சிந்திக்க

சிந்திக்க DREAM INDIA இது ஒரு புதிய பாதை

 #தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சிதமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்த...
24/11/2025

#தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம். இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும்.

இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன.

ஊர் -

தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர், திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர்

குடி -

தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி

பட்டி -

கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி, உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி

கோவில் -

அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில்

பள்ளி -

திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி

கோட்டை -

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை

பட்டினம் -

நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம்

பாக்கம் -

கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம்

குளம் -

பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம், விளாத்திகுளம், சாத்தான்குளம், நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம்

பாளையம் -

ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம்

நல்லூர் -

திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர்

மலை -

திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை

குறிச்சி -

கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி

கிரி -

கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி

குன்றம் -

திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம், திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம்

பாறை -

மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை

காடு -

திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு, திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு

புரம் -

காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம், திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம்

புரி -

தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி

மங்கலம் -

சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம்

ஈஸ்வரம் -

ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், சோழீஸ்வரம், எமனேஸ்வரம், நித்தீஸ்வரம், சோமேஸ்வரம், அகத்தீஸ்வரம், திருக்கண்டீஸ்வரம்

துறை -

மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, ஆடுதுறை, கூடுதுறை, மாந்துறை, சிந்துபூந்துறை, அவல்பூந்துறை, செந்துறை, முண்டந்துறை

பாடி -

திருமழபாடி, தரங்கம்பாடி, வாணியம்பாடி, குறிஞ்சிப்பாடி, வியாசர்பாடி, திருமுனைப்பாடி, எடப்பாடி, வாழப்பாடி, கவுந்தப்பாடி, வேலப்பாடி

சேரி -

புதுச்சேரி, வேளச்சேரி, கொரடாச்சேரி, கூடுவாஞ்சேரி, மேச்சேரி, நல்லிச்சேரி, செம்மஞ்சேரி, திருமணஞ்சேரி

குப்பம் -

நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆற்காடு குப்பம், மேல்குப்பம், கீழக் குப்பம், திருமலைக்குப்பம், நெடுங்குப்பம், கோட்டைக்குப்பம், அரியாங்குப்பம், செட்டிக்குப்பம், ஆலங்குப்பம்

பேட்டை -

உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை, ராணிப்பேட்டை, பரங்கிப்பேட்டை, முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, விஷ்ணம்பேட்டை, கம்பரசம்பேட்டை, சோமரசம்பேட்டை புதுப்பேட்டை

பட்டு -

செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, பேர்ணாம்பட்டு, அத்திப்பட்டு, பள்ளிப்பட்டு, அரசம்பட்டு, மூங்கில்பட்டு

தோப்பு -

சிங்காரத் தோப்பு, கொண்டித்தோப்பு, நெல்லித்தோப்பு, புளியந்தோப்பு

சோலை -

பழமுதிர்ச்சோலை, மாஞ்சோலை, பூஞ்சோலை, திருமாலிருஞ்சோலை

வனம் -

திண்டிவனம், திருப்புவனம், கடம்பவனம், தில்லைவனம்

சமுத்திரம் -

அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், மல்லசமுத்திரம், நமனசமுத்திரம், பாலசமுத்திரம், திம்மசமுத்திரம், திருமலைசமுத்திரம், வேங்கடசமுத்திரம், இராவணசமுத்திரம்

ஆறு -

திருவையாறு, திருநள்ளாறு, அடையாறு, தெள்ளாறு, திருவட்டாறு, ஆழியாறு, மூணாறு

கரை -

நீலாங்கரை, கோடியக்கரை, ஊத்தங்கரை, அமைந்தகரை, திருவக்கரை, கும்பக்கரை, மதுக்கரை, கீழக்கரை

