SDTU தொழிற்சங்கம் மயிலை மாவட்டம்

SDTU தொழிற்சங்கம் மயிலை மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDTU தொழிற்சங்கம் மயிலை மாவட்டம், Labor Union, Mayiladuthurai.

 #உழைப்போம்!   #ஒன்றிணைவோம்!  #உரிமையை_வென்றெடுப்போம்!! #மயிலாடுதுறையில் SDTU  தொழிற்சங்கம் சார்பில் அனைத்து மத்திய தொழி...
29/03/2022

#உழைப்போம்! #ஒன்றிணைவோம்!

#உரிமையை_வென்றெடுப்போம்!!

#மயிலாடுதுறையில் SDTU தொழிற்சங்கம் சார்பில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு SDTU தொழிற்சங்கம் மாவட்டத் தலைவர் #சாகுல்_ஹமீது தலைமை வகித்தார். தொழிற்சங்க மாவட்ட த துணை செயலாளர் #மஜ்கர்தீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். CITU மாவட்ட துணைச் செயலாளர் தோழர் #ராமானுஜன் அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஆத்தூர் #பைசல் ரஹ்மான் அவர்களும், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் #சுப்பு மகேஷ் அவர்களும், தொ மு ச மாவட்ட கவுன்சில் தலைவர் #பொன்_நக்கீரன் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் #சஃபிக் அஹமது அவர்களும் கண்டன உரையாற்றினர்.

#பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்து!

#திருத்தப்பட்ட_தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்பப்பெறு! உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் #ஜெகபர் அலி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

வெளியீடு:-

SDTU தொழிசங்கம்
மயிலாடுதுறை மாவட்டம்.

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்   தொழிற்சங்க மயிலாடுதுறை  மாவட்ட செயற்குழுக் கூட்டம்.மயிலாடுதுறை மார்ச் 25🆂🅳🆃🆄 மாவட்ட...
25/03/2022

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்

தொழிற்சங்க மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம்.

மயிலாடுதுறை மார்ச் 25
🆂🅳🆃🆄 மாவட்ட செயற்குழுக்கூட்டம்
மாவட்டத் தலைவர் #கொள்ளிடம்_சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் #மன்சூர் அலி #மஜ்கர் தீன்,இலுப்பூர் #நிசார், #ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக
SDPI கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் #ஆத்தூர்_ஃபைசல்_ரகுமான் மற்றும் முன்னாள் SDTU ஒருங்கிணைப்பாளர் #கமாலுதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்

#தீர்மானம் 1.

மார்ச் 28.29. SDTU உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பாக நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற 48 மணிநேர பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பது மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

#தீர்மானம் 2.

SDTU தொழிற் சங்கத்தின் மாவட்ட மற்றும் கிளை கட்டமைப்பை பலப்படுத்துவது எனவும்

#தீர்மானம் 3.
மே 1 தொழிலாளர் தினம் அன்று கொடியேற்றுவது எனவும்.

#தீர்மானம் 4.
SDTU உறுப்பினர்களுக்கு அனைவர்களுக்கும் நலவாரிய அட்டை எடுத்துக் கொடுப்பது. புதிய உறுப்பினர் சேர்ப்பது. போன்றஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வெளியீடு:-
SDTU தொழிற்சங்கம்,
மயிலாடுதுறை மாவட்டம்.

