Al Amanath Welfare Association

Al Amanath Welfare Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Amanath Welfare Association, Community Organization, Melapalayam.

"       "மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாகச் செயற்பட்டு வரும் Al Amanath English Academy...
03/01/2026

" "

மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாகச் செயற்பட்டு வரும் Al Amanath English Academy - ன் 20வது "Eloquent Speaker Awards - 2025 விழா" கடந்த 30.12.2025 செவ்வாய்க்கிழமை அன்று மேலப்பாளையம் நபி நகரில் உள்ள அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

இறைமறை வசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. Al Amanath English Academy-யின் Language Trainer "S.M.காஜா முகைதீன்" English Khaja அவர்கள் தலைமை தாங்கினார். "ஆங்கிலப் புலமையை வளர்ப்பதில் நவீன தொழிற்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்து தலைமையுரை ஆற்றினார்.

அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர், "பொறியாளர். N.M.மஜீத்" அவர்களும், சென்னை புதுக் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவரும் அல்-அமானத் இங்கிலீஷ் அகாடமியின் ஆலோசகருமான "டாக்டர். M.S.A. ஜபருல்லாஹ் கான்" அவர்களும் முன்னிலை வகித்தனர்.

மஜீத் சார் அவர்கள் குட்டி கதை மூலம் தன்னம்பிக்கையூட்டும் சிற்றுரை வழங்க, சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை ஜபருல்லாஹ் சார் வழங்கினார். சென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியர்கள் FEED ASSOCIATION FOR EDUCATION AND EMPOWERMENT என்ற அமைப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊர்களில் கல்வி சேவைகள் செய்யும் தன்னார்வ அமைப்புகளை கண்டறிந்து அவர்களின் சேவைகளுக்கு மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வரு‌கி‌ன்றன‌ர். அவர்களின் முதலாம் ஆண்டு விருது நமது Amanath English Academy க்கு தான் வழங்கப்பட்டது என்பதை ஜபருல்லாஹ் சார் அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

சென்னை புதுக் கல்லூரியின் student affairs Dean மற்றும் உதவிப் பேராசிரியருமான Dr. M. அன்சார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் (Chief Guest) கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அல் அமானத்தின் சேவையை வெகுவாக பாராட்டியதுட‌ன் இது போன்ற சேவைகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார். நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறும் எளிய வழிமுறையினை உதாரணத்துடன் விளக்கி ஊக்கப்படுத்தினார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையினை கண்டு வியந்து பாராட்டியதுடன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாணவரின் புலமையை பாராட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடையை அந்த மாணவனுக்கு அணிவித்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியாக அமைந்தது.

மாணவர்களின் சமயோசித அறிவை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்திருந்த Instant Topics Session ல் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் சிறப்பு விருந்தினர் கொடுத்த தலைப்பில் எவ்வித முன்தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசி அசத்தினர். மாணவர்களின் திறமையைக் கண்டு சிறப்பு விருந்தினர் வெகுவாக வியந்து பாராட்டினார்.

அதில் Junior பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவி "A. Mydheen Sunaitha" அவர்களுக்கு Eloquent Speaker Award ம், Senior பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவர் "R. Mohamed Uvaise" அவர்களுக்கு Proficient Speaker Award ம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சி முடித்த மாணவ‌ மாணவிகளு‌க்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நமது Academy-யில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் Software Developer ஆக பணிபுரியும் E. விக்னேஷ், Associate Consultant ஆக பணிபுரியும் M. சதிஷ்குமார் ஆகிய முன்னாள் மாணாக்கர்கள் Guests of Alumini-யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்தும் குறித்தும், Al Amanath English Academy யில் பயிற்சி பெற்றது தங்கள் நேர்முகத் தேர்வுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது என்ற தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Readers Academy ல் Reading பயிற்சி முடித்த குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அல்-அமானத் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அல்- அமானத் வெல்ஃபர் அசோசியேசன் நிர்வாகியும், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவிப் பேராசிரியருமான சகோ. V.P. அசன் நாகூர் மீரான் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.

