08/12/2025
ஒரு தசாப்த சேவை. தொடர்ந்து உணர்வுகள் மேலும் மேலும் செய்ய வேண்டும்.
அதனை முன்னிட்டு நேற்று (07.12.2025) Little Hearts காப்பகத்தில் கொண்டாடப்பட்டது.
முதலாவதாக 10 ஆண்டுகள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு உள்ள மகளிர்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது.
அதன்பின் காப்பக வளாகத்தில் அழகு செடிகளும் சிலவற்றை நட்டு வைத்தோம்.
உணர்வுகள் சார்பாக காப்பகத்தில் உள்ள மக்களுக்கு ஒரு Carrom Board வழங்கப்பட்டு போட்டிகளும் நடைபெற்றது.
Dice and Burst Balloon, musical chair, பாட்டு, நடனம் என அங்கு சிகிச்சையில் உள்ளோர் பலரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தத் துவங்கினர். அறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் அவர்களுக்கு மன நிறைவாக இருந்ததை உணர்ந்தோம். அதற்கேற்றார் போல நாமும் திறந்த வெளி மைதானத்தில் பந்தல் போட்டு ஒரு தளம் அமைத்துக் கொடுத்திருந்தோம்.
உணவு வந்தும் கூட போட்டிகள் முடிக்க மனமில்லாமல் ஒரு வழியாக நிறுத்திக் கொண்டோம். அனைவருக்கும் நமக்கும் உட்பட நல்ல மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தோம். முக்கியமாக இது வழக்கமான உணர்வுகள் நிகழ்ச்சியாக இல்லாமல் ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்திருந்தது மிக்க மகிழ்ச்சி.
போட்டிகள் அனைத்தும் குழந்தைகளே ஏற்பாடு செய்தனர்.
மறக்க முடியாத நிகழ்வாக இது அமைந்தது.
எங்களுடன் பயணிக்கும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏
https://www.instagram.com/reel/DR_T6uHj8qw/?igsh=bDVkYTc1OW83Yzdx