07/09/2026
தூய்மையான தஞ்சை – நமது இலக்கு!
தஞ்சாவூர் மாவட்டத்தை தூய்மையான மற்றும் சுகாதாரமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, மக்கும் குப்பை – மக்காத குப்பை என குப்பைகளை முறையாகப் பிரித்து சேகரித்தல், கழிவுகளை முறையாக மேலாண்மை செய்தல், பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
இந்த மகத்தான முயற்சிக்கு
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
“தூய்மை என்பது அரசின் பணி மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும்!”
என்ற அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தூய்மை விழிப்புணர்வு, குப்பை வகைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்போம்…
நமது பங்களிப்பால் தஞ்சையை தூய்மையான தஞ்சையாக மாற்றுவோம்!
“தூய்மையான தஞ்சை – நம் அனைவரின் கனவு… நம் அனைவரின் பொறுப்பு!”
Dr.K. முஹம்மது யஹ்யா
நிறுவனர் தலைவர்
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்டம்
#தூய்மைஇந்தியா