Ayyavazhi

Ayyavazhi The History of Ayyavazhi traces the religious history of Ayyavazhi, a belief-system originated in mid

The History of Ayyavazhi traces the religious history of Ayyavazhi, a belief-system originated in mid-nineteenth century in Southern India. Ayyavazhi came to be noticed by the large number of people gathering to worship Ayya Vaikundar in the middle of the 19th century. The majority of the followers of Ayyavazhi were from marginalised and poor sections of society.

02/03/2026
 #ஈச்சன்விளை  #அய்யா கால் நாட்டி தந்த  #நாராயணசாமி நிழல்தாங்கலில் இன்று அய்யாவுக்கு  #திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திரு...
09/01/2026

#ஈச்சன்விளை #அய்யா கால் நாட்டி தந்த #நாராயணசாமி நிழல்தாங்கலில் இன்று அய்யாவுக்கு #திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழாவானது இன்று (09-01-2026) நடைபெறுகிறது. திரு நாளை முன்னிட்டு
இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை
இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி நிழல்தாங்கலை வலம் வருதல்
இரவு 8 மணிக்கு சமபந்தி தர்மம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இரவு 9 மணிக்கு அய்யாவுக்கு திருக்கல்யாண பணிவிடை
இரவு 11 மணிக்கு இனிப்பு வழங்குதல்
அனைத்து அன்பு கொடி மக்களும் அய்யாவின் பணி விடையில் கலந்து அய்யாவின் அருள் பெற்று செல்ல அன்புடன் அழைக்கிறோம் .

 #ஈச்சன்விளை  #செட்டிகுடியிருப்பு  #அய்யா கால் நாட்டி தந்த  #நாராயணசாமி நிழல்தாங்கலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெற...
26/12/2025

#ஈச்சன்விளை #செட்டிகுடியிருப்பு #அய்யா கால் நாட்டி தந்த #நாராயணசாமி நிழல்தாங்கலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஏடு வாசிப்பு திருவிழாவானது இந்த ஆண்டு இன்று (26/12/2025 ) வெள்ளிக்கிழமை துவங்கி (12/01/2026) ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், சமபந்தி விருந்து/அன்னதர்மமும் அய்யா நிச்சயித்தபடி நடைபெற உள்ளதால் அன்புக்கொடி மக்கள் அனைவரும் வருகை தந்து அய்யாவின் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 #அகிலத்திரட்டு அம்மானை இயற்றிய மூலபதியான  #தாமரைகுளம்_பதியில் (26/12/2025) இன்று மாலை 5.00 மணிக்கு அய்யாவுக்கு திருக்கல...
26/12/2025

#அகிலத்திரட்டு அம்மானை இயற்றிய மூலபதியான #தாமரைகுளம்_பதியில் (26/12/2025) இன்று மாலை 5.00 மணிக்கு அய்யாவுக்கு திருக்கல்யாண திருஏடுவாசிப்பு மற்றும் இரவு 08.00 மணிக்கு அய்யா வாகனத்தில் பதிவலம் வருதலும் நிகழ்வும் இரவு 09.00 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறுகிறது அனைவரும் திருவிழாவிற்கு வருகைதந்து அய்யாவின் திருவருள் பெற்றுச்செல்லுமாரு அன்புடன் அழைக்கிறோம்

 #சுவாமிதோப்பு  #அய்யா_வைகுண்டசாமி  #தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு
19/12/2025

#சுவாமிதோப்பு #அய்யா_வைகுண்டசாமி #தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு

சலுகைகளுக்கான அணுகலைப் பெற இந்தச் சேனலில் குழு சேருங்கள்:https://www.youtube.com/channel/UCwoSmmptLSU0baK6gfgNL0g/join

 #பஞ்சபதிகளில் ஒன்றான  #பூப்பதி_யில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருஏடு வாசிப்பு திருவிழாவானது இந்த ஆண்டு க...
25/11/2025

#பஞ்சபதிகளில் ஒன்றான #பூப்பதி_யில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருஏடு வாசிப்பு திருவிழாவானது இந்த ஆண்டு கார்த்திகை 5 ம் தேதி (21/11 /2025 ) வெள்ளிக்கிழமை துவங்கி கார்த்திகை 21 ம் தேதி (07/12/2025) வரை 17 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாள் இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனிவருத்தல் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெற்றது.
திருவிழாவின் 10-ம் நாள் இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனிவருத்தல் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 15-ம் நாள் திருக்கல்யாண திருவிழா மாலை 6.30 மணிக்கு பணிவிடை, பெரிய உகப்படிப்பு, அதனைத்தொடர்ந்து 2024-2025-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு (புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி) 12-ம் வகுப்பு (சுண்டப்பற்றிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி) அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு பரிசு வழங்குதல். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண அன்னதானம்‌, இரவு 9.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு , இரவு 11.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனிவருத்தலும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 17-ம் நாள் மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு , இரவு 8.45 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனிவருத்தல் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், அன்னதர்மமும் அய்யா நிச்சயித்தபடி நடைபெற உள்ளதால் அன்புக்கொடி மக்கள் அனைவரும் வருகை தந்து அய்யாவின் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அய்யா வைகுண்டசுவாமியின்  #ஐம்பதி_களில் அகிலத்திரட்டு அம்மானைத்தந்த மூலப்பதியான   #தாமரைகுளம்_பதியில்  #சித்திரைத்திருவிழ...
17/04/2025

