03/06/2024
#தொமஆசைவே #தொண்டைமண்டலஆதிசைவவேளாளர் #டிஎன்பிஎஸ்சி
அன்புடையீர் வணக்கம் 🙏. #காஞ்சிபுரம் நமது பொன்விழா கட்டிடத்தில் இன்று 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை 49ஆவது TNPSC Group4 coaching TNPSC பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நமது Tmasvs Kanchi சங்கத் தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் B.A. Natarajan Bhaskar அவர்களும், செயலாளர் Ln.திரு.புருஷோத்தமன் B.Sc. அவர்களும், பொருளாளர் திரு. G.கார்த்திகேயன் B.A. Ganesan Karthikeyan அவர்களும் மற்றும் நமது சங்கத்தின் கல்விக்குழுத் தலைவர் திரு. A.சண்முகம், B.sc., B.T., DEO (Retd), செயலாளர் திரு. B.முத்துக்குமார் செயலாளர் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சென்றவாரம் வரை நடைபெற்ற 8 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கும், சென்ற வாரம் வரை நடைபெற்ற 48 பயிற்சி வகுப்புகளில் அதிக வகுப்புகளுக்கு வருகை புரிந்த மூன்று மாணவ மாணவிகளுக்கும் பரிசளித்து மாணவர்கள் அணைவரும் நடைபெறவுள்ள தேர்வில் தேர்ச்சி பெற்று நமது சங்கத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் பேனா ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. கல்விக்குழு சார்பில் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கல்விக்குழு தலைவர் ஆகியோருக்கு கைத்தறித் துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நமது சங்கத் தலைவர் அவர்கள் காஞ்சி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பயிற்சி வகுப்பில் Mentor ஆக சேவை புரிந்த திரு.R.இராஜேந்திரன் மற்றும் திரு.V. நித்தியானந்தம் அவர்களுக்கும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உதவி செய்த திரு.V.குமார், திரு. V.சீனிவாசன் அவர்களுக்கும் மற்றும் பொன்விழா கட்டிடத் தலைவர் M.இராஜேந்திரன் மற்றும் உறுப்பினர் திரு.R.சந்திரசேகரன், பொறுப்பாளர் திரு C. பெரியசாமி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். மாணவர்கள் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற காரணமாயிருந்த நமது சங்கத் தலைவரை சிறப்பிக்கும் விதமாக கேக் வெட்டி, நிணைவுப் பரிசு வழங்கினர். TMASVS & கல்விக் குழு.