Sivapuram Veda Sivagama Patasalai

Sivapuram Veda Sivagama Patasalai An organization dedicated to the study of spirituality, Agamas and Vedas
(1)

சென்னை மாங்காடு ஶ்ரீகாமாட்சியம்பாள் ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ. மணிகுருக்கள் ஶ்ரீமதி உமா தம்பதிகளின் செல்வக்குமாரத்தி சௌபாக்க...
17/06/2026

சென்னை மாங்காடு ஶ்ரீகாமாட்சியம்பாள் ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ. மணிகுருக்கள் ஶ்ரீமதி உமா தம்பதிகளின் செல்வக்குமாரத்தி சௌபாக்கியவதீ. துர்க்கா@காமாட்சிக்கும் சிறுவாபுரி ஶ்ரீமுருகன ஆலயம் சிவஶ்ரீ. ஶ்ரீராம்குருக்கள் சௌ. விசாலாட்சி தம்பதிகளின் செல்வக்குமாரன் சிரஞ்சீவி. விஜய்@ விஸ்வபதி சர்மாவிற்கும் விவாஹசுபமுகூர்த்தம் சென்னை மாங்காடு கல்யாணி திருமண மண்டபத்தில் இனிது நிகழ்ந்தது. மாங்காடு ரவி சிவாசாரியார், முடிச்சூர் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சிவஶ்ரீ. ஷண்முகம் சிவாச்சாரியார் திருவான்மியூர் கணேச சிவாச்சாரியார் உள்ளிட்ட ஆதிசைவ சிவாச்சாரியார்கள் குலப்ரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் மாங்காடு ஶ்ரீகாமாட்சியம்மனை தரிசித்து புதுமணத்தம்பதிகளுக்கு ஶ்ரீமஹாஸதாசிவப்ரசாதம் வழங்கி ஆசீர்வதித்தார்கள். உடன் லண்டன் ஈலிங் ஶ்ரீகனகதுர்ககையம்மன் ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ வேலூர் பாலா உள்ளிட்ட சென்னைப்பகுதி சிவபுரம் குருகுலத்துச்சீடர்கள் கலந்து கொண்டனர்.

மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமம் ஶ்ரீமுத்தையாசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனிமாதம் 21 ...
14/06/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமம் ஶ்ரீமுத்தையாசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனிமாதம் 21 ந்தேதி (05.07.2026) ஞாயிற்றுக்கிழமை காலை ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் தலைமையில் சிறப்புற நிகழவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. திருக்கோயில் திருப்பணிகள் உத்தமபட்ச யாகசாலை கட்டுமானப்பணிகள் பார்வையிடப்பட்டன. பஞ்சவடீ ஆஞ்சநேய சுவாமி கோயில் தலைவர் ஶ்ரீமான் கோதண்டராமன் ஶ்ரீமான் ராதாகிருஷ்ணன் ஆலய பரம்பரை அறங்காவலர்கள் திரு. கலைச்செல்வன் திரு. செல்வம் கடலூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி திரு. பார்த்திபன் மற்றும் எட்டுக்கிராமத்தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ. ருத்ரகுமாரகுருக்கள் சிவபுரம் பாடசாலை சிவஶ்ரீ செந்தில்நாத சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

13/06/2026

கோவை சிருங்கேரி ஶ்ரீசாரதாம்பாள் திருக்கோயிலில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் ஆற்றிய சைவசித்தாந்தப்பேருரை.

கோவை சிருங்கேரி ஶ்ரீசாரதாம்பாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற எண்மர் போற்றும் எண்குணத்தான் விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீஶ்ரீஶ...
12/06/2026

கோவை சிருங்கேரி ஶ்ரீசாரதாம்பாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற எண்மர் போற்றும் எண்குணத்தான் விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் குருவருளால் சிவதீட்சை என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார்கள். பேரூர் மருதமலை கோட்டை ஈஸ்வரன்கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் கொங்குதேச சிவபுரம் குருகுல சீடர்கள் ஆதிசைவ இளைஞர்கள் சிவனடியார்கள் பெருமளவில் கலந்துகொண்டு உரை கேட்டு மகிழ்ந்தனர்.

மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

எண்கண் ஶ்ரீசுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனிமாதம் 25 ந்தேதி (09.07.2026)வியாழக்கிழமை காலை நடைபெறவ...
11/06/2026

எண்கண் ஶ்ரீசுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனிமாதம் 25 ந்தேதி (09.07.2026)வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழை ஆலய அர்ச்சகர்கள் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்களுக்கு வழங்கி ஆசிபெற்றனர்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

 #குருவருளால்சிவதீட்சைகோவை ரேஸ்கோர்ஸ் சாலை சிருங்கேரி ஶ்ரீசாரதாம்பாள் கோயில் வளாகத்தில் வருகிற 12.06.2026 வெள்ளிக்கிழமைய...
10/06/2026

#குருவருளால்சிவதீட்சை

கோவை ரேஸ்கோர்ஸ் சாலை சிருங்கேரி ஶ்ரீசாரதாம்பாள் கோயில் வளாகத்தில் வருகிற 12.06.2026 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.30 மணியளவில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் குருவருளால் சிவதீட்சை எனும் தலைப்பில் அருளுரை நிகழ்த்துகிறார்கள். கொங்குதேச சீடர்கள் அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கேட்டுப்பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகக்குழுமம்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் ஜன்மநட்சத்திரவிழாவில் மகா...
08/06/2026

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் ஜன்மநட்சத்திரவிழாவில் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றிய அம்பலவாணர் கலம்பகம் நூல் வெளியிடப்பட்டது.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

திருச்சி BS.ராஜாமணி சிவாசாரியார் அவர்கள் செல்வக்குமாரர் சிவஶ்ரீ. BSR. சுந்தர்@சோமசுந்தரகுருக்கள் ஶ்ரீமதி ராதா @நாகலக்ஷ்ம...
04/06/2026

திருச்சி BS.ராஜாமணி சிவாசாரியார் அவர்கள் செல்வக்குமாரர் சிவஶ்ரீ. BSR. சுந்தர்@சோமசுந்தரகுருக்கள் ஶ்ரீமதி ராதா @நாகலக்ஷ்மி தம்பதிகள் ஷஷ்டியப்தபூர்த்தி வைபவம் திருச்சி உறையூர் ஶ்ரீவெக்காளியம்மன் கோவில் சமீபம் AMS மஹாலில் இனிது நிகழ்ந்தது. ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு ஶ்ரீமஹாசதாசிவப்ரசாதம வழங்கி ஆசீர்வதித்தார்கள்.
மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

 #தெப்பத்தேர்த்திருவிழா #திருஞானசம்பந்தர்  #குருபூஜைவிழா   திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயில...
02/06/2026

#தெப்பத்தேர்த்திருவிழா
#திருஞானசம்பந்தர் #குருபூஜைவிழா

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஶ்ரீஅபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத்திருவிழா நிறைவு நாளில் தெப்பத்தேரில் சுவாமி அம்பாளுடன் ஶ்ரீஞானசம்பந்தப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள். திருவாவடுதுறை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ குருமகாசன்னிதானம் அவர்கள் எழுந்தருளி ஆசிவழங்கினார்கள். நௌகோற்சவம் எனும் தெப்பத்தேரைப்பற்றியும் ஞானசம்பந்தர் மகிமைகளையும் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை

02/06/2026

ஶ்ரீமாயூரநாதர் தெப்பத்தேர் பவனி

Address

32, Sri Mayuranathar Koil Therku Veethi
Mayiladuthurai
609001

Alerts

Be the first to know and let us send you an email when Sivapuram Veda Sivagama Patasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sivapuram Veda Sivagama Patasalai:

Share