Ulaga Tamil Maruthuva Kazhagam

Ulaga Tamil Maruthuva Kazhagam It was established as non profit organization in the year 1992 to promote the practice of Siddha Medicine Founder
Dr. B. He is 40 years old.

Michael Jeyaraj, a Siddha doctor, founder, author who has passion for the Siddha Medicine was born in Tirunelveli 1961. He grew up in Palayamkotttai and attended St. Xavier’s School, Palayamkottai and then Government….Then graduated from GSMC with a degree in siddha medicine. He founded Tamizh Maruthuva Kazhagam to nurture the students of GSMC. He also worked in Tirunelveli region to help local co

mmunities systematize their tradition medicine knowledge so they could employ it in their own primary health care. As part of this work, he has conducted 4 types of camp named Anjarai petti. He was well aware of the inequalities in our society. So his work medicinal plants here in Papanasam was his way of contributing alleviation of this poverty since medicines in our country are beyond the reach of majority of the people. Dr Micheal is survived by his wife Mrs. Amirtham and his son Chezhiyan. His work is very significant since there are only handful of Siddha doctors in the state. Most of them are focus on only individual health. Ulaga Tamil Maruthuva Kazhagam was founded in 1992 in Palayamkottai for the purpose of promotion and dissemination of Siddha medicine. Over the years UTMK has developed into an unique organization in Siddha community. The scientific interest of UTMK cover nowdays are aspects of siddha like medicinal preparations, medicinal plants, pharmacy, and external therapies. Since 1992, KARPA AVIZHTHAM is the office magazine of the UTMK. UTMK is setting up and supporting smaller symposia and workshop as specific topics related to Siddha medicine
UTMK has established 5 permanent committees which elaborate and disseminate information on
i) conservation medicnal plants
ii) manufacturing of traditional high order siddha medicines. iii) literary survey on siddha medicine books
iv) Research initiatives on Siddha medicine
v) Health Care Services

குடிநீர் ​நமது  சித்த  மருத்துவத்தில்,  நோயரின்  நோய்  அறிகுறிகளை விரைவாகக்  குறைக்கும்  மருந்து  குடிநீரே  ஆகும்.  ஒன்ற...
12/06/2024

குடிநீர்

​நமது சித்த மருத்துவத்தில், நோயரின் நோய் அறிகுறிகளை விரைவாகக் குறைக்கும் மருந்து குடிநீரே ஆகும். ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட உலர்ந்த (அ) பச்சை மூலிகைச் சரக்குகளையோ ஒன்றிரண்டாகப் பொடி செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து 1/4,1/8,1/32,1/64 பங்காக வற்ற வைத்து வடிகட்டிக் குடிப்பதுதான் குடிநீர் ஆகும்.

​​ குமரி மாவட்டம் மற்றும் தென் திருவிதாங்கூர் பகுதிகளில் 86 மூலிகை சரக்குகள் சேரும் வலிய அங்காடி கசாயம் என்று ஒரு குடிநீர் முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. குடிநீர் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான வடமொழிச் சொல் கசாயம் ஆகும். நிலவேம்புக்குடிநீர் கபசுரக்குடிநீர் முதலியவை புகழ்பெறும் முன்னரே தென் மாவட்டங்களிலே விசக்குடிநீர் என்ற பெயருடன் காய்ச்சல் கசாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. உள்மருந்துகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் குடிநீர் பற்றி அதிகம் பேசும் நமது சித்த மருத்துவ நூற்கள் கண்ணுசாமிப்பிள்ளையின் மருத்துவ நூற்களே ஆகும். நமது சித்த மருத்துவ மூல நூற்களிலே குடிநீர் பற்றி அதிகம் பேசப்படவில்லை. தேரன் குடிநீர் - 100 என்னும் மூலநூல் உள்ளது. கண்ணுசாமி சிகிச்சாரத்னதீபம் முதல் பாகத்தில் 59 வகை கசாயங்களும், கண்ணுசாமி வைத்திய சிந்தாமணியில் 16 வகை கியாழங்களும், கண்ணுசாமி பரம்பரை வைத்தியத்தில் 56 வகை கியாழங்களும், சித்த வைத்தியத்திரட்டில் 12 வகை குடிநீர்களும் கூறப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் கசாயம் எனும் வார்த்தையை பயன்படுத்த கண்ணுசாமிப்பிள்ளை அடுத்தடுத்த பாகங்களில் கியாழம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.

