08/06/2022
எங்க பார்த்தாலும், டிவி, பேப்பர், வலைத்தளம் என ஒரே ஆன்லைன் ரம்மி விளம்பரங்களும், சூதாட்ட விளம்பரங்களும் ....
ஆசையை தூண்டுதல் .......
சும்மா ஆடிப் பார்ப்போமே என தொடங்கிய பலர் அதில் அடிமையாகி மொத்த பணமும் இழந்து பித்து பிடித்த மனநிலை வந்து அதில் சிலர் உயிரையும் விடுகின்றனர்..
இதில் ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை.....
இளம் வயதில் கைநிறைய சம்பாதிக்கும் பலரும் சும்மாவிளையாட ஆரம்பித்து பணம் போன பிறகு நரி தின்ன கோழி நிலைதான்..
வெளியிலும் சொல்ல முடிவதில்லை...
சற்று ஆரம்பநிலையிலேயே வெளியில் வந்துவிடுங்கள்.
ஆயிரம் வழிகள் இருக்கிறது பணம் சம்பாதிக்க....
வெற்றிபெற்றாலும் அது அடுத்தவர் பணம்...பல வேதனைகள், வலிகள் உயிரிழப்புகளின் பணம்..
இதை தடைசெய்ய கடுமையாக போராடும் சூழல் விரைவில் ஏற்படும்...
இன்று 130000.00 இழந்ததிற்கே இந்த இளம் வயதில் உயிர்விட்டுவிட்டான் சஞ்சய்......ஒரு லட்சம் என்பது சிறு தொகையே ஆனால் அவன் குடும்பத்திற்கு பெரிது இழந்தபின் இறந்தே விட்டேன்.......
விரைவில் சில முடிவு எடுக்க வேண்டும்...
நமக்கு நடக்காதவரை
எல்லாமே வேடிக்கைதான் ......