அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் கோபி வட்டம் ஓலப்பாளையம்

  • Home
  • India
  • Erode
  • அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் கோபி வட்டம் ஓலப்பாளையம்

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் கோபி வட்டம் ஓலப்பாளையம் Sri Kamatchi Amman Temple in Olappalayam, Erode district, is a popular Hindu temple dedicated to Goddess Parvati.

Many devotees believe that the goddess grants blessings and fulfills wishes, with many sharing stories of receiving government jobs

ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் அமாவாசை பூஜை இனிதே நடைபெற்றது 🙏🙏🙏
18/03/2026

ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் அமாவாசை பூஜை இனிதே நடைபெற்றது 🙏🙏🙏

18/03/2026

அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ்
​ஓலப்பாளையம் கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் கமிட்டியினர் அன்புடன் அழைப்பது:
​நிகழும் மங்கலகரமான துன்முகி வருடம், சித்திரை மாதத்தில் நமது ஓலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
​திருவிழா நிகழ்ச்சிகள்:
​பூச்சாட்டுதல் விழா:
சித்திரை 16-ம் நாள் | ஏப்ரல் 29 | புதன்கிழமை
​சித்திரைத் திருவிழா (முக்கிய நிகழ்வு):
சித்திரை 24-ம் நாள் | மே 07 | வியாழக்கிழமை
​மஞ்சள் நீராட்டு விழா:
சித்திரை 25-ம் நாள் | மே 08 | வெள்ளிக்கிழமை
​பக்த கோடிப் பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டு, எல்லாம் வல்ல ஸ்ரீ காமாட்சியம்மன் திருவருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
​இப்படிக்கு,
ஊர் கமிட்டியினர்,
ஓலப்பாளையம்.

ராமனுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்கள் முதலில் சென்று கானவும் ராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் கான அயோத...
16/03/2026

ராமனுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்கள் முதலில் சென்று கானவும் ராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் கான அயோத்தி செல்லும் பொழுது பரத்வாஜ முனிவர் தன்னால் அவ்வளவு தூரம் வர இயலாது என்றார் அவருக்காக பட்டாபிஷேக கோலம் பூண்டு காட்சி தந்த இடம் தான் சேலம் நகரத்தில் இருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸதலம் தான் #அயோத்தியாபட்டினம் சென்று கானுங்கள்.

15/03/2026

ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா அழைப்பு
ஓலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு:
* பூச்சாட்டுதல் விழா: சித்திரை 16-ம் நாள் (ஏப்ரல் 29, புதன்கிழமை)
* சித்திரை திருவிழா: சித்திரை 24-ம் நாள் (மே 07, வியாழக்கிழமை)
* மஞ்சள் நீர் விழா: சித்திரை 25-ம் நாள் (மே 08, வெள்ளிக்கிழமை)
இந்தச் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு, ஸ்ரீ காமாட்சியம்மனின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஊர் கமிட்டியினர்,
ஓலப்பாளையம்.

ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் இன்றைய பௌர்ணமி பூஜை இனிதே நடைபெற்றது 🙏🙏🙏
02/03/2026

ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் இன்றைய பௌர்ணமி பூஜை இனிதே நடைபெற்றது 🙏🙏🙏

26/02/2026

பொதிகையில் பிறந்த முருகன்...

21/02/2026

ராமேஸ்வரத்தில் ஒருவர் வழிகாட்டியாக வந்தார். அவர் சொன்னது.

ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது வெறும் கடற்கரை..

ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..

ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்
படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.

​ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.
​இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.

அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.

தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்

ராமேஸ்வரம் கடல் அலைகளே இல்லாமல் குளம் போல அமைதியாக இருப்பதுதான் இதற்குப் பெரிய உதவியாக இருந்தது.

​அலைகள் அதிகமாக இருந்தால் படகு ஆடும், கல் கீழே விழுந்துவிடும்.
​ஆனால் அமைதியான கடல் என்பதால், டன் கணக்கிலான பாரத்தை ஏற்றிய படகுகள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிதானமாகத் தீவை அடைய முடிந்தது.

