10/09/2025
#கன்னியாகுமரி_மாவட்டத்தில்தலைவர் #மார்சல்_நேசமணி_அவர்களுடைய #பெயரில்_முதுகலை_ஆராய்ச்சி #படிப்பிற்கான_பல்கலைக்கழகம் அமைப்பதற்கு வேண்டி பல கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தித்தாள் மூலம் தெரிய வருகிறது கன்னியாகுமரியின் தந்தை என்றழைக்கப்படும் #மார்சல்நேசமணி அவர்கள் பிறந்த ஊரான விளங்கோடு தாலுகா, நட்டாலம் கிராமம்- A, அருகே அரசுக்கு சொந்தமான பழைய புல எண் 5694/1, புதிய சர்வே எண் 408/1 – 2.11 ஏக்கர் அரசு நிலமானது. இங்குள்ள குவாரி மாஃபியாக்களால் அரசு அதிகாரிகளின் உதவியுடன் பட்டா மாற்றி அரசு நிலத்தை தனியார் நிலமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் விளங்கோடு வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல்கள் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் இந்நாள் வரை எடுக்கப்படவில்லை.
இவர்கள் 2006-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை 9.42 ஏக்கர் நில பரப்பளவு மற்றும் அரசு அனுமதி பெற்றுவிட்டு 11.20 ஏக்கர் நிலம் எந்த ஒரு அனுமதியும் இன்றி கனிம வளங்கள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு நேர்மையான முறையில் இந்த கல்குவாரி பகுதியை ஆய்வு செய்தால் சுமார் 100 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் அளவுக்கதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
ஆகவே இந்த அபராத தொகைக்கு பதிலாக கல்குவாரி உரிமையாளர்களின் பட்டா நிலங்களை அரசு தன்னகப்படுத்திக் கொண்டால் சுமார் 25 ஏக்கர் நிலம் அங்கு கிடைக்கும் இந்த நற்சூழலை பயன்படுத்தி.
எங்கள் மண்ணின் மைந்தர் கன்னியாகுமரியின் தந்தை மார்சல், நேசமணி அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து. நட்டாலம் மண்ணின் பெயருக்கு பெருமை சேர்க்க அரசு உதவ வேண்டும். இதன் மூலம் இந்த குவாரியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளின் நலன் பாதுகாப்பதுடன். இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் என்பது எங்கள் ஊர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்றது