05/06/2026
இன்று, ஜூன் 5, மதுரை Sri Aurobindo Mira Universal பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது. விழாவில்
திரு. M. M. கோபிசன் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்,
திரு. கருணாகரன், RDO,
திரு. M. C. அபிலாஷ், மேலாண் இயக்குனர்,
Sri Aurobindo Mira Educational Group ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவேரி கூக்குரல் இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ளது. இந்த ஆண்டு, மதுரை மாநகரில் சுமார் 3.4 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மண்ணை காத்து, விவசாயிகளின் நீடித்த நிலைத்த வருமானத்தை உறுதி செய்யும் மரம் சார்ந்த விவசாயத்தை 2.6 லட்சம் விவசாயிகள் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக விழாவை சிறப்பித்த விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.