​கண்ணுசாமியின் அனைத்து நூற்களிலும் உள்ள கியாழ முறைகளிலும், சரக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுப்படி எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, இடித்த முழு சரக்கு அளவையும் அப்படியே பாத்திரத்தில் போட்டு, குறிப்பிட்ட அளவுப்படி தண்ணீர் சேர்த்து அதை நான்கில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி, அதை 3 (அ) 4 பங்காக்கி ஒவ்வொரு 3மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் நோயாளிகளுக்கு அறிவுறுத்துவது ஒரு தேக்கரண்டி (5 - 6 கிராம்) கசாயப்பொடியுடன் 2
டம்ளர் தண்ணீர் சேர்த்து 1/2 டம்ளராக வற்றவைத்து வடிகட்டி குடிக்கச் சொல்கிறோம். நாம் எடுக்கிற 1 தேக்கரண்டி கசாயப்பொடியில் சொல்லப்பட்ட குடிநீர் தயாரிப்பில் உள்ள அனைத்து மூலிகைப் பொருட்களும் இருக்குமா என்பது கேள்விக்குறியே?

​கண்ணுச்சாமி நூற்களில் உள்ள ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். (எடுத்துக்காட்டு 1 : கண்ணுச்சாமி சிகிச்சாரத்ன தீபம்: பக்கம் 87)

சுரக்கசாயம் :

​நிலவேம்பு, கோரைக்கிழங்கு, கடுகுரோகிணி, பற்படாகம், சீந்தில் கொடி, வேப்பம்பட்டை வகைக்கு தோலா - 1 (11.7 கி)

​இவற்றை 1/2 படி ஜலத்தில் இடித்துப் போட்டு 2 மணிநேரம் ஊறினபடி, 1/2 ஆழாக்குக்கு குறையாமல் காய்ச்சி, அதனை மூன்று வேளைக்குப் பகுத்து 4 மணி நேரத்துக்கொரு முறை உட்கொள்ள குளிர்சரம் முதல் எல்லாவகைக் காய்ச்சல்களும் குணப்படும்.

விளக்கம் :

​6 சரக்குகள் வகைக்கு 11.7 கி எடுத்து மொத்தம் 72.2 கிராம் வரும். அந்த அளவு சரக்குடன் 1/2 படி என்பது ஏறக்குறைய 675 மிலி தண்ணீர் சேர்த்து 1/2 ஆழாக்காக வற்ற வைத்து என்பது (1 ஆழாக்கு -168 மிலி) 1/2 ஆழாக்கு - 84 மிலியாக வற்ற வைத்து வடிகட்டி மூன்று பங்காகப் பகுத்து, என்பது 28 மி.லி (30மிலி) குடிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

​இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்பும். குடிநீரின் ஆயுட்காலம் என்று நமது மருத்துவ நூல்கள் 3 மணி நேரம் தானே குறிப்பிட்டுள்ளன. இப்படி ஒருநாள் முழுவதும் வைத்திருந்துது குடிப்பது? இந்த இடத்தில்தான் நமது மக்களின் பழைய வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது.பழையகால அடுப்பங்கரையில்,முதன்மை அடுப்புக்கும் பக்கத்திலேயே கொடி அடுப்பு என்று ஒன்று இருக்கும். அதில் எந்த ஒரு பொருளை வைத்திருந்தாலும் சூடு குறையாமல் இருக்கும். அதிலேதான் கசாயங்களை வைத்து இருந்து சூடு குறையாமல் பார்த்துக்கொண்டனர். இப்போது அந்த முறைகள் எல்லாம் வேண்டாம். , மாறாக ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்தாலே போதும் 12-14 மணிநேரம் வரை சூடு தாங்கும்.

​மேலும் விறகு அடுப்பு எல்லாம் காணாமல் போய்விட்ட இந்த காலத்தில், கசாயம் காய்ச்சுவதற்கு எரிவாயு(Gas) அடுப்பை விட மின்னடுப்பே (Induction Stove) சிறப்பாக உள்ளது.

