LPF Madurai District Council / மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில்

  • Home
  • India
  • Madurai
  • LPF Madurai District Council / மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில்
07/07/2025
LABOUR PROGRESSIVE FEDERATION (LPF) நினைவேந்தல் 🥲🥲•••••••••••••••••••••••••••••••முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநி...
05/01/2025

LABOUR PROGRESSIVE FEDERATION (LPF)
நினைவேந்தல் 🥲🥲
•••••••••••••••••••••••••••••••
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சீரிய தொண்டன்,

மதுரை திருமங்கலம் ஒன்றியம் மேனாள் அவைத் தலைவர்,

திமுகழக உடன்பிறப்புகளின் உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருக்கும்,

மதுரை மாவட்ட சுமையேற்ற பணியாளர் தொமுச பொதுச் செயலாளர் அண்ணன் #கப்பலூர் #சந்திரன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்

பெருந்தகை பேராசிரியரே...உமது புகழைப் போற்றி வழிநடப்போம் 🙏
19/12/2024

பெருந்தகை பேராசிரியரே...
உமது புகழைப் போற்றி வழிநடப்போம் 🙏

  -   -   அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச் சங்கத்தின் (தொ.மு.ச) உறுப்பினர்கள் கூட்டம் 28-09-...
29/09/2024

- -
அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச் சங்கத்தின் (தொ.மு.ச) உறுப்பினர்கள் கூட்டம் 28-09-2024 அன்று காலை 11 மணியளவில் புறவழிச் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை மண்டல தொமுசவின் ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச் சங்க தலைவர் திரு கங்காதரன் அவர்கள் தலைமையிலும், கௌரவத் தலைவர் பெரியசாமி அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் திரு பெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சங்கத்தின் தொடர் செயல்பாடுகள் குறித்தும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு காலண்டர் சம்பந்தமாகவும், மற்றும்
பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அனைத்து பணபலன்களை வழங்க கோருவது. வாரிசு பணி நியமனம் அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் வழங்க வேண்டும்.

2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மதுரை மண்டல ஓய்வு பெற்ற நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட சுமார் 60 நபர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் பரமன் அவர்கள் நன்றி கூறினார்.

 #ஆட்டோ  #ஓட்டுனர்  #தொமுச மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்றச் சங்கத்தில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. ...
02/09/2024

#ஆட்டோ #ஓட்டுனர் #தொமுச

மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்றச் சங்கத்தில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதார மேன்மை அடைந்திட ஓட்டுநர் உரிமம், ஆதார் எண், அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர் அட்டை நகல் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து, #தொழிலாளர் #முன்னேற்றச் #சங்க #பேரவையின் மாவட்ட தொமுசவில் இணைந்து #நலவாரிய_பயண்களை அடைந்திட அன்புடன் வரவேற்கிறோம்.

அன்புடன்,
சி. கருணாநிதி,
கவுன்சில் செயலாளர்,
தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை,
மதுரை.

https://m.me/ch/AbY1h6t_yD2OIyQp/

#தொமுச

 #மதுரை  #மாநகராட்சி  #தூய்மை_பணியாளர்  #தொமுச மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 49ல் அறிஞர் அண்ணாசிலை அருகே உள...
30/08/2024

#மதுரை #மாநகராட்சி #தூய்மை_பணியாளர் #தொமுச

மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 49ல் அறிஞர் அண்ணாசிலை அருகே உள்ள அலுவலக வளாகத்தில் 30-08-2024 அன்று காலை 6.30 மணியளவில் தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த பணியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினரும், மாநகராட்சி தூய்மை பணியாளர் தொமுச பொதுச் செயலாளர் திரு கே.பி.தங்கவேலு அவர்கள் பணியாற்றும் பணியாளர்களிடம் பணியின்போது ஏற்படும் குறைகளை கேட்டறிந்தார். மேலும்,

தமிழ்நாடு நலவாரியத்தின் நன்மைகள் குறித்தும், நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் விடுப்பட்ட பணியாளர்களை உறுப்பினர்களாக இணைத்து நலவாரிய பயன்களை குடும்பத்திற்க்கு பெற்று தருவது குறித்த தகவல்களை விளக்கினார். தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதால் தொழிலாளர்கள் உடனடியாக உறுப்பினராக சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

DMK Madurai

 #மக்கள்_சந்திப்பு_இயக்கம்ஒன்றிய மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திறும்ப பெறக் கோரி, தேசம் காக்க மத்திய தொழிற்சங...
13/08/2024

#மக்கள்_சந்திப்பு_இயக்கம்

ஒன்றிய மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திறும்ப பெறக் கோரி, தேசம் காக்க மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவலை ஏற்று,

#மதுரை_மாவட்ட #தொழிற்சங்க_கூட்டமைப்பு முடிவின்படி 2024 ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய நாட்களின் முறையே மாலை 5 மணியளவில் #ஆரப்பாளையம்_பேருந்து_நிலையம், #பெரியார்_பேருந்து_நிலையம், #எம்ஜிஆர்_பேருந்து_நிலையம் ஆகிய பொதுமக்கள் சந்திப்பு இடங்களில் மக்கள் பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக நிதி ஒதுக்காதை கண்டித்தும்!

