தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement

  • Home
  • India
  • Erode
  • தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement

தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement Tamilnadu toddy movement is a movement started during 2006 to lift ban on toddy and fight for the welfare of the farmers in the state of tamilnadu.

https://youtu.be/BfYgdRthu5Q?si=CP7Y-Vl85hLUoQqj
22/01/2026

https://youtu.be/BfYgdRthu5Q?si=CP7Y-Vl85hLUoQqj

தமிழகத்தில் கள்ளுக்கு தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சொன்ன.....

14/09/2025

கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் கூறுகிறார் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

பழநி:''திருச்சியில் டிசம்பரில் நடக்க உள்ள கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் ''என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

பழநியில் அவர் கூறியதாவது:

டிசம்பரில் கள் விடுதலை மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. இதில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொள்ள உள்ளார். பீஹாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அமைதி நிலவி உள்ளது. சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன.

அங்கு கள்ளச்சாராய சாவுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தல் தேதி முன் அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி பனை, தென்னை, ஈச்ச மரங்கள் வைத்துள்ள விவசாயிகள் நீராகாரம் இறக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்க அனுமதித்திருந்தால் ஆட்சி மாற்றம் நடந்திருக்காது. பழனிசாமி மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார் என நம்புகிறோம்.

டிசம்பரில் கள் இயக்கம் நடத்தும் கள் விடுதலை ,மதுவிலக்கு மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். 2026 தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி இந்த மாநாட்டிற்கு இருக்கும் என்றார்.

நன்றி: தினமலர், செப் 11, 2025 04:04 AM

12/09/2025
15/08/2025

கள் படையல் திருவிழா
17-08-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 10: 00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை
இடம்: நாட்டார்மங்களம், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்

திருவிழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
9342931752, 9500627289

08/08/2025
26/07/2025

கள் விடுதலை மாநாடு
நாள் மாற்ற அறிவிப்பு

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில் திருச்சி மாவட்டம் சமயபுரம் சக்தி நகர் பனந்தோப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் #செந்தமிழன்_சீமானுடன் 1000 பனையேறிகள் அணிவகுப்போடு மாபெரும் கள் விடுதலை மாநாடு ஆடி 11 ( 27-07-2025) அன்று நடத்திட இருந்த நிலையில் அதே நாளில் மாண்புமிகு இந்திய பிரதமர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைத் தர இருப்பதால் வேறு நாளில் மாநாட்டை நடத்திக் கொள்ள காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாள் மாற்றப்பட்டு வருகிற ஆடி 14 (30-07-2025) புதன்கிழமை அன்று சமயபுரம் சக்தி நகரில் கள் விடுதலை மாநாடு நடத்தப்பட இருக்கிறது.

எனவே இந்த நாள் மாற்றத்தை அனைவருக்கும் உடனடியாக அறிவிக்கும் படியும் ,

அனைத்து மாவட்ட பனையேறிகள் , இயக்க உறுப்பினர்கள், மகளிர் அணியினர் மற்றும் அனைத்து தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படியும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!

இப்படிக்கு,
பாண்டியன் பனையேறி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம். 9500627289

https://m.youtube.com/shorts/fH4fWvK4wbsகடந்த ஞாயிறு (06-07-2025) அன்று, தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் சி...
09/07/2025

https://m.youtube.com/shorts/fH4fWvK4wbs

கடந்த ஞாயிறு (06-07-2025) அன்று, தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் சிறுவர்களுடன் பனை மரத்துக்கு கள் படையல் வைத்து கோசம்

#கள் #கிருஷ்ணசாமி -------------------------NIMMADHI - Best Property Management Contact: +91 76670 0...

Address

Arachalur
Erode
638101

Telephone

9894099955

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement:

Share