MBR Foundation MBR பவுண்டேஷன்

MBR Foundation MBR பவுண்டேஷன் "கருவுற்றால்தான் தாய்மையை
உணரமுடியு?

1. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

2. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.

3. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

4. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

5. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

6. பழமையைப் பற்ற

ி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

7. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

8. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு
கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

9. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.

10.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

டிவைன் ஃப்ளவர் பவுண்டேசன் சார்பாக ஒவ்வொருவரும் நடத்தப்படும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நலிவுற்றோருக...
24/12/2025

டிவைன் ஃப்ளவர் பவுண்டேசன் சார்பாக ஒவ்வொருவரும் நடத்தப்படும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நலிவுற்றோருக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை இன்றும் 24/12/2025 மாலை 3 மணி முதல் 4 மணி வரை நமது Ⓜ️🅱️®️ கராத்தே கரவுண்டர் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்

🇮🇳வழக்கறிஞர் ம. பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் MBA;MSW;LLM;
AdvocateⓂ️🅱️®️❤️💛❤️)
டிவைன் ஃப்ளவர் பவுண்டேசன் நிறுவனர்

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிட...
25/05/2024

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.
குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்..

பெரிய தொகைதான்,
இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.
அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.
அதுல சந்தேகமே இல்லை.
ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .

அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.
எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.

பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்...

பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம் பலவீனப்படவேண்டாம் !
# Fear
# Attitute

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்...1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட்...
25/05/2024

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்...

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்...

அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர்...

அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்...

நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இயலாத நாற்றம் வந்துகொண்டிருந்தது. அழுகிக்கொண்டிருக்கும் மாமிசத்திலிருந்து வருவதுபோன்றதான அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று ஒரு அறையை அடைந்தேன்...

அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரசாவைக் கண்டேன். தன் மரணப்படுக்கையிலிருந்த நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவனது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது...

அவன் உடல்முழுவதும் அழுகி, புண்களில் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்னை, மிகுந்த அன்புடன் அந்தப் புண்களில் வழிந்துகொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக்கொண்டிருந்தார். அவன் மிகுந்த வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப்புரட்டியது...

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டிடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன்… NavjotSingh Sidhu .. International Cricketer அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தான்...

பத்து நிமிடங்கள் கழித்து அன்னை தெரசா என்னிடம் வந்தார். புன்னகையுடன், ‘Yes My Son’ என்றார். ‘Mother I wanted to meet you’ என்றேன். ‘Come my son! Follow me!’ என்றவர் நடக்கத் துவங்கினார். அலுவலகம் வந்தோம்...

நான் மனம் நிறைய அகங்காரத்துடன் என் பாக்கெட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்தேன். அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, ‘Mother.. You are an Instrument of Good... I have come here to assist you. I would be really obliged if you accept this’ என்றேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு, ‘Son.. I don’t need your money. I need your time. Can you spend time with these people? Can you give me some days where you can nurse them?’ என்றார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது...

‘இவ்வுலகில் இப்படி உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களா? நான் கொடுக்கும் பணத்தை மறுத்து, என்னை வந்து இந்த நோயாளிகளுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்துபோனேன்...

அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் என்னால் நிற்கக் கூட இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வது? That was a life changing story for me...

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்குநூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்...

- நவ்ஜோத்சிங் சித்து.

படித்ததில் பிடித்தது...

இந்தியாவிற்கு வெளியே வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு சாதாரண இந்தியா என்றால் புத்தனின் நாடு என்றே பொருள்படுகிறது. புத்...
23/05/2024

இந்தியாவிற்கு வெளியே வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு சாதாரண இந்தியா என்றால் புத்தனின் நாடு என்றே பொருள்படுகிறது. புத்தரின் சமயமான பௌத்தம் தொடங்கும் போதே புரட்சி முறையில் தொடங்கியது. ஒழுக்கத்தினையே வற்புறுத்தியது. சிந்தனை சுதந்திரத்தை அளித்து தர்க்கத்தை ஊக்குவித்தது. அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகளை விஞ்ஞானத் தன்மையுடன் அளித்தது.

புத்தர் அகிம்சையை போதித்தார்,நான்கு வருணத்தை எதிர்த்தார், சதுர்வருண முறை தலைகிழாக புரட்டிப்போட்டார், சாதி வேறுபாடு, பாலின வேறுபாடு பார்க்காமல் அனைவரும் துறவு மேற்கொள்ள முடிந்தது. சமுதாய சீர்த்திருத்தில் பல சாதனைகளை செய்தார். நாத்திகராக வாழ்ந்தார் கடவுள் போல மதிக்கப்பட்டார். எளிமையாக சராசரி மனிதரிடையே உலா வந்தார். அவர் காலத்தில் அறிவொளி வீசியது பகுத்தறிவு கோலோச்சியது...!