தொழிலாளர்நல சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வலியுறுத்தியும்!

பொதுத் துறைகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும்….

போன்ற மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, செயல்களில் ஈடுபட்டு வருகின்ற மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை பிரசுரம் செய்த கையடக்க நோட்டிசை பொதுமக்களிடம் விநியோகம் செய்து பரப்புரை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் , , , , , , , , ஆகிய தொழிற்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#தொழிலாளர் #முன்னேற்றச் #சங்க #பேரவை #மதுரை_மாவட்ட_கவுன்சில் தலைவர் து.பிச்சை செயலாளர் சி.கருணாநிதி பொருளாளர் எம்ஏ.இராமர், துணைச் செயலாளர்கள் கோ.சுரேஷ்பாபு, ஆர்.அருள்மெழிச்செல்வன்,

#டாஸ்மாக்_தொமுச மாநில பொதுச் செயலாளர் எம் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் ஜி.ஜெகநாதன் சின்னத்துரை, சண்முகவேல், ஏ.ரமேஷ், ஆசைராஜா, சிங்காரவேலு, நல்லகுரும்பத்தேவர்,

#ஆவின்_தொமுச தலைவர் கூடக் கோவில் முருகன் செயலாளர் தி.திருமாறன் துணைச் செயலாளர் தி.தர்மராஜ்

#மாநகராட்சி_தொமுச செயலாளர் கேபி.தங்கவேலு, ராஜா(எ) ராமசாமி, எஸ்.பாண்டியராஜன்

#பாண்டியன்_கூட்டுறவு_தொமுச தலைவர் கா.மணி, துணைத் தலைவர் கண்ணன்

மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

LPF Madurai District Council / மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில்

10/08/2024

#ஒன்றிய_மோடி_அரசின் #மூன்று_குற்றவியல் #சட்டங்களை திறும்ப பெறக் கோரி, தேசம் காக்க #மத்திய #தொழிற்சங்கங்களின் #கூட்டமைப்பு அறைகூவலை ஏற்று,

தமிழ்நாடு மாநில தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவின்படி #தேசிய_கொடி_ஏற்றி_உறுதிமொழி_ஏற்பு #ஆர்ப்பாட்டம், மதுரை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 10-08-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாநகர் நேதாஜி சாலை - YMCA அலுவலக சந்திப்பில் தேசிய கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை #மதுரை #மாவட்ட #தொமுச #கவுன்சில் செயலாளர் திரு #சி_கருணாநிதி அவர்கள் தலைமையில், திருவாளர்கள்,

- #து_பிச்சை
- #இரா_தெய்வராஜ்
- #கே_சேது
- #கே_ராஜசேகரன்
- #வீ_பாதர்வெள்ளை
- #எஸ்_மகபூப்ஜான்
- #திருப்பதி
- #வால்ட்டர்

ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஐன்டியூசி மாவட்ட செயலாளர் திரு கே.ராஜசேகரன் அவர்கள் இந்திய தேசிய விடுதலை வீரர் #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது.

ஹச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் திரு வீ பாதர் வெள்ளை அவர்கள் கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்எல்எஃப் மாநில துணைச் செயலாளர் திரு எஸ் மகபூஜான், ஏஐடியுசி மாவட்ட தலைவர் திரு எம்.நந்தாசிங் ஆகியோர்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக நிதி ஒதுக்காதை கண்டித்தும் தொழிலாளர்நல சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுத் துறைகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

சிஐடியூ நகர் மாவட்ட தலைவர் திரு தெய்வராஜ் அவர்கள்
உறுதிமொழி ஏற்புரை செய்தார்.

