Neethi Natchathiram TRUST

Neethi Natchathiram TRUST ✨உனக்கு நீ செய்ய நினைப்பதை பிறருக்கும் செய் 🎉🎊
நம்மால் இயன்றதை இயலாதோருக்கு செய்வோம். 🎉🎊🎉🎊💯❤️

நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨ அனைவருக்கும் வணக்கம். இந்த மாதம் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் மாதம்.ஆதரவு இல்லாத குழந்தைகள் ப...
03/06/2026

நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨
அனைவருக்கும் வணக்கம்.
இந்த மாதம் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் மாதம்.
ஆதரவு இல்லாத குழந்தைகள் படிப்பிற்காக அநேக உதவிகள் கேட்டிருந்தார்கள். நாமும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று வாக்களித்திருந்தோம். சிறு குழந்தைகள் தங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் காசுகளை எல்லாம் பொருட்களாக்கி நமக்காக உதவி செய்வதற்காக கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிகள்.🙏

✨தொடர்ந்து கொண்டிருக்கும்
நம் பணிகள்:

✨ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த வேளை உணவிற்கும், ஏங்குகின்ற ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
✨ ரோட்டோரத்தில் காணப்படும் மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டு வருகின்றன.
✨ முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு ஆடைகள், பழங்கள், மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

✨ நம்முடைய அனைத்து செயல்களிலும் நன்கொடைகளாக மற்றும் நேரடி உதவிகளாக உதவி செய்கின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்✨👏🏻🙏
தொடரட்டும் நம் பயணம் என்றும் வெற்றியுடன்✨👏🏻🙏
என்றும் இப்பணிகளில்
உங்களுடன்
நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨

28.01.2026🙏நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨🎊🎉      #மகிழ்ச்சிHAPPY  #நீதிநட்சத்திரம்  இரத்த தானம்...🩸🩸🩸திருநெல்வேலி மாவட்டம் ✨...
28/01/2026

28.01.2026🙏
நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨🎊🎉






#மகிழ்ச்சிHAPPY
#நீதிநட்சத்திரம்



இரத்த தானம்...🩸🩸🩸

திருநெல்வேலி மாவட்டம் ✨ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு இரத்தம் அளவு (Hb.6.2gm)
குறைவாக இருப்பதால் அவர்களுக்கு 5 யூனிட் (B Positive)இரத்தம் தேவைப்படுகின்றது.
இரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
9500181727.
9578363611.
நண்பர்களுடன் இந்த செய்தியை பகிரவும்.

இன்று நான் இரத்த தானம் செய்தேன்.
தொடர்ந்து பதிமூன்றாம் முறையாக நான் இரத்த தானம் செய்கின்றேன்.. ✨🎊

அனைவரும் இரத்த தானம் செய்ய முன் வரவேண்டும் ஒரே நோக்கத்தை முன் நிறுத்தி இப்பதிவு செய்யப்படுகின்றது. 🙏

இரத்த தானம் செய்வோம் அனேக உயிர்களை காப்போம்.. 🙏🎉🎊

✨🎊🙏🙏

என்றும் இப்பணியில்🙏
பிரேமின் தாஸ் 🎊✨
நீதி நட்சத்திரம் டிரஸ்ட் 🎊🎉..

நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨ December 2025 ✨அனைவருக்கும் வணக்கம் 👍இந்த வருடம் அனைவருக்கும் அநேக பாடங்களை கற்றுத் தந்திருக்...
28/12/2025

நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨
December 2025 ✨
அனைவருக்கும் வணக்கம் 👍
இந்த வருடம் அனைவருக்கும் அநேக பாடங்களை கற்றுத் தந்திருக்கும் ✨
வரும் வருடம் பல நன்மைகள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடக்க முதலில் இறைவனை வேண்டி கொள்கின்றேன்.

இந்த மாதம் அனேக உதவிகள் நம்மால் நடைபெற்றது ✨
13 ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது.
பெற்றோரை இழந்து தவிக்கின்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டது.
6 நாட்கள் ரோடு ஓரத்தில் இருக்கின்ற ஆதரவற்ற மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது ✨

இன்னமும் தொடரும் ✨

உணவு பொருட்களாக, ஆடைகளாக, பயன்படுகின்ற பொருட்களாக மற்றும் பணமாக உதவிகள் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ✨
என்றும் இப்பணிகளில்
உங்களுடன்
நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨

✨நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨ 07.12.2025✨அனைவருக்கும் வணக்கம். ஏழைகளுக்கு உதவி செய்தல், பசி போக்குவது, நோய் நீக்குவது, கல்...
08/12/2025

✨நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨
07.12.2025✨
அனைவருக்கும் வணக்கம்.
ஏழைகளுக்கு உதவி செய்தல், பசி போக்குவது, நோய் நீக்குவது, கல்வி உதவிகள், உதிரம் கொடுத்து உயிர் காப்பது, போன்ற அநேக உதவிகள் நம்மால் செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றது.👍
உதவிகள் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏

🎄புதிய ஆண்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.
பெற்றோர்களை இழந்து தவிக்கின்ற குழந்தைகள் 18 பேர் புத்தாடைகள் மற்றும் அவர்களுக்கு பயன்படும் பொருள்கள் என உதவிகள் கேட்டுள்ளனர்.

நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

வரப்போகின்ற புத்தாண்டை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவோம்.

என்றும் இப்பணிகளில் உங்களுடன்
நீதி நட்சத்திரம் டிரஸ்ட் ✨

Address

Kanyakumari
629252

Telephone

+919578363611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neethi Natchathiram TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Neethi Natchathiram TRUST:

Shortcuts

Share