 #மயிலாடுதுறையில்   #தமிழ்மண்_தன்னுரிமை_இயக்கம்  #சார்பாக_ஏழு_தமிழர் மற்றும்  #இஸ்லாமிய சிறைவாசிகள் உடனடியாக தமிழக அரசு ...
29/01/2022

#மயிலாடுதுறையில்

#தமிழ்மண்_தன்னுரிமை_இயக்கம்

#சார்பாக_ஏழு_தமிழர் மற்றும்

#இஸ்லாமிய சிறைவாசிகள் உடனடியாக

தமிழக அரசு விடுதலை செய்ய

வேண்டும் என்ற கோரிக்கையுடன்

நடைப்பெற்ற மாநாட்டில் கட்சியின்

#தமிழ்_மாநிலத்_தலைவர்

#நெல்லை_முபாரக் அவர்கள் மற்றும்

தேழமை தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் மயிலாடுதுறை SDTU மாவட்டத்

#தலைவர்_ஷாகுல் ஹமீது மற்றும்

மாவட்டத் துணைத்தலைவர் #ஜெகபர்

அலி மாவட்ட துணைச் செயலாளர்

#மஜ்கர்தீன் மற்றும் மாவட்ட பொருளாலர்

#கொள்ளிடம்_மன்சூர்_அலி

மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று

சிறப்பித்தனர்.

SDTU- தொழிற்சங்கத்தின் திருச்சி மண்டலக் கூட்டம் 22.01.2022  காலை 11 மணியளவில் திருச்சி மண்டலத் தலைவரும் SDTU. மாநில செயல...
23/01/2022

SDTU- தொழிற்சங்கத்தின் திருச்சி மண்டலக் கூட்டம் 22.01.2022 காலை 11 மணியளவில் திருச்சி மண்டலத் தலைவரும் SDTU. மாநில செயலாளருமான முஹம்மது ரபீக் தலைமையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச்செயலாளர் ரபூப் நிஸ்தார் அவர்கள் கலந்து கொண்டார்.இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி,கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் SDTU தொழிற்சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

விவாதிக்கப்பட்ட பணிகள்:-

1.அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது.
2.புதிய கிளைகள் உருவாக்கம்.
3.சிட்டி மீட்டர் ஆட்டோ அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது.

உழைப்போம்! ஒன்றிணைவோம்!!உரிமையை வென்றெடுப்போம்!! #மயிலாடுதுறை_மாவட்டம்_SDTU தொழிற்சங்கம் சார்பாக இன்று 30-11-2021  #பெட்...
30/11/2021

உழைப்போம்! ஒன்றிணைவோம்!!
உரிமையை வென்றெடுப்போம்!!

#மயிலாடுதுறை_மாவட்டம்_SDTU தொழிற்சங்கம் சார்பாக இன்று 30-11-2021 #பெட்ரோல்_டீசல்_எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் #உரிமையை_தனியார்_நிறுவனங்களில் இருந்து திரும்பப்பெறு,ஆகிய கோரிக்கையுடன், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4.30 மணியளவில் #மயிலாடுதுறை_கிட்டப்பா_அங்காடி அருகில், மயிலாடுதுறை SDTU மாவட்ட தலைவர் ாகுல்_அமீது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் ்சூர் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் SDPI கட்சியின் விவசாய அணியின் மாநிலத் துணைத்தலைவர் ்ணன், SDTU மாவட்டத் துணைத்தலைவர் NWF #ஜெகபர்_அலி SDTU மாவட்ட செயலாளர் #முஹம்மது மணாஸ் நயிம் மற்றும் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் #இலுப்பூர்நிசார், SDPI கட்சியன் மயிலை மாவட்ட தலைவர் #பைசல்_ரஹ்மான், கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது ரவூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர் திருச்சி #முஹம்மது_ரபீக் மற்றம் SDPI கட்சியின் தஞ்சை மண்டலத் தலைவர் #ஷபீக் அஹமது, CITU மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் #இரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இதில் SDTU தொழிற்சங்க தொண்டர்கள் மற்றும் SDPI மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் முழங்க SDTU மாவட்ட துணைச்செயலாளர் #மஜ்கர்தீன் அவர்கள் நன்றியுரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

வெளியீடு…
SDTU. தொழிற்சங்கம்
மயிலாடுதுறை மாவட்டம்
ஊடகப்பிரிவு.

