24/11/2025
------------------------------------------------------
*காஞ்சிபுரம் அண்ணல்*
*லயன்ஸ் சங்கம் துவக்கம்*
பன்னாட்டு லயன்ஸ் சங்கத்திடமிருந்து புதியதாக சாசனம் பெற்ற காஞ்சிபுரம் அண்ணல் லயன்ஸ் சங்கதத்தின் தொடக்க விழா 21-11-2025 அன்று காஞ்சிபுரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
துவக்க விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் N.D. பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய சங்க நிர்வாகிகளிடம் சாசனச் சான்றிதழை வழங்கினார்.
லயன்ஸ் பன்னாட்டு இயக்குனர் லயன்
S. மகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட முதல் துணை ஆளுநர் லயன் பா. பூர்ணசந்திரன் அவர்கள் புதிய சங்கத்தின் சாசன உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்தார். இரண்டாம் துணை ஆளுநர் லயன்
S. இரவி அவர்கள் புதிய சங்கத்தின் நிர்வாகிகளைப் பொறுப்பில் அமர்த்தி உரையாற்றினார்.
லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் லயன் அரிதாஸ், லயன் டாக்டர் சங்கரன்,
லயன் மா. அன்பு, லயன் T. நித்தியகுமார், லயன்
K. அருண்குமார் மற்றும் லயன் S. சுரேஷ் ஆகியோர் புதிய சங்கத்தை வாழ்த்திப் பேசினர்னர்.
சங்கத்தை துவக்குவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்ட மண்டலத் தலைவர் லயன் மோகன்ராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். வட்டாரத் தலைவர் லயன் ருத்திரகுமார் அவர்கள் புதிய சங்கத்தை வாழ்த்தினார். சங்கத் தலைவர் லயன் சேரன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார்.
விழாவில் காஞ்சிபுரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
புதிய சங்கத்தின் தலைவர் லயன்
S. பாஸ்கர், செயலாளர் லயன் C.S. ஆல்பின் எடிசன் மற்றும் பொருளாளர் லயன் J.கனகராஜ் ஆகியோர் புதிய சங்கம் சிறப்பான முறையில் இயங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
புதிய சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கான கல்விச் சேவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழா இறுதியில் ஹோஸ்ட் சங்கச் செயலாளர் லயன் சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.