22/10/2025
செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம் , தாயகத்தில் ஊதிய பிரச்சினை இது கேட்டு பழகி போன விஷயம்,அயலகத்திலும் ஊதிய பிரச்சினை இது புதிய பரிணாமம்.
மாலத்தீவு நாட்டில் செவிலியராக பணிபுரிய தாயகத்தில் குறைந்தபட்சமாக 2 வருடங்கள் பெரு மருத்துவமனைகளில் பணிபுரிந்த சான்றிதழோடு, ஆங்கில போட்டி தேர்வையும் முடித்து(IELTS/OET) , இந்த நாட்டு செவிலியர் குழுமத்தின் தேர்வையும் 6 மாதத்திற்குள்ளாக கட்டாயமாக முடித்து அங்கீகரிக்கப்பட்ட செவிலியராவது ஒரு பெரும் போராட்டம் அது இருகட்டும் ஒருபுறம் ,ஏஜென்சி செலவு மறுபக்கம் பல இலட்சங்கள் இவ்வளவு போராடி இங்கு வந்தால் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் சிக்கல். ஆம் இங்கு ஊதியம் மாலத்தீவு நாட்டு ருப்பியாவில் தான் கிடைக்கும் (Except Resorts) அது 1USD = 15.42 என்ற விகிதத்தில் கிடைக்கும். கிட்டத்தட்ட ₹125000 ஊதியம் ஒரு செவிலியர் பெறுவார், முன்பெல்லாம் மாலத்தீவு SBI வங்கி மூலம் 500 USD அனுப்பலாபம் ( அவசர தேவைகளுக்கு அதிகமாக அனுப்பலாம்) அது குறைக்கப்பட்டு 400 USD அதாவது இந்திய ரூபாய் ₹33000 அனுப்பலாம் என்றானது ,இப்போது 150 USD அதாவது ₹13000 தான் அனுப்ப இயலும் சட்ட பூர்வமாக, இந்த செயலால் பெரும்பான்மை மாலத்தீவு வாழ் இந்தியர்கள் சட்ட விரோத பணபரிவர்த்தனை (ஹவாலா) செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், இதில் பண இழப்பு சராசரியாக ஒரு செவிலியர் மாத ஊதியத்திலிருந்து சுமார் ₹ 30000 வரை தற்போதுள்ள சூழலில் இழக்க நேரிடுகிறது, இது போக பலர் ஹவாலாக்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
இதில் மாலத்தீவு மருத்துவமனை நிர்வாகங்கள் தாங்கள் கூறிய ஊதியத்தை சரியாக வழங்குகிறது, நிர்வாகங்களை துளிகூட குறை கூற இயலாது . அரசு மற்றும் நாட்டின் பணவிக்கத்தால் இத்தகைய நிலைமை என்பது நாமறிந்த தகவல்.
கடின உழைப்பை மாதந்தோறும் தோராயமாக ₹ 30000 வரை ஹவாலாக்களுக்கு கப்பம் கட்டுவதுதான் வேதனை.
யாரை குறை கூறுவது என தெரியவில்லை நிலைமை எப்போது சரியாகும் என தெரியவில்லை, சரியாகும் என நம்பவும் இயலவில்லை (coz year by year economically country is going down and down)
இந்திய அரசு தலையிட்டால் சில சமயம் புது வழி பிறக்கலாம்.
இதை பார்கும் போது வளைகுடா நாடுகளுக்கு செல்வது தான் ஞானம் என தோன்றுகிறது.