12/05/2026
#மாலிக்தீனார்_மத்ரஸாவின் 11-ம் ஆண்டு நிறைவு, கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்குதல் ஆகிய ஒருங்கிணைந்த நிகழ்ச்சி இன்று (2-05-2026, செவ்வாய் கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு மாலிக்தீனார் மஸ்ஜித் புதிய தொழுகை கட்டுமானப் பகுதியில் வைத்து ஜமாஅத் தலைவர் ஜனாப்.S.சுகார்னோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாலிக்தீனார் பைத்துல்மால் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மாலிக்தீனார் மத்ரஸா ஆசிரியர்கள் ஆலிமா ஃபர்ஹானா சித்தீக்கிய்யா, ஆலிமா நூருல் ஐன் சித்தீக்கிய்யா, ஆலிமா மஸ்தூரா அஷ்ரஃபிய்யா, ஆலிமா ஜெஸீலா அஷ்ரஃபிய்யா, ஆலிமா சுமைய்யா சித்தீக்கிய்யா, ஆலிமா ஹசீனா அஷ்ரஃபிய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மாலிக்தீனார் மஸ்ஜித் துணை இமாம் மவ்லவி. ஜனாப். A.R. முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் இறைமறை ஓதி துவக்கி வைத்தார். ஜமாஅத்தின் செயலாளர் ஜனாப்.M.A.முஹம்மது பைசல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாலிக்தீனார் மஸ்ஜித் தலைமை இமாமும், மாலிக்தீனார் மத்ரஸாவின் முதல்வருமாகிய மவ்லவி.M.முஹம்மது ரஃபீக் ஃபிர்தெளசி M.A. M.Phil. அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தினார். துணை முதல்வர் ஆலிமா.சு வைனா ஃபாரிஸா சித்தீக்கியா அவர்கள் மதரஸாவின் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆண்டறிக்கையை சமப்பித்தார்.
மாலிக்தீனார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஜனாபா. A. பர்வின் ஜெய்னுஃப் ஜெசீமா, மேலாளர் மவ்லவி. M.A.ரஃபீக் அஹமத் ஃபிர்தெளசி M.A. M.Phil, பிரிட்டிஷ் இங்கிலீஷ் ஸ்கூல் தாளாளரும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளருமாகிய ஜனாப். N.M.S.மலுக் முஹம்மது, திருவிதாங்கோடு முஸ்லிம் கலை கல்லூரியின் தாளாளர் ஜனாப். Lion. H. முஹம்மது அலி, பேராசிரியர் மவ்லவி. மிஸ்பாஹ் நத்வி, ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜனாப். A.S.செய்யது ரஹீம், ஒய்வு பெற்ற சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஜனாப். Y.அப்துல் நாசர், மாலிக்தீனார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் அரபி ஆசிரியர்கள் மவ்லவி. முஹம்மது கோதரி ஃபிர்தெளசி, மவ்லவி. அமீனுல்லாஹ் ஃபிர்தெளசி ஆகியோர் மாலிக்தீனார் மத்ரஸாவின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்பான முறையில் மார்க்க கல்வியை பயின்று சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தியும் வாழ்த்துரை வழங்கினர்.
மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாம் அமர்வில், சவூதி அரேபியா ரியாத் இஸ்லாமிய தாஃவா மர்கஸில் பணிபுரியும் இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி. ஜனாப். M.M. நூஹ் அல்தாஃபி அவர்கள் “தீன் குல பெண்கள் அன்றும் இன்றும்” என்கிற தலைப்பிலும், காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி. ஜனாப். நூஹ் மஹ்லரி அவர்கள் மத்ரஸா கல்வியின் மகத்துவம் என்கிற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியின் முக்கியத்துவமாக மூன்று வருட இஸ்லாமிய கல்வியை வெற்றிகரமாக முடித்த மாணவிகள் ஜனாபா. M.B.அர்ஸிதா, த/பெ. ஜனாப். M.முஹைதீன் புகாரி, ஜனாபா. A.ஆனிகா நவ்ரா, த/பெ. ஜனாப். M.அப்துல் நசீர், ஜனாபா. J.S.அஃப்னான், த/பெ. ஜனாப். P. ஜஹபர் சாதிக் ஆகியோருக்கு “Diploma in Islamic Studies” சான்றிதழ்களும், கோடைகால பயிற்சியை சிறப்பான முறையில் நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலிக்தீனார் மத்ரஸாவில் பயிலும் மாணவ, மாணவியரின் மார்க்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாலிக்தீனார் பைத்துல்மால் ஜமாஅத்தின் பொருளாளர் ஜனாப்.M.முஹம்மது ராபி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.