இந்தியா என்பது அது பவுத்த நாடு.
பவுத்தம் இந்தியாவில் தோன்றியது.
புத்தர் இந்திய நாட்டில் பிறந்து, வளர்ந்து,வாழ்ந்தவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா முழுவதும் நாகர்களே (தமிழர்கள்) பெரும்பான்மையாக இருந்தனர்.
புத்தரின் இயற் பெயர் சித்தார்த்தர்.
சித்தார்த்தர் என்பது தமிழ் பெயர்.
புத்தர் தமிழர் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உண்டு.
இலக்கிய இலக்கண சான்றுகள் உள்ளன.
புத்தர் சாக்கியர் மரபைச் சார்ந்தவர்.
சாக்கியர் என்ற பெயரோடு தமிழ் நாட்டைச் சார்ந்த சாக்கிய நாயனார் என்பவர் ஒருவர் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்து இருக்கின்றார்.

பழைய தமிழ் அகராதியில் சாக்கியர் என்றால் "ஞானச் சமூகம்" என்று பொருள் கிடைக்கிறது.

தமிழ் அறிவு மரபுவழியும், சாக்கியர் அறிவு மரபு வழியும் பண்டைய காலத்தில் ஒன்றாக இருந்தனர்.

அது ஒன்றாக இருந்ததினாலே எத்தனையோ நூற்றுக்கணக்கான ஞான நூல்கள் எழுதப்பட்டன என்று பண்டிதர் அயோத்திதாசர் கூறுகின்றார்.

புத்தருக்கு வரதன்,பரதன் என்கிற பெயர் உண்டு.

அதனால் இந்நாட்டை "பாரத நாடு" அல்லது "வரதநாடு" என்றும் அழைப்பதும் உண்டு.

இப்பெயர் வழக்கு புத்தர் இறக்கும் வரை அழைக்கப்பட்டது.

புத்தர் இறந்த பிறகு இந்நாட்டை ஐந்திரர் நாடு என்று அழைக்கப்பட்டது.

புத்தர் ஐம்புலன்களை வென்றவர் என்பதால் ஐந்திரர் என்று 'ஐ' "இ" ஆக மாறி "இந்திரர்" ஆனது.

இன்றைக்கு "இந்தியா" ஆக உள்ளது...!

தமிழில் தோன்றிய மணிமேகலை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் புத்தரை "இந்திரன்" என்று குறிப்பிடுகிறது.

ஆக புத்தருக்கு இந்திரர் என்றும் பெயர் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

அனைவருக்கும் இனிய #புத்த_பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?    அதற்கு அந்த பிச்சை...
22/05/2024

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான்.
கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது.
இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு10 நிமிடம் நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ ,
அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,

இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,

இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான் இந்த வழிபாடு எல்லாம்.

மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துவீர்கள்.

நன்றி..

பிடித்திருந்தால் நண்பருக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ளுங்கள்...
பயனுள்ளதாக அமையும்..

அனைவருக்கும் நேரம் வரும், பொறுமையாக இருங்கள்..!ஆண்டு 2004. தினேஷ் கார்த்திக் என்ற இளம் விக்கெட் கீப்பர் இந்திய கிரிக்கெட...
09/05/2024

அனைவருக்கும் நேரம் வரும், பொறுமையாக இருங்கள்..!

ஆண்டு 2004. தினேஷ் கார்த்திக் என்ற இளம் விக்கெட் கீப்பர் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது, 2007 இல், அவர் தனது பால்ய தோழியான நிகிதா வஞ்சாராவை மணந்தார்.

தினேஷும் நிகிதாவும் தங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்கு தினேஷ் கேப்டனாகவும் இருந்தார். தமிழ்நாடு அணியில் இருந்து அவரது நெருங்கிய நண்பர், பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தவர் முரளி விஜய்.

ஒரு நாள், நிகிதா, தினேஷ் கார்த்திக்கின் அணியினரான முரளிவிஜய்யை சந்தித்தார். நிகிதா முரளி விஜயை கவர்ந்தார். அப்பாவி தினேஷ் கார்த்திக் இதை உணரவில்லை.