​நாம் தேர்வு செய்கிற குடிநீர்ப் பொடியில் அனைத்து மூலப்பொருட்களும் இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு முறை கசாயம் போடும்போதும் குறைந்தது 1 பலம் (35கி) பொடியாவது போட வேண்டும். அந்த ஒரு பலம் பொடியை, எத்தனை சரக்குகள் கூறப்பட்டுள்ளதோ அந்த எண்ணிக்கையில் பங்கிட்டு அத்தனை எடையளவு எடுத்து கலந்துப் போட்டால் அனைத்து மூலப் பொருட்களும் அந்த கலவையில் இருக்கும்.

​எடுத்துக்காட்டாக கபசுரக் குடிநீரில் 15 மூலிகை சரக்குகள் கூறப்பட்டுள்ளன. ஒரு பலம் (35 கிராமில்) கபசுரக் குடிநீரில் அனைத்து 15 பொருட்களும் சம அளவில் இருக்க வேண்டுமெனில் (35/15 = 2.33) ஒவ்வொரு மூலப் பொருளையும் வகைக்கு 2.5 கிராம் எடுத்து ஒரு பொதியாகப் போட்டு வழங்கினால் மொத்த கசாயப் பொடியில் (35 கிராமில்) அனைத்து மூலப்பொருட்களும் சம அளவில் உறுதியாக இருக்கும்.

​எனது தயாரிப்பு அனுபவத்தில், மேற்கண்ட முறையிலே குடிநீர்ப் பொடிகளை தயாரித்து நோயர்களுக்கு வழங்கி நோயர்களின் நோய்க்குறிகுணங்கள் வேகமாக மாறுவதை கண்டிருக்கிறேன்.

​எனது 30 ஆண்டு மருத்துவமனை அனுபவத்தில் சிறுபீளை சமூலக் குடிநீர், கல்லடைப்பு நோயர்களுக்கும், சிறுநீரகம் பழுதடைந்த நோயர்களுக்கும் நல்ல பலனைத் தந்து வருகிறது. இந்த குடிநீரை மட்டுமே தொடர்ந்து குடித்து, டயாலிசிஸ் இல்லாமல் பல நோயர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்து வருகின்றனர்.

​50 கிராம் மருந்துப் பொதிகளாகப் போட்டு கொடுத்து வருகிறேன். ஒரு பொதி மருந்து பொடியுடன் (50 கிராம்) 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/2 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி ப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு, 1/2 - 3/4 டம்ளராக ஒரே நாளில் 3 முதல் 4 முறை குடித்து வர சிறுநீரகக் கல்லடைப்பு வலி, பித்தப்பைக் கல்லடைப்பு வலி விரைவில் மாறுகிறது. சிறுநீரகக்கற்கள் கரைந்து விரைவில் வெளியேறுகின்றன. 30-45 நாட்களில் நல்ல மாற்றம் கிடைக்கிறது. பித்தப்பைக் கல்லடைப்பில் நாளைக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நாள் குறிப்பிடப்பட்ட நோயர்களில் இரண்டு, மூன்று நாட்களில் வலி குறைந்து விடுகிறது. தொடர்ந்து ஒரு மண்டலம் குடித்துவர வலி முற்றிலுமாக நீங்கி விடுகிறது. அவர்களிடம் எப்போதும் 5 பொதிகள் வைத்து கொண்டு இருக்கச் சொல்லி அறிவுறுத்தி விடுவேன். எப்போதாகிலும் வலி வந்தால், 5 நாட்களுக்கு கசாயம் போட்டுக் குடிக்கச் சொல்லி விடுவேன் நோய் அறிகுறிகளும் இல்லாமலும் இக்குடிநீர் குடிப்பவர்கள் நலமுடன் வாழ்கிறார்கள்.

​சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கட்டி (cyst) உள் ளவர்களுக்கும் இந்தக் குடிநீர் நல்ல குணத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக வலியுடன் வரும் கார்ட்டிக்கல் சிஸ்ட் (Cortical cyst) நோயர்களுக்கு வலியை குறைத்து நல்ல பலனைத் தருகிறது.

