27/12/2025
25.12.2025 IMPA மாதாந்திர கூட்டம் ஆனது, தமிழ்நாடே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நாம் நடத்திய காஞ்சி திருமுறை திருவிழாவிற்கு வெற்றி கொண்டாட்டம் கூட்டமாக இன்று திரு.பச்சையப்பன் பிரபு அவர்களின் விருந்து உபசரிப்பு கூட்டமாக நடந்தது, இக்கூட்டத்தில் காஞ்சி திருவிழாவிற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களையும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டது, கூடுதல் சிறப்பாக நம் IMPA மாமன்ற உறுப்பினர்களும், காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு இவ்விழாவிற்காக உழைத்த அனைவர்களையும் கௌரவித்தனர், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.