நிகிதாவுக்கும் முரளிக்கும் நெருக்கம் அதிகமாகி விரைவிலேயே அவர்கள் உறவுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் வெளிப்படையாகச் சந்திக்கத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் தவிர, தினேஷின் மனைவி நிகிதாவுடன் முரளி விஜய் தொடர்பு வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழக அணிக்கும் தெரியும்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு வந்தது.நிகிதா கர்ப்பமானார். ஆனால் அந்த குழந்தை முரளி விஜய்யின் குழந்தை என்று அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தினேஷ் கார்த்திக் உடைந்து போனார். நிகிதாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு அடுத்த நாளே நிகிதா முரளி விஜயை மணந்தார். மேலும் 3 மாதங்களுக்குப் பிறகு, அவர் அவர்களின் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

தினேஷ் கார்த்திக் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தன் மனைவிக்கும் நண்பன் முரளிக்கும் செய்த துரோகத்தை அவனால் எளிதில் மறக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை குடித்துவிட்டு மதுவுக்கு மாறினார். அவர் ஒரு தனிமனிதன் போல் ஆனார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி கோப்பையிலும் தோல்வியடைந்தார்.

தமிழக அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. மேலும் முரளி விஜய் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோல்வியின் கட்டம் அங்கு நிற்கவில்லை; அவர் ஐபிஎல்லில் கூட விளையாடவில்லை. ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிட்டார். கடைசியில் நம்பிக்கை இழந்த தினேஷ் தற்கொலை பற்றி பேச ஆரம்பித்தார்.

ஒரு நாள், ஜிம்மில் இருந்து அவரது பயிற்சியாளர் அவரது வீட்டிற்கு வந்தார். அவர் தினேஷ் கார்த்திக்கை மோசமான நிலையில் கண்டார். தினேஷை நேராக ஜிம்மிற்கு அழைத்துச் சென்றான். தினேஷ் மறுத்துவிட்டார், ஆனால் அவரது பயிற்சியாளர் அவரது பேச்சைக் கேட்கவில்லை.

அதே ஜிம்மில், இந்திய ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகாபல்லிகல் வருவார். தினேஷ் கார்த்திக்கின் நிலையைப் பார்த்ததும், அவளும் பயிற்சியாளருடன் சேர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்க ஆரம்பித்தாள்.

பயிற்சியாளர் மற்றும் தீபிகாவின் கடின உழைப்பு பலன்களைக் காட்டத் தொடங்கியது. தினேஷ் கார்த்திக் முன்னேற்றப் பாதையில் சென்றார்.

இதற்கிடையில் முரளி விஜயின் ஆட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. மறுபுறம் இந்திய அணியில் இருந்து முரளி விஜய் வெளியேற்றப்பட்டார். பின்னர் அவரது மோசமான ஆட்டத்தை கண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கூட அவருக்கு ஐபிஎல்லில் இருந்து வெளியேற வழி காட்டியது.

மறுபுறம், தீபிகா பல்லிகலின் ஆதரவுடன், தினேஷ் கார்த்திக் வலையில் தீவிரமாக பயிற்சி செய்யத் தொடங்கினார். இது ஒரு விளைவை ஏற்படுத்தத் தொடங்கியது, மேலும் தினேஷ் கார்த்திக் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் செய்யத் தொடங்கினார்.

விரைவில், அவர் ஐபிஎல்லில் தேர்வு செய்யப்பட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனானார். அவர் தீபிகா பல்லிகலுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். தீபிகாவை மணந்தார்.

அவரது வயதிற்கு ஏற்ப, தினேஷ் கிரிக்கெட்டில் வயதாகிவிட்டார். ரிஷப் பந்த் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்திருந்தார். கார்த்திக் தன் கேரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதை உணர்ந்தார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். மறுபுறம், அவரது மனைவி தீபிகா பல்லிகல் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தீபிகாவின் ஸ்குவாஷ் வாழ்க்கையும் நிறுத்தப்பட்டது.

தீபிகாவும், தினேஷ் கார்த்திக்கும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆடம்பரமான பங்களாவை விரும்பி வீங்கினர். 2021ல், சென்னையின் அதே பகுதியில் ஒரு மாளிகையை வாங்குவதற்கான வாய்ப்பு வந்தது. அதை வாங்க முடிவு செய்தான் தினேஷ். தீபிகா மற்றும் தினேஷ் இருவரும் விளையாட்டு உலகில் இருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்ற நிலையில், இவ்வளவு விலையுயர்ந்த ஒப்பந்தத்தை எப்படி நிறைவேற்றுவார்கள் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்..?

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனியை மீண்டும் விக்கெட் கீப்பராக அணியில் பார்க்க விரும்புவதாக தினேஷ்க்கு தகவல் கிடைத்தது.