​இவ்வாறாக கல்லடைப்பு நோய்க்குக் கூறப்பட்ட ஒரு குடிநீர் மருந்து சிறுநீரகத்தில் ஏற்படும் பல்வேறு நோய்நிலைகளைக் குறைத்து குணமாக்கப் பயன்படுகிறது. ( நூல் ஆதாரம் - குணப்பாடம் மூலிகை - பீளைக்குடிநீர்)

உலகத் தமிழ் மருத்துவக் கழக வெளியீடான கற்ப அவிழ்தம் சித்த மருத்துவ மாத இதழில் வெளியான கட்டுரை .

கட்டுரையாளர் :

சித்த மருத்துவர் பி மைக்கேல் செயராசு பி.எஸ்.எம். எஸ் .,

நிறுவனர் ,தலைவர்

உலகத் தமிழ் மருத்துவக் கழகம்

தொண்கூலங்கள்(நவதானியங்கள்)ஒரு விடுமுறை நாளன்று காலை 9:30 மணியளவில் தொலைக்காட்சி பெட்டிமுன் குடும்பத்துடன் காத்திருந்தேன்...
26/05/2024

தொண்கூலங்கள்(நவதானியங்கள்)

ஒரு விடுமுறை நாளன்று காலை 9:30 மணியளவில் தொலைக்காட்சி பெட்டிமுன் குடும்பத்துடன் காத்திருந்தேன்,ஒருமுன்னணி தொலைக்காட்சி நிறுவன அலைவரிசையில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையைக்காண!
வழக்கம்போலவே நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவுப் பூர்வமான கேள்விகளைக் கேட்க,நகைச்சுவையான பதில்களை அளித்தனர் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

இடையில்,நவதானியங்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.மாணவிகளின் நகைச்சுவை பதில்களை ரசித்த நமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தின ஆசிரியைகளின் பதில்கள்.

காரணம்,நவதானியங்கள் என்றால் ஒன்பது வகையான பொருட்கள் என்று கூறியதுடன், “எள்ளு,கொள்ளு,மொச்சை,கடலை,கோதுமை...என தொண்டு (ஒன்பது) பொருட்களை கூறுபோட்டு மும்மூன்றாகக் கூறினர் ஆசிரியைகள் மூவர்
நிகழ்ச்சி தொகுப்பாளரும் “இதுதான் சரியான விடை” என்றபடியே அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.எடுத்துக்கூறலாம் என்று இறுதிவரை காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆம்!
நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை கூற ஏதுவாக முகவரி குறிப்பிடப்படவில்லை.

இதுபற்றி என் நண்பருடன்
விவாதித்தபோது,”கோவில்களில் நவக்கிரகங்களுக்கு ஏற்ற நவதானியங்கள் என்று இதைத்தான் கூறுகின்றனர்”என்றார்.

எங்கே செல்கிறது நம் தமிழ்ச் சமூகம்?என்ற ஆதங்கம் மேலெழ உருவாகியது இக்கட்டுரை.

தானியங்கள் என்றால்,புல் வகைகளிலிருந்து கிடைக்கும்,உணவிற்குப் பயன்படும் சிறுவிதைகள் எனக் கொள்ளலாம்.

இவற்றின் உமியை நீக்கினால் கிடைப்பது அரிசி(விதிவிலக்கு சோளம்).தானியங்களில் பலவகைகள் இருப்பினும் உணவிற்கு சிறப்பாக அதிகளவில் பயன்படும் ஒன்பது வகையான தானியங்கள்,நவதானியங்கள் என அழைக்கப்படுகிறது.

நெல்,
சோளம்,
கம்பு,
வரகு,
கேழ்வரகு,
சாமை,
தினை,
காடைகண்ணி,
குதிரைவாலி

ஆகிய தொண்டும்(ஒன்பது) நவதானியங்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றில் உடல் ஊட்டத்திற்கு தேவையான துத்தநாகம்,சுண்ணாம்பு,நார்ச்சத்து ஆகிய அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிரம்பியிருக்கின்றன.இதனால் இவை நீரிழிவு,மிகு குருதியழுத்தம் போன்ற கடுமையான நோய்கள் வராமல் தடுப்பதுடன் வந்த பின்பும் அவற்றை நீக்குவதில் சிறப்பாக செயலாற்றுகின்றன.