அய்யா வைகுண்டசுவாமியின் #ஐம்பதி_களில் அகிலத்திரட்டு அம்மானைத்தந்த மூலப்பதியான #தாமரைகுளம்_பதியில் #சித்திரைத்திருவிழா வருகிற 18-ம்தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் காலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை அதனைத்தொடர்ந்து உகப்படிப்பு நடைபெறுகிறது 6 மணிக்கு திருக்கொடியேற்றும் நிகழ்ச்சியை பதியின் தலைமை குரு சௌ.இராஜசேகரன் நடத்துகிறார். பின்னர் காலை சிற்றுண்டி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடைகள், உச்சிப்படிப்பு நடைபெறுகிறது .
முதல் நாள் இரவு 7 மணிக்கு அய்யா #சிம்மாசன__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
இரண்டாம் நாள் அய்யா #தாமரை_பூ வாகன பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
மூன்றாவது நாள் அய்யா # அனுமன் வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
நான்காவது நாள் அய்யா #சர்ப்ப_வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஐந்தாம் நாள் அய்யா #கருட__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஆறாவது நாள் அய்யா #மயில்_வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஏழாவது நாள் அய்யா #பூஞ்சப்பர__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
எட்டாம் நாளான 25ம் தேதி இரவு அய்யா #வெள்ளைகுதிரை வாகனத்திற்கு எழுந்தருளி #கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் அய்யா #அன்னவாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
பத்தாவது நாள் அய்யா #இந்திரவாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
நிறைவு நாளான 29ம் தேதி திங்கள்கிழமை காலையில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு மற்றும் காலை 9.30 மணிக்கு அய்யா #திருத்தேர் பவனியும்(தேரோட்டம்) நடைபெற இருக்கிறது அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு அய்யா #நந்திவாகன பவனி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல் நிகழ்ச் சியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், #உகப்படிப்பு, #உச்சப்படிப்பு, #அன்னதர்மங்கள், வாகனப்பவனிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குருபரம்பரையினர் செய்துவருகின்றனர். அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

புன்னை மரம் பூவாய் சொரிந்த  #பூப்பதி சித்திரை திருக்கொடியேற்ற திருவிழா நிகழும் 193-வது வைகுண்டர் ஆண்டு சித்திரை மாதம் 12...
14/04/2025

புன்னை மரம் பூவாய் சொரிந்த #பூப்பதி சித்திரை திருக்கொடியேற்ற திருவிழா

நிகழும் 193-வது வைகுண்டர் ஆண்டு சித்திரை மாதம் 12- ம் தேதி (25-04-2025) வெள்ளிக்கிழமை காலை பூப்பதி-யில் திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி சித்திரை மாதம் 22-ம் தேதி (05-05-2024) திங்கள் கிழமை வரை 11 நாட்கள் பணிவிடை, உகப்படிப்பு, உச்சி படிப்பு, வாகன பவனி, தர்மங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் அன்புக்கொடி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 #தென்காசி மாவட்டம்,  #ஆழ்வார்குறிச்சி வடக்கு வாசல் அழகுபதி மாசி திருவிழா அழைப்பிதழ்.நிகழும் வைகுண்டர் 193 ஆம் ஆண்டு மாச...
27/02/2025

#தென்காசி மாவட்டம், #ஆழ்வார்குறிச்சி வடக்கு வாசல் அழகுபதி மாசி திருவிழா அழைப்பிதழ்.

நிகழும் வைகுண்டர் 193 ஆம் ஆண்டு மாசி மாதம் 16 ஆம் தேதி 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை அய்யா நிச்சயித்த நேரத்தில் கொடியேற்றப்படும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

மாசி மாதம் 24 ஆம் தேதி 08-03-2025 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தர்மம் நடைபெறும்.

மாசி மாதம் 25 ஆம் தேதி 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை

காலை 11.00 மணிக்கு பாபநாசத்திலிருந்து சந்தனக்குடம் எடுத்து வருதல்
மதியம் 12-00 மணிக்கு உச்சிப்படிப்பு நடைபெறும்
மதியம் 01-00 மணிக்கு கஞ்சி தர்மம் நடைபெறும்.
இரவு 08-00 மணிக்கு தர்மம் நடைபெறும்.
இரவு 09-00 மணிக்கு அய்யா ஆஞ்சநேயர் வாகனத்தில் பவனி வருதல்.
அதனை தொடர்ந்து அய்யா தொட்டிலில் தாலாட்டு காட்சி நடைபெறும்.

பொதுமக்கள் அன்புகொடிமக்கள் அனைவரும் வருகை தந்து அய்யாவின் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 #அம்பை மாநகர்  #வாகைக்குளம்  #வாகைபதியில்  #அய்யா  #வைகுண்டரின் 193வது அவதார தினவிழா மற்றும் வாகைபதி அய்யா ஆதிநாராயண வை...
27/02/2025

#அம்பை மாநகர் #வாகைக்குளம் #வாகைபதியில் #அய்யா #வைகுண்டரின் 193வது அவதார தினவிழா மற்றும் வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டர் முன்னின்று முறை நடத்தும் மாசிமகா ஊர்வலம் வருகிற (4-3-25) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது

அகிலத்திரட்டு அம்மானை அருளிய  #தாமரைகுளம் பதியில் அய்யா வைதண்டரின் 193-வது அவதார தின விழா மாசி மாதம் 20-ம் தேதி (4-3-202...
20/02/2025

அகிலத்திரட்டு அம்மானை அருளிய #தாமரைகுளம் பதியில் அய்யா வைதண்டரின் 193-வது அவதார தின விழா மாசி மாதம் 20-ம் தேதி (4-3-2025) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. அன்புக் கொடி மக்கள் அனைவரும் வருகை தந்து அய்யாவின் பேரருள் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

Address

Swamythoppu
Kanyakumari
629704

Alerts

Be the first to know and let us send you an email when Ayyavazhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share