மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai District TNSF

  • Home
  • India
  • Madurai
  • மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai District TNSF

மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai  District  TNSF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai District TNSF, Nonprofit Organization, 6, Kakkathoppu Street, Madurai-625 001, Madurai.

TNSF Madurai Dist Education Sub Committee meet under the chairmanship of Dr. Antony Paul met today  New members are atte...
08/06/2026

TNSF Madurai Dist Education Sub Committee meet under the chairmanship of Dr. Antony Paul met today New members are attending.. Very encouraging

07-06-2026 அன்று துளிர் அறிவியல் மையத்தில் கணினியில் ஹாட்ஸ்பாட் இன்ஸ்டால் செய்த போது
08/06/2026

07-06-2026 அன்று துளிர் அறிவியல் மையத்தில் கணினியில் ஹாட்ஸ்பாட் இன்ஸ்டால் செய்த போது

இன்று கணிணி பழுது பார்க்கப்பட்டது புதிய மானிட்டர் வாங்கி மாட்டி வேலைகள் செய்யப்பட்டது குறிப்பாக இன்று வேலை செய்யும்போது ...
06/06/2026

இன்று கணிணி பழுது பார்க்கப்பட்டது புதிய மானிட்டர் வாங்கி மாட்டி வேலைகள் செய்யப்பட்டது குறிப்பாக இன்று வேலை செய்யும்போது அலுவலகத்தில் மின்சாரம் நின்று நின்று வருகிறது அதனால் எலக்ட்ரிஷன் அவர்களை கூப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

* *கோடை கால முகாம்* துளிர் அறிவியல் மையம் மற்றும் எஸ் SEDT அமைப்புடன் இணைந்து கோடைகால முகாம் கிழவனேரி கிராமத்தில் உள்ள ஐ...
05/06/2026

* *கோடை கால முகாம்*
துளிர் அறிவியல் மையம் மற்றும் எஸ் SEDT அமைப்புடன் இணைந்து கோடைகால முகாம் கிழவனேரி கிராமத்தில் உள்ள ஐசக் நியூட்டன் துளிர் இல்லத்தில் 19-05-2026 செவ்வாய் கிழமை நடைபெற்றது. திரு. அமல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார் . முகாமில் நியூட்டன் விதிகள் அதற்கான செயல்பாடுகள்,அது போன்று இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் போக பல்வேறு செயல்பாடுகள் குறித்து கருத்தாளர் திரு.விக்னேஷ் அவர்களும் திரு.ராஜசேகர் அவர்களும் மாணவர்களுக்கு செயல்பாடுகள் மூலம் எடுத்துக் கூறினார்கள். பின்பு வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை குறித்தான விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில மையம் சார்பாக கொடுக்கப்பட்ட துண்டறிக்கையை மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கான கருத்துக்களை துளிர் அறிவியல் மைய மாவட்ட உரிமைப்பாளர் கா. காமேஷ் அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். வானவில் மன்ற கருத்தாளர் திருமதி. க. பவித்ரா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் 16 மாணவர்கள் உட்பட கருத்தாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் என 21 பேர் கலந்து கொண்டனர். விழா இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் வணக்கம். இன்று  21.5.2026 திங்கள் கிழமை மதுரை மண்டல அளவிலான ஒரு நாள் துளிர்  பயிற்சி வகுப்பு ஊராட்சி ஒன்றிய...
05/06/2026

அனைவருக்கும் வணக்கம். இன்று 21.5.2026 திங்கள் கிழமை மதுரை மண்டல அளவிலான ஒரு நாள் துளிர் பயிற்சி வகுப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விளாங்குடியல் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் திருமதி மலச்செல்வி திருமதி முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சிக்கு துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு காமேஷ் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து கொடுத்தார். மேலும் மதுரை மேற்கு ஒன்றியம் அலங்காநல்லூர் வாடிப்பட்டி மேலூர் திருநகர் கிளைகளை சேர்ந்த வானவில் மன்ற எஸ் ஆர் பி மற்றும் தொண்டர்கள் மாணவர்கள் இதில் பெரும்பான்மையாக கலந்து கொண்டனர் . பயிற்சியினை மாவட்டத் துணைத் தலைவர் திரு க.ஒச்சுக்காளை வரவேற்றார் மாநிலச் செயலாளர் பாடல்கள் விளையாட்டு ஓரிகாமி என அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுத்தனர். மாவட்டச் செயலாளர் திரு கண்ணன் மாவட்ட பொருளாளர் திருமதி வெண்ணிலா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் திரு புகழேந்தி அவர்கள் நன்றி கூறினார். பயிற்சியானது மிகவும் சிறப்பானதாகவும் மாணவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது .இந்த பயிற்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

*இந்நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள் :*https://www.facebook.com/share/p/1EWDGBWnq2/அனைவருக்கும் வணக்கம் !பொதுநூலக இயக...
05/06/2026

*இந்நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள் :*
https://www.facebook.com/share/p/1EWDGBWnq2/

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில், குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *”கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(22.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதன் தினசரி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, *திரு.கா.காமேஷ், TNSF தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* அவர்களின் *“அறிவியல் கற்கண்டு III”* நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று அறிவியல் சார்ந்த பல்வேறு *விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் ஓரிகாமி செயல்பாடுகளில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின்போது இயற்பியல், கணிதம், வேதியியல் மற்றும் உயிரியல் தொடர்பான பல கருத்துகள் செயல்முறை* விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும், *கார்பன் டை ஆக்சைடு பற்றிய அடிப்படைகள் மற்றும் தாவரங்கள்–மனிதர்கள்* வாழ்வில் அதன் முக்கியத்துவம் குறித்து எளிய பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது. தொடர்ந்து, மனிதர்களின் *தோல் மற்றும் முடியின்* *நிறத்திற்குக் காரணமான “மெலனின்” என்னும் நிறமிப்பொருள் பற்றியும், அது சூரிய ஒளியிலிருந்து உடலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும்* குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமளித்தார். அதேபோல், அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் *சமையல் சோடாவின் தன்மைகள், அது உணவுப் பொருட்களை எவ்வாறு பொங்கச் செய்கிறது, மேலும் சில எளிய வேதியியல் வினைகளில் அது எவ்வாறு செயல்படுகிறது* என்பதையும் செய்முறை விளக்கங்களுடன் எடுத்துரைத்தார். குழந்தைகள் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் அவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

.

துளிர் இல்ல பயிற்சி மண்டல அளவில் 26.5.2026 காலை 10 மணிக்கு பூபதி சரவணகுமார் இல்லத்தில்         தலைவர்   திரு.சு.சங்கரன் ...
05/06/2026

துளிர் இல்ல பயிற்சி மண்டல அளவில் 26.5.2026 காலை 10 மணிக்கு பூபதி சரவணகுமார் இல்லத்தில் தலைவர் திரு.சு.சங்கரன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை திரு. பூபதி சரவணகுமார் செயலாளர் வழங்கினார். பாடல்கள் முனீஸ்வரி பொருளாளர், சிவரஞ்சனி பாடினர். ஓரிகாமி செயல்பாடு ஜெயலட்சுமி காமேஷ் செய்து காட்டினர். மந்திரமா தந்திரமா தீபா முத்துலட்சுமி செய்தனர். புத்தக வாசிப்பு குறித்து பாண்டிச்செல்வி மற்றும் பூபதி சரவணகுமார் வழங்கினர். மதியம் சுவையான உணவு வழங்கப்பட்டது. தொழில் இல்ல மாதிரி செயல்பாடுகள் குறித்து கருத்தாளர்களிடம் விவாதிக்கப்பட்டது. அறிவியல் மனப்பான்மை குறித்து திரு. ராஜமாணிக்கம் ஐயா நிகழ்வினை தொகுத்து பேசினார். தொடர் செயல்பாடுகளாக துளிர் இல்லத்தை நடத்துவது குறித்து சிறப்பாக பேசினார். நன்றியுரை திருமதி. முனீஸ்வரி அவர்கள் வழங்கினார். கலந்து கொண்ட அனைவருக்கும் திருமங்கலம் கிளையின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🙏🙏🙏

இன்று 26-05-2026  மருத்துவர். சுந்தரராமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலை...
05/06/2026

இன்று 26-05-2026 மருத்துவர். சுந்தரராமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் திருநகர் சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து ஹார்விபட்டி மக்கள் அதாவது ஆண்களும் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும். மருத்துவருக்கும் செவிலியர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பு என்பது எந்த அளவிற்கு உள்ளது. போன்ற கேள்விகளை மருத்துவர். சுந்தரராமன் அவர்கள் கேட்டறிந்தார். இந்த கூட்டத்திற்கு சென்னையில் இருந்து நால்வர் கொண்ட டீம் மற்றும் திருநகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் அரசு சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மக்கள் ஏராளமான கேள்விகளை மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சி ஹார்விபட்டி 96 வது வார்டு கவுன்சிலர் சகோதரி. விஜயா அவர்களும், மற்றும் திருமிகு.ஸ்டெல்லா அவர்களும் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்வில் மக்களை தேடி மருத்துவ ஊழியரும் கலந்து கொண்டு அவர் என்ன பணிகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் கூறினார். நிகழ்வில் ஆண்களும் பெண்களும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இன்று 30-05-2026 மதுரை  மூட்டா அலுவலக அரங்கில் நடத்தப்பட்ட TNSF MDU OB 2026.  நிர்வாகக் குழு  மற்றும் செயற்குழு  கூட்டத்...
05/06/2026

இன்று 30-05-2026
மதுரை மூட்டா அலுவலக அரங்கில் நடத்தப்பட்ட TNSF MDU OB 2026. நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தின் சில காட்சிகள்.

Address

6, Kakkathoppu Street, Madurai-625 001
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai District TNSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மதுரை மாவட்ட அறிவியல் இயக்கம் Madurai District TNSF:

Share