1.நெல்:

உலகளவில் 2/3 பங்கு மக்களால் உணவாகக் கொள்ளப்படுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேல்தட்டு மக்களின் முதன்மையான பெருமைக்குரிய உணவாக இருந்து,இன்று அதே மக்களால் பயத்துடன் ஒதுக்கி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தற்காலம் கடைகளில் கிடைக்கின்ற கலப்பின, செயற்கை வேதி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் மூலம் விளைவிக்கப்பட்ட,நன்கு தீட்டி வெண்மையாக்கப்பட்ட அரிசிகளை நீக்கி,நாட்டு ரக ,இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தல் நலம்.இதில் உள்ள குரோமியம் என்னும் பொருள் இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது.
மேலும்,முளைகட்டிய நெல்லிலிருந்து தயாரிப்பதான அவலையும் பயன்படுத்தலாம்.அவலை நனைய வைத்து நன்றாய் கழுவி குழைய வேகவைத்து,தயிர் கலந்து கொடுக்க சீதக்கழிச்சல் குணமாகும்.இதை வேகவைத்து வடித்த தண்ணீரை சீதக்கழிச்சல்,பெருங்கழிச்சல்,குடல் வலி போன்றவைகளுக்கு கொடுக்கலாம்.அவலில் பாலும் நெய்யும் சேர்த்து உண்டால் உடற்கு வன்மை உண்டாகும்.இதைத் தயிரில் கலந்து உண்டால் மந்தம் உண்டாகும்.மோரில் கலந்து உண்டால்,அயர்வு,நீர்வேட்கை விலகும்.நீரில் ஊறல் வைத்து உண்டால்,மிக்க வாயு உண்டாகும்.புளி சேர்த்து உண்டால் அழல் நோய் நீங்கும்.

2.சோளம்:

கரப்பான் பண்டம் என்று இதனை சித்த மருத்துவம் கூறினும்,அடித்தட்டு மக்களின் அன்றாட உணவே இந்த சோளம்தான்.இதனை உப்புமா,கூழ்,ரொட்டி,தோசை எனப் பலவைகையாகச் செய்து உண்டு வர,உடல் ஊட்டமுண்டாகும்.புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலுடையது.இதயநோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளைக் குறைக்கின்றது.குறைந்த கொழுப்பு சத்துள்ளது என நற்சான்று தருகின்றன நவீன ஆய்வு முடிவுகள்.ஆனாலும் சோள உணவு அழற்சி உடையோர்,இதனை உண்ணாமல் தவிர்ப்பது நலம்.வாந்தி,ஒற்றைத் தலைவலி,தோல் அரிப்பு,வயிற்றுவலி,பேதி,மனம் அலைபாய்தல்,இரைப்பு,நாக்கு,வாய்வீங்குதல்,சுரம் போன்றன ஏற்படும் என்ற சித்தர் கூற்றை நவீன ஆய்வுகள் ஒப்புக் கொள்ளுகின்றன.

3.கம்பு:

கோடைகாலங்களில் நகரத்துத் தெருக்கள்தோறும் முளைத்திருக்கும் தள்ளுவண்டிகளில் தவறாது இடம்பெறுவது கம்பங்கூழ்.உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்று நாம் நினைத்தாலும் உண்மையில் கம்பு சூட்டைத் தரக்கூடியது.கரப்பான் பண்டமான இதனுடன் நாம் சேர்க்கும் வெங்காயம்,மோர் இவைகளே அதனை குளிச்சியுடையதாக மாற்றுகின்றன.கம்பினை வழக்கமாகப் பெண்கள் உட்கொண்டுவர பித்தப்பைக்கல் உருவாவதிலிருந்து தப்பிக்கலாம்.இதிலுள்ள மக்னீசியம்,இரத்தக்கொதிப்பைக் குறைத்து மாரடைப்பை தடுக்கின்றது.மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் கம்பு முக்கியப் பங்காற்றுகிறது.குழந்தைகளின் இரைப்பு நோயினையும் குணப்படுத்துகின்றது.

4.வரகு:

கரப்பான் பண்டமாக சித்த மருத்துவம் இதனை விலக்கி வைத்துள்ளது.ஆயினும் உண்ணத் தகுதியானவர்கள் உண்ணும் முறைப்படி அளவுடன் உண்டுவரலாம்.வரகரிசியைப் பாலில் சமைத்து தேன் சேர்த்து உண்டதாக புறநானூறு(புறம்-34) குறிப்பிடுகின்றது.இதன் காரணமாக வரகின் தீக்குணங்கள் மாற வாய்ப்புண்டு எனக் கருதலாம்.இவ்விதமே அழலை அதிகப்படுத்தும் தானியங்களுடன் பால் அல்லது நெய் சேர்த்து சமைக்க/சமைத்த உணவில் நெய் சேர்த்துக் கொள்ள அழல் பெருக்கால் உண்டாகும் துன்பங்கள் நெருங்கா.

5.கேழ்வரகு:
கேப்பை,கேவுரு,ஆரியம் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்படும்.இதனை,மேல்தட்டு மக்கள் ‘ராகி’ என வழங்குகின்றனர்.’பஞ்சந்தாங்கி’ என்ற மற்றுமொரு பெயரே,இது எழைகளின் உணவென சொல்லாமல் சொல்லும்.பசியை மட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு.
4000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்பட்டு வரும் இதில்,மற்ற தானியங்களை விட அதிக அளவு புரதம் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன.இதனை உணவாகப் பயன்படுத்துவதால் இரத்தக்குழாய்கள் இசிவுத்தன்மையை இழப்பது(atherosclerosis) தடுக்கப்படுகின்றது.எலும்பு மற்றும் பற்களுக்கு வன்மை உண்டாகின்றது.அதிகப்படியான உடல் எடை குறைகின்றது.நீரிழிவு நோய் கட்டுப்படுகின்றது.

6.சாமை:

ஏழை மக்களின் உணவில் இதுவுமொன்று.இதனால் நீர்வேட்கை,சுரம்,மேகம்,வளிநோய்கள் போமென்றும்,உடல் பெருக்குமென்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.

7.தினை:

குறிஞ்சி நில உணவான இது அழலை அதிகப்படுத்தி, ஐயத்தையும் வளியையும் நீக்கும்.இதனால் உடல் வன்மை பெறும்.இதன் கூழினை பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுக்கும் வழக்கமும் உண்டு.

8.குதிரைவாலி:

கோதுமையைவிட ஆறுமடங்கு சத்தான தானியம்.அதிக அளவிலான புரதத்தைக் கொண்டது.

9.காடைகண்ணி:

காடையின் கண்ணைப் போன்றதொரு தானியம்.இதுவும் பிற தானியங்களைபோலவே உடலுக்கு ஊட்டத்தை அளிக்கக்கூடியது.
நவதானிய உணவுகளை ஒருவேளையாவது நாள்தோறும் உட்கொண்டுவர நோயின்றி நெடுநாள் வாழலாம்.

உலகத் தமிழ் மருத்துவக் கழக வெளியீடான கற்ப அவிழ்தம் சித்த மருத்துவ மாத இதழில் வெளியான கட்டுரை .

கட்டுரையாளர்-
மரு.வ.செந்தில்குமார் M.D(S).,

#மீள்

திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!படம்:பாவநாசம் திருக்கோவில் தெப்பக்குளம் உலகத் தமிழ் மருத்துவக் கழகம் சார்பில் வி...
26/11/2023

திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

படம்:பாவநாசம் திருக்கோவில் தெப்பக்குளம்
உலகத் தமிழ் மருத்துவக் கழகம் சார்பில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

ஆசீவக ஆய்வாளர், தமிழ் மெய்யியல் மீட்பர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவைப் போற்றுவோம்!
04/11/2023

ஆசீவக ஆய்வாளர், தமிழ் மெய்யியல் மீட்பர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவைப் போற்றுவோம்!

காந்தி கிராமம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் சிறந்த சமூக மருத்துவருக்கான , டாக்டர் தெரியன் விருது, நடப்பு ஆண்டு உலகத் ...
14/10/2023

காந்தி கிராமம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் சிறந்த சமூக மருத்துவருக்கான , டாக்டர் தெரியன் விருது, நடப்பு ஆண்டு உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் நிறுவனர் தலைவர் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு B.S.M.S., அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Address

Papanasam
627425

Alerts

Be the first to know and let us send you an email when Ulaga Tamil Maruthuva Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ulaga Tamil Maruthuva Kazhagam:

Share