14/02/2023
இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த அய்யா டாக்டர் பத்ம ஶ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார்–உலக அரங்கில் இந்தியாவின் மற்றும் நாடார்களின் பெருமையை உயர்த்தியவர் அய்யா டாக்டர் பத்ம ஶ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார். இவர் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தன். அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவராகவும் பணியாற்றியவர்
மேலும் தமிழ்நாட்டில், ஏராளமான கோவில் திருப்பணிகளையும் அய்யா டாக்டர் பத்ம ஶ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார் மற்றும் இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இத்தனையும் சிறப்பிக்கும் வகையில் தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை முன்னால் தலைவர் அமரர் திரு A.ராமராஜா நாடார் அவர்களின் முயற்சியில் அய்யா டாக்டர் பத்ம ஶ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் மும்பை சாயின் தாராவி பந்திரா இணைப்பு சாலையின் சதுக்கம் அமைக்கப்பட்டது. பிறகு சாலை விரிவாக்கம் பணியின் காரணமாக அந்த சதுக்கம் மும்பை மாநகராட்சியால் எடுக்கப்பட்டது.
அதன் பின் தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை, நிர்வாக குழு உறுப்பினர் W. ஜெயக்குமார் ஜேக்கப் நாடார், தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை தலைவர் M.S. காசிலிங்கம் நாடார், தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை செயலாளர் W.மைக்கிள் நாடார் அவர்களின் வழிகாட்டலில்,தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை, நிர்வாக குழு உறுப்பினர் திரு.கோபால் ராஜா நாடார், தற்போதை தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை, நிர்வாக குழு உறுப்பினர் மணிகண்டன் நாடார், தமிழ் நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், மராட்டிய மாநிலம் தலைவர் திரு.ராசல் நாடார், தமிழ் நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், துணை தலைவர் மற்றும் காமராஜர் பவுண்டேஷன் பெருளாளர் K.வடிவேல் நாடார், செயலாளர், தமிழ் நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் தெட்ஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை, நிர்வாக குழு உறுப்பினர் திரு.ராஜா குமார் நாடார் , தமிழ் நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்,நிர்வாக குழு உறுப்பினர் திரு.சைமன் நாடார்,சிவன் பாண்டியன் நாடார், திரு.பொன்னு நாடார், கதிர் நாடார் மற்றும் பாஸ்கர் செட்டி, இவர்கள் அனைவரும் முன்னால் கல்வி மந்திரி திருமதி வர்ஷா கைக்வார்டு அவர்களிடம் முறையிட்டு அவர்களின் எம்.எல்.ஏ நிதியில் இருந்து புதிய வாடிவில் அய்யாவின் சதுக்கம் புதிதாக அமைக்கப்பட்டும் என்று உறுதி அளித்தார். தற்போது அந்த சதுக்கதின் வேலை சிறப்பாக தமிழ் நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், மராட்டிய மாநிலம் நிர்வாக குழு உறுப்பினர் திரு.சைமன் நாடார் முன்னிலையில் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
உங்கள்
வழக்கறிஞர்
வெங்கடேசன் செல்வராஜ்
தலைவர், அறத்தின் மைந்தன் சிவந்தி ஆதித்தனார் பவுண்டேஷன்