ஏரி -

நாங்குநேரி, வரகனேரி, பாகனேரி, வேப்பேரி, கடங்கனேரி, புத்தனேரி, மாறநேரி, பழமானேரி

ஊரணி -

பேராவூரணி, கருப்பாயி ஊரணி, கல்லூரணி

கேணி-

திருவல்லிக்கேணி, வெட்டுவான் கேணி

மடை -

பத்தமடை, காரமடை, மேலமடை, கடைமடை, பன்னீர்மடை

வலம்-

புலிவலம், வேட்டவலம்

வளவு -

மேல வளவு, கீழ வளவு

வலசு -

பெரிய வலசு, பாப்பா வலசு, சின்ன கவுண்டன் வலசு

தெரு -

தெற்குத் தெரு, புதுத்தெரு

கிராமம் -

சாலிகிராமம், புதுக் கிராமம்

கோணம் -

கும்பகோணம், அரக்கோணம்

பூண்டி -

பூண்டி, திருத்துறைப்பூண்டி, திருமுருகன்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கணியம்பூண்டி

பந்தல் -

மன்னம்பந்தல், தண்ணீர்ப்பந்தல்

கூடல் -

நான்மாடக்கூடல், முக்கூடல்

ஏந்தல் -

கொம்புக்காரனேந்தல், லாடனேந்தல், முத்தனேந்தல்

வாயில் -

திருமுல்லைவாயில், குடவாயில், காளவாசல், சித்தன்னவாசல்

நாடு -

வருசநாடு, கொரநாடு

கால் -

காரைக்கால், மணக்கால், தைக்கால்

கல் -

நாமக்கல், திண்டுக்கல், ஒகேனக்கல், பெருமுக்கல், நீலக்கல், பழமுக்கல்

சுழி -

திருச்சுழி, திருவலஞ்சுழி

மடம் -

ஆண்டிமடம், அக்காள்மடம், தங்கச்சிமடம்

சத்திரம் -

கனகம்மாசத்திரம், சுங்குவார்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சேதுபாவாசத்திரம், பாவூர்சத்திரம்

23/11/2025

காவல் நிலையத்தில் police station மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.

1. பொது நாட்குறிப்பு GD

2. முதல் தகவல் அறிக்கை தொகுப்பு FIR Intex

3. நிலைய குற்ற வரலாறு பாகம் - 1

4. குற்ற வரைபடம் பாகம் - 2

5. தண்டனை பதிவேடு பாகம் - 3

6. கிராம சரித்திர பதிவேடு பாகம் - 4

7. கெட்ட நடத்தைகாரர்களின் KD சரித்திரப் பதிவேடு பாகம் - 5

8. கெட்ட நடத்தைகாரர்களின் KD தணிக்கை பதிவேடு

9. பெயர் வரிசைப் பதிவேடு

10. குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு

11. முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு

12. விசாரணை படிவம் "அ"

13. விசாரணை படிவம் "ஆ"

14. குற்றத் தொகுப்பு

15. கைது அட்டை arrest cord

16. கைதி பரிசோதனை பதிவேடு PSR

17. பிணைப் பத்திரம் bail bond

18. கட்டளைப் பதிவேடு

19. கைவிரல் ரேகை பதிவுத்தாள்

20. சிறுவழக்கு பதிவேடு petty case register

21. சமுதாய பணிப் பதிவேடு CSR

22. மருத்துவமனை குறிப்பாணை

23. போக்கிரி பதிவேடு

24. காவல்முறை மாற்றுப் புத்தகம்

25. அலுவல் பதிவேடு

26. மிகைநேர அலுவல் படிப் பதிவேடு

27. நோட்டுப் புத்தகம்

28. பணப் பதிவேடு காவல் நிலை ஆணை 262

29. அஞ்சல் அனுப்புகை பதிவேடு

30. நடப்புத் தாள் பதிவேடு

31. ஆயுத வழக்கு பதிவேடு

32. துப்பாக்கி உரிமப் பதிவேடு

33. ஆயுத வைப்புப் பதிவேடு காவல் நிலை ஆணை 332 படிவ எண் - 47

34 - கிராமப் பதிவேடு

35 - அரசு சொத்துப் பதிவேடு

36. காலமுறை தொகுப்புகள்

37. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு

38. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு.

பழைய பதிவு
தகவல் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்

பத்திர பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 16 முக்கியமான விஷயங்கள்…உங்கள் கனவு வீடு / நிலம் எதுவித சிக்கலுமின்றி பாதுகாப...
22/11/2025

பத்திர பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 16 முக்கியமான விஷயங்கள்…

உங்கள் கனவு வீடு / நிலம் எதுவித சிக்கலுமின்றி பாதுகாப்பாக வாங்க சிறிய விளக்கம்…

1. உரிமை (Title) சரிபார்ப்பு
உண்மையான உரிமையாளர் தானா?
அவர்கள் பெயரில் பத்திரங்கள், பட்டா, சர்வே, செல்லுபடியாகும் ஆதாரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. மூல ஆவணங்கள் (Original Documents)
Sale deed, partition deed, settlement deed, gift deed, will probate
அனைத்தும் தொடர்ச்சியாக (Chain of Title) இருக்க வேண்டும்.