நிறைவாக நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புகழனைத்தும் இறைவனுக்கே!

வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ளவும்...
24/12/2025

வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ளவும்...

"       "மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த கடந்த 11 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது Al Amanath English Ac...
09/09/2025

" "

மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த கடந்த 11 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது Al Amanath English Academy. அதன் 19வது "Eloquent Speaker Awards - 2025 விழா" கடந்த 06.09.2025 சனிக்கிழமை அன்று மேலப்பாளையம் நபி நகரில் உள்ள அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

இறைமறை வசனத்துடன் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. Al Amanath English Academy-யின் Language Trainer "S.M.காஜா முகைதீன்" English Khaja அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை புதுக் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவரும், அல்-அமானத் இங்கிலீஷ் அகாடமியின் ஆலோசகருமான "டாக்டர். M.S.A. ஜபருல்லாஹ் கான்" அவர்களும், அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர், "பொறியாளர். N.M.மஜீத்" அவர்களும் முன்னிலை வகித்தனர்.

முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் ஜனாப். L. K. S. முஹம்மது மீரான் முகைதீன் Lks Meeran Mohideen அவர்கள் சிறப்பு விருந்தினராகக் (Chief Guest) கலந்து கலந்து கொண்டு, வரலாற்றில் இடம்பிடித்த பிரபலங்களின் ஆங்கிலப் புலமையினையும், அதனை அவர்கள் எவ்வாறு மெருகேற்றிக் கொண்டனர் என்பதையு‌ம் மேற்கோள்காட்டி பேசியது மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது.

நமது Academy-யில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் மாணாக்கர்களான சிராஜுல் இஸ்லாம் பெண்கள் கல்லூரி தாளாளர் அஃப்ழலுல் உலமா. M. மைதீன் ஃபாத்திமா அவர்களும், லிட்டில் ஃபிளவர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் A. முஹம்மது காஜா முகைதீன் அவர்களும் Guests of Alumini-யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்தும் குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்களின் சமயோசித அறிவை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்திருந்த Instant Topics Session ல் 12 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் சிறப்பு விருந்தினர் கொடுத்த தலைப்பில் எவ்வித முன்தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசி அசத்தினர். மாணவர்களின் திறமையைக் கண்டு சிறப்பு விருந்தினர் வெகுவாக வியந்து பாராட்டினார்.

அதில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவி "A. NISMA" அவர்களுக்கு "Eloquent Speaker Award - 2025" வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சி முடித்த 49 மாணவ‌ மாணவிகளு‌க்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Readers Academy ல் Reading பயிற்சி முடித்த குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அல்-அமானத் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அல்- அமானத் இங்கிலீஷ் அகாடமி ஒருங்கிணைப்பாளரும், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவிப் பேராசிரியருமான சகோ. V.P. அசன் நாகூர் மீரான் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.

நிறைவாக நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புகழனைத்தும் இறைவனுக்கே!

Al-Amanath English Academy - ல் பயிற்சி வகுப்புகள் கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாகவே நடத்தப்படுகின்றன. ஆர்வமுள்ள இளையவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

English Khaja
06/09/2025

English Khaja

04/09/2025
ஆர்வமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Melapalayam Office...
02/09/2025

ஆர்வமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Melapalayam Officers Academy முயற்சிக்கு பாராட்டுகளும்...👏👏 வாழ்த்துகளும்... 💐💐

28/05/2025

*தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின்* சார்பாக,
ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் *ரூபாய் 2கோடி மதிப்பீட்டில்* *கல்வி உதவித்தொகை திட்டம்.*

விண்ணப்பிக்க:
https://forms.gle/rRgpGtXa8RD6ndgXA

(அல்லது)

"கல்வி உதவி தொகை திட்டம்"
வக்ஃபு வாரிய தலைமை அலுவலம்.
எண் 1, ஜாஃபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600001.

என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதாரத் தடையால் கல்வியை தொடர முடியாத தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.

"       "மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையை Al Amanath English Academy செய்து...
14/05/2025

" "

மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையை Al Amanath English Academy செய்து வருகிறது. அதன் 18வது "Eloquent Speaker Awards - 2025 விழா" கடந்த 28.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று மேலப்பாளையம் நபி நகரில் உள்ள அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

இறைமறை வசனத்துடன் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. Al Amanath English Academy-யின் Language Trainer "S.M.காஜா முகைதீன்" அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். சென்னை புதுக் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவரும், அல்-அமானத் இங்கிலீஷ் அகாடமியின் ஆலோசகருமான "டாக்டர். M.S.A. ஜபருல்லாஹ் கான்" அவர்களும், அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர், "பொறியாளர். N.M.மஜீத்" அவர்களும் முன்னிலை வகித்தனர்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் துணை முதல்வர் Dr. S. M. A. செய்யது முஹம்மது காஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் (Chief Guest) கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான நல்ல பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து ஊக்கப்படுத்தினர்.

நமது Academy-யில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் செய்யது முகைதீன் சாகிப் பள்ளிவாசல் இமாம் மெளலவி அல்-ஹாபிழ் A. முஹம்மது இஸ்மாயில் யூசுஃபி அவர்களும், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் Dr. S. K. முஹம்மது சுபைர் அவர்களும் Guests of Alumini-யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்தும் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வேலைக்கான நேர்முகத்தேர்வு சூழலை உருவகப்படுத்தும் வகையில் நாடகம் ஒன்றை முன்தயாரிப்பின்றி உடனடியாக நிகழ்த்திக் காட்டிய மாணவ மாணவிகள் விருந்தினர்களின் பாராட்டுகளை பெற்றனர். பிள்ளைகள் அதிகம் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டியது தாயாருக்கா? தந்தைக்கா? என்ற தலைப்பில் மாணவிகள் செய்த விவாதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மாணவர்களின் சமயோசித அறிவை வெளிக்கொணரும் வகையில் Instant Topics Session - களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் நடப்பு கல்வி ஆண்டில் ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் இளநிலை பிரிவிலும், முன்னாள் மாணவர்கள் முதுநிலை பிரிவிலும் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் சிறப்பு விருந்தினர்கள் கொடுத்த தலைப்புகளில் எவ்வித முன்தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசி அசத்தினர்.

அதில் இளநிலை பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவி "ஃபரீஹா ஃபாத்திமா" அவர்களுக்கு "Eloquent Speaker Award - 2025" ம், முதுநிலை பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவர் "யாசிர்" அவர்களுக்கு "Proficient Speaker Award" ம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சி முடித்த 21 மாணவ‌ மாணவிகளு‌க்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நமது Academy - யின் Language Trainer English Khaja காஜா சார் அவர்களுக்கு மாணவர்கள் சார்பில் பாராட்டுக் கேடயம் வழங்கி கெளரவித்தனர். இது மிகவும் நெகிழ்ச்சியூட்டும் தருணமாக அமைந்திருந்தது.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அல்-அமானத் சார்பில் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நமது நிகழ்ச்சி குறித்து தகவலறிந்த சதக்கதுல்லா அப்பா கல்லூரியின் கணிதத் துறை உதவிப் பேராசிரியர் Dr. N. முஹம்மது ரி‌ல்வான் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்தது.

இந்நிகழ்ச்சியில் அல்- அமானத் வெல்ஃபேர் அசோசியேசன் உறுப்பினர்கள் அஹ‌ம‌து கனி, அபுல் ஹசன், கபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அல்- அமானத் இங்கிலீஷ் அகாடமி ஒருங்கிணைப்பாளரும், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவிப் பேராசிரியருமான சகோ. V.P. அசன் நாகூர் மீரான் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.

புகழனைத்தும் இறைவனுக்கே!

நிறைவாக நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Ahamed Kabeer V P
Mohamed Mydeen

Address

Melapalayam
627005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amanath Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share