02/03/2026
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ.
*நன்மைக்கான அழகிய நினைவூட்டல்.*
கலிமா அறக்கட்டளை ஒரு பார்வை....
"கலிமா" - குமரி மாவட்ட அரேபியா வாழ் முஸ்லிம்கள் ஒருங்கிணைப்புச் சங்கம்.
2000 ஆம் ஆண்டில் சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு விதைக்கப்பட்ட கலிமா எனும் சின்னஞ்சிறு விதை ஒன்று துளிர்ந்து, தழைத்து, நிழல் தரும் தருவாய் வளர்ந்து 26ஆம் ஆண்டில்...
எல்லா புகழும் இறைவனுக்கே!
இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கமாகக் கொண்டும், பேதங்கள் மறந்து வேற்றுமை களைந்து ஒத்த கருத்துடன் சமுதாய மேம்பாட்டிற்கு இயன்ற பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளுக்கு இறைவனின் அருளும் ஆதரவும் என்றும் உண்டு என்பதற்கு கலிமா நல்லதோர் உதாரணமாய் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல!
செய்யும் நற்காரியங்களுக்கு வாழ்வில் பலன் கிடைக்குமா என்று யோசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், வாழ்வில் கிடைத்த பலன்களுக்கு செய்ய வேண்டிய நற்காரியங்கள் நிறைய உள்ளது என்பதை எண்ணி தொடர்ந்து இறை நன்றி செலுத்தி, கல்வி சேவையாற்றி வருகிறார்கள் கலிமாவின் உறுப்பினர்கள்...
கலிமா வழங்கும் ஒவ்வொரு உதவியும் நற்செயல்களாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், உதவுபவர்களுக்கு இறைவனின் அருள் ஈருலகிலும் கிட்ட வேண்டும்.
இன்றைய சூழலில் நாம்,
கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்.
சமுதாயத்தில் நலிவுற்றவர்களைக் கை தூக்கிட வேண்டும்.
உயர்கல்வி கற்க ஆர்வமுள்ளவர்கள், அக்கல்வியை தடையின்றி தொடர உறுதுணை புரிய வேண்டும்.
கல்வி தான் ஒரு சமுதாயத்தின் அவலங்களை போக்குவதற்கான அடித்தளம். கல்வியறிவு பெற்ற ஒரு சமுதாயம் தான் விழிப்புணர்வும், தன்மானமும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு சமுதாயமாக அமையும். நமது சமுதாயம் இன்றைக்கு கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற காரணத்தால் உரிமைகள் இழந்து ஓரங்கட்டப்பட்டு நிற்கிறது.
மதிப்பெண்கள் பெற்றிருந்தும் வசதியின்மை காரணமாகத் தொடர்ந்து பயின்றிட வாய்ப்பற்று வருந்தும் மாணவர்களின் கல்லூரி கனவை நினைவாக்க அவர்களின் உயர் கல்விக்கு முடிந்த அளவு உதவி செய்து வருகிறது கலிமா.
பட்டப்படிப்புக்கும், பட்ட மேற்படிப்புகளுக்கும் நிதியுதவியுடன் உரிய வழிகாட்டுதலும் செய்து வருகிறது...
10 மற்றும் 12ஆம் வகுப்புகள் படித்து முடித்து உயர்கல்வி கற்றிட விரும்பும் மாணவர்களுக்காக சிறப்பு நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்,கணினி பயிற்சி வகுப்புகள் மற்றும் பிள்ளைகள் படிக்கவிருக்கும் பட்டபடிப்புகள் குறித்த விழிப்புணர்வை அவர்களின் பெற்றோர்களும் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது கலிமா அறக்கட்டளை.
இக்கல்வி சேவை பயணத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து பங்காற்றி வர வேண்டும்...
அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.
நன்றி
*கலிமா அறக்கட்டளை*
தொடர்புக்கு : +91 89037 62231