கரையை அடைந்த கற்களை, பல நூறு யானைகள் மற்றும் காளைகளைக் கொண்டு இழுத்து வந்தனர். உயரமான இடங்களுக்குக் கற்களைக் கொண்டு செல்ல, , மண் சரிவுப் பாதைகளை (Earth Ramps) அமைப்பார்கள்.

அதாவது, கோவிலின் உயரம் வளர வளர, மண்ணைக் கொட்டி ஒரு பெரிய மேடு போலச் செய்து, அதன் வழியாக யானைகளை வைத்து கற்களை மேலே தள்ளிக் கொண்டு செல்வார்கள். கோவில் கட்டி முடித்ததும் அந்த மண் அகற்றப்படும்.

ராமேஸ்வரம் கோயிலின் அஸ்திவாரம் என்பது 'மிதக்கும் அஸ்திவாரம்'

நம் முன்னோர்கள் "சாண்ட்விச்' முறையைப் பயன்படுத்தினார்கள்..
முதலில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மணலைத் தோண்டி, அங்கே நீர் ஊற்றி நிறைய யானைகளை விட்டு நடக்கச் செய்வார்கள். யானையின் கால் படும்போது அந்த இடத்தின் மணல் பல டன் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் மணலுக்கு இடையில் உள்ள காற்று வெளியேறி, அது பாறை போல இறுகிவிடும்.

அதன் மேல் கருங்கற்களை அடுக்குவதற்கு முன் கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து ஒரு 'பேஸ்ட்' போலச் செய்து இடையில் பூசினார்கள். இது காலப்போக்கில் கல்லை விடவும் வலிமையான ஒன்றாக மாறிவிடும்.இதற்குப் பிறகுதான் கற்களை அடுக்கத் தொடங்கினார்கள். இது நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது.

மணல் என்பதால் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் கோயில் சாய்ந்துவிடும். எனவே, மேற்கூரையின் எடையைத் தூண்கள் தாங்கும்போது, அந்தப் பாரத்தை மணலுக்குக் கடத்தாமல் தரைப்பகுதியில் பிரம்மாண்டமான 'தளவரிசை கற்களை' (Paving stones) விரித்தார்கள். இது பாரத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்தது.

ராமேஸ்வரத்தின் 3-வது பிரகாரம் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 1212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 20 இருந்து30 டன் எடை கொண்டது..

உலகிலேயே மிக நீளமான அந்தப் பிரகாரத்தின் தூண்கள் அனைத்தும் துல்லியமான சமச்சீர் நிலையில் உள்ளன. ஒரு முனையில் நின்று பார்த்தால், அனைத்துத் தூண்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இத்தனை ஆயிரம் டன் பாரம் கீழே இருக்கும் மணலை அழுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தூணின் அடியிலும் மிகப்பெரிய கல் பலகைகளை விரித்து எடையைச் சமமாகப் பரப்பினார்கள் (Weight Distribution).

​​இந்தத் தூண்களை நிலைநிறுத்த 'Lock and Key' முறை எனப்படும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் முறையைப் பயன்படுத்தினார்கள்.

நம் முன்னோர்களின் ஆழ்ந்த அறிவு நுட்பம் பிரமிக்க வைக்கும்

"ராமேஸ்வரம் கோவில் ஆன்மீக இடம் மட்டுமல்ல.. அது, ஒரு 'அறிவியல் கூடம்..

நம் தமிழ் முன்னோர்கள் மணலில் மலை போன்ற கோயிலைக் கட்டி, அதன் நிழலில் உலகையே வியக்க வைத்துள்ளான்.

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

ஜனம் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செ...
18/02/2026

ஜனம் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன்.

ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது.

முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன்.

“இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி.

“எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன்.

“நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.”

“நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன்.

அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.

“இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி.

பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும்.

“பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம்.

வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது.

அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது.

“வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள்.

“மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள்.

“டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன்.

“வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.”

இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும்.

அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள்.

“அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன்.

“அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது?

நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார்.

எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள்.

“அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது.

பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.
“என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.”

“ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன்.

“அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள்.

பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது.

“கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன்.

அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள்.

“கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன்.

“பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன்.

பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது.

அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன்.

நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே.

யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.”

பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன்.

“எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள்.

“பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.”

பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை.

காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை.

https://www.facebook.com/share/p/1Di2tjUyvh/

15/02/2026

ஓலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனமர் ஏகாம்பர ஈஸ்வரர் ஆலயத்தில், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் சிறப்புப் பூஜைகள் தொடங்க உள்ளன.
​இரவு 9 மணி அளவில் முதலாம் கால பூஜையும், இரவு 10 மணி அளவில் இரண்டாம் கால பூஜையும், இரவு 12 மணி அளவில் மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜையும் சிறப்பாக நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு எம்பெருமான் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

15/02/2026

சிவராத்திரியின் மகிமை என்ன?

பதில் : "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும்.

இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும்.

இதனால் பல நன்மைகள் உண்டு.

இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.

எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள்.

ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது.

இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது.

மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது.

ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை.

பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ( படம் பார்க்கவும் )

மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது.

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும்.

ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும்.

ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும்.

இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை.

எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.

ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , இரண்டு ஃபால் ( FALL ).

இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. ( படம் பார்க்கவும் )

மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது.

இதற்குத் தான் அதிக சக்தி உண்டு.

ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும்.

எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.

அதேசமயம் 180 கேண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும்.

அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும்.

ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும்.

ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும்.

மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.

மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.

இந்த லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன்,கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார்.

மேலும் 17 ம் நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.

ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும்.

மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?

பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும்.

இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும்.

இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும்.

மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம்.

எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள்.

அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். ( Circadian Rhythm )

மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?

நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள்.

பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து ஜாதி மத மக்களுக்கும் நல்லது.

உங்களுக்கு பெயர் பிரச்சனை என்றால், உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அறிவையும் அறிவியலை மாற்ற முடியாது.

இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக, ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் முழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்

வாழ்க வளமுடன் 🙏🪷🪷🪷🪷

மகாபாரத போர் நடைபெற்ற அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் ...
11/02/2026

மகாபாரத போர் நடைபெற்ற அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள் இதுவே போர் தர்மம் எனப்பட்டது.

பகல் முழுக்கப் போரிட்ட களைப்பால் அர்ஜுனன் அன்றைய தினம் இரவு நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள் நலனிலும் வீரர்கள் நலனிலும் போர் தளவாடங்களிலும் கவனம் செலுத்தினான்.

வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.

ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.

ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.

இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.

உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்.

"அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்; நான் உனக்கு சாரதி.

ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது அவ்வளவுதான், குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில்.
ஆகவே நீ நன்கு ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் மாபெரும் இந்த போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். நான் எனது கடமையை செய்கிறேன் என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.

கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.

அந்தநாள் முதல் புதிய எழுச்சி பெற்றவனாக போரில் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.

போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் அரசியல்வாதிகளை கொண்ட இந்த சமூகத்திற்கு நற்சிந்தனை கடமைத்திறம் கண்துஞ்சா விழிப்பு ஆகியவற்றை போதித்து அதன்படி வாழ்ந்த பாரதத்தின் வரலாறுதான் ஸ்ரீ க்ருஷ்ணர்! பார்த்தசாரதி ஒரு வாழும் பாடம்! பகவத்கீதை ஒரு வாழ்வியல் தர்மம்! ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!
ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை உலகை வெல்லும் 🙏 இராம ஸ்ரீநிவாஸன்
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ❤️ 🚩🙏

Address

Erode
638476

Telephone

+919943090418

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில் கோபி வட்டம் ஓலப்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share