் சத்துக்களும்

ஊட்டம் பெறுவதற்கு உடல் பயன்படுத்திக் கொள்ளும் எந்த பொருளும் உணவு எனப்படும். அதாவது உடல் தனது வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் உயிருடன் வாழ உணவு தேவை. உணவுகள் பலவகைப் பயிர்களிலிருந்தும் மற்றும் பறவைகள், மீன் மற்றும் விலங்குகளிலிருந்தும் பெறப்படுகின்றன.

சத்துப் பொருட்கள்

புரதங்கள்

கார்போஹைட்ரேட்டுகள்

கொழுப்பு மற்றும் எண்ணெய் சத்துக்கள்

உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)

தாது உப்புகள்

தண்ணீர்

பல உணவுப்பொருட்கள் இவற்றில் பலவற்றைக் கொண்டுள்ளன. ஊட்டம் அளிப்பவைகளில் எல்லாவற்றையுமே கொண்டுள்ள உணவுப் பொருள் இயற்கையில் எதுவும் இல்லை. ஆகவே, நல்ல ஊட்டம் அளிப்பவைகளைப் பெறப் பலவகை உணவுகளை உண்ணுவதும் அவைகளில் என்ன ஊட்டம் அளிப்பவை அடங்கியுள்ளன என்பதையும். அவை ஏன் முக்கியமானவை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவின் செயல்பாடுகள்

உடல் வளர்ச்சிக்கு அல்லது உடல் கட்டமைப்புக்கும் மற்றும் திசுக்களைப் பழுதுநீக்கி அமைத்தலுக்கும் புரத உணவுகள் முக்கியமானதாகும்.

வேலை செய்யத் தேவையான சக்தி அளிக்க அடிப்படை உணவுகள் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் தேவை.

உடல் முறையாகச் செயல்படவும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவவும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தேவை.

உடலில் இந்தச் செயல்கள் எல்லாம் நிறைவேற்றப்படும் போது அந்த நபர் நல்ல ஊட்டம் நலமிக்கவராக உள்ளார்

சக்தி தரும் உணவுகள்

உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படுவது சக்தியாகும். ஒரு பேருந்து ஓடுவதற்கு டீசல் ஓர் எரிபொருளாயிருப்பது போல உடல் வேலை செய்யச் சக்தி தரும் உணவுகளே எரிபொருளாகும். உழைப்பு கடினமாக ஆக அதிகமாக சக்தி தரும் உணவு தேவை. ஆனால் ஓய்வெடுக்கும் போது கூட மூச்சு விடுவதற்கும் இருதயம் துடிப்பதற்கும். உடல் எரிபொருளை எப்போதும் பயன்படுத்துகிறது. சக்திக்காக எரிபொருள் உணவுகளை எரிக்கும் போது. வெப்பமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிர்காலங்களில் உடற்பயிற்சி மூலமும் சக்தி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதின் மூலமும் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளலாம். அடிப்படை உணவுகள் சக்தி தருபவைகளில் மலிவானவை மற்றும் நமது உணவின் அடிப்படையானவை. அவைகளில் அதிகமாகக் கார்போஹைடிரேட்டுகளும் சிறிதளவில் புரதங்களும் உள்ளன.

நாம் உண்ணும் மூல உணவின் வகை நமது உணவு பழக்கத்தைப் பொறுத்தும் சமுதாயத்தில் கிடைக்கிற வகையை பொறுத்தும் அது அமையும்.

அடிப்படை உணவுகளில் சில வருமாறு

சிறு தானியங்கள் (cereals) மற்றும் தானியங்கள் : கோதுமை ரொட்டி சப்பாத்தி முதலியவைகளாக செய்யப்பட்டது, அரிசி, கம்பு வகை, சோளம் மற்றும் கேழ்வரகு தினை

மாவுச் சத்துள்ள காய்கள் : உருளைக்கிழங்கு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு

மாவுச் சத்துள்ள பழங்கள்:- வாழைப்பழம்.

சக்கரை, தேன், வெல்லம் ஆகியவை அதிகப்படியான சக்தியைத் தருகின்றன. இவை கார்போஹைடிரேட் அடங்கிய உணவுகளாகும்.

கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்- வனஸ்பதி. வெண்ணெய், நெய், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்றவை சக்தி தரும் ஆதாரப் பொருட்கள். ஆனால் அவை விலை மலிவானவை அல்ல.

நாம் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் இவற்றில் சிலவற்றைச் உணவில் சேர்த்துக் கொள்ள முயல வேண்டும். அதிக சக்தி தேவைப்படும்போது, உடலில் கொழுப்புச் சேமிப்பு இருந்தால் அது பயன்படும்.

கலோரிகள் என்பது சக்தியை அளிக்கப் பயன்படும் அலகாகும். சில உணவுகளில் எவ்வளவு சக்தி உள்ளது என்பதை அளக்க நாம் கலோரிகளைப் பயன் படுத்துகிறோம். ஒருவருக்கு தினசரி எவ்வளவு சக்தி தேவை என்பதை அளக்கவும்கூட (தேவையான சக்தி) நாம் கலோரிகளைப் பயன்படுத்துகிறோம்.

1 கிராம் கார்போஹைட்ரேட் 4 கலோரிகளை அளிக்கும்

1 கிராம் கொழுப்பு 9 கலோரிகளை அளிக்கும்

1 கிராம் புரதம் 4 கலோரிகளை அளிக்கும்

'சக்தி தரும் உணவுகளில் புரதங்கள் சேர்க்கப் படவில்லை. ஏனெனில் உடல் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

சில உணவுப் பொருட்களும் அவற்றின் 100 கிராம் தரும் கலோரிகளும் இங்கே தரப்படுகின்றன.

தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவுதாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவுதாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தடுக்கலாம்தாய்ப்பால்...
25/10/2022

தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு

தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு
தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தடுக்கலாம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன்மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம்.

தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை
வெந்தயம்

குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.

பூண்டு

பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)

இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.
பப்பாளிக் காய்

பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவரப் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, பப்பாளிக் காயைச் சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.
ஆமணக்கு இலைகள்

ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இலக்கியங்களில் தாய்ப்பால் பற்றிய கருத்து
தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உணவில் கவனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

தாய்ப்பாலின் மகத்துவம்
அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.

பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, கற்பூரவல்லி இலைகளை வேக வைத்துச் சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம்.
இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
பால் பொருட்களைச் சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.
பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.
பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.
அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.

Address

Perambalur
621212

Telephone

+919384468121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jerem Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jerem Foundation:

Share