13/08/2026
தமிழக அரசின் சார்பில் சமூக சேவைக்காக தமிழ்நாட்டின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதிற்கு அட்சயம் அறக்கட்டளை தேர்வு
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் கரங்களால் அட்சயம் அறக்கட்டளையின் Atchayam Trust சமூகசேவைக்காக தமிழ்நாட்டின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதினை வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் கரங்களால் பெற உள்ள இந்த விருதுக்கு எங்களுடன் உழைத்த அனைத்து அட்சயம் அறக்கட்டளை தன்னார்வலர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதுகின்றோம் .
மேலும் அட்சயம் அறக்கட்டளைக்கு தொடர்ந்து 13 ஆண்டுகளாக உதவிகள் செய்த அனைத்து நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் அட்சயம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Naveen Kumar Atchayam