TNTJ தென்காசி மாவட்டம்

TNTJ தென்காசி மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ தென்காசி மாவட்டம், Community Organization, நடு அய்யாபுரம் தெரு, Kadayanallur.

ஏகனின் திருப்பெயரால்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட நிர்வாகிகளை ம தி மு க துணை பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட...
11/04/2026

ஏகனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட நிர்வாகிகளை ம தி மு க துணை பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தி.மு. இராஜேந்திரன் அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார் .

அவருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் வாழ்த்துக்கள் சொல்லப்பட்டது

இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இட ஒதிக்கீட்டை அதிகப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் சமுதாய நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .

04/04/2026
ஏகனின் திருப்பெயரால்தென்காசி வடக்கு மாவட்ட தி மு க செயலாளரும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் சங்கரன்கோவில் ச...
01/04/2026

ஏகனின் திருப்பெயரால்

தென்காசி வடக்கு மாவட்ட தி மு க செயலாளரும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் சங்கரன்
கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சகோ இ. ராஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரினார்

மாவட்ட நிர்வாகம் தரப்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின். #பத்து_மாத_கால_செயல்_திட்டம்.. #அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி..1.அண்ணாலாரின் ஆட்சி முறை ( ...
29/03/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்.

#பத்து_மாத_கால_செயல்_திட்டம்..

#அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி..

1.அண்ணாலாரின் ஆட்சி முறை ( #ஏப்ரல்)

2.சிறுவர்களின் தோழர் நபிகளார் ( #மே)

3.இறுதிதூதரின் இறுதி பேருரை ( #ஜூன்)

4.பெண்ணுரிமை போற்றிய பெருமானார் ( #ஜூலை)

5.நபி வழி நடந்தால் நரகமில்லை ( #ஆகஸ்ட் )

6.இறைத்தூதர் வழியில் இளைஞர்கள் ( #செப்டம்பர்)

7.சமூக தீமைக்கு தீர்வு கண்ட நபிகள் நாயகம் ( #அக்டோபர்)

8.மாநபி வரலாறு அறிவோம்
( #நவம்பர்)

9. அண்ணலாரின் ஆளுமைகள் ( #டிசம்பர்)

10. அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி ஸல் ( #ஜனவரி)

இன்ஷாஅல்லாஹ்.

வீரியமாக செயல்படுவோம்.

26/03/2026

இன்ஷா அல்லாஹ்
கடையநல்லூர் பஜார் கிளை மர்கஸ் புதுப்பொலிவுடன் ஜும்ஆ ஆரம்பம்

23/03/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிளையின் சார்பாக நடைபெற்ற ரமலான் தொழுகையை பற்றிய செய்தி தொலைக்காட்சி செய்தியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ரமலான் தொழுகையின் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில்
23/03/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ரமலான் தொழுகையின் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிளையின் சார்பாக நடைபெற்ற ரமலான் தொழுகையை பற்றிய செய்தி செய்தித்த...
23/03/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிளையின் சார்பாக நடைபெற்ற ரமலான் தொழுகையை பற்றிய செய்தி செய்தித்தாள்களில்

அஸ்ஸலாமு அலைக்கும் ஈகை தின இரக்கமுள்ள ரமலான் மாதத்தின் மகிழ்வில் .....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நபிவழிபடி திடல் தொழுகையை முடித்துவி...
21/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

ஈகை தின இரக்கமுள்ள ரமலான் மாதத்தின் மகிழ்வில் .....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நபிவழிபடி திடல் தொழுகையை முடித்துவிட்டு டவுண்கிளை சார்பாக
பெருநாளான இன்று தினசரி மார்க்கெட் சிறு தொழில் செய்வோர் நகராட்சி ஊழியர்கள் காவல்துறை நண்பர்கள் (பஸ்) வாகனபயணிகள் என அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் இனிப்பு வழங்கி எங்களுடைய மகிழ்வை பகிர்ந்து கொண்டோம்.....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உயிரினும் மேலான உத்தமதூதர் காட்டிய வழியில் மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை கருப்பானவர்களை விட வெள்ளை நிறமுடையவர் உயர்ந்தவர் என்ற பாகுபாடும் இல்லை என்ற மந்திர சொல்லுக்கு கட்டுபட்டவர்களாக அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் இனிப்புகள் வழங்கி எங்களுடைய இந்த திருநாளை (பெருநாளை) எங்களுடைய தொப்புள்கொடி உறவினர்களோடு கொண்டாடி மகிழ்ந்தோம்

அல்ஹம்துலில்லாஹ்....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

21/03/2026
21/03/2026

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஏராளமானோர் கொண்டனர்

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் தொழுகை நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது
இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில குழு தலைவர் எம் எஸ் சுலைமான் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். தொழுகைக்குப் பின் அவர் ஆற்றிய குத்துபா பேருரையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக்குறித்து கவலைப்படாமல் தங்களின் பொருளாதார , பிராந்திய
நலனுக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் போர் கண்டனத்திற்குரியது, உலக நலன் கருதி மற்ற நாடுகள் தலையிட்டு
இப்போரை உடனடியாக நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்,

வளைகுடா நாட்டில் பெருநாளை நிம்மதியாக கொண்டாட முடியாமல் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்காக நாங்கள் உளமாற
பிரார்த்திக்கின்றோம் என்று கூறினார்.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் போர் பதற்றங்கள் தனிய வேண்டும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் உலக நன்மைக்காக நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது

Address

நடு அய்யாபுரம் தெரு
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ தென்காசி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ தென்காசி மாவட்டம்:

Share