 ொழிற்சங்கம்  #மயிலாடுதுறையில் #கண்டன_ஆர்ப்பாட்டம் இந்திய நாட்டில் வாழும்  அனைத்து சாமானிய மக்களையும் பெரிதும் பாதிக்கும...
28/11/2021

ொழிற்சங்கம்

#மயிலாடுதுறையில்

#கண்டன_ஆர்ப்பாட்டம்

இந்திய நாட்டில் வாழும் அனைத்து சாமானிய மக்களையும் பெரிதும் பாதிக்கும் #பெட்ரோல்_டீசல் மற்றும் #சமையல்_எரிவாயு_விலை உயர்வை கண்டித்து #மயிலாடுதுறையில் 30.11.21 அன்று மாலை 4.30 மணியளவில் #கிட்டப்பா_அங்காடி_அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொழிற்சங்கம் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .ஆகவே #பொதுமக்கள்_மற்றும்_தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

வெளியீடு :-

SDTU தொழிற்சங்கம்
மயிலாடுதுறை மாவட்டம்
ஊடகப்பிரிவு.

உழைப்போம்! ஒன்றிணைவோம்!உரிமையை வென்றெடுப்போம்!! ொழிற்சங்கம் மற்றும்  விவசாயிகள் ஐக்கிய முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்...
25/11/2021

உழைப்போம்! ஒன்றிணைவோம்!
உரிமையை வென்றெடுப்போம்!!

ொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக 26/11/2021 மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள பேரணியில் தொழிற்சங்க மாவட்ட பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதனை அழைப்பாக ஏற்று அனைவர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்...

அன்புடன்...
கொள்ளிடம் ஷ.ஷாகுல் ஹமீது
மாவட்ட தலைவர்,
SDTU தொழிற்சங்கம்
மயிலாடுதுறை மாவட்டம்.

24/11/2021
உழைப்போம்!  ஒன்றிணைவோம்!! உரிமையை வென்றெடுப்போம்!!SDTU தொழிற்சங்கம் மயிலாடுதுறை மாவட்ட பொருப்பாளர்களை தேர்ந்தெடுக்க SDTU...
15/11/2021

உழைப்போம்! ஒன்றிணைவோம்!! உரிமையை வென்றெடுப்போம்!!

SDTU தொழிற்சங்கம் மயிலாடுதுறை மாவட்ட பொருப்பாளர்களை தேர்ந்தெடுக்க SDTU வின் தமிழ்மாநிலத் தலைவர் J. முஹம்மது ஆசாத் அவர்கள் முன்னிலையில் இன்று மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாலை 5.00 மணியளவில் நடைப்பெற்றது. இதில் SDTU வின் மாநில செயலாளரும்,திருச்சி மண்டல தலைவருமான K.முஹம்மது ரபீக் அவர்கள் கலந்து கொண்டு புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பு செய்து வைத்தார் .மேலும் இந்நிகழ்வில் இதில் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் பைசல் ரஹ்மான் அவர்களும், தஞ்சை மண்டலத் தலைவர் ஷபீக் அஹமது அவர்களும், கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப் அவர்களும், மாவட்ட பொருளாலர் ஜியாவுதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.

புதிய மாவட்ட நிர்வாகிகள்:--

S. ஷாகுல் ஹமீது மாவட்டத் தலைவர், கொள்ளிடம் தைக்கால்.

M. முஹம்மது மனாஸ் நயிம் மாவட்ட செயலாளர்,ஆக்கூர்.

SMJ. மன்சூர் அலி மாவட்ட பொருளாலர் கொள்ளிடம், தைக்கால்.

A. ஜெகபர் அலி மாவட்ட துணைத்தலைவர்,
எலந்தங்குடி.

M.மஜ்கர்தீன் மாவட்ட துணைச்செயளாலர், நீடூர்.

Address

Mayiladuthurai
609001

Telephone

+918438570281

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDTU தொழிற்சங்கம் மயிலை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category