2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தொடங்கியது. ஆனால் இம்முறை CSKக்கு பதிலாக RCB இவரை வாங்கியுள்ளது. தினேஷின் மனைவி தீபிகாவும் விளையாடத் தொடங்கினார், அவர்களின் இரட்டைக் குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு, கிளாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார்.

தினேஷ் கார்த்திக்கின் வெற்றிக் கதையை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

மீண்டும் விழுவதும் எழுவதும் கார்த்திக்கின் வாழ்க்கை சொல்கிறது. எப்போதும் முரண்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள்.
-Advocate Ⓜ️🅱️®️

Rupees one lacks have deposited in the co-operative credit society on 8-5-2024 in the name of "Mithran".Who is the son o...
08/05/2024

Rupees one lacks have deposited in the co-operative credit society on 8-5-2024 in the name of "Mithran".Who is the son of our deceased member Adv.Mathanlal..

🅿️🅱️🅰️*பத்மநாபபுரம்* வழக்கறிஞர்கள் சங்க மூத்த வழக்கறிஞர்கள் மற்றும்
சக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏!!!!

நமது பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் மறைந்த வழக்கறிஞர் மதன்லால் அவர்களின் மகன் மித்திரன் பெயரில் வருங்கால வைப்பு நிதியாக நமது பத்மநாபபுரம் வழக்கறிஞர் விளையாட்டு குழு சார்பாக இன்று ரூபாய் ஒரு லட்சம் வழக்கறிஞர் மதன்லால் அவர்களின் குழந்தையின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்பட்டது. மேலும் வருங்காலங்களில் நமது வழக்கறிஞர்களின் வளர்ச்சியோடு சேர்ந்து பல நல்ல உதவி திட்டங்களையும் செய்ய இது போன்ற அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்றிணைவோம்🤝🇮🇳

ஒரு தவறு செய்தால்..பால் கொஞ்சம் தவறு செய்தால் அது தயிராகும். பாலை விட தயிருக்கு  மதிப்பு அதிகம். தயிரை கடைந்தெடுத்தால், ...
08/05/2024

ஒரு தவறு செய்தால்..

பால் கொஞ்சம் தவறு செய்தால் அது தயிராகும். பாலை விட தயிருக்கு மதிப்பு அதிகம். தயிரை கடைந்தெடுத்தால், அது வெண்ணையாக மாறும். தயிர் மற்றும் பால் இரண்டையும் விட வெண்ணை மிகவும் மதிப்பு வாய்ந்தது. வெண்ணெயை உருக்கினால், சூடுபடுத்தினால் நெய்யாகிறது. எல்லாவற்றையும் விட நெய்க்கு மதிப்பு மிக அதிகம்.

சாதாரணமாக இருந்த பாலின் நீண்ட போராட்டமும், சவால்களும், அழுத்தமும் அதை மதிப்புமிக்க நெய்யாக மாற்றுகிறது.

திராட்சை ஜூஸ் கம்மி விலைதான். ஆனால் திராட்சை ஜூஸ் புளிப்பாக மாறினால், அது திராட்சை ஜூஸை விட அதிக விலை கொண்ட ஒயினாக மாறுகிறது. நீங்கள் தவறு செய்ததால் நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. தவறுகள் உங்களை மிகவும் மதிப்புமிக்க மனிதனாக மாற்றும் அனுபவங்கள்.

கொலம்பஸ் ஒரு பயண பிழையை செய்தார், வழி தவறினார். ஆனால் அது அவரை அமெரிக்காவைக் கண்டுபிடிக்கச் செய்தது. அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கின் தவறு அவரை பென்சிலின் கண்டுபிடிக்க வழிவகுத்தது. உங்கள் தவறுகள் உங்களை வீழ்த்த மட்டும் விடாதீர்கள். அந்த தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்த திசை, எந்த திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.

தவறுகளில் இருந்து என்ன நாம் கற்கிறோமோ அதுவே சரியானவை.

வாழ்த்துக்கள் நண்பர்களே..
Advocate Ⓜ️🅱️®️

THE 3 TYPES OF PEOPLE IN YOUR LIFE.. 1. The Leaf people2. The Branch people3. The Root peopleLEAF PEOPLE:These are peopl...
08/05/2024

THE 3 TYPES OF PEOPLE IN YOUR LIFE..

1. The Leaf people
2. The Branch people
3. The Root people

LEAF PEOPLE:
These are people who come into your life just for a season. You can't depend on them because they are weak. They only come to take what they want, but if the wind comes they will leave.
You need to be careful of these people because they love you when things are okay, but when the wind comes they will leave you 🥺

BRANCH PEOPLE:
They are strong, but you need to be careful with them too. They break away when life becomes tough and they can't handle too much weight. They may stay with you in some seasons, but they will go when it becomes harder 😢

ROOT PEOPLE: These people are very important because they don't do things to be seen. They are supportive even if you go through a difficult time they will water you and they are not moved by your position they just love you like that ...

