தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்

  • Home
  • India
  • Namakkal
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம் இது நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு

26/08/2025
*வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்!*இன்று 19/08/2025 செவ்வாய்கிழமை மதியம் 3 மணியளவில்...
20/08/2025

*வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்!*

இன்று 19/08/2025 செவ்வாய்கிழமை மதியம் 3 மணியளவில் நாமக்கல், திருச்சி சாலையில் உள்ள கிரீன்ஸ் பார்டி ஹாலில் நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நாமக்கல் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரசோதனை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை தாங்கினார்.

நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கத்தின் கெளரவ தலைவர்கள் பத்ரிநாராயணன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினர்.

முகாமில் கலந்துகொண்ட வணிகவரித் துறை உதவி ஆணையர் யாதவன் அவர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதால் உண்டாகும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.

முகாமில் திரளாக கலந்துகொண்ட வணிகர்கள் தங்களை வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

மேலும் நாமக்கல் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் பரசோதனை முகாமில் ஏராளமான வணிகர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சங்கத்தின் செயலாளர் சிராஜூதீன் நன்றி கூறினார்.

*நாமக்கல் நகை வியாபாரிகள் சங்கத்தின் மாபெரும் வெற்றி!* சேலம் AVR ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் (ஜூலை 25,26,27) நகை...
26/07/2025

*நாமக்கல் நகை வியாபாரிகள் சங்கத்தின் மாபெரும் வெற்றி!*

சேலம் AVR ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் (ஜூலை 25,26,27) நகை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கு மிக உறுதுணையாக இருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு.ஜெயக்குமார் வெள்ளையன் அவர்களுக்கு நன்றி!

நேரம் பார்க்காமல் அலுவலர்கள் சந்திப்பதற்கும், தீர்வு கிடைப்பதற்கும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து நமது உடன் பயணித்த கௌரவத் தலைவர் ஐயா திரு. D.சிவஞானம் அவர்கள், நமது சங்கத் தலைவர் திரு.எஸ்.பி.கருமலை அவர்கள், மணியன் ஜுவல்லரி திரு.DSM சுரேஷ் அவர்கள், தங்க மாளிகை திரு.செந்தில் அவர்கள், துணைத் தலைவர் திரு.பாலாஜி அவர்கள், பொருளாளர் திரு.கிரிராஜா அவர்கள், செயலாளர் திரு.சிவசிதம்பரம் அவர்கள் மற்றும் ஒத்துழைப்பு அளித்த அனைத்து நகை கடை உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இவண்,
#நாமக்கல் #நகர #நகை #வியாபாரிகள் #சங்கம்

‘இந்தியாவின் வளர்ச்சியில் நாமக்கல்’ என்கிற தலைப்பில் நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில் இன்று நடைபெற்ற  கருத்தரங்கில் சி...
19/07/2025

‘இந்தியாவின் வளர்ச்சியில் நாமக்கல்’ என்கிற தலைப்பில் நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திரு.அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சந்தித்து பேசினார்.

https://tamilnewsbeat.com/2024/09/2393/
07/09/2024

https://tamilnewsbeat.com/2024/09/2393/

நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மோகனூரில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.நேச்சுரல் ஃபைபர் யூனிட்...

Address

Kumar Illam, 27, Paramathi Road
Namakkal
637001

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்:

Share