ஆர்ப்பாட நிகழ்வில் மத்திய தொழிற்சங்கங்களின் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் சார்பில் பேரவை செயலாளர் திருமதி மகேஸ்வரி முருகன் மாவட்ட துணைச் செயலாளர் கோ சுரேஷ்பாபு டாஸ்மாக் தொமுச மாநில செயலாளர் எம் சிவப்பிரகாசம் அரசு போக்குவரத்து கழக மண்டல பொருளாளர் எஸ் மணிகண்டன் மின் கழக தொமுச சார்பில் மாநகர் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.முத்தையா
மதுரை மண்டல / திட்ட செயலாளர் வீ.பி.ராஜேஷ்கண்ணன், மதுரை திட்ட துணைச்செயலாளர் பழ.சண்முகசுந்தரம் டாஸ்மாக் தொமுச மாவட்ட தலைவர் ஜெகநாதன் ஆவின் தொமுச செயலாளர் திருமாறன் துணைச் செயலாளர் தர்மராஜ் மாநகராட்சி தொமுச செயலாளர் கேபி தங்கவேலு, பாண்டியராஜன் திராவிட ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைவர் கணேசன் பொருளாளர் மகேந்திரன் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் உறுப்பினர் உட்பட 200 நபர்கள் மேல் கலந்து கொண்டனர்.

வணங்குகிறோம் 🙏💐
07/08/2024

வணங்குகிறோம் 🙏💐

25/07/2024

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக,

மதுரை மாவட்ட #தொமுச #சிஐடியூ #ஏஐடியூசி #ஐன்டியூசி #ஹச்எம்எஸ் #எம்எல்எஃப் ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 24-07-2024 அன்று மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் திரு #தெய்வராஜ் அவர்கள் தலைமை ஏற்றிட

- #சி_கருணாநிதி
- #லெனின்
- #சேது
- ாஜசேகர்
- ுத்துலிங்கம்
- ூப்ஜான்

ஆகிய தொழிற்சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையிலும், மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில், #சென்னை #உயர்நீதிமன்றம் மதுரை கிளை #வழக்கறிஞர் திரு. #லஜசபதிராய் அவர்கள் மத்திய அரசின் சட்ட திருத்தங்களை பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்படும் சட்ட அநீதிகளையும் தொகுத்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கத்தின் அந்தந்த சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரச்சார கூட்டத்தினை சிறப்பித்தனர்.

தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பேரவை செயலாளர் திருமதி மகேஸ்வரி முருகன் மாவட்ட கவுன்சில் நிர்வாகிகள் தலைவர் து.பிச்சை பொருளாளர் எம்ஏ.இராமர் துணைச் செயலாளர்கள் கோ.சுரேஷ்பாபு ஆர்.அருள்மொழிசெல்வன் தொமுச பேரவை செயலாளர் திருமதி மகேஸ்வரி முருகன் பேரவை செயற்குழு உறுப்பினர் துரை.ராஜா டாஸ்மாக் தொமுச மாநில பொதுச் செயலாளர் எம் சிவப்பிரகாசம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் தொமுச மாநில பொதுச் செயலாளர் மு.இருளாண்டி

மின் கழக தொமுச சார்பில் மாநகர்மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.முத்தையா மண்டல செயலாளர் பிவி ராஜேஷ்கண்ணன் டி.செபஸ்தியான் பி.சண்முகசுந்தரம் எஸ்.பழனி

அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைவர் எஸ்.காத்தசுரேஷ் பொருளாளர் எஸ்.மணிகண்டன் து.பொது செயலாளர் ஐ.அய்யனார் அரசு விரைவு போக்குவரத்து கழக செயலாளர் முருகபாண்டி பொருளாளர் ராஜா,

டாஸ்மாக் தொமுச மாவட்ட தலைவர் ஜெகன் பொருளாளர் எஸ் தங்கம் சின்னதுரை ரமேஷ்குமார்.
அழகுராஜா சண்முகம் சிங்காரவேலன் வேலு ரமேஷ்குமார்

ஆவின் தொமுச தலைவர் கூடக் கோவில் முருகன் செயலாளர் திருமாறன்

TNSTC LPF - பொன்மேனி கிளை செயலாளர் சத்தியபிரகாஷ் பொருளாளர் ரமேஷ் பொதுக் குழு உறுப்பினர் இராஜேந்திரன் நாகமணி மயில்ராஜ் சீனிவாசன் ராஜசேகர், வேல்ராஜ் உதயகண்ணன் நசீர்உசேன்

BCB கிளை தொமுச - கருப்பணதேவர் மலைச்சாமி கார்த்திகேயன் காளிதாஸ்

பசுமலை கிளை தொமுச - நவமணி செல்வராஜ் பாண்டிகுமார்

திருப்பரங்குன்றம் கிளை தொமுச - முத்துராஜ் வெங்கடசுப்ரமணி ஜெயபால்

மாநகராட்சி தொமுச செயலாளர் கேபி தங்கவேலு பாண்டியராஜன்

பாண்டியன் கூட்டுறவு தொமுச தலைவர் கா.மணி கண்ணன்

நியாயவிலை கடை தொமுச செயலாளர் செல்லப்பாண்டி

பிரச்சார கூட்டத்தில் கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொமுச இணைப்பு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

DMK Madurai மதுரை திமுக

Address

Madurai
625001

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when LPF Madurai District Council / மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category