15/03/2026
இலவச கண் சிகிச்சை முகாம்
150க்கு மேற்பட்டோர் பயன்.
பந்தலூர் அருகே காரக்கொல்லி சர்ச் மண்டபத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
25 பேர் கண் புரை அறுவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
உலக நுகர்வோர் தினம் மற்றும் உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு காரக்கொல்லி சென் மேரிஸ் சர்ச் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கர்மேல் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், காரக்கொல்லி சென் மேரிஸ் சர்ச், பந்தலூர் தாலுக்கா மாற்றுதிறனாளி நலச்சங்கம் ஆகியன இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பந்தலூர் தாலுக்கா மாற்று திறனாளி நலச்சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். காரக்கொல்லி சர்ச் நிர்வாகிகள் ஜோஸ், ஷிஜி முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், சென் மேரிஸ் ஜாக்கோபைட் சர்ச் பாதிரியார் சான் ஜேக்கப், கர்மேல் ஷாலோம் டிரஸ்ட் நிர்வாகி தனராஜ் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
உதகை அரசு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ குழுவினர் மருத்துவ அலுவலர்கள் அம்பிகா, தாவா மற்றும் ஜெப்ரின் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர்
இந்த முகாமில் பங்கேற்ற 150 க்கும் மேற்பட்டோருக்கு கண் சம்பந்தமான குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்தனர்.
முகாமில் கிட்ட பார்வை, தூர பார்வை, கண்ணில் ஏற்படும் இதர பிரச்சனைகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் 25 பேர் கண் புரை பாதிப்பு, 8 பேருக்கு கண் சதை வளர்ச்சி பாதிப்புகள் கண்டறியப்பட்டது.
23 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யபட்டு, உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லபட்டனர்.
முகாமில் நுகர்வோர் மைய நிர்வாகிகள், மாற்று திறனாளி நலச்சங்க நிர்வாகிகள், சர்ச் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.