It's not all people you meet or are your friends, that will stay with you.
Only the root type of people will stay no matter the season.

கழுகு மற்றும் கிளிஇன்றைய வெற்றிக் கதை.ஒரு தற்பெருமை மிக்க கிளி கழுகை நெருங்கி, அதனிடம் சொன்னது."உலகின் மிக உயரமான மரங்கள...
15/04/2024

கழுகு மற்றும் கிளி

இன்றைய வெற்றிக் கதை.

ஒரு தற்பெருமை மிக்க கிளி கழுகை நெருங்கி, அதனிடம் சொன்னது.

"உலகின் மிக உயரமான மரங்களுக்கு மேல் என்னால் பறக்க முடியும். உங்களால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியுமா?"

கழுகு சொன்னது.
"சரி, நான் உண்மையில் ஒரு நல்ல ஃப்ளையர் இல்லை, அதனால் என்னால் மிக உயரமாக பறக்க முடியாது.

கிளி சிரித்தது.

"அட, என்ன அவமானம்...இந்த பறவை ராஜ்யத்தில் உள்ள பெரும்பாலான பறவைகளை விட நான் உயரமாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் மிகவும் பாக்கியசாலி" என்று தற்பெருமை காட்டியது.

"நீ உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் தான் " கழுகு சொன்னது.

கிளி அந்த கழுகை அவமானப்படுத்த நினைத்தது.

மறுநாள், கிளி மீண்டும் கழுகை நெருங்கி அதனிடம் சொன்னது.

"உயரமாகப் பறப்பது எப்படி என்று நான் உனக்குக் கற்றுக் கொடுத்தால், நீ என்னைப் போலவே மிக உயரமாக பறக்க முடியும், வருகிறாயா?"

"அப்படியா, சரி வருகிறேன்" கழுகு தயாரானது.

கழுகு, கிளி இரண்டும் பறக்க ஆரம்பித்தன. ஆனால் கழுகு பலத்துடன் வேகமாக பறந்தபோது கிளி வியப்படைந்தது, கழுகு வெல்ல முடியாத அளவுக்கு உயரமாக பறந்தது. கிளியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

கழுகு இறுதியாக கீழே இறங்கியதும், கிளி, வருத்தமும் வெட்கமும் கொண்டு, கழுகிடம் கேட்டது.

"நீங்கள் ஒரு சாம்பியன். ஏன் என்னிடம் முன்னாடியே சொல்லவில்லை?"

கழுகு சிரித்துக் கொண்டே சொன்னது.

"அதுதான் கழுகுக்கும் கிளிக்கும் உள்ள வித்தியாசம். நான் கழுகு, நான் அதிகம் பேசமாட்டேன். நான் தற்பெருமை காட்ட மாட்டேன், என் மதிப்பு எனக்கு மட்டுமே தெரியும், அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் என் சக்திக்கும் திறமைக்கும் பெயர் பெற்றவன்.

புயல் மேகங்களுக்கு மேலே பறக்கும் ஒரே பறவை நான்தான்... மழையின் போது மற்ற பறவைகள் கூட்டில் தஞ்சம் அடையும் போது, மேகங்களுக்கு மேலே பறந்து மழையைத் தவிர்க்க பறக்க என்னால் முடியும். என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் அதிக இரத்தத்தை என் இரத்த ஓட்டத்தில் செலுத்துவதன் மூலம் என் உடலில் அதிக ஆக்ஸிஜனை ஏற்படுத்திக்கொள்கிறேன். கிளிகளுடன் விவாதம் பேசி, போட்டியிட்டு எனது நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிக்கொள்ள விரும்புவதில்லை."

கதையின் கருத்து:

நண்பர்களே.. தற்பெருமை பேசும் கிளியாக இருக்காதீர்கள். கழுகைப் போல அடக்கமாகவும் அமைதியாகவும் இருங்கள். யாரிடமும் உங்கள் தகுதியை நிரூபிக்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் யார், உங்களால் என்ன செய்யமுடியும் முடியும் என்பதை காலம் நிரூபிக்கும். முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்.

வாழ்த்துக்கள் நண்பர்களே..

Ⓜ️🅱️®️

Address

Mulagumoodu
Kanyakumari
629167

Website

Alerts

Be the first to know and let us send you an email when MBR Foundation MBR பவுண்டேஷன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share