3. EC (Encumbrance Certificate) – 30 ஆண்டுகள் ( minimum )
எந்த தடைகள், கடன், முதலீட்டாளர் உரிமை, வழக்கு இல்லையென்பதை உறுதிசெய்யவும்.

4. நிலம் / வீடு மீதான கடன் (Bank Loan)
சொத்துக்கு bank loan இருந்தால்
NOC
Loan closure certificate
Release deed உள்ளதா பார்க்கவும்.

5. பட்டா, சிட்டா, அடாங்கள்
சொத்து உண்மையில் உரிமையாளர் பெயரில் பதிவாகி உள்ளதா?
புலம் / வீட்டின் பயனீடு வகை என்ன?

6. FMB / Field Map / Survey
எல்லைகள் சரியாக உள்ளதா?
GPS survey, resurvey mismatch இல்லையா?

7. Approved Plan (DTCP / CMDA / LPA)
Plot / Building approved தானா?
Building plan deviation உள்ளதா?

8. நத்தம், கிராமநத்தம், புறம்போக்கு — வகை சரிபார்த்து கொள்ளவும்
சட்டப்படி பதிவு செய்யக்கூடிய நிலமா?
Prohibited land list-ல் இல்லையா?

9. தேவையான NOC & பத்திர அனுமதிகள்
Panchayat / Municipality / Corporation
Fire NOC, Pollution NOC (சில இடங்களில்), Layout approval letter.

10. Property Tax, Water, Electricity Bill
அனைத்தும் vendor பெயரில் இருக்க வேண்டும்.
நிலுவை பாக்கி இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

11. Road Access / Right of Way
5 அடி / 10 அடி / 20 அடி வீதி உள்ளதா?
access வழி மீது தகராறு இல்லையா?

12. பத்திரத்தில் குறிப்பிடப்படும் எல்லைகள்
North–South–East–West boundary
சரியாக உள்ளதா?
FMB உடன் பொருந்துகிறதா?

13. வர்த்தக மதிப்பு / Guideline Value
சொத்தின் மார்க்கெட் விலை, Guideline value ஒப்பிட்டு சரியான விலை பேசுக.

14. Stamp Duty & Registration Charges
கட்டணங்கள் சரியா?
undervalue பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் — எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை.

15. இருதரப்பு ஒப்பந்த நிபந்தனைகள்
payment schedule
handover date
penalty clauses
indemnity clause
செய்து எழுதி ஒப்பந்தத்தில் சேர்க்கவும்.

16. Lawyer Verification — மிகவும் முக்கியம்
பணம் கொடுக்கும்முன்
சட்ட வல்லுநர் மூலம் அனைத்தையும் சரிபார்க்கவும்.
இது செலவை குறைக்கும், பிரச்சனையை தவிர்க்கும்.
இந்த 16 விஷயங்களையும் சரிபார்த்தால், சொத்து வாங்குவது குறைந்தபட்ச பாதுகாப்பானதாக இருக்கும்

#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #நிலம்

22/11/2025

✍மனிஷா கொய்ராலா - புற்றுநோய்.✍

✍ரிசி கபூர் - புற்றுநோய்.✍

✍சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய்.✍

✍இர்பான் கான் - புற்றுநோய்.✍

✍யுவராஜ் சிங் புற்றுநோய்.✍

✍சைஃப் அலிகான் - மாரடைப்பு.✍

✍ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை.✍

✍அனுராக் பாசு - இரத்த புற்றுநோய்.✍

✍மும்தாஜ் - மார்பக புற்றுநோய்.✍

✍தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய்.✍

✍ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய்.✍

✍லிசா ராய் - புற்றுநோய்.✍

✍ராஜேஷ் கண்ணா - புற்றுநோய்,✍

✍வினோத் கண்ணா - புற்றுநோய்.✍

✍நர்கிஸ் - புற்றுநோய்.✍

✍ஃபெரோஸ் கான் - புற்றுநோய்.✍

✍இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள் .
இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது ? ✍

✍இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? ✍

✍24 மணி நேரமும் பெரிய படிப்பு படித்த ஆங்கில மருத்துவரின் நேரடி செக்கப் மற்றும் ஆலோசனை.✍

✍உணவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் உணவை உண்ணுபவர்கள்.✍

✍காரில் ஏசி வீட்டில் ஏசி பாத்ரூமில் கூட ஏசி.✍

✍ஏ.சி.யில் வசித்து பிஸ்லரி R O தண்ணீர் குடிப்பவர்கள் .
ஏனெனில் அப்படி வியாபாரமாக்கப்பட்டது நீங்கள் குடிக்கும் சாதாரண தண்ணீரில் கிருமிகள் உள்ளது. RO வாட்டர் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தான் சுத்தமானது ஆரோக்கியமானது என்று உங்களை மூளைச்சலவை செய்யப்பட்டது.✍

✍இவர்கள் அத்தனை பேரும் வழக்கமாக ரெகுலராக மெத்த படித்து பட்டம் பெற்ற டாக்டர் களின் ஆலோசனைப்படி முழு உடல் பரிசோதனைகள் செய்து கொள்பவர்கள்.
இவர்களுக்கு ஏன்? எப்படி ? இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது?
சிந்தியுங்கள் மக்களே ! ✍

✍இவர்கள் அத்தனை பேருக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த தகுதி வாய்ந்த பணக்கார ஆங்கில ஒரிஜினல் மருத்துவர் இருக்கிறார்கள் . அப்புறம் ஏன் எப்படி வியாதி வந்தது ? ✍

✍இப்போது கேள்வி எழுகிறது
அவரது உடலில் இவ்வளவு அக்கறை இருந்தபோதிலும், திடீரென்று அவர்களுக்கு எப்படி இவ்வளவு கடுமையான நோய் வந்தது.✍

✍ஏனெனில் இந்த இயற்கை வாழ்வியல் பயன்பாடுகளில் அவர்கள் மிகக் குறைவாகவே செய்கிறார்கள்.✍

✍இயற்கை நமக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்காது என்பதால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்.✍

✍புரூட்டி ஜுஸ் சாப்பிட்டால் எந்த பழத்தையும் நம் உடலுக்கு மாம்பழத்தின் குணங்களை கொடுக்க முடியாது.✍

✍நாம் இந்த பூமியை மாசுபடுத்தி இருக்கா விட்டால் இந்த பூமி நமக்கு தேவையான ஆரோக்கியமான தண்ணீர் தந்து கொண்டுதான் இருந்தது .✍

✍யார் அதை மாசு படுத்தியது ? அறிவியல். வியாபாரம். ✍

✍ஒரு பிறந்த குழந்தையை சுத்தமான இடத்தில் வைக்கிறீர்கள் ஒரு கிருமி கூட இல்லாத இடத்தில்.✍

✍வளர்ந்த பிறகு, ஒரு சாதாரண இடத்தில் வாழ அதை விடுங்கள், அந்த குழந்தை சாதாரண காய்ச்சலைக் கூட தாங்க முடியாது!✍

✍ஏனெனில் அந்த குழந்தை உடலின் நரம்பு மண்டலம் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியவில்லை.✍

✍வியாபார கார்ப்பரேட் மருந்து கம்பெனிகள் ஆங்கில மருத்துவம் இதர பிற நிறுவனங்கள் மக்களை மிகவும் பயமுறுத்தியுள்ளன.✍

✍கிருமிகள் அப்படி இப்படி அதை போக்க இந்த சோப் அந்த லோசன் போடுங்கன்னு ஏகப்பட்ட அட்வைஸ் படித்த டாக்டர் களிடமிருந்து.✍

✍ இப்ப பாருங்க ஒருவருக்கொருவர் கைகுலுக்கிய பிறகு மக்கள்
சானிட்டீசரைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம்..✍

✍நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா பீஸ்ஸா பர்கர் சாப்பிட்டு உலகத்திலேயே சுத்தத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் செய்து தினமும் ஆலோசனைப்படி வாழ்ந்து வருகின்ற ஜெர்மானிய நகர மக்கள்
ஒரு காய்ச்சலை எதிர்கொள்ள முடியாமல் மாடாய் மடிந்து போனார்கள்.✍

✍ஆனால் அதே நாட்டில் கிராமத்தில் இயற்கை வாழ்வியல் முறைகளை கையாண்டு வாழும்
வயதானவர்கள் அதே காய்ச்சல் மருந்து இல்லாமல் குணமானார்கள் ‌ எப்படி ? ✍

✍ஏனென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு இயல்பாகவே இருக்கிறது.✍

✍ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே இயற்கை வாழ்வியல் உணவை சாப்பிடுகிறார்கள்.✍

✍இயற்கை விஷயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் !✍

✍விஞ்ஞானத்தால் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது
எல்லாம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். ✍

✍பணம் ஒருபோதும்j ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவதில்லை என்பதை உணருங்கள்.........

பேரளத்திற்கு பெருமை சேர்க்கும் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்...சொல்லில் மட்டுமல்லாது செயல...
25/08/2025

பேரளத்திற்கு பெருமை சேர்க்கும் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்...

சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் நடைமுறை படுத்த வேண்டுகோள் வைக்கிறோம்.

அதே சமயத்தில் பழிவாங்கும் வகையில் கொடுக்கபடும் புகார்களில் விசாரணையில் கடுமை காட்டாமல் இருக்க வேண்டுகிறேன்

இதுப்போன்ற புகார்களால் தான் பாதிக்க படுவோர் சிபாரிசை நாடிப்போக படிப்படியாக கட்டபஞ்சாயத்தில் போய் முடிகிறது.

காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் நமக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டாலே நாட்டில் 80% குற்றங்கள் குறைந்து விடும்...

முன்னுதாரண முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா!
🙏👍👏👏

🌷 அன்பு❤️உள்ளங்கள் 🌷  ·  · #தன்னம்பிக்கை பதிவுஒரு ஆரோக்கியமான  #ஆண்_உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்...
10/08/2025

🌷 அன்பு❤️உள்ளங்கள் 🌷 ·
·
#தன்னம்பிக்கை பதிவு
ஒரு ஆரோக்கியமான #ஆண்_உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது. எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்!
இந்த 400 மில்லியன் #விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது.
மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட விந்து நீங்கள் அல்லது நான் அல்லது நாம் அனைவரும்.
இந்த மாபெரும் போரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
(1) நீங்கள் ஓடியபோது "கண்கள், கைகள், கால்கள், தலை இல்லை," இருந்தும் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் .
(2) நீங்கள் ஓடியபோது ​​உங்களிடம் எந்தவிதமான சான்றிதழும் இல்லை. உங்களுக்கு மூளை இல்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.
(3) நீங்கள் ஓடும்போது உங்களுக்கு #கல்வி இல்லை, யாரும் உதவி செய்யவில்லை, ஆனால் நீங்கள் வென்றீர்கள்.
(4) நீங்கள் ஓடும்போது உங்களுக்கு ஒரு இலக்கு இருந்தது, நீங்கள் ஒரே மனதுடன் ஓடி அந்த இலக்கை இலக்காகக் கொண்டு, இறுதியில் நீங்கள் வென்றீர்கள்.
- அதன் பிறகு, தாயின் வயிற்றில் பல #குழந்தைகள் இழக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் இறந்துவிடவில்லை. நீங்கள் 10 முழு மாதங்களை முடித்துவிட்டீர்கள்.
- பிறக்கும்போதே பல குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்.
- வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகளில் பல குழந்தைகள் இறக்கின்றன. நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள்.
- பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
- பலர் வளர்ந்து வரும் வழியில் உலகை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்.
மற்றும் இன்று ......
ஏதாவது நடக்கும்போது நீங்கள் பீதியடைகிறீர்கள், நீங்கள் விரக்தி அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள் ஏன்? நீங்கள் ஏன் தோற்று விட்டதாக நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்? இப்போது உங்களுக்கு நண்பர்கள், உடன்பிறப்புகள், படிப்பு சான்றிதழ்கள் எல்லாம் இருக்கிறது. கைகளும் கால்களும் உள்ளன. கல்வி இருக்கிறது. திட்டமிட மூளை இருக்கிறது. உதவி செய்ய மக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள். வாழ்க்கையின் முதல் நாளில் நீங்கள் கைவிடாதபோது. 400 மில்லியன் விந்தணுக்களுடன் மரணத்துடன் போராடி, எந்த உதவியும் இல்லாமல் தொடர்ச்சியாக ஓடுவதன் மூலம் தனியாக போட்டியில் வெற்றி அடைந்தீர்கள்.
ஏதாவது நடக்கும்போது ஏன் மனம் உடைக்கிறீர்கள் ??
நான் வாழ விரும்பவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்?
நான் தோற்றேன் என்று ஏன் சொல்கிறீர்கள்?
இதுபோன்ற ஆயிரக்கணக்கான விஷயங்களை முன்னிலைப்படுத்த முடியும், ஆனால் நீங்கள் ஏன் விரக்தியடைகிறீர்கள்?
நீங்கள் ஆரம்பத்தில் வெற்றி அடைந்தீர்கள். இறுதியில் வெற்றி அடைவீர்கள். நடுவில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் கொடுங்கள். உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
பாதுகாப்பாக இருங்கள்;
மகிழ்ச்சியாக இருங்கள்....

நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்ற படி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.கொஞ்ச நே...
06/08/2025

நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்ற படி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.

கொஞ்ச நேரத்தில் எப்படியோ இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய் விடும்,

எல்லோரும் கதறியழுதுகாத்திருப்பார்கள்

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்கள், நண்பர்கள் என எல்லாருக்கும் உடனே தகவல் சென்று விடும்,

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்து விடுவார்கள்,

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம் தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,

எல்லாம் நேரம்!

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒரு வழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

அழுது கொண்டே ஓடி வருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளி வைங்க பந்தல் போடணும்,

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்த பின்னாடி பத்து காசுக்கு தேறாது!

நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

ஒருபக்கம் தாரை தப்பட்டை இன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசு சத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

அத்தனை பேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்க வச்சி நம்ம மானத்தை வாங்கிட்டாங்களே!!

என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தை எல்லாம் சேர்த்து நாலு பேர் ஆடிகொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம் தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால் அழுகை குறைந்து விசும்பலாகி இருக்கும். அதற்கு அடுத்த நாள் அந்த விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்!

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனை எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்

சேர்ந்தே புதைந்து போகின்றன!

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர் துறக்கிறார்கள்!

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது நாம் ஏன் பொய்யோடும், பகையோடும், பொறாமையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக

வாழுங்கள்...

படித்ததில் ரெம்பவும் பிடித்தது ..Note: -இறுதிவரைக்கும் வாசியுங்கள்தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, " தவற...
28/07/2025

படித்ததில் ரெம்பவும் பிடித்தது ..

Note: -இறுதிவரைக்கும் வாசியுங்கள்

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
" தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!

"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!

"அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!

"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!

"அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.

"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!

இருந்தும் கோபம் தாளாமல்.....,

"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!

"அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
"மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!

அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.

உடனே...,
" வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,

" பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"...

" இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,

" வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!

"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!.......................,.......
இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
அதற்கு புரிந்திருக்கும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1. தான் நுழைந்தது....,
" நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,

2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"....,

3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
"தன் குரலின் எதிரொலி தான் என்று"......,

நீதி:
```````
"இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!

நாம் கோபப்பட்டால்....,
" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!

அன்பு செலுத்தினால்.....,
" அன்பு கிடைக்கும்"......!!

"நீ எதை விதைக்கிறாயோ"....,
"அதுவே முளைக்கும்"..

கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து. - நகைச்சுவை கதை. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ தி...
18/07/2025

கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து.

- நகைச்சுவை கதை.

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

13/07/2025

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

*♨👇இதையும் படிப்போம்👇♨*💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.  "உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்க...
12/07/2025

*♨👇இதையும் படிப்போம்👇♨*

💮 *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம*்.

"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

💮 *மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.

"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின் கல்லறையில்*,

"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.*

"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."

இவ்வளவு தானா வாழ்க்கை❓

ஆம் அதிலென்ன சந்தேகம்.

ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓

நமது *பதவியா?*
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது *படிப்பா?*
நமது *வீடா?*
நம் முன்னோர்களின் *ஆஸ்தியா?*
நமது *அறிவா?*
நமது *பிள்ளைகளா?*
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?

*ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

*பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.

*பிறரை வாழ வைத்து வாழ்வோம்.*

Address

புதிய பாதை
Mayiladuthurai
609404

Alerts

Be the first to know and let us send you an email when சிந்திக்